3 மாதத்தில் $700 பில்லியனை இழந்த Elon Musk கின் Tesla 

3 மாதத்தில் $700 பில்லியனை இழந்த Elon Musk கின் Tesla 

அமெரிக்க சனாதிபதி ரம்பின் ஆட்சியில் ரம்புக்கு அடுத்து இரண்டாவது பலம் கொண்ட நபராக உள்ளவர் இலான் மஸ்க் (Elon Musk). ஆனால் அவரின் மின்னில் இயங்கும் கார் தயாரிப்பு நிறுவனமான Tesla பங்குச்சந்தையில் சுமார் $700 பில்லியனை கடந்த 3 மாதங்களில் இழந்துள்ளது. இது சுமார் 45% இழப்பு. ரம்ப் சனாதிபதி தேர்தலில் வென்றபின், டிசம்பர் 17ம் திகதி இலானின் Tesla நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி $1.5 டிரில்லியன் ($1,500 பில்லியன்) பெறுமதியை கொண்டிருந்தது. தற்போது Tesla […]

மார்க் கார்னி கனடாவின் இடைக்கால பிரதமர் ஆகிறார்

மார்க் கார்னி கனடாவின் இடைக்கால பிரதமர் ஆகிறார்

மார்க் கார்னி (Mark Carney) கனடாவின் இடைக்கால பிரதமர் ஆகியுள்ளார். கனடிய பிரதமர் ரூடோ உட்கட்சி அழுத்தங்கள் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ஒதுங்கிய பின் அவரின் லிபரல் கட்சி 9ம் திகதி ஞாயிறு மார்க் கார்னியை இடைக்கால பிரதமராக தெரிவு செய்துள்ளது. கார்னிக்கு கட்சி உறுப்பினர்களின் 85.9% வாக்குகளும், ரூடோ விரட்டப்பட பிரதான காரணியாக இருந்த முன்னாள் நிதி அமைச்சர் Chrystia Freeland க்கு 8.0% வாக்குகளும், Karina Gould க்கு 3.2% வாக்குகளும், Frank […]

சிரியா வன்முறைகளுக்கு 1,000 பேர் வரை பலி

சிரியா வன்முறைகளுக்கு 1,000 பேர் வரை பலி

சிரியாவில் புதிய அரச படைகளுக்கும் முன்னாள் சனாதிபதி அசாத் ஆதரவு ஆயுத குழுக்களுக்கும் இடையில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெறும் மோதல்களுக்கு இதுவரை சுமார் 1,000 பேர் பலியாகி உள்ளனர்.  பலியானோரில் 745 பேர் பொதுமக்கள் என்றும், 125 பேர் அரச படையினர் என்றும், 148 பேர் அசாத் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. பலியான Alawite இன பொதுமக்களில் பலர் அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைகள் Latakia மாநிலத்தில் இடம்பெறுகின்றன. இந்த கடலோர மாநிலத்தில் […]

யாழ்-திருச்சிராப்பள்ளி IndiGo விமான சேவை

யாழ்-திருச்சிராப்பள்ளி IndiGo விமான சேவை

யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்துக்கும் இந்தியாவின் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்துக்கும் இடையில் இந்தியாவின் IndiGo விமான நிறுவனம் சேவை வழங்குகிறது. உண்மையில் இந்த சேவை சென்னை விமான நிலையம் ஊடே செல்லும். பலாலிக்கும் திருச்சிராப்பள்ளிக்கு இடையிலான சேவைக்கு இருவழி கட்டணம் சுமார் $275 ஆக உள்ளது. இந்த கட்டணம் 7 kg carry-on பொதியயையும், 15 kg cabin பொதியயையும் உள்ளடக்குகிறது. சென்னை இணைப்பு காரணமாக ஒவ்வொரு வழி பயணத்துக்கும் சுமார் 7.5 மணித்தியாலங்கள் தேவைப்படும். இது […]

கனடா மீது சீனாவும் புதிய வரி, கனடிய வரிக்கு பதிலடி 

கனடா மீது சீனாவும் புதிய வரி, கனடிய வரிக்கு பதிலடி 

கனடாவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு சீனா மேலதிக இறக்குமதி வரியை (tariffs) சனிக்கிழமை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீனா தயாரிக்கும் மின்னில் இயங்கும் கார், மற்றும் அலுமினியம் போன்ற பொருட்களுக்கு கனடா இறக்குமதி வரி நடைமுறை செய்தமைக்கு பதிலடியே சீனாவின் இன்றைய புதிய வரி. கனடாவின் rapeseed எண்ணெய் (canola vegetable எண்ணெய் வகை), oil cake, கடலை போன்றவற்றுக்கு சீனா 100% இறக்குமதி வரியும், கடலுணவு, பன்றி இறைச்சி […]

