1500 புள்ளிகளால் கவிழ்ந்த Dow பங்கு சந்தை

அமெரிக்காவின் Dow (Dow Jones Industrial average) பங்கு சந்தை இன்று திங்கள் மதியம் அளவில் சுமார் 1,500 புள்ளிகளால் வீந்திருந்தது. அந்த பாரிய வீழ்ச்சியின் சிறிதை மீண்ட Dow நாள் முடிவின்போது 1,175 புள்ளிகளால் வீழ்ந்துள்ளது. Dow வரலாற்றின் அதி கூடிய ஒருநாள் வீழ்ச்சி இதுவாகும். . கடந்த வெள்ளிக்கிழமை அடைந்த 665 புள்ளி வீழ்ச்சியுடன் இன்று மதிய வீழ்ச்சியுடன் மொத்தம் 2,100 புள்ளிகளால் சந்தை வீழ்ந்திருந்தது. மதிய வேளையின்போது சில நிமிடங்களில் மட்டும் 500 […]

மேலும் 60,000 மாயன் கட்டிடங்கள் கண்டுபிடிப்பு

முற்காலங்களில் அதி சிறந்து வளர்ந்திருந்த மக்களில் மாயன் (Mayan) மிக முக்கியமானவர்கள். மத்திய அமெரிக்காவின் பல பாகங்களில் மாயன் எச்சங்கள் பல இன்றும் உண்டு. மெக்ஸிக்கோ (Mexico) நாட்டு சிசென் இற்ச (Chichen Itza), ருழும் (Tulum), கோபா (Coba) ஆகிய இடங்கள் தற்போது உல்லாச பயணிகளின் முக்கிய தெரிவுகள். இதுவரை அறிந்த தரவுகளின் அடிப்படையில் சுமார் 2 மில்லியன் மாயன் அவர்களின் உச்ச காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்பட்டு இருந்தது. . ஆனால் அண்மையில் LIDAR […]

கியூபா பிடெல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை

கியூபாவின் முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோவின் மகன் Fidel Castro Diaz-Balart தனது 68ஆவது வயதில் தற்கொலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இன்று வியாழன் தற்கொலை செய்துகொண்டவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, வைத்தியம் பெற்று வந்துள்ளார். . இவர் தனது தந்தையார் போன்ற உருவத்தை கொண்டிருந்ததனால் பலரும் இவரை Little Fidel அல்லது Fidelito என்று அழைத்தனர். இவரது தாயாருக்கும், தந்தையார் பிடெல் காஸ்ரோவுக்கும் இடையிலான திருமணம் சிறுகாலத்துள் முடிவடைந்தது. இவர் […]

அத்திரம்பாக்கத்தில் 385,000 வருட ஆயுதங்கள்

நேற்று புதன்கிழமை Nature என்ற சஞ்சிகை வெளியிட்ட ஆய்வு கட்டுரை ஒன்றின்படி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 km தூரத்தில் உள்ள அத்திரம்பாக்கம் என்ற இடத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட ஆதி மனிதனின் கல் ஆயுதங்கள் 385,000 வருடங்கள் பழமையானவை என்று கூறப்படுகிறது. . இதுவரை காலமும் விஞ்ஞானம் இந்திய மனிதம் தொடர்பாக கொண்டிருந்த எண்ணக்கருவை நேற்று வெளியிட்ட கருத்து பொய்யாக்கி உள்ளது. முன்னர் கொண்டிருந்த கணிப்பிலும் 250,000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆதி […]

அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு கணை தோல்வியில்

அமெரிக்காவும் ஜப்பானும் இணைந்து உருவாக்கி, இன்று புதன் ஏவி ஒத்திகை பார்த்த ஏவுகணை எதிர்ப்பு கணை (interceptor missile) பயிற்சி இலக்கை தாக்கி அழிக்காது தோல்வியில் முடிந்துள்ளது. SM-3 Block IIA என்ற இந்த ஏவுகணை எதிர்ப்பு கணை Hawaii பகுதியில் இன்று ஒத்திகை செய்யப்பட்டது. . கடந்த வருடம் பெப்ருவரி மாதம் செய்யப்பட்ட இவ்வகை ஒத்திகை ஒன்று வெற்றிகரமாக பயிற்சி இலக்கை தாக்கி இருந்தது. ஆனால் பின் ஜூன் மாதம் செய்யப்பட்ட ஒத்திகை தோல்வியில் முடிந்து […]

