NATO நாடான துருக்கி ரஷ்ய ஏவுகணையை கொள்வனவு

துருக்கி (Turkey) ஒரு NATO நாடு. ஆனால் தாம் ரஷ்யாவின் S-400 வகை நிலத்தில் இருந்து வானத்துக்கான ஏவுகணைகளை (surface-to-air) கொள்வனவு செய்யவுள்ளதாக இன்று செவ்வாய் அறிவித்து உள்ளது துருக்கி. இந்த கொள்வனவு துருக்கிக்கும் ஏனைய NATO நாடுகளுக்கும் இடையில் வளரும் முரண்பாட்டை தெளிவாக காட்டியுள்ளது. . Cold War காலத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராகவும், பின்னர் ரஷ்யாவுக்கு எதிராகவும் செயல்படும் நோக்கத்தை முதன்மையாக கொண்டு உருவாக்கப்பட்ட அணியே NATO. அந்த அணியில் அங்கமான துருக்கி இன்று […]

Ian Paisley இலங்கைக்கு இலஞ்ச உல்லாச பயணம்?

வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் இயன் (Ian Paisley) சுமார் 100,000 பிரித்தானிய பௌண்ட்ஸ் பெறுமதியான உல்லாச பயணத்தை இலஞ்சமாக பெற்றுள்ளார் என்று கூறுகிறது பிரித்தானிய Telegraph பத்திரிகை. அதை மறுக்கிறார் Ian Paisley. . இயன் வட அயர்லாந்தின் Democratic Unionist Party (DUP) என்ற கட்சியை சார்ந்தவர். இயனின் தந்தையார் DUP கட்சியை ஆரம்பித்தவர்களுள் ஒருவர். தந்தையார் வென்றுவந்த தொகுதியில் இயன் 2010 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது பிரித்தானியாவில் […]

சூறாவளி அன்ரூவை பின் தள்ளலாம் ஏர்மா

அமெரிக்காவின் பிளோரிடா (Florida) மாநிலத்தை ஞாயிறு தாக்கவுள்ள சூறாவளி ஏர்மா (Hurricane Irma), பிளோரிடாவை 1992 ஆம் ஆண்டு தாக்கிய சூறாவளி அன்ரூ (Hurricane Andrew) ஏற்படுத்திய அழிவுகளுக்கும் அதிகமான அழிவுகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. . 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 270 km/h காற்றுடன் தாக்கிய சூறாவளி அன்ரூ 65 பேரை பலியாக்கி, சுமார் 63,500 வீடுகளை முற்றாக அழித்து சென்றது. மேலும் 124,000 வீடுகளை சேதப்படுத்தியும் சென்றது. அந்த சூறாவளியின் மொத்த […]

வடகொரியா மீது முழுத்தடையை விரும்பும் அமெரிக்கா

வடகொரியா மீது முழுமையான தடையை விதிக்க விரும்புகிறது அமெரிக்கா. வடகொரியாவுக்கு எரிபொருள் (பெட்ரோல்) விற்பனை செய்தல், எரிவாயு விற்பனை செய்தல், வடகொரியாவிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தல், வடகொரியார் (சீனா, ரஷ்யா ஆகிய) வெளிநாடுகளில் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கல் ஆகியவற்றை தடை செய்ய அமெரிக்கா ஒரு திட்டத்தை ஐ.நா. முன் வைக்கிறது. அண்மையில் வடகொரியா செயல்படுத்திய H-Bomb காரணமாகவே அமெரிக்கா இந்த தடைகளை விதிக்க முனைகிறது. . ஆனால் இந்த தடைக்கு ரஷ்யா மற்றும் சீனா […]

ஹார்வியின் பின்னர் வருகிறது சூறாவளி ஏர்மா

அண்மையில் சூறாவளி ஹார்வி (Harvey) அமெரிக்காவின் Huston மாநகர் உட்பட Texas மாநிலத்து கிழக்கு கரையோரத்தை பெரிதும் பாதித்து இருந்தது. அந்த அழிவுகளுக்கு பின்னர் வருகிறது சூறாவளி ஏர்மா (Irma). தற்போது நடுக்கடலில் நகரும் ஏர்மா இன்று திங்கள் கிழமை category 4 ஆக்கவுள்ளது. அது தற்போது சுமார் 210 km/h காற்றை வீசுகிறது. . சூறாவளி ஏர்மா அநேகமாக புளோரிடா (Florida) மாநிலத்தையே தாக்கும் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது. இது புளோரிடா மாநிலத்து தென் முனையில் அல்லது […]

