பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி சீனா, ரஷ்யா உறவில்?

நீண்ட காலமாக பிலிப்பீன்ஸ் அமெரிக்கா ஆதரவு நாடாகவே, குறிப்பாக இராணுவ கொள்கைகளில், இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போதைய சர்ச்சைக்குரிய ஜனாதிபதி Rodrigo Duterte தான் சீனாவுடனும், ரஷ்யாவுடனும் பொருளாதார உறவுகளை புதுப்பிக்க விரும்புவதாக கூறியுள்ளார். கடந்த கிழமை தான் விரைவில் சீனா செல்லவுள்ளதாகவும் இவர் தெரிவித்து உள்ளார். . கடந்த ஜூலை மாதத்தில் ஆட்சிக்கு வந்த இவரால் அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளது. இவர் ஒபாமாவை தகாத சொற்களால் வசைமாரியும் செய்திருந்தார். இவரின் போதை தொடர்பான கொள்கைகளால் விஷம் […]

கொலம்பியா PARC சமாதானத்தில்

கடந்த சுமார் 50 வருடங்களாக கொலம்பியா (Colombia) அரசுடன் யுத்தத்தில் ஈடுபட்டு வந்திருந்த இடதுசாரிகளான PARC (Revolutionary Armed Forces of Colombia) இயக்கம் முழுமையான சமாதானத்துக்கு இணங்கியுள்ளது. அண்மையில் அரசு வழங்கிய தீர்வை ஏற்பதா அல்லது மறுப்பதா என்று PARC தம்முள் ஒரு கருத்து வாக்கெடுப்பை நடாத்தி இருந்தது. அப்போது பெருமளவு FARC உறுப்பினர்கள் சமாதானத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். . இது தொடர்பில் கருத்து தெரிவித்த FARC தலைவர் சமாதானம்தான் மிக அழகான வெற்றி […]

500 மில்லியன் Yahoo email திருட்டு

இலவச Email சேவை நிறுவனமான Yahoo தம்மிடம் email கணக்கு வைத்திருந்த குறைந்தது 500 மில்லியன் பாவனையாளர்களின் தரவுகள் திருடப்பட்டு உள்ளதாக இன்று கூறியுள்ளது. இந்த திருட்டு 2014 ஆம் ஆண்டில் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. திருட்டு ஆரம்பத்தில் அடையாளம் காணப்படவில்லை. திருடப்பட்ட தரவுகளுள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், password, பிறந்த திகதி, security கேள்விகளும் பதில்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. . இந்த திருட்டு காரணமாக, Yahoo பாவனையாளர்களை தமது password, security […]

காஷ்மீரில் 17 இந்திய இராணுவம் பலி

சர்ச்சைக்குரிய இந்திய மாநிலமான காஷ்மீரில் தாக்குதல் ஒன்றுக்கு 17 இந்திய இராணுவம் பலியாகியுள்ளதாக இந்தியா கூறியுள்ளது. ஸ்ரீநகருக்கு மேற்கே, இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அண்மையில், உள்ள Uri என்ற இடத்தில் உள்ள இந்திய படை முகாம் மீதே தாக்குதல் இடம்பெற்று உள்ளது. இந்தியாவின் கூற்றுப்படி பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ஆயுததாரிகள் இந்த தாக்குதலை நடாத்தி உள்ளனர். . இந்திய ஜெனரல் Ranbir Singh கூற்றுப்படி நான்கு அந்நியநாட்டு பயங்கரவாதிகள், பாகிஸ்தான் அடையாளங்கள் கொண்ட ஆயுதங்கள் பயன்படுத்தி இந்த தாக்குதலை […]

அமெரிக்க தாக்குதலுக்கு 80 சிரியா இராணுவம் பலி

சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள Deir el-Zour விமான நிலையத்துக்கு அண்மையில் நிலை கொண்டுள்ள சிரியன் இராணுவம் மீது அமெரிக்க யுத்த விமானங்கள் நடாத்திய தாக்குதலுக்கு 80 வரையானோர் பலியாகி உள்ளனர். இது தவறுதலாக இடம்பெற்ற தாக்குதல் என்கிறது அமெரிக்கா. இவ்விடயத்தால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மீண்டு முறுகல் நிலை தோன்றியுள்ளது. ‘ ரஷ்யா இவ்விடயம் காரணமாக உரையாட ஐ.நா. பாதுகாப்பு சபையை உடனடியாக அழைத்துள்ளது. இதனால் விசனம் கொண்ட அமெரிக்காவின் சமந்தா பவர் ரஷ்யாவை கடுமையாக […]

