இன்று செய்வாய் முதல் (00:01 EDT, New York நேரம்) முதல் அமெரிக்காவின் ஈரான் மீதான முதல் கட்ட பொருளாதார தடை நடைமுறைக்கு வந்துள்ளது. இரண்டாம் கட்ட பொருளாதார தடை, குறிப்பாக எண்ணெய் வளம் மீதான தடை, நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைமுறைக்கு வரும். . அமெரிக்காவின் இந்த தடை அமெரிக்க நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகள் செய்வதை தடுப்பது மட்டுமன்றி, அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் பிற நாட்டுகளின் நிறுவனங்கள் ஈரானுடன் வர்த்தகம் செய்வதையும் […]
இந்தியாவின் பல்கலைக்கழகங்களுள் இடம்பெறும் குளறுபடிகள் தொடர்பாக அமெரிக்காவின் New York Times பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரை இந்திய உயர் கல்வியியுள் பிரதமர் மோதி தலைமயிலான பா. ஜ. கட்சி செய்யும் குளறுபடிகளை சாடியுள்ளது. . கடந்த மே மாதம் Times Higher Education World University Rankings வெளியிட்ட ஆய்வுகளின்படி எந்தவொரு இந்திய பல்கலைக்கழகமும் உலகின் முதல் 100 அதிசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த ஆய்வுக்கு உலகின் 1,000 பல்கலைக்கழகங்கள் உட்படுத்தப்பட்டிருந்தன. […]
இந்தோனேசியாவின் Bali பகுதிக்கு அண்மையில் உள்ள Lombok தீவில் 7.0 அளவிலான நிலநடுக்கம் இன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தலாம் என்று அறிவித்திருந்தாலும், சுனாமி எச்சரிக்கை பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளது. . உள்ளூர் நேரப்பபடி இந்த நடுக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6:46 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த நடுக்கத்தின் மையம் சுமார் 10 km ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. . இந்த நடுக்கத்துக்கு பின்னர் 5.4 மற்றும் 4.9 அளவிலான நடுக்கங்கள் உட்பட 12 சிறிய […]
இலங்கைக்கு மேலும் $1 பில்லியன் டாலர் கடன் வழங்க சீனா முன்வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளி கூறியுள்ளது. இந்த 8 வருட கடனுக்கு முதல் 3 வருடங்களுக்கு வட்டி இல்லை என்றாலும், 3 வருடங்களின் பின் 5.25% வட்டி அறவிடப்படும். . சீனாவின் China Development Bank இந்த கடனை வழங்குகிறது. அதேவேளை இன்னோர் $250 மில்லியன் கடனை சீனாவின் முதலீட்டார்களிடம் இருந்து Panda Bond மூலம் பெறவும் இலங்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. […]
அமெரிக்காவின் Apple நிறுவனம் இன்று உலகின் முதல் 1 டிரில்லியன் டாலர் சந்தை பெறுமதி கொண்ட பொது நிறுவனம் என்ற உயர்வை அடைந்துள்ளது. iPhone என்ற தொலைபேசி உட்பட சில தொலைத்தொடர்பு உபகரணங்களை தயாரிக்கும் Apple நிறுவனத்தின் பங்குச்சந்தை பங்கு (stock) ஒன்று இன்று $207.05 பெறுமதியை அடைந்த போதே அந்நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி (market capital) 1 டில்லின் ($1,000,000,000,000) டாலர் ஆகியுள்ளது. . Apple தற்போது 4,829,926,000 பங்குளை (AAPL, NASDAQ) கொண்டுள்ளது. அதேவேளை […]
ஜூலை மாதம் 24 ஆம் திகதி பிறந்து, சிறிது நேரத்தில் மரணமாகிய தனது பிள்ளையை தற்போதும் (ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை) சுமந்து திரிகிறது J-35 என்று இலக்கம் இடப்பட்ட தாய் ஓர்கா திமிங்கிலம் (orca whale, killer wale). கனடாவின் வான்கூவர் (Vancouver), மற்றும் அமெரிக்காவின் சியாற்றல் (Seattle) பகுதிகளுக்கு அண்டிய கடலில் நிகழும் இந்த துயரத்தை ஆய்வாளர்கள் தொடர்ந்து அவதானித்து வருகின்றனர். . சிலவேளைகளில் தாய் திமிங்கிலம் தனது பிள்ளை இன்றியும் காணப்படுள்ளது. […]
இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்குகான மாணவ விசா பெற்ற 800 பேரின் விசாக்கள் மீள் விசாரனைக்கு உட்படுவதாக நியூசிலாந்து குடிவரவு அமைச்சர் Ian Lees-Gallway கூறியுள்ளார். இலங்கையில் இருந்து பொய்யான நிதி நிறுவனம் ஒன்று இயங்குவதாகவும், அதை பல இலங்கை மாணவர் விசாவுக்கு பயன்படுத்தி உள்ளதாகவும் அமைச்சரால் கூறப்பட்டுள்ளது. . இலங்கை மாணவர்களிடம் படிப்பை தொடர போதிய பணம் இல்லாதபோது, இந்த நிறுவனம் அந்த மாணவர்களிடம் போதிய பணம் உள்ளதாக பொய் ஆவணங்களை வழங்கி உள்ளது. . அண்மையில் இந்தியாவின் […]
இந்தியாவின் கிழக்கு பகுதியான அசாம் (Assam) மாநிலத்தில் சுமார் 4 மில்லியன் வாசிகள் இந்திய குடியுரிமையை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. . கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய பங்காளதேசம்) மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராக கிளர்ந்துபோது பெருமளவு கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அசாம் மாநிலத்துக்கு நகர்ந்து இருந்தனர். அவர்களில் பலர் அசாம் மாநிலத்து NRC (National Register of Citizen) பதிவில் இடம்பெறவில்லை. . தற்போது அசாமில் சுமார் 32.9 மில்லியன் மக்கள் உள்ளதாகவும், அதில் சுமார் […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தற்போது காட்டுத்தீ காலம். இன்று சனிக்கிழமை இரவு வரை 2 தீயணைப்பு படையினரும், 3 பொதுமக்களும் (70 வயது, 5 வயது, 4 வயது) இந்த தீகளுக்கு பலியாகி உள்ளனர். அத்துடன் சுமார் 327 சதுர km பரப்பளவு (80,906 ஏக்கர்) காடுகளும், குடியிருப்பு பகுதிகளும் எரிந்து சாம்பலாகி உள்ளன. . Redding என்ற நகரில் மட்டும் 38,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர். . அதீத வெப்பம் மட்டுமன்றி, பலத்த காற்றும் […]
பாகிஸ்தான் தேர்தல் கடந்த புதன்கிழமை இடம்பெற்று இருந்தாலும் இன்றுவரை இறுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுவரை சுமார் 23% வாக்குகளே எண்ணப்பட்டுள்ளன. இதுவரை இடம்பெற்ற கணக்கெடுப்புகளின்படி இம்ரான் கான் தலைமையிலான PTI கட்சி 109 ஆசனங்களையும், நாவாஸ் ஷரீபின் PML-N கட்சி 67 ஆசனங்களையும், பெனாசிர் பூட்டோவின் மகன் தலைமயிலான PPP கட்சி 41 ஆசனங்களையும் பெறுகின்றன. . முறைப்படி கணக்கெடுப்புகள் வெளியிடப்படாவிடினும், இம்ரான் கான் தனது வெற்றியை ஏற்கனவே கொண்டாடி உள்ளார். ஏனைய காட்சிகள் வழக்குகளை […]