2026 முதல் ஜெர்மனியில் மீண்டும் அமெரிக்க ஏவுகணைகள்

2026 முதல் ஜெர்மனியில் மீண்டும் அமெரிக்க ஏவுகணைகள்

2026ம் ஆண்டு முதல் அமெரிக்கா தனது நீண்டதூரம் பாயும் ஏவுகணைகளை ஜெர்மனியில் மீண்டும் கொண்டிருக்க உள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்காவும், ஜெர்மனியும் புதன்கிழமை தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் SM-6 மற்றும் Tomahawk வகை ஏவுகணைகளே இவ்வாறு ஜெர்மனியில் நிலைகொள்ள உள்ளன. SM-6 கிடையாக 240 km தூரம் (நிலத்தில் இருந்து நிலத்துக்கு) அல்லது மேல் நோக்கி 460 km உயரம் (நிலத்தில் இருந்து வானுக்கு) சென்று தாக்கவல்லது. இதன் அதி உயர் வேகம் மாக் 3.5 (4,287 km/s). […]

அமெரிக்க தற்காலிக காசா துறைமுகம் நிரந்தர நிறுத்தம்

அமெரிக்க தற்காலிக காசா துறைமுகம் நிரந்தர நிறுத்தம்

தரை வழியாக காசா சென்ற அகதிகளுக்கான உணவு போன்ற பொருட்களை இஸ்ரேல் காசா எல்லைகளில் தடுத்து நிறுத்தியபோது அந்த தடைகளை தகர்க்க வல்லமை கொண்டிருந்த அமெரிக்கா மறைமுகமாக இஸ்ரேலின் தடைகளை ஊக்குவித்தது. ஆனாலும் உலகின் காதில் பூ சுற்ற இரண்டு பக்க நாடகங்களை அமெரிக்கா பெரும் ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்தது. முதலாவது வானத்தில் இருந்து உதவி பொதிகளை வீசுவது. இது Berlin Airlift போன்று முழு மனதுடன் செய்யப்பட்டது அல்ல. அங்கே தினமும் 3,475 தொன் பொருட்களை வீச ஆரம்பித்த திட்டம் […]

இந்திய, உலக முதல் 10 செல்வந்தர்

இந்திய, உலக முதல் 10 செல்வந்தர்

உலக செல்வந்தர்களையும் அவர்களின்  சொத்துக்களையும் கணிப்பிடும் செய்தி நிறுவனமான Forbes இந்திய செல்வந்தர்களையும் பட்டியலிட்டு உள்ளது.  ஆண்டின் முதல் 10 இந்திய செல்வந்தர் வருமாறு: 1. Mukesh Ambani, $124.2 பில்லியன், Reliance Industries2. Gaitam Adani, $83.0 பில்லியன், Adani Group3. Savitri Jindal, $41.8 பில்லியன், JSW Group4. Shiv Nadar, $34.1 பில்லியன், HCL Technologies5. Dilip Shanghvi, $25.8 பில்லியன், Sun Pharmaceutical6. Kumar Birla, $23.7 பில்லியன், Aditya Birla […]

பிரான்ஸ் தேர்தலில் வலதுசாரியின் பெரும்பான்மை தடுப்பு

பிரான்ஸ் தேர்தலில் வலதுசாரியின் பெரும்பான்மை தடுப்பு

ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இடம்பெற்ற இறுதி பொது தேர்தலில் Le Pen தலைமயிலான National Rally என்ற வலதுசாரி கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை தடுக்க ஜூன் 10ம் திகதி இணைந்த 5 இடதுசாரி கட்சிகளின் New Popular Front (NPF) என்ற கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஆனால் எவரும் பெரும்பான்மை பெறவில்லை. அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோல்வி அடைந்ததால் விசனம் கொண்ட சனாதிபதி Macron திடீரென உள்நாட்டு தேர்தலை அறிவித்தார். உள்நாட்டு […]

பெரும் நெருக்கடியில் உள்ள மோதி ரஷ்யா பயணம் 

பெரும் நெருக்கடியில் உள்ள மோதி ரஷ்யா பயணம் 

இந்த கிழமை Kazakhstan நாட்டில் இடம்பெற்ற Shanghai Corporation Organization (SCO) அமர்வுக்கு செல்லாது தவிர்த்த பிரதமர் மோதி ரஷ்ய சனாதிபதி பூட்டினுடன் உரையாட மாஸ்கோ பறக்கிறார். யூக்கிறேன் யுத்தம் தொடர்பாகவும் மோதி பூட்டினுடன் உரையாடலாம் என்றாலும், இந்த விசயம் மோதிக்கு பிரதானமானது அல்ல. மோதிக்கு நெருக்கடி தருவது SCO அமைப்பு தனது பிரதான நாணயமாக சீனாவின் யுவான் நாணயத்தை பயன்படுத்த முனைவதே. மேற்கு நாடுகளின் தடைகள் காரணமாக ரஷ்ய தனது இறக்குமதிகள் அனைத்தையும் சீனா மூலமே […]

