இந்திய-பிரான்ஸ் நீர்மூழ்கி தரவுகள் அம்பலத்தில்

பிரான்சின் DCNS என்ற நிறுவனத்தின் உதவியுடன் இந்தியா ஆறு Scorpene வகை நீர்மூழ்கிகளை தயாரிக்க இணங்கியது. இந்திய தன்னிடம் உள்ள சோவியத் காலத்து நீர்மூழ்கிகளுக்கு பதிலாக இந்த புதிய Scorpene வகை நீர்மூழ்கிகளை கடல் படைக்கு வழங்கவிருந்தது. அந்த ஆறில் ஒரு நீர்மூழ்கி சில மாதங்களின் முன் வெள்ளோதிடத்திலும் ஈடுபட்டு உள்ளது. . ஆனால் அந்த நீர்மூழ்கிகளின் முக்கிய தரவுகள் அண்மையில் முன்னாள் ஊழியர் ஒருவரால் பகிரங்கப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த உண்மைகள் தற்போது எல்லோர் கைகளிலும் உள்ளதால், […]

ஆஸ்திரேலியா நிறுவனங்கள் இலங்கையில் ஊழல்

இரண்டு ஆஸ்திரேலியா நிறுவனங்கள் இலங்கை, கொங்கோ (Congo) ஆகிய நாடுகளில் அரசில்யவாதிகளுக்கு இலஞ்சம் வழங்கி வர்த்தக நன்மைகள் பெற்றுள்ளதாக The Sydney Morning Herald செய்தி வெளியிட்டுள்ளது. . Snowy Mountains Engineering Company என்ற நிறுவனம் இப்போது Australian Federal Police (AFP) விசாரணையில் உள்ளதாம். இந்த நிறுவனம் 2011 ஆம் ஆண்டில், நன்கொடை பணம் மூலம், $2.3 மில்லியன் செலவில் செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைகளை செய்யும் பொறுப்பை பெற்றுக்கொள்ள இலங்கை அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக […]

ஒலிம்பிக் 2016 நிறைவு

பிரேசிலின் (Brazil) தலைநகர் ரியோவில் (Rio) நடைபெற்றுவந்த 2016 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் இன்று ஞாயிறு நிறைவு பெற்றது. பெருளாதார மந்த நிலைக்குள்ளும், உள்நாட்டு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும் பிரேசில் இந்த ஒலிம்பிக் போட்டியை செய்து முடித்துள்ளது. . இம்முறையும் அமெரிக்காவே 46 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 121 பதக்கங்களை பெற்று முதலாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள சீனா 70 பதக்கங்களை, மூன்றாம் இடத்தில் உள்ள பிரித்தானியா 67 பதக்கங்களையும் வென்றுள்ளன. . […]

இந்திய தயாரிப்பில் F-16 யுத்த விமானம்?

அமெரிக்கா தற்போது பயன்படுத்திவரும் யுத்த விமானங்களில் முக்கிய விமானம் Falcon என்று அழைக்கபப்டும் F-16 யுத்த விமானங்கள். 1976 ஆம் ஆண்டுமுதல் சுமார் 4,500 F-16 யுத்த விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்கா மட்டுமன்றி பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், துருக்கி, பாகிஸ்தான் போன்ற பல மேற்கு சார்பு நாடுகளும் இந்த யுத்த விமானத்தை பயன்படுத்துகின்றன. . USSR ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போது அமெரிக்காவின் அரவணைப்பில் இருந்த பாகிஸ்தான் இந்த வகை […]

முதல் Quantum செய்மதியை ஏவியது சீனா

Quantum தொழில்நுட்பம் முறையிலான தொலைத்தொடர்பை ஏற்படுத்தக்கூடிய செய்மதி ஒன்றை சீனா செய்வாக்கிழமை அதிகாலை ஏவி உள்ளது. இதுவே இவ்வகை செய்மதிகளில் முதலாவது ஆகும். கனடா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் ஆகியன இவ்வகை தொழில்நுட்பத்தில் வேகமாக செயல்பட்டாலும், சீனா முந்தியுள்ளது. . Quantum தொழில்நுட்பம் subatomic particles களின் குணாதிசயங்களை பயன்படுத்தி செயல்படுவது ஆகும். Quantum physics ஆய்வுகளுக்கு சீனா பல பில்லியன் டொலர்கள் செலவை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேவேளை அமெரிக்கா $200 மில்லியனை மட்டுமே […]