Elon Musk நிறுவனத்தின் Starship வியாழனும் வெடித்தது

Elon Musk நிறுவனத்தின் Starship வியாழனும் வெடித்தது

அமெரிக்க சனாதிபதி ரம்பின் வலதுகரமாக இருக்கும் Elon Musk கின் SpaceX நிறுவனத்தின் Starship வியாழன் மீண்டும் (Flight 8) ஏவலின் பின் வெடித்துள்ளது. பயணிகள் எவரும் இன்றி வியாழன் Texas நேரப்படி மாலை 5:30 மணிக்கு ஏவப்பட்ட இந்த கலம் 10 நிமிடங்களின் பின் வெடித்துள்ளது. ஜனவரி மாதமும் Starship (Flight 7) ஏவலின் பின் 10 நிமிடங்களில் வெடித்து விழுந்திருந்தது. ஆனாலும் அந்த விபத்துக்கான காரணத்தை அறிந்து குறைபாட்டை திருந்த முன் மீண்டும் இன்னோர் […]

ரம்பின் வரியில் பெரும் தளர்வு, கனடிய வரி தொடரும்

ரம்பின் வரியில் பெரும் தளர்வு, கனடிய வரி தொடரும்

ரம்ப் கனடா மீது திணித்த மேலதிக இறக்குமதி வரியை வியாழன் மேலும் தளர்த்தியுள்ளார். ஆனால் கனடா நடைமுறை செய்த பதில் வரியை பின்வாங்க மறுத்துள்ளது. கடந்த செவ்வாய் கனடாவில் இருந்து வரும் எரிபொருள் தவிர்ந்த அனைத்து பொருட்களுக்கும் 25% புதிய இறக்குமதி வரியை ரம்ப் நடைமுறை செய்திருந்தார்.  பின் மறுநாள் புதன்கிழமை கனடாவில் இருந்து வரும் கார் உற்பத்திகளுக்கு 25% வரியில் இருந்து விதிவிலக்கு அளித்தார். பின் வியாழன் NAFTA வர்த்தக உடன்படிக்கைக்கு உட்பட்ட அனைத்து பொருட்களுக்கும் […]

ரம்பின் கனடிய வரியில் சிறிய தளர்வு, மேலும் ஒரு மாதத்துக்கு 

ரம்பின் கனடிய வரியில் சிறிய தளர்வு, மேலும் ஒரு மாதத்துக்கு 

ரம்ப் எதையும் சிந்தித்து கதைப்பவரோ, செய்வதை சிந்தித்து செய்பவரோ அல்ல. அவரின் மூடத்தனத்தால் அவர் செவ்வாய் நடைமுறை செய்த இறக்குமதி வரியில் மறுதினம் புதன்கிழமை மாற்றம் செய்துள்ளார். கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு ரம்ப் செவ்வாய் நடைமுறை செய்த இறக்குமதி 25% வரி புதன் மேலும் ஒரு மாத காலத்துக்கு ரம்ப் அரசால் இடைநிறுத்தப்படுள்ளது. கனடாவில் கார் நிறுவனங்கள் இல்லை. அமெரிக்க கார் நிறுவனங்களான GM, Ford, Chrysler ஆகியனவே கனடாவில் சில கார் அல்லது கார் […]

செவ்வாய் வரி ஆரம்பம், புதன் ரம்ப்-ரூடோ பேச்சு ஆரம்பம்

செவ்வாய் வரி ஆரம்பம், புதன் ரம்ப்-ரூடோ பேச்சு ஆரம்பம்

சனாதிபதி ரம்ப் தேர்தல் காலத்தில் கூறியபடி ஆட்சிக்கு வந்த பின் கனடிய பொருட்கள் மீது 25% புதிய இறக்குமதி வரியை அறிவித்தார். கனடா அடிபணியாது பதிலுக்கு தானும் அமெரிக்க பொருட்கள் மீது புதிய இறக்குமதி வரியை அறிவித்தது. கனடா அடிபணியாத நிலையில் ரம்ப் வரி நடைமுறை செய்தலை ஒரு மாதம் பின்போட்டார். அந்த ஒரு மாதம் நேற்று செவ்வாய்க்கிழமை முடிவடையவும் கனடா அடிபணியவில்லை. ரம்பின் வரி நடைமுறைக்கு வந்தது. கனடாவின் வரியும் நடைமுறைக்கு வந்தது. ரம்ப் தற்போது வேறு வழியின்றி […]

இன்று முதல் கனடிய, மெக்ஸிக்கோ பொருட்களுக்கு 25% வரி 

இன்று முதல் கனடிய, மெக்ஸிக்கோ பொருட்களுக்கு 25% வரி 

அமெரிக்க சனாதிபதி கடந்த மாதம்  அறிவித்து பின் ஒரு மாத காலம் பின்தள்ளிய கனடா, மெக்சிக்கோ பொருட்கள் மீதான 25% மேலதிக இறக்குமதி வரியும், சீனா பொருட்கள் மீதான 20% மேலதிக வரியும் இன்று செவ்வாய் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கனடா, மெக்சிக்கோ, சீனா பதிலுக்கு தாமும் அமெரிக்க பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை நடைமுறை செய்கின்றன. இந்த வரிகளின் தாக்கம் சில பொருட்களின் விலைகளில் உடனடியாகவும், சிலவற்றில் சில கிழமைகளிலும் தெரியவரும். இந்த 3 நாடுகளும் […]