வடகொரியா அணுகுண்டு பரிசோதனை, அதனால் நிலநடுக்கம்

வடகொரியா இன்று ஞாயிரு தனது 6வது அணுக்குண்டு பரிசோதனையை செய்துள்ளது என்றும், அதனால் வடகொரியா-சீனா எல்லையில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்க அதிர்வை United States Geological Survey பதிவு செய்துள்ளது. சீனாவின் நிலநடுக்க கண்காணிப்பு அமைப்பு இந்த நிலநடுக்கம் 6.3 magnitude தாக்கத்தை கொண்டது என்றுள்ளது. . வடகொரியாவின் முன்னைய அணுகுண்டு வெடிப்புகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அவை 6.3 அளவில் இருந்திருக்கவில்லை. அதனால் இன்றைய குண்டு அதி பெரிய […]

அந்நிய மாணவரால் அமெரிக்காவுக்கு வருடம் $31 பில்லியன்

வெளிநாட்டு மணவாரால் வருடம் ஒன்றில் அமெரிக்கா சுமார் $31 பில்லியன் செலவாணியை பெறுகிறது என்று Voice of America அறிக்கை ஒன்று கூறியுள்ளது. இந்த அந்நிய செலவாணியை 1.2 மில்லியன் வெளிநாட்டு மாணவர்கள் செலுத்தி உள்ளனர். . 2015-2016 கல்வி ஆண்டுக்கான அந்நிய மாணவர் தொகையில் மீண்டும் முன்னணியில் இருப்பது சீன மாணவர்களே. மேற்படி கல்வி ஆண்டில் அமெரிக்காவில் படிக்க சென்ற சீன மாணவர் தொகை 328,547 என்று கூறப்படுகிறது. இவர்கள் $11.4 பில்லியன் செலவாணியை அமெரிக்காவுக்கு […]

Houston வீடுகள் பல கிழமைகளுக்கு வெள்ளத்துள்

அமெரிக்காவின் Texas மாநிலத்து ஹியூஸ்ரன் (Houston) நகரில் கடந்த கிழமை Harvey என்ற சூறாவளி பொழிந்த மழை நீருள் பல்லாயிரம் வீடுகள் மூழ்கி உள்ளன. இந்த வீடுகள் தொடர்ந்தும் பல கிழமைகளுக்கு நீருள் மூழ்கி இருக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் அந்த பகுதி வீதிகளில் தொடர்ந்தும் வள்ள போக்குவரத்தே சாத்தியமாக இருக்கும். . ஹியூஸ்ரன் மாநகர முதல்வர் Sylvester Turner கூறிய கருத்துப்படி அங்குள்ள இரண்டு நீர் அணைகள் தொடர்ந்து மேவி பாய்வதால் அவ்விடத்தில் சுமார் 20,000 […]

பூமிக்கு அருகால் சென்றது 4.4 km விட்ட விண்கல்

இன்று பூமிக்கு அருகால் சென்றது Florence என்ற 4.4 km விட்டம் கொண்ட விண்கல் (asteroid). இந்த கல் பூமியில் இருந்து சுமார் 7 மில்லியன் km தூரத்தில் சென்றுள்ளது. இது பூமிக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் 18 மடங்காகும். . வழமையாக விண்கற்கள் அவ்வப்போது பூமிக்கு அருகால் சென்றாலும் பொதுவாக அவை இவ்வளவு பெரிய கல்லாக இருப்பதில்லை. அவை ஒரு பஸ் அளவு அல்லது ஒரு வீடு அளவு கல்லாகவே இருக்கும். NASA ஆவணப்படுத்திய கற்களுள் […]

முஷ்ராபை கைது செய்ய நீதிமன்றம் கட்டளை

முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷ்ராபை (Pervez Musharraf) கைது செய்யும்படி பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று வியாழன் கட்டளை விடுத்துள்ளது. ஆனால் கடந்த வருடம் முதல் முஷ்ராப் டுபாயில் வசிக்கிறார். முஷ்ராபின் சொத்துக்களையும் முடக்கவும் நீதிமன்றம் கட்டளை விடுத்துள்ளது. . 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற பெனாசிர் பூட்டோ (Benazir Bhutto) படுகொலை வழக்கில் முஷ்ராப் குற்றம் சாட்டப்பட்டு உள்ளார். அதை முஷ்ராப் மறுத்துள்ளார். . பாகிஸ்தானில் ஒரு முன்னாள் இராணுவ உயர் அதிகாரியை கைது செய்ய கட்டளை […]