இந்திய அமைச்சருக்கு ஒலிம்பிக்கில் எச்சரிக்கை

இந்திய மத்திய அரசின் விளையாட்டு துறை அமைச்சர் Vijay Goel க்கு பிரேசிலில் ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. . இந்த அமைச்சர் பெரும்தொகையான தனது பரிவாரங்களுடன் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய முற்படுவதாகவும், காவலாளிகள் அவ்வாறு உரிய பத்திரம் இன்றி செல்வதை தடுக்க முனையும்போது அடாவடி செயல்களில் இறங்குவதாகவும் குற்றம் சாட்டப்படுள்ளது. இவருக்கு சில பகுதிகளுக்கு செல்ல அனுமதி இருந்தாலும், இவரின் பரிவாரங்களை எந்தவித அனுமதியும் இல்லை. . புதன் கிழமை இவரின் […]

பஞ்சு அருணாசலம் மரணம்

தமிழ் திரையுலகில் கதை, வசனம், தயாரிப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய பஞ்சு அருணாசலம் செவ்வாய் அன்று, தனது 76 ஆவது வயதில், காலமானார். காரைக்குடியில் பிறந்த இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், இரண்டு ஆன் பிள்ளைகளும் உண்டு. . இவரே இசையமைப்பாளர் இளையராயவை தனது ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர். இவர் கமல், ராஜனியை நடிக்கவைத்த பல படங்கள் மிகவும் பிரபலமானவை. எங்கேயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்விக்குறி, முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், போன்ற […]

தமிழ்நாட்டு ரயிலில் ரூ5.75 கோடி கொள்ளை

தமிழ்நாட்டு ரயிலில் ரூ5.75 கோடி கொள்ளை தமிழ்நாட்டில் திங்கள் இரவு பயணித்துக்கொண்டு இருந்த ரயிலில் இந்திய ரூ5.75 கோடி கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையர் ரயில் பெட்டியின் கூரையை வெட்டி, உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். . திங்கள் இரவு 9:00 மணியளவில் சேலத்தில் (Selam) இருந்து புறப்பட்ட ரயிலில் (Selam Express) ஏற்றப்பட்ட இந்த பணம் செவ்வாய் அதிகாலை 4:40 மணியளவில் சென்னையை அடையவிருந்து. Reserve Bank of Indiaவுக்கு சொந்தமான 342 கோடி பணம் இதில் […]

ஆட்டம் காண்கிறது நெல்சன் மண்டேலா கட்சி

தென் ஆபிரிக்காவில் வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக போராடி அந்நாட்டை சுதந்திரம் அடைய செய்தவர்களில் முக்கியமானவர் மறைந்த நெல்சன் மண்டேலா (Nelson Mandela). அவர் ஆரம்பித்த கட்சியே African National Congress (ANC). இன்று அங்கு நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் ANC வரலாற்றில் அதிகுறைந்த ஆதரவை, சுமார் 54%, பெற்றுள்ளது. . 1994 ஆம் ஆண்டு முதல் ANC 60% க்கும் மேற்பட்ட ஆதரவை பெற்று வந்துள்ளது. ஆனால் அண்மை காலங்களில் ANC உறுப்பினர்களின் ஊழல், அதி உயர் […]

சீனாவில் வாகனங்களுக்கு மேலால் ஓடும் பஸ்

பெருகிவரும் தனியார் வாகன போக்குவரத்தால் இடர்படும் பொதுசன பஸ் சேவையையை மீட்க சீனாவின் நிறுவனம் ஒன்று புதிய வகை பஸ்களை தயாரிக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை சீனாவின் QinHuangDao நகரில் வெள்ளோட்டம் விடப்பட்ட TEB-1 (Transit Elevated Bus) என்ற பஸ் இரண்டு வாகன பாதைகளுக்கு மேலால் செல்கிறது. கீழே சாதாரண தனியார் வாகனங்கள் செல்கின்றன. . சுமார் 16 அடி உயரமான இந்த பஸ், 72 ஆடி நீளமானதும், 26 அடி அகலமானதும் ஆகும். இதில் சுமார் […]