சிங்கப்பூர் சிறை போகும் சுவிஸ் வாங்கியாளர்

சிங்கப்பூர் அரசு 1MDB என்ற விடயம் தொடர்பாக விசாரணைகள் நடாத்தி வந்திருந்தது. அதன் ஒரு அங்கமாக சுவிஸ் நாட்டு பிரசையும், சுவிஸ் நாட்டு வங்கியான Falcon Private Bankகின் சிங்கப்பூர் கிளையில் பணிபுரிந்தவருமாகிய Jens Fred Sturzenegger குற்றாவளியாக காணப்பட்டு உள்ளார். புதன்கிழமை சிங்கப்பூர் நீதிமன்றில் கூறப்பட்ட கூறில், இந்த சுவிஸ் வாங்கியாளர் 1MDB தொடர்பாக பொய்யான தகவல்களை சிங்கப்பூர் விசாரணைகளுக்கு வழங்கியுள்ளார். இவருக்கு 28-கிழமை சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் இவருக்கு $89,000 தண்டமும் […]

டிரம்ப்பை திருப்திப்படுத்த கனடிய ரூடோ நகர்வு

அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ள டொனால்ட் டிரம்ப்பை (Donald Trump) திருப்திப்படுத்தும் நோக்கில் தனது அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார் கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin Trudeau). இதுவரை கனடிய வெளிவிவகார அமைச்சராக Stephane Dion என்பவரே செயல்பட்டு வந்துள்ளார். Dion டிரம்ப் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் காரணமாகவே தற்போது, டிரம்ப் அமெரிக்காவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், வெளியுறவு பதவியை இழந்துள்ளார். . அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற காலத்தில், டிரம்ப் பெரும் முஸ்லீம் எதிர்ப்பு […]

ஐரோப்பாவில் அமெரிக்கா படை குவிப்பு

ஒபாமா அரசு நூற்றுக்கணக்கான அமெரிக்க காலால் படையினரை ஐரோப்பா அனுப்பியுள்ளது. இந்த படை நகர்வில் சுமார் 3500 அமெரிக்க காலால் படையினரும், அவர்களுடன் 87 tanks, 18 howitzer artillery, 419 humvee வாகனங்கள், 144 Bradley வகை யுத்த வாகனங்கள் உட்பட வேறு பல யுத்த வாகனங்களும் ஐரோப்பா சென்றுள்ளன. ஜேர்மனியில் தற்போது இறக்கப்படும்  போலந்து போன்ற  அனுப்பப்படும். . ஹில்லாரி கிளிண்டனின் தோல்விக்கு ரஷ்யாவே காரணம் என்று கருதும் ஒபாமா அரசு வேகமாக இந்த […]

அமெரிக்கா 35 ரஷ்யர்களை வெளியேற்றியது

ரஷ்யா கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ஹெலரி கிளின்டனினுக்கு எதிராக internet மூலம் தாக்குதல் செய்துள்ளது (internet hacking) என்று கூறி ஒபாமா அரசு இன்று ரஷ்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் ஒரு அங்கமாக அமெரிக்காவின் உள்ள ரஷ்ய தூதுவர் நிலையத்துடன் இணைந்து கடமைபுரிந்த35 ரஷ்யர்களை 72 மணித்தியாலத்தில் வெளியேறுமாறு ஒபாமா அரசு கூறியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஒபாமா கூறியுள்ளார். . ஒபாமா அரசின் கூற்றுப்படி ரஷ்ய […]

சிரியாவில் நிரந்தர யுத்த நிறுத்தம்?

2011 ஆம் ஆண்டில் இருந்து அண்மை காலம்வரை சிரியாவில் சண்டையிட்டு வந்த சிரிய அரசும், பல ஆயுத குழுக்களும் தற்போது நாடளாவிய யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி உள்ளன. நாடளாவிய யுத்த நிறுத்தம், உள்ளூர் நேரப்படி, இன்று வியாழன் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டு உள்ளது. . இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் அமெரிக்காவின் எந்தவித பங்கும் இன்றியே இந்த யுத்த நிறுத்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, சவுதி உட்பட பல நாடுகள் துருக்கியின் உதவியுடன் […]

