இந்தியா-பாகிஸ்தான் தீர்வுக்கு டிரம்ப், மறுக்கும் இந்தியா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான முரண்பாடுகளை தீர்க்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்வந்துள்ளார். ஆனால் டிரம்பின் தலையீட்டை மறைமுகமாக நிராகரித்து உள்ளது இந்தியா. . இன்று அமெரிக்காவின் ஐ.நாவுக்கான பிரதிநிதி நிக்கி ஹேலி (Nikki Haley) தனது கூற்றில் இந்தியா-பாகிஸ்தான் முரண்பாடுகளால் டிரம்ப் கவலை கொண்டுள்ளார் என்றும், டிரம்ப் நேரடியாகவே தலையிட்டு சமாதானத்தை உருவாக்க செயல்படுவார் என்றும் கூறியுள்ளார். . இந்த கருத்துக்கு உடனடியாகவே மறைமுகமாக பதிலளித்த இந்தியா, இந்தியா-பாகிஸ்தான் விவகாரம் இரண்டு நாடுகளும் நேரடியாக பேசி தீர்க்கப்படவேண்டியது […]

எகிப்தின் சிசியை புகழ்பாடினார் டிரம்ப்

இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்த எகிப்தின் அல் சிசியை (Abdel Fattah al-Sisi) இன்று புகழ் பாடியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். டிரம்ப்பை சந்திக்க இன்று வெள்ளைமாளிகை வந்திருந்தார் அல் சிசி. அப்போதே அல் சிசியை புகழ் பாடியுள்ளார் டிரம்ப். . “சிலவேளைகளில் அங்கே சந்தேகங்கள் இருந்தாலும் நான் எல்லோருக்கும் கூற விரும்புவது நாங்கள் ஜனாதிபதி சிசியின் பின்னாலேயே உள்ளோம்” என்றுள்ளார் டிரம்ப். அத்துடன் சிசி “is done a fantastic job in a  […]

கொலம்பியா ஆற்று பெருக்கெடுப்புக்கு 193 பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் (Colombia) இடம்பெற்ற ஆற்று பெருக்கெடுப்புக்கு குறைந்தது 193 பேர் பலியாகி உள்ளனர். கொலம்பியா-எக்குவடோர் எல்லைப்பகுதியில், மலைகளுக்கு இடையே அமைந்துள்ள Mocoa என்ற 40,000 பேர் வாழும் நகரிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்று உள்ளது. . கரைந்துபோன மண்ணுடன் பெருக்கெடுத்து ஓடும் ஆறு வீடுகளுள் உறங்கிக்கொண்டு இருந்தோர், கார்களுள் இருந்தோர் என பலரையும் அள்ளி சென்றுள்ளது. . மேலும் 220 பேரை காணவில்லை என்றும், சுமார் 400 பேர் காயமடைந்து உள்ளனர் என்று […]

கொழும்பு Port City $16 பில்லியன் முதலீட்டை கவரும்?

சீனாவின் China Harbour Engineering Company (CHEC) Port City Colombo (Pvt) நிறுவனத்தால் $1.4 பில்லியன் செலவில் அமைக்கப்பட்டுவரும் Colombo Port City வரும் 30 வருடங்களில் சுமார் $13 பில்லியன் முதலீடுகளை கவரும் என்றுள்ளார் CHEC அமைப்பின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை தலைமை அதிகாரி Liang Thow Ming. . தாம் Port Cityயை தென்னாசியாவின் வர்த்தக மையம் ஆக அமைய செய்கிறோம் என்றுள்ளார் Liang. இவரின் கூற்றுப்படி இங்கு கட்டப்படும் கட்டடங்களில் 50% […]

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி கைது

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Park Geun-hye இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். இவரின் நண்பி ஒருவரின் இலஞ்ச வழக்கை மையமாக கொண்டே முன்னாள் ஜனாதிபதியும் கைது செய்யப்பட்டு உள்ளார். Seoul Central District Court இவரை இன்று வியாழன் சுமார் 8 மணித்தியாலங்கள் விசாரித்த பின்னரே கைதுக்கான ஆணை வழங்கப்பட்டது. . தென்கொரிய அரசியலிலுக்கு இலஞ்சம் மொத்தத்தில் அந்நியமானது அல்ல. Park Geun-hye கைது செய்யப்படும் மூன்றாவது முன்னாள் ஜனாதிபதி ஆவார். . 1988 ஆம் ஆண்டு […]

ரஷ்யாவின் hyper-sonic ஏவுகணை?

