அமெரிக்கா ஜனாதிபதி ரம்பும் வடகொரியாவின் தலைவர் கிம்மும் அடுத்த மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து வடகொரியாவின் அணுவாயுத நடவடிக்கைகளை நிறுத்த பேச்சுவார்த்தைகள் செய்யவிருந்தனர். இந்த சந்திப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் ரம்பும் கிம்மை புகழ்ந்து அறிக்கைகள் வெளியிட்டு இருந்தார். தனக்கு சமாதத்துக்கான நோபேல் பரிசு கிடைப்பதிலும் தவறில்லை என்று கூறியிருந்தார். . ஆனால் தற்போது அந்த சந்திப்பு இடம்பெறுமா, இடம்பெற்றாலும் அந்த சந்திப்பு பலன் எதையும் அளிக்குமா என்ற சந்தேகங்கள் ரம்புக்கு தற்போது தோன்றியுள்ளன. […]
ரம்ப் அரசு சீனா மீது நடைமுறை செய்யவிருந்த புதிய வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளது. இந்த செய்தியை Steven Mnuchin என்ற அமெரிக்காவின் Treasury Secretary தெரிவித்து உள்ளார். இவர் அண்மையில் சீனா சென்று திரும்பியவர். இது ரம்ப் தரப்பின் பின்வாங்கலாகவே கருதப்படுகிறது. . சீனா அமெரிக்காவில் இருந்து செய்யும் கொள்வனவுகளை மேலும் அதிகரிக்க இணங்கி உள்ளதாக Mnuchin கூறி உள்ளார். ஆனால் திடமாக எந்தவொரு திட்டத்தையும் கூறவில்லை. . இந்த விடயம் தொடர்பாக சீனாவின் பத்திரிகையான […]
ஒபாமா காலத்தில் ஈரானுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு உடன்படிக்கையில் இருந்து விலகிய ரம்ப், பதிலுக்கு ஈரான் மீது மீண்டும் தடைகளை விதித்தார். அத்துடன் ஈரானுடன் இணைந்து செயல்படும் மற்றைய நாடுகளின் நிறுவனங்களையும் தண்டிக்கவுள்ளதாக கூறி இருந்தார். அதன்படி ஈரானில் முதலிடும் ஐரோப்பிய நிறுவனங்களையும் அமெரிக்கா தண்டிக்கும். . அமெரிக்காவின் மேற்படி தண்டனைகளில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களை பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் blocking statute என்ற சட்டத்தை நடைமுறை செய்யவுள்ளது. இந்த சட்டப்படி ஐரோப்பிய நிறுவங்கள் […]
ஒபாமா காலத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் செய்துகொண்ட உடன்படிக்கையின் பின் ஈரான் மீதான பொருளாதாரா தடைகள் நீக்கப்பட்டு இருந்தன. அதற்கமைய பிரான்ஸின் Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் ஈரானில் $2 பில்லியன் முதலீட்டை செய்ய முன்வந்திருந்தது. ஏற்கனவே சுமார் $48 மில்லியன் தொகையை செலவிட்டும் உள்ளது. . ஆனால் தற்போது ரம்ப் ஈரான் உடன்படிக்கையில் இருந்து வெளியேறி உள்ள நிலையில், அமெரிக்கா ஈரானுடன் இணைந்து […]
வடகொரியா இன்று புதன்கிழமை தென்கொரியா-அமெரிக்கா இராணுவ பயிற்சி தொடர்பா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அத்துடன் இரண்டு கொரியாக்களின் உயர்மட்ட அதிகாரிகள் நடாத்தவிருந்த சந்திப்பையும் வடகொரியா இரத்து செய்துள்ளது. அதனால் சிங்கப்பூரில் இடம்பெறவிருந்த ரம்ப்-கிம் தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. . தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தென்கொரியாவில் நடாத்தவிருந்த Max Thunder என்ற இராணுவ பயிற்சி காரணமாகவே வடகொரியா விசனம் கொண்டுள்ளது.”நாங்கள் வழங்கும் நல்லென செயல்களுக்கும், சந்தர்ப்பங்களும் ஒரு எல்லை உண்டு” என்றுள்ளது வடகொரியா. . வடகொரியா இந்த விசனத்தை […]
