ரம்பின் ஆதரவில் பூட்டின் தப்பிக்கலாம்

ரம்பின் ஆதரவில் பூட்டின் தப்பிக்கலாம்

சனாதிபதி ரம்பின் ஆதரவுடன் ரஷ்ய சனாதிபதி யூக்கிறேன் விசயத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. ரம்ப் ரஷ்யாவின் பூட்டினுடன் புதன்கிழமை தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். அத்துடன் இருவரும் சவுதியில் நேரடியாகவும் சந்திக்க சந்தர்ப்பமும் அதிகரித்துள்ளது. பூட்டினுடன் உரையாடிய பின் ரம்ப் யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கியுடனும் தொலைபேசியில் உரையாடி உள்ளார். ரம்ப் முயற்சிகள் யூக்கிறேனுக்கு பாதகமாக அமையலாம்.  ஏற்கனவே ரஷ்ய கைப்பற்றிய கிரைமியா மற்றும் கிழக்கு யூக்கிறேன் (டொன்பாஸ்) பகுதிகளை பூட்டின் கைவிடப்போவதில்லை. அதனால் அவற்றை யூக்கிறேன் நிரந்தரமாக […]

இலஞ்சம் வழங்குவதை தடுக்கும் சட்டத்தை நிறுத்தும் ரம்ப் 

இலஞ்சம் வழங்குவதை தடுக்கும் சட்டத்தை நிறுத்தும் ரம்ப் 

1970களில் அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு பெருமளவு இலஞ்சம் வழங்கி தமக்கு தேவையான வர்த்தகதக நலன்களை பெற்று இருந்தனர். சுமார் 400 இவ்வகை இலஞ்ச வழங்கலை அறிந்த அமெரிக்கா 1977ம் ஆண்டு Foreign Corrupt Practices Act (FCPA) என்ற சட்டத்தை நடைமுறை செய்தது. இந்த சட்டப்படி அமெரிக்கர் அல்லது அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி வர்த்தக நன்மை அடைவது குற்றமாகியது. பின்னர் இந்த சட்டத்தின் கீழ் பல பெரிய, சிறிய நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டும் […]

காசா பலஸ்தீனரை ஏற்க ஜோர்டான் அரசர் மறுப்பு 

காசா பலஸ்தீனரை ஏற்க ஜோர்டான் அரசர் மறுப்பு 

அமெரிக்க சனாதிபதி ரம்ப் காசாவில் வாழும் 2 மில்லியன் மக்களை காசாவில் இருந்து விரட்டி காசாவை கைப்பற்ற அறிவித்து உள்ளார். இந்த மக்களை ஜோர்டானும், எகிப்தும் ஏற்கவேண்டும் என்றும் ரம்ப் மிரட்டி வருகிறார். இது தொடர்பாக உரையாட ஜோர்டான் அரசர் King Abdullah II திங்கள் வெள்ளை மாளிகை சென்று ரம்புடன் உரையாடி உள்ளார். காசா மக்களை ஜோர்டான் ஏற்க முடியாது என்று ஜோர்டான் அரசர் திடமாக கூறினாலும், காசா பலஸ்தீனரை ஜோர்டான் ஏற்கவேண்டும் என்று பிடிவாதமாக […]

அலுமினியம், இரும்புக்கு ரம்ப் புதிய 25% இறக்குமதி வரி

அலுமினியம், இரும்புக்கு ரம்ப் புதிய 25% இறக்குமதி வரி

அலுமினியம், இரும்பு ஆகிய இரண்டு உலோகங்களுக்கும் சனாதிபதி ரம்ப் திங்கள் முதல் உலக அளவில் புதிதாக 25% இறக்குமதி வரி அறவிட சட்டம் நடைமுறை செய்துள்ளார். இந்த வரி குறுகிய காலத்துக்கு கனடாவை அதிகம் பாதிக்கும். அமெரிக்கா அதிகளவு இரும்பை கனடா, பிரேசில், மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளில் இருந்தே கொள்வனவு செய்கிறது. அதேவேளை பெப்ருவரி 1ம் திகதி முதல் நடைமுறை செய்யவிருந்த கனடிய, மெக்ஸிக்கோ பொருட்கள் மீதான ரம்பின் புதிய 25% இறக்குமதி வரி மார்ச் 1ம் […]

உல்லாச பயணிகள் மரணங்களுக்கு Bedbug மருந்து காரணம்?

உல்லாச பயணிகள் மரணங்களுக்கு Bedbug மருந்து காரணம்?

அண்மையில் இலங்கை வந்திருந்த 24 வயதுடைய Ebony McIntosh என்ற பிரித்தானியரும், 26 வயதுடைய Nadine Raguse என்ற ஜெர்மன் நாட்டவரும் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் மரணமாகி இருந்தனர். இவர்களின் மரணங்களுக்கு இவர்கள் தங்கியிருந்த விடுதியில் வீசப்பட்ட bedbug கிருமிநாசினி காரணமாக இருக்கலாம் என்று தற்போது சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் தங்கியிருந்த Miracle Colombo City என்ற hostel இல் bedbug தொல்லையை ஒழிக்க கிருமிநாசினி வீசப்பட்டதால் அந்த நஞ்சு மரணங்களுக்கு காரணமானதா என்பதை அறிய பிரித்தானிய அதிகாரிகள் அறிய […]