ரஷ்யா விரைவில் ஹைப்பர்-சோனிக் (hyper-sonic) ஏவுகணை ஒன்றை ஏவி ஒத்திகை பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த வகை ஏவுகணையை ரஷ்யா கைக்கொள்ளுமாயின் அது அமெரிக்கா உட்பட்ட அனைத்து நாடுகளின் ஏவுகணை எதிப்பு செயல்பாடுகளை முறியடிக்கும். . இவ்வகை ஏவுகணை மணித்தியாலம் ஒன்றில் 7,400 km தூரத்தை கடக்கும். அதாவது இதன் வேகம் ஒலியின் வேகத்தின் 6 மடங்கு அதிகமாக இருக்கும். . Zircon என்ற பெயரின் கீழ் தயாரிக்கப்படும் 5 தொன் எடை கொண்ட இந்த ஏவுகணை […]

அமெரிக்க குண்டுக்கு Mosul நகரில் 137 பேர் பலி

இந்த மாதம் 17ம் திகதி அமெரிக்க யுத்த விமானம் ஒன்று ஈராக்கின் Mosul நகரில் வீசிய குண்டுக்கு 137 பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்று பல நாட்கள் ஆகிவிட்டாலும், தற்போதே உண்மை விபரங்கள் வெளிவருகின்றன. வேறுசிலர் இந்த சம்பவத்தில் மரணித்தோர் தொகை 230 வரை இருக்கலாம் என்கின்றனர். . நேற்று திங்கள் அமெரிக்காவின் இராணுவ பேச்சாளர் கேணல் John Thomas தனது கூற்றில் அமெரிக்கா இந்த தாக்குதலை முறைப்படி விசாரணை […]

ஜெர்மனியில் 100 kg தங்க நாணயம் கொள்ளை

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் (Berlin) உள்ள Bode Museum என்ற நூதனசாலையில் இருந்து 100 kg (221 இறாத்தல்) எடைகொண்ட தங்க நாணயம் ஒன்று இன்று திங்கள் காலை திருடப்பட்டு உள்ளது. இந்த நாணயம் Big Maple Leaf என்று அழைக்கப்படும். . நூதனசாலை பேச்சாளர் Stefen Petersen கூறிய கருத்துப்படி திங்கள் காலை 3:30 மணியளவில் திருடர் ஜன்னல் ஒன்று மூலம் உள்ளே புகுந்து இந்த தங்க நாணத்தை திருடி உள்ளனர். இந்த நாணயத்தில் பதியப்பட்ட […]

அணுக்குண்டுடையோர் இன்றி அதை அழிக்க ஐ.நா. மாநாடு

ஐக்கிய நாடுகள் சபை அவ்வப்போது சம்பந்தப்பட்டோர் இல்லாது அவர்களின் கைவசமுள்ள விடயங்கள் சம்பந்தமாக பெரும் மாநாடுகள் அல்லது பேச்சுவார்த்தைகள் நடாத்துவது உண்டு. அந்த வகையில் ஐ. நா. இன்று திங்கள் முதல் அணுக்குண்டுகள் இல்லாத உலகை உருவாக்க பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்துகிறது. சுமார் 100 நாடுகள் இதில் பங்கு கொள்கின்றன. ஆனால் அனைத்து அணுகுண்டுகள் கொண்ட நாடுகள் உட்பட, 30க்கும்  மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டில் பங்கு கொள்ளவில்லை. இந்த மாநாட்டு தீர்மானம் சட்டப்படியானதும் அல்ல. . […]

270 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா முயற்சி

அமெரிக்காவில் தங்கியிருக்கும் சுமார் 270 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்ப முனைகிறது. கடந்த அமெரிக்க அரசுகள் இவ்விடயத்தில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்றாலும், தற்போதைய டிரம்ப் அரசு இவர்களை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் மும்மரமாக ஈடுபட்டு உள்ளது. . இவர்களில் பலர் பல்வேறு விசாகளின் மூலம் அமெரிக்கா வந்து, பின்னர் விசா முடிவின்போது நாடு திரும்பாமல் அமெரிக்காவிலேயே தாங்கியவர் ஆவர். . Pew Research Center என்ற ஆய்வு அமைப்பின் 2016 ஆண்டு கருத்துப்படி சுமார் 500,000 இந்தியர் […]