இதுவரைகாலமும் இஸ்ரேலின் Tel-Aviv நகரில் இருந்த இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவரகத்தை ரம்ப் ஜெருசலேம் நகருக்கு இன்று நகர்த்தி இருந்தார். அதை எதிர்த்து பலஸ்தீனர் கிளர்ச்சி செய்தபோது, குறைந்தது 52 பேர் இஸ்ரேலினால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 1,200 பேர் வரை காயம் அடைந்தும் உள்ளனர். . ஜெருசலேத்தின் எதிர்காலத்தை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்படவேண்டும் என்று பலஸ்தீனர் கூறி வந்துள்ளனர். கிழக்கு ஜெருசலேத்தை பலஸ்தீனர் தமது தலைநகர் ஆக விரும்பியுள்ளனர். ஜெருசலேம் இரண்டு தரப்புக்கும் பொதுவான […]
சீனாவின் பெரிய தொழில்நுட்ப நிறுவங்களுள் ஒன்று ZTE. இந்நிறுவனம் network உபகாரங்கள் மற்றும் smartphone ஆகியவற்றை தயாரிக்கிறது. அமெரிக்காவில் ZTE பெருமளவில் network பொருட்களை விற்பனை செய்யாதுவிடினும், ZTE அங்கு பெருமளவு smartphoneகளை விற்பனை செய்கிறது. அமெரிக்க smartpohne விற்பனையில் iPhone (அமெரிக்கா), Samsung (தென்கொரியா), LG (தென்கொரியா) ஆகியவற்றுக்கு அடுத்து, 4ஆம் இடத்தில் உள்ளது ZTE. . ஈரான், வடகொரியா ஆகிய நாடுகள் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளையும் மீறி ZTE ஈரான், வடகொரியா ஆகிய […]
சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் இன்று ஞாயிறு ஆழ்கடல் சோதனைகளுக்கு சென்றுள்ளது. முற்றிலும் சீனாவால் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் சீனாவின் முதலாவது விமானம் தாங்கியை ஒத்தது. . சீனாவின் முதலாவது விமானம் தாங்கி கப்பல் சோவித் யூனியனால் தயாரிக்கப்பட்டது. ஆனால் சோவித் உடைந்தபோது அக்கப்பல் யுக்கிறேன் நாட்டின் உடமையானது. அந்த கப்பலில் இருந்த இயந்திரம் உட்பட அனைத்து இராணுவ பாகங்களும் கழற்றப்பட்ட நிலையில் 1998 ஆம் ஆண்டில் Hong Kong மூலம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. […]
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இன்று சனிக்கிழமை மாநில தேர்தல் இடம்பெறுள்ளது. 2013 ஆம் ஆண்டு முதலமைச்சர் சீதாராமையா தலைமையில் அங்கு ஆட்சிக்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சி மொத்தம் 224 ஆசனங்களில் 121 ஆசனங்களை கைப்பற்றி இருந்தது. அனால் இன்றைய தேர்தலில் அக்கட்சி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது. . இன்றைய தேர்தலில் பிரதமர் மோதி தலைமயிலான பாரதீய ஜனதா கட்சி (BJP) அதிக ஆசனங்களை கைப்பற்றலாம் என்று கருதப்படுகிறது. ஆனாலும் இவர்களும் மெரும்பான்மை ஆட்சியை அங்கு […]
இந்த கிழமையின் ஆரம்பத்தில் இடம்பெற்ற மலேசிய பொது தேர்தலில் தோல்வி அடைந்த, 64 வயதுடைய, முன்னாள் பிரதமர் Najib Razak மலேசியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. . உள்ளூர் நேரப்படி இன்று சனி காலை 10:00 மணியளவில் முன்னாள் பிரதமரும், Rosmah Mansor என்ற அவரின் மனைவியும் விசேட விமானம் ஒன்றின் மூலம் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இந்தோனேசியாவின் Jakarta நகருக்கு செலவிருந்தனர். அப்போதே முன்னாள் பிரதமர் வெளிநாடு செல்வது இடைநிறுத்தப்படுள்ளது. . […]