ஐரோப்பிய ஒன்றிய பிரிவு பிரித்தானியாவையே பாதிக்கும்

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது, பிரித்தானியாவுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு ஆய்வு கூறியுள்ளது. பிரித்தானிய அரசுக்கென தாரிக்கப்பட்ட இந்த இரகசிய ஆய்வு (confidential report) இன்று திங்கள் பகிரங்கத்துக்கு வந்துள்ளது. பிரித்தானிய அரசும் அவ்வாறு ஒரு அறிக்கை உள்ளதை மறுக்கவில்லை. . சிறிது காலத்தின் முன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா என்று பிரித்தானிய மக்களிடம் தேர்தல் மூலம் கேட்டிருந்தது. அப்போது மக்கள் வெளியேறுவதை ஆதரித்து இருந்தனர். ஆனாலும் பிரித்தானியா தற்போது […]

Air Indiaவின் 49% உரிமைக்கு வெளிநாட்டு நிறுவனம்

Air India விமான சேவையில் 49% உரிமைக்கு முதலிட ஒரு வெளிநாட்டு விமான சேவை முன்வந்துள்ளது என்று இந்தியாவின் விமான சேவை செயலாளர் R . N. Choubey கூறியுள்ளார். நட்டத்தில் இயங்கும் Air India விமான சேவையை தனியார் வசப்படுத்த இந்தியா நீண்ட காலமாக முயற்சி செய்து வந்துள்ளது. ஆனால் தற்போதே ஒரு விண்ணப்பம் கிடைத்துள்ளது. . இவ்வாறு 49% உரிமையை கொள்ள விரும்பும் வெளிநாட்டு விமானசேவையின் பெயர் இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை. . சிங்கப்பூர் […]

ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல், 95 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் (Kabul) இன்று சனிக்கிழமை இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றுக்கு குறைந்தது 95 பேர் பலியாகியும், 200 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். . இந்த தாக்குதல் பழைய உள்நாட்டு அலுவலக அமைச்சின் முன் இடம்பெற்று உள்ளது. வழமையாக இந்த வீதி பொதுமக்கள் பாவனைக்கு மூடப்பட்டு இருந்தாலும், தாக்குதல் நடாத்திய வாகனம் ஒரு அம்புலன்ஸ் போல இருந்தமையால் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டு இருந்தது என்கிறது அரசு. . தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் பெருமளவு வெளிநாட்டு […]

சிரியாவில் அமெரிக்க-துருக்கி மோதல்?

சிரியாவில் IS குழு கணிசமாக அழிக்கப்பட்ட நிலையில், அங்கு இப்போது அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையில் மோதல் உருவாக்கக்கூடிய நிலை தோன்றி உள்ளது. அமெரிக்கா வளர்த்த YPG என்ற சிரியா நாட்டு Kurdish குழு மீது அண்மையில் துருக்கி மேற்கொண்டுவரும் இராணுவ தாக்குதலே அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையில் முறுகல் நிலையை உருவாக்கி உள்ளது. . IS குழு இருந்தபோது, அவர்களுக்கு எதிராக போராட அமெரிக்கா YPG என்ற ஆயுத குழுவை வளர்த்து இருந்தது. அப்போது YPG குழுவுக்கு அமெரிக்கா […]

எகிப்தின் ஜனாதிபதி வேட்பாளர் கைது

Sami Annan என்ற எகிப்தின் முன்னாள் ஜெனரல் தான் வரும் ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி சிசிக்கு (Sissi)  எதிராக, போட்டியிட உள்ளதாக கடந்த வெள்ளி அறிவித்து இருந்தார். ஆனால் அவர் இன்று செவ்வாய் சிசி தரப்பால் கைது செய்யப்பட்டு உள்ளார். சிசி தலைமையிலான எகிப்தின் இராணுவம் தற்போது இந்த முன்னாள் ஜெனரலை விசாரணை செய்கிறது. . ஜெனரல் சிசி 2013 ஆம் ஆண்டு இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சிக்கு வந்திருந்தார். முபாரக்குக்கு ஆராதவு வழங்கிய மேற்கு […]