இஸ்ரவேலுக்கு $38 பில்லியன் இராணுவ உதவி

இஸ்ரவேலுக்கு, 2017 முதல் 10 ஆண்டுகளில், $38 பில்லியன் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா இணங்கி உள்ளது. வருடாந்தம் அமெரிக்கா இஸ்ரவேலுக்கு பெரும் இராணுவ உதவியை வழங்குவது வழமை. ஆனால் அமெரிக்கா தனது இராணுவ செலவுகளை குறைத்து வரும் இக்காலத்திலும், இஸ்ரவேலுக்கான இராணுவ உதவியை வருடாந்தம் அதிகரித்தே வந்துள்ளது. . கடந்த 10 வருடங்களாக வருடாந்தம் $3.1 பில்லியன் உதவி வழங்கி வந்த அமெரிக்கா, அதை அடுத்த 10 வருடங்களுக்கு $3.8 பில்லியன் ஆக உயர்த்தி […]

கர்நாடகாவில் கலவரம், காவேரி காரணம்

கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான தமிநாட்டுக்கு சொந்தமான பஸ்கள், லாரிகள் கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூரில், தீ மூட்டப்பட்டு உள்ளன. தொடர்ந்த கலவரங்களின் போது ஒரு கலகக்காரர் பொலிஸாரின் சூட்டுக்கு பலியாகியும் உள்ளார். . அண்மையில் இந்தியாவின் Supreme Court கர்நாடகா மாநிலம் தமிழ்நாட்டுக்கு 15,000 சதுர அடி நீரை ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும் காவேரி வழியே விடவேண்டும் என்று தீர்ப்பு கூறி இருந்தது. இதனால் கோபம் கொண்ட கர்நாடகா ஆர்ப்பாட்டக்காரர் தீ மூட்டும் செயலில் […]

மூடியுள்ள மில்லியன் டொலர் வீடுகள்

அமெரிக்கா, கனடா போன்ற நாட்டு பெருநகர்களில் மூடப்பட்டு இருக்கும் மில்லியன் டொலர் பெறுமதியான வீடுகள் தொடர்பில் கனடாவின் The Goble and Mail பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. . டொரோண்டோ (Toronto), வான்கூவர் (Vancouver) போன்ற பெரு நகர்களில் வாழும் மக்கள் கொள்வனவு செய்ய முடியாத அளவில் வீட்டு விலைகள் உயர்த்திருந்தாலும், இந்நகர்களில் பெருமளவு வீடுகள், குறிப்பாக Condo எனப்படும் உயர்மாடி வீடுகள் உரிமையாளர்களால் மூடி வைக்கப்பட்டு உள்ளனவாம். இவ்வாறு மூடியுள்ள வீடுகளின் உரிமையாளர் பலரும் […]

கொழும்பு துறைமுகம் வருகிறது MSC Maya

கொழும்பு துறைமுகத்துக்கு மிக பெரியதோர் வர்த்தக கப்பலான MSC Maya வரவுள்ளது. பனாமாவில் பதிவு செய்யப்பட்ட Maya 20 அடி நீளமான 19,224 கொள்கலன்களை காவக்கூடியது. 2015 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் கட்டப்பட்ட இந்த கப்பல் சுமார் 395 மீட்டர் நீளமானது. இதன் இயந்திரங்கள் 83,780 hp (குதிரைவலு) வலுவை வழங்கக்கூடியன. இந்த மாதம் 16 ஆம் திகதி இது கொழும்பை வந்தடையும். . தற்போது நான்கு கொள்கலன் கப்பல்கள் உலகின் மிகப்பெரிய கப்பல்கள் என்ற இடத்தில் […]

மிஹின் விமானசேவை இவ்வருடத்தில் நிறுத்தம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவில், 2007 ஆம் ஆண்டில், சேவையை ஆரம்பித்திருந்த மிஹின் லங்கா விமான சேவை இந்த வருட இறுதிக்குள் சேவையை முற்றாக நிறுத்தும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் சேவைகளை ஸ்ரீலங்கன் விமானசேவை தொடரும் என்று ஸ்ரீலங்கனின் அதிகாரி அஜித் டயஸ் கூறியுள்ளார். . மிஹின் விமானசேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஊழல், முறைகேடு போன்ற பல காரணங்களால் நட்டத்தில் இயங்கி வந்திருந்தது. மிஹின் சேவை இலங்கை அமைச்சரவையின் அங்கீகாரம் இன்றியே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. […]