காசாவுக்கு நெருப்பு வைத்து, முள்ளிவாய்க்காலுக்கு ஊளையிடும் தமிழ் அடிவருடிகள்

காசாவுக்கு நெருப்பு வைத்து, முள்ளிவாய்க்காலுக்கு ஊளையிடும் தமிழ் அடிவருடிகள்

2024ம் ஆண்டும் கனடிய தமிழ் அரசியல் புள்ளிகளும், புள்ளிகளாக மாற துடிப்பவர்களும் தமது கனடிய பெரும்பான்மை அரசியல்வாதிகளுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் genocide பெயரில், 15 ஆண்டுகளின் பின்னும்,  ஊளையிட்டு உள்ளனர். இந்த ஊளையிடல் இடம்பெறுவது கனடா வருடிக்கொடுக்கும் இஸ்ரேலின் அரச படையினரின் காசா மீதான genocide இடம்பெறும் வேளையிலேயே. நமது தமிழ் அரசியல் புள்ளிகள் எதோ தாம் கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக Facebook பேச்சு பேசினாலும், அவர்கள் உள்நோக்கம் சொந்த இலாபங்கள் மட்டுமே. இவர்களால் இலங்கை தமிழருக்கு எந்தவித பயனும் இல்லை. 1983ம் ஆண்டு கலவர […]

கனடாவில் அதிக அளவில் கைவிடப்படும் உடல்கள்

கனடாவில் அதிக அளவில் கைவிடப்படும் உடல்கள்

கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்றாரியோவில் (Ontario) 2013ம் ஆண்டு மொத்தம் 242 மரணித்த உடல்களே உறவினரால் பொறுப்பு ஏற்கப்படாது வைத்தியசாலைகளில் கைவிடப்பட்டு இருந்தன என்றும் ஆனால் 2023ம் ஆண்டில் அத்தொகை 1,183 ஆக உயர்ந்துள்ளது என்றும் மாநிலத்தின் மரண விசாரணை அதிகாரி (coroner) Dirk Huyer தெரிவித்து உள்ளார். Quebec மாநிலத்தில் 2023ம் ஆண்டு 66 ஆக இருந்த இத்தொகை 2013ம் ஆண்டு 183 ஆக அதிகரித்து உள்ளது. Alberta மாநிலத்தில் இத்தொகை அதே காலத்தில் 80 இல் இருந்து 200 ஆக […]

கப்பல் சேவை நிறுத்தம், ஆசனங்கள் விற்பனையில்

கப்பல் சேவை நிறுத்தம், ஆசனங்கள் விற்பனையில்

இலங்கையின் காங்கேசன் துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை கால வரையறை இன்றி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான இணையம் தற்போதும் பயண ஆசனங்களை விற்பனை செய்கிறது. மே மாதம் 13ம் திகதி மீண்டும் மேற்படி கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று முதலில் கூறப்பட்டது. பின் இந்த சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக மே மாதம் 17ம் திகதி ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த சேவை கால வரையறை இன்றி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் www.sailindsri.com என்ற இணையம் தொடர்ந்தும் பயண […]

இந்திய Colonel காசாவில் பலி, இந்தியா அதை புறக்கணிப்பு

இந்திய Colonel காசாவில் பலி, இந்தியா அதை புறக்கணிப்பு

முன்னாள் இந்திய இராணுவ Colonel Waibhav Anil Kale, வயது 46, திங்கள் காசாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பலியாகி உள்ளார். ஆனால் இந்திய வெளியுறவுஅமைச்சர் ஜெய்சங்கரும், வெளியுறவு அமைச்சும் இந்த மரணத்துக்கு கவலை தெரிவிக்கவில்லை. Kale 11 ஆண்டுகள் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவத்தின் Rifles படையில் கடமையாற்றி 2022ம் ஆண்டு பதவி விலகி இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் இவர் ஐ.நாவின் Department of Safety and Security (DSS) அணியில் இணைந்து Security Coordination Officer ஆக காசாவில் பணியாற்றும் ஐ.நா. […]

சீன EV வாகனங்களுக்கு பைடென் 102.5% இறக்குமதி வரி

சீன EV வாகனங்களுக்கு பைடென் 102.5% இறக்குமதி வரி

மின்னில் இயங்கும் (EV) சீன வாகனங்களின் தரத்தால் மிரண்ட அமெரிக்காவின் பைடென் அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் EV வாகனங்களுக்கு இன்று செவ்வாய் முதல் 102.5% இறக்குமதி வரியை (tariff) நடைமுறைசெய்கிறது. EV வாகனங்களுக்கு மட்டுமன்றி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் solar cells (50%), computer chip (50%), syringes, இரும்பு (25%), அலுமினியம் (25%) ஆகியவற்றுக்கும் பைடென் அரசு இறக்குமதி வரியை அதிகரித்து உள்ளது. அதேவேளை ஐரோப்பாவின் Stellantis நிறுவனமும் சீனாவின் Leapmotor நிறுவனமும் கூட்டக செப்டம்பர் மாதம் […]

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் Elizabeth Horst?

