இந்த வருட முதல் 8 மாதங்களில் அமெரிக்க பசுப்பால் உற்பத்தியாளர்களால் 43 மில்லியன் கலன் பசுப்பால் விரயமாக்கப்பட்டு உள்ளதாம். பெரும்பாலும் இவை நிலத்தில் ஊற்றப்பட்டு விரயம் செய்யப்பட்டு உள்ளன. ஐந்தொகை பால் 66 ஒலிம்பிக் தர நீச்சல் தடாகங்களை நிரப்ப போதுமானது. . தற்போது அமெரிக்காவில் பசுப்பால் உற்பத்தி மிக கூடி, அதனால் விலை மிக குறைந்து உள்ளது. பாலை எடுத்து செல்வதற்கான செலவு, விற்பனை விலையையும் விட அதிகம் ஆகிவிட்டதாலேயே இவ்வாறு பால் விரயம் செய்யப்படுகிறது. […]
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் சுகவீனம் காரணமாக Apollo வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் (22-10-2016) இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக உறுதியான செய்திகள் வெளியிடப்படவில்லை. அதேவேளை ஒரு பிரித்தானிய வைத்தியர் ஜெயலலிதாவை கண்காணிக்க தமிழ்நாடு சென்றுள்ளார். . இன்று செவ்வாய் ஜெயலலிதாவின் கடமைகள் அவரின் நம்பிக்கைக்கு உரியவராக பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த கடமைகள் கைமாற்றம் தமிழ்நாடு ஆளுநர் முன்னிலையில் இடம்பெற்று உள்ளது. ஆனாலும் ஜெயலலிதாவே […]
பாகிஸ்தானுடனான மோதல்களின்போது இந்தியா தாம் இந்து நதியை மறித்து அணை ஒன்று கட்டப்போவதாக கூறி இருந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட Indus Water Treaty என்ற உடன்படிக்கையை மீறியே இந்தியா அந்த அறிவித்தலை சில தினங்களுக்கு முன் செய்திருந்தது. . ஆனால் சீனாவில் இருந்து வரும் பிரமபுத்ரா ஆறு விடயத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எந்தவொரு உடன்படிக்கையும் இல்லாதவேளை சீனா பிரமபுத்ராவுக்கு நீரை வழங்கும் கிளை ஆறு ஒன்றை மறித்து, $740 […]
கடந்த மாதம் 29 ஆம் திகதி (29-09-2016) சுமார் 9:00 PM அளவில் இந்து சமுத்திரத்தில் சென்றுகொண்டிருந்த அமெரிக்காவின் கடற்படை கப்பலான USS Hopperஇல் ஒரு படையினருக்கு அவசர வைத்திய சேவை தேவைப்பட்டு இருந்தது. அப்போது அந்த கப்பல் இலங்கை கரையில் இருந்து சுமார் 265 km தொலைவில் இருந்தது. அத்துடன் இந்த கப்பலுக்கு வைத்திய சேவை வழங்க வேறு எந்த அமெரிக்க கப்பலும் அருகில் இருந்திருக்கவில்லை. இந்த கப்பலில் ஹெலியும் இருந்திருக்கவில்லை. . வேறு வழி […]
Ukraine விடயத்திலும், சிரியா விடயத்திலும் முரண்பட்ட கொள்கைகளை கொண்டுள்ள அமெரிக்காவும், ரஷ்யாவும் ஏட்டிக்கு போட்டியாக தம்முள் முரண்பட ஆரம்பித்து உள்ளனர். . கடந்த 24 மணித்தியாலங்களுள் ரஷ்யா தாம் 2000 ஆண்டளவில் அமெரிக்காவுடன் செய்துகொண்டிருந்த plutonium உடன்படிக்கையை தற்கலிகமாக இடை நிறுத்துவதாக கூறியிருந்தது. இந்த உடன்படிக்கையின்படி இருதரப்பும் தலா 34 தொன் எடையுடைய ஆயுத தர plutonium கையிருப்பை அழித்தல் வேண்டும். இந்த 34 தொன் plutonium சுமார் 8500 nuclear ஆயுதங்களை உருவாக்க போதுமானது. . […]