சுனக் கட்சி 250 ஆசனங்களை இழக்க Labor பெரு வெற்றி

சுனக் கட்சி 250 ஆசனங்களை இழக்க Labor பெரு வெற்றி

பிரித்தானியாவில் நேற்று நடைபெற்ற பொது தேர்தலில் பிரதமர் சுனக்கின் Conservative கட்சி 121 ஆசனங்களை மட்டும் பெற்று தோல்வி அடைய Labor கட்சி 412 ஆசனங்களை பெற்று பெரும்பான்மை ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மை ஆட்சிக்கு 326 ஆசனங்கள் மட்டுமே தேவை. Conservative கட்சி கைவசம் இருந்த ஆசனங்களில் 250 ஆசனங்களை இழந்துள்ளது. அதேநேரம் Labor கட்சி மேலதிகமாக 211 ஆசனங்களை வென்றுள்ளது. ஆசன எண்ணிக்கையில் Labor பெருவெற்றி அடைத்தாலும், 1.6% மேலதிக வாக்குகளை மட்டுமே அது இம்முறை பெற்றுள்ளது. அதேவேளை […]

அஸ்ரேலிய கட்சியில் இருந்து வெளியேறினார் Fatima

அஸ்ரேலிய கட்சியில் இருந்து வெளியேறினார் Fatima

அஸ்ரேலியாவின் Labor கட்சி செனட்டரான (Senator) 29 வயது Fatima Payman இன்று தனது Labor கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சை செனட்டராக அமர்ந்தார். அண்மையில் அஸ்ரேலிய Green கட்சி பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் ஒன்றை சபை வாக்கெடுப்புக்கு எடுத்து இருந்தது.  இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்கும் Labor கட்சி இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்த்து. ஆனாலும் Fatima தனது கட்சியை மீறி Green கட்சியின் தீர்மானத்துக்கு  ஆதரவாக வாக்களித்தார். Fatima மீது விசனம் […]

ஆக்கிரமித்த 3,138 ஏக்கர் நிலத்தை அபகரிக்கிறது இஸ்ரேல்

ஆக்கிரமித்த 3,138 ஏக்கர் நிலத்தை அபகரிக்கிறது இஸ்ரேல்

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனரின் West Bank நிலத்தில் 3,138 ஏக்கரை தனது நிலமாக்க இன்று புதன் நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்ரேல் தனக்கு சாதகமான இருக்கும் வகையில் தானே நடைமுறை செய்த சட்டப்படி ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனரின் தனியார் நிலங்களை இஸ்ரேல் தனது இராணுவத்தின் Civil Administration என்ற பெயரின் கீழ் வகைப்படுத்தினால் அந்த நிலங்களின் பலஸ்தீன உரிமையாளர் தமது உரிமைகளை உடனடியாக இழப்பர். மேற்படி நிலங்களில் இஸ்ரேல் பின்னர் யூதர்களை குடியமர்த்தும். Jericho என்ற பலஸ்தீனர் செறிந்து வாழும் […]

SCO அமைப்பை மெல்ல கைவிடுகிறார் பிரதமர் மோதி?

SCO அமைப்பை மெல்ல கைவிடுகிறார் பிரதமர் மோதி?

Shanghai Cooperation Organization (SCO) அமர்வு இன்று புதன் Kazakhstan நாட்டின் Astana நகரில் ஆரம்பமாகிறது. இதில் ரஷ்யாவின் பூட்டின், சீனாவின் சீ ஆகியோர் நேரடியாக பங்கொண்டாலும் இந்திய பிரதமர் மோதி இந்த அமர்வை தவிர்த்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவே SCO அமர்வை தலைமைதாங்கி செய்திருந்தாலும், அமர்வு இணையம் மூலமே நடைபெற்றது. அதனால் பூட்டின், சீ இந்தியா செல்லவேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. 1996ம் ஆண்டு முதல் ரஷ்யா, சீனா உட்பட 5 நாடுகள் ஆரம்பித்து Shanghai 5 […]

நெரிசல் மரண தொகை 121 ஆக உயர்வு, பாபா தலைமறைவு

நெரிசல் மரண தொகை 121 ஆக உயர்வு, பாபா தலைமறைவு

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள Hathras மாவட்டத்தில் செவ்வாய் இடம்பெற்ற இந்து மத நிகழ்வொன்றில் ஏற்பட்ட நெரிசலுக்கு பலியானோர் தொகை 121 ஆக உயர்ந்துள்ளது.  மரணித்தோரில் 112 பேர் பெண்கள் என்றும், 7 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த பேரழிவின் பின்னர் Bhole Baba என்ற மேற்படி நிகழ்வின் போதகர் தலைமறைவாகி உள்ளார். நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தோர் 80,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று போலீசாருக்கு கூறியிருந்தாலும் நிகழ்வுக்கு சுமார் 250,000 பேர் வந்துள்ளனர். […]

1 17 18 19 20 21 327