உலக அளவில் Srilankan விமான சேவை 20ம் இடத்தில் 

உலக அளவில் Srilankan விமான சேவை 20ம் இடத்தில் 

2025ம் ஆண்டு உலக அளவில் இலங்கையின் Srilankan விமான சேவை 20ம் இடத்தில் உள்ளது என்கிறது அஸ்ரேலியாவை தளமாக கொண்ட Airlines Rating என்ற அமைப்பு. கடந்த ஆண்டு முதலாவதாக இருந்த Qatar Airways இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட தென் கொரியாவின் Korean Air இந்த ஆண்டு முதலாம் இடத்தை கைப்பற்றி உள்ளது. Korean Air முதலாம் இடத்தை அடைய அந்த விமானங்களில் சாதரண (economy) வகுப்பு ஆசங்களுக்கு இடையேயான இடைவெளி அதிகமாக உள்ளமை பயணிகளின் திருப்திக்கு […]

தென் ஆபிரிக்காவுக்கான உதவிகளை நிறுத்தும் ரம்ப் 

தென் ஆபிரிக்காவுக்கான உதவிகளை நிறுத்தும் ரம்ப் 

அமெரிக்கா தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கிவரும் உதவிகளை சனாதிபதி ரம்ப் வெள்ளிக்கிழமை executive order மூலம் நிறுத்தியுள்ளார். இவ்வாறு உதவிகளை நிறுத்தியமைக்கு ரம்ப் இரண்டு காரணங்கள் கூறியுள்ளார். ஒன்று தென் ஆப்பிரிக்காவில் உள்ள வெள்ளையர்களுக்கு தென் ஆபிரிக்க அரசு துரோகம் செய்கிறது என்பது. வெள்ளையரின் காணிகளை தென் ஆபிரிக்க அரசு பறிக்கிறது என்று கூறுகிறார் ரம்ப். இரண்டாவது இஸ்ரேலின் காசா யுத்தத்தை தென் ஆப்பிரிக்கா எதிர்க்கிறது என்றும் ரம்ப் சாடியுள்ளார் ரம்ப். 2023ம் ஆண்டு அமெரிக்கா தென் ஆப்பிரிக்காவுக்கு […]

27 ஆண்டுகளின் பின் டெல்லி அரசு பா.ஜ கட்சி கையில் 

27 ஆண்டுகளின் பின் டெல்லி அரசு பா.ஜ கட்சி கையில் 

இந்தியாவின் தலைநகர் உள்ள டெல்லி அரசு 27 ஆண்டுகளுக்கு பின் மோதி தலைமையிலான பா.ஜ கட்சி கையில் வீழ்ந்துள்ளது. மொத்தம் 70 ஆசனங்களில் பா.ஜ. 47 ஆசனங்களை கைப்பற்றுகிறது. பா.ஜ. கட்சி டெல்லி ஆட்சியை 1998ம் ஆண்டு இழந்திருந்தது. இதுவரை டெல்லியை ஆண்டுவந்த AAP கட்சி இம்முறை 23 ஆசனங்களை மட்டுமே பெறுகிறது. 2013ம் ஆண்டு முதல் இன்றுவரை AAP கட்சியே டெல்லியை ஆட்சி செய்து வந்திருந்தது. AAP கட்சி தலைவர் Arvind Kejriwal வெற்றி அடையவில்லை. […]

இஸ்ரேலுக்கு ரம்ப் $7 பில்லியன் ஆயுத விற்பனை 

இஸ்ரேலுக்கு ரம்ப் $7 பில்லியன் ஆயுத விற்பனை 

காசாவை தரை மட்டமாக்கிய இஸ்ரேலுக்கு அமெரிக்க சனாதிபதி ரம்ப் மேலும் $7 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்யவுள்ளார். இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள வேளையில், வெள்ளிக்கிழமை இந்த விற்பனைக்கான அறிவிப்பு ரம்ப்  அரசால் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்களில் small-diameter குண்டுகள், 500 இறாத்தல் குண்டுகள், Hellfire ஏவுகணைகள் ஆகியனவும் அடங்கும். ஏற்கனவே பைடென் தடுத்து வைத்திருந்த அமெரிக்காவின் 2,000 இறாத்தல் குண்டுகளும் இஸ்ரேலுக்கு மீண்டும் ரம்பால் விடுவிக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய மின் இணைப்பை துண்டிக்கும் Estonia, Latvia, Lithuania

ரஷ்ய மின் இணைப்பை துண்டிக்கும் Estonia, Latvia, Lithuania

ரஷ்யாவுடனான தமது மின் இணைப்புகளை (power grid) இன்று 7ம் திகதியுடன் எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய 3 Baltic நாடுகளும் துண்டிக்கின்றன. ஞாயிறு 9ம் திகதி முதல் இவை ஐரோப்பிய நாடுகளுடன் தமது மின்னை இணைத்துக்கொள்ளும். அதனால் இன்றுடன் BERELL (Belarus, Russia, Estonia, Latvia, Lithuania) இணக்கம் முறிகிறது. சோவியத் காலத்தில் ரஷ்ய தொழில்நுட்பங்களுடன் ஆரம்பித்த இந்த மின் இணைப்புக்களே இறுதியாக அழிந்துபோகும் ரஷ்யாவுடனான மேற்படி நாடுகளின் தொடர்புகள். BERELL இணக்கப்படி இன்று வரை […]