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் Elizabeth Horst?

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக கடமையாற்ற Elizabeth Horst என்பவரை தெரிவு செய்துள்ளார் அமெரிக்க சனாதிபதி பைடென்.  அமெரிக்க சட்டப்படி சனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்ட தூதுவர் ஒவொருவரும் அமெரிக்க காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்படல் அவசியம். இவரின் தூதுவர் பதிவி காங்கிரசால் உறுதி செய்யப்பட்டால் தற்போதைய தூதுவர் Julie Chung அமெரிக்கா திரும்ப Horst இலங்கைக்கான புதிய தூதுவர் ஆவார்.  Horst இதற்கு முன்னர் ஜெர்மனி, யூக்கிறேன் ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றி, பின் Estonia என்ற நாட்டில் இடைக்கால தூதராக (ஜூலை 2018 – […]

அமெரிக்க ஆயுதங்களை குற்ற முறையில் பயன்படுத்துகிறது இஸ்ரேல்

அமெரிக்க ஆயுதங்களை குற்ற முறையில் பயன்படுத்துகிறது இஸ்ரேல்

இஸ்ரேல் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முரணான முறையில் பயன்படுத்தி இருக்கலாம் என்று இன்று வெள்ளிக்கிழமை பைடென் அரசு கூறியுள்ளது. ஆனாலும் அவற்றை உறுதி செய்ய தம்மிடம் திடமான ஆதாரங்கள் இல்லை என்றும் பைடென் அரசு கூறியுள்ளது. இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ironclad உறவு உள்ளது என்று எப்போதும் கூறும் அமெரிக்கா முடிந்த அளவில் இஸ்ரேலின் குற்றங்களை நீண்ட காலம் மறைத்து வந்துள்ளது. இம்முறை காசாவில் இஸ்ரேல் செய்யும் குற்றங்களை மறைக்க முடியாது முழிக்கிறது […]

காசா ஆதரவு Eurovision ஆர்ப்பாட்டத்தில் Greta Thunberg

காசா ஆதரவு Eurovision ஆர்ப்பாட்டத்தில் Greta Thunberg

Malmo என்ற சுவீடன் நகரில் இடம்பெறும் இந்த ஆண்டுக்கான Eurovision பாட்டு போட்டியில் இஸ்ரேல் பாடகர் பங்கு கொள்வதை எதிர்த்து பல்லாயிரம் பேர்களை கொண்ட காசா ஆதரவு ஊர்வலம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அந்த ஊர்வலத்தில் சூழலுக்காக போராடும் Greta Thunberg உம் கலந்து கொண்டுள்ளார். யூக்கிறேனுள் நுழைந்ததால் ரஷ்யாவை Eurovision போட்டியில் இருந்து விலக்கிய Eurovision அமைப்பாளர் இஸ்ரேலின் காசா கொடுமைகளையும் மீறி இஸ்ரேலை Eurovision போட்டியில் பங்குகொள்ள வைப்பதை சாடியுள்ளார் Greta. Greta இந்த ஊர்வலத்தில் பங்கு கொள்வதற்கு […]

சில குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்க மறுக்கும் பைடென்

சில குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்க மறுக்கும் பைடென்

சிலவகை குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்க மறுக்கிறார் அமெரிக்கா சனாதிபதி பைடென். அந்த குண்டுகளை இஸ்ரேல் சர்வதேச மற்றும் அமெரிக்க சட்டங்களுக்கு முரணாக பயன்படுத்துகிறது என்ற அச்சமே காரணம். அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களை நட்பு நாடுகள் அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமையவே பயன்படுத்த வேண்டும். தவறின் அமெரிக்கா தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என்கிறது அமெரிக்க சட்டம். இந்த கிழமை பைடென் அமெரிக்க காங்கிரசுக்கும் இஸ்ரேல் எவ்வாறு அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் பயன்படுத்துகிறது என்பதை சட்டப்படி தெரிவிக்க […]

1 23 24 25 26 27 327