இந்தியாவில் 255 போலி கட்சிகளுக்கு தடை

போலி கட்சிகள் என்று சந்தேகிக்கப்படும் 255 கட்சிகளை இந்தியா தடை செய்துள்ளது. இந்த கட்சிகள் கடந்த 10 வருடங்களாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட்டு இருந்திருக்கவில்லை. இவை யாவும் பெயரளவில் மட்டுமே கட்சிகள். கடந்த வருடத்தில் சுமார் 1,866 கட்சிகள் பதிவாகி இருந்த இந்தியாவில் தற்போது 2,045 கட்சிகள் பதிவாகி உள்ளன. . இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு பெருமளவு வருமான வரி சலுகைகள் உண்டு. அத்துடன் சுமார் 20,000 இந்திய ரூபாய்கள் வரை கிடைக்கும் நன்கொடைகளுக்கு நன்கொடையாளர் பெயர் […]

சந்திரனின் மறுபக்கம் போகவுள்ளது சீனா

சீனா சந்திரனின் மறுபக்கத்தில் அல்லது மறைந்துள்ள பக்கத்தில் விண்கலம் ஒன்றை விரைவில் இறக்கவுள்ளதாக இன்று கூறியுள்ளது. அவ்வாறு இன்றுவரை எந்த நாடும் செய்திருக்கவில்லை. . பூமியில் இருந்து சந்திரனை பார்க்கும் எமக்கு எப்போதுமே சந்திரன் ஒரே மாதிரியாக இருக்கும். சந்திரன் பூமியை சுற்றும் அதேவேளை தனது அச்சு வழியே சுழன்றும் வருகிறது. அப்படி இருக்கையில் நாம் ஏன் சந்திரனின் மற்றைய பக்கங்களை பார்ப்பது கிடையாது? . சந்திரன் பூமியை சுற்ற சுமார் 27 நாட்கள் எடுக்கிறது. அதேவேளை […]

ஆப்கான் இல்லாது ஆப்கான் மாநாடு

ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பாக ஆராய ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் மாநாடு ஒன்றை இன்று செவ்வாய் நடாத்தி உள்ளன. மாஸ்கோவில் இடம்பெற்ற ஆபிகானிஸ்தான் தொடர்பான இந்த மாநாட்டுக்கு ஆப்கானிஸ்தான் அழைக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் விசனம் கொண்டுள்ளது தற்போதைய ஆப்கானிஸ்தான் அரசு. கூடவே அமெரிக்காவும் விசனம் கொண்டுள்ளது. . தற்போதைய ஆப்கானிஸ்தான் அரசு இந்தியா மற்றும் அமெரிக்கா சார்பானது. அமெரிக்கா மூலம் இந்தியாவே ஆப்கானிஸ்தானில் அபிவிருத்தி வேலைகளை செய்கிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் இந்தியாவும் ஆளுமை செய்வதற்கு போட்டியாகவே […]

ரஷ்ய விமானம் வீழ்ந்ததில் 92 பேர் பலி

ரஷ்யாவின் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் 92 பலியாகியுள்ளனர் என்று கூறப்படுள்ளது. ரஷ்யாவின் Sochi என்ற நகரில் இருந்து சிரியா நோக்கி சென்ற Tu-154 வகை விமானமே இன்று ஞாயிரு கருங்கடலுள் வீழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை. . மொத்தம் 84 பயணிகளும், 8 பணியாளர்களும் இராணுவத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் இருந்துள்ளார். ரஷ்யாவின் இராணுவ இசைக்குழு ஒன்றின் (Alexandrov Ensemble அல்லது Red Army Choir) 64 உறுப்பினரும் இந்த பயணிகளுள் அடங்குவர்.விமானம் மேலேறி […]

இந்தியா அமெரிக்காவின் Major Defense Partner

2017 ஆம் ஆண்டுக்கான, சுமார் $619 பில்லியன் வெகுமதியான, அமெரிக்காவின் பாதுகாப்பு வரவுசெலவு திட்டத்தில் ஜனாதிபதி ஒபாமா வெள்ளியன்று கையொப்பம் இட்டுள்ளார். இந்த வரவுசெலவு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி இந்தியாவை அமெரிக்காவின் Major Defense Partner என்று வகைப்படுத்துதல் ஆகும். அமெரிக்கா வேறு எந்த ஒரு நாட்டையும் Major Defense Partner என்று வகைப்படுத்தவில்லை. . மோதியின் இந்திய அரசு இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் உதவியை எதிர்பார்க்கிறது. அதேவேளை வளர்ந்துவரும் சீனாவுக்கு முகம் கொடுக்க அமெரிக்கா […]