1966 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊக்குவிப்பில், ஜப்பானை தலைமைப்படுத்தி உருவாக்கப்பட்டது ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB). தற்போது அதில் 67 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால் ADBயின் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையை மிஞ்சவுள்ளது சீனாவால் உருவாக்கப்பட்ட AIIB (Asian Infrastructure Investment Bank). AIIBயில் தற்போது 57 அங்கத்துவ நாடுகள் உள்ளன. ஆனால் அந்த எண்ணிகள் மேலும் 20 ஆல் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. . புதிதாக வேறு நாடுகள் AIIBயில் இணைவதற்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால […]
அடுத்த மாதம் 9ம், 10ம் திகதிகளில் பாகிஸ்தானில் இடம்பெறவிருந்த சார்க் மாநாடு காலவரையறை இன்றி பின்போடப்பட்டு உள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் இன்று வெள்ளி அறிவித்து உள்ளது. . அண்மையில் பாகிஸ்தான் ஆயுத குழு ஒன்று எல்லை கடந்து இந்திய இராணுவ முகாம் ஒன்றை தாக்கியதில் 28 இந்திய இராணுவத்தினர் பலியாகி இருந்தனர். இதனால் விசனம் கொண்ட இந்தியா தான் பாகிஸ்தான் மாநாட்டில் பங்கு கொள்ளப்போவது இல்லை என்று அறிவித்து இருந்தது. . பின்னர் ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், பூட்டான் […]
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியுள் நுழைந்து, அங்கிருந்த ஆயுத குழு மீது தாம் தாக்குதல் நடாத்தி உள்ளதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது. கடந்த கிழமை பாகிஸ்தானில் நிலைகொண்டுள்ள ஆயுத குழு ஒன்று இந்தியாவின் கட்டுப்பாடில் உள்ள காஷ்மீர் பகுதியுள் நுழைந்து, இந்திய இராணுவ முகாம் ஒன்றை (Uri) தாக்கி இருந்தது. அதில் 18 இந்திய இராணுவத்தினர் பலியாகி இருந்தனர். . இந்தியாவின் தாக்குதலுக்கு உண்மையில் எவ்வளவு எதிரிகள் பலியாகினர் என்பதை அறிய முடியாவிடினும், இந்தியா தாம் […]
Oil India Limited, Indian Oil Corporation Limited, Bharat Petro Resources ஆகிய இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவின் இரண்டு மசகு எண்ணெய் அகழ்வுகளில் சுமார் $3.2 முதலிட இந்திய அரசு இன்று அனுமதி வழங்கி உள்ளது. . அதன்படி ரஷ்யாவின் அரச நிறுவனமான Vankor oil fieldலில் இந்திய நிறுவனங்கள் $2.02 பில்லியனை முதலீடு செய்யும். இம்முதலீடு மூலம் இந்திய நிறுவனங்கள் Vankor உரிமையில் 23.9% பெரும். இங்கிருந்து இந்தியா 6.56 மில்லியன் மெட்ரிக் எண்ணெயை பெறும். […]
அடுத்த மாதம் 9ஆம், 10ஆம் திகதிகளில், பாகிஸ்தானின் இஸ்லாமபாத் நகரில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளாது என்று இந்திய வெளியுறவு அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தானில் இருந்து வந்த ஆயுத குழு ஒன்று இந்திய படை முகாம் ஒன்றை தாக்கி 18 படையினரை கொலை செய்ததன் காரணமாகவே இந்தியா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. . இடம்பெறவுள்ள மாநாடு 19வது சார்க் மாநாடாகும். இந்தியா போல் ஆப்கானிஸ்தான், பங்களாதேசம், மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் பங்கு […]