பிரித்தானிய அமைச்சர் பங்களாதேஷ் ஊழலில்?

பிரித்தானிய அமைச்சர் பங்களாதேஷ் ஊழலில்?

பிரித்தானிய முதலீட்டு/பங்கு சந்தையில் ஊழல் இடம்பெறாது பார்த்துக்கொள்ளும் கடமையை உள்ளடக்கிய அமைச்சர் (Treasury’s Economic Secretary) Tulip Siddiq, வயது 42, பங்களாதேஷ் அணுமின் உலை ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். Tulip தற்போது பங்களாதேஷில் இருந்து விரட்டப்பட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள Hasina Sheikh என்ற முன்னாள் பிரதமரின் மூத்த அக்காவின் மகள் ஆவார். ஆனால் Tulip பிறந்தது பிரித்தானியாவில். ரஷ்யாவின் உதவியுடன் பங்களாதேஷில் அமைக்கப்படும் Rooppur Power Plant என்ற அணுமின் உற்பத்தி திட்டத்திலேயே மொத்தம் 3.9 பில்லியன் […]

பங்களாதேசும் அதானி மின் உற்பத்தியில் முரண்பாடு

பங்களாதேசும் அதானி மின் உற்பத்தியில் முரண்பாடு

அதானி (Adani) மீதான அமெரிக்காவின் ஊழல் குற்றச்சாட்டை சாதகமாக பயன்படுத்தி தற்போது பங்களாதேசும் (Bangladesh) அதானியுடன் கொண்டுள்ள மின் உற்பத்தி இணக்கத்தை முறிக்க முனைகிறது. 2017ம் ஆண்டு இந்திய பிரதமர் மோதியின் அரசு தற்போது விரட்டப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் Sheikh Hasina உதவியுடன் அதானியின் நிறுவனம் பங்களாதேசுக்கு மின் விற்பனை செய்யும் 25 ஆண்டுகால உடன்பாடு ஒன்றுக்கு கேள்விகள் (tender) எதுவும் இன்றி இணங்கி இருந்தது. இந்த மின் இந்தியாவின் Godda நகரில் உற்பத்தி செய்யப்பட்டு பங்களாதேசுக்கு எல்லை தாண்டி […]

இந்தியாவில் Starlink சேவை நிறுத்தம்; ரம்ப், மோதி முரண்படுவர்?

இந்தியாவில் Starlink சேவை நிறுத்தம்; ரம்ப், மோதி முரண்படுவர்?

தற்போது ரம்பின் வலது கையாக உள்ள இலான் மஸ்கின் (Elon Musk) நிறுவனமாக Starlink இந்தியாவுக்கு வழங்கும் செய்மதி மூல இணைய சேவையை தான் நிறுத்தி உள்ளதாக கூறியுள்ளது. இந்திய இராணுவம் இரண்டு Starlink இணைய கருவிகளை (satellite receiver) கைப்பற்றியதே காரணம். இந்தியாவில் starlink சட்டப்படி செய்மதி மூலமான இணைய சேவையை வழங்கவில்லை. இந்தியா இதுவரை அந்த உரிமையை வழங்கவில்லை. அதனால் இந்தியாவில் சட்டப்படி எவரும் Starlink சேவையை பெறவில்லை. ஆனாலும் இந்திய இராணுவம் 2 Starlink கருவிகளை கைப்பற்றி உள்ளது. அதில் ஒன்று […]

ஆந்திரா மாநிலமும் அதானி மீதான இலஞ்ச குற்றச்சாட்டும் 

ஆந்திரா மாநிலமும் அதானி மீதான இலஞ்ச குற்றச்சாட்டும் 

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான அதானி நிறுவனம் மீது அமெரிக்கா இலஞ்ச குற்றச்சாட்டை முன்வைத்த வேளையில் அதானி நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்து இருந்தது. தற்போது இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் தகவல்கள் கசிந்துள்ளன. 2021ம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி Solar Energy Corporation of India (SECI) என்ற மத்திய அரச நிறுவனம் ஆந்திரா மாநிலத்தில் சூரிய சக்தி மூலமான மின்னை வழங்க விருப்பம் தெரிவித்து இருந்தது. SECI வழங்க இருந்தது அதானியின் மின் உற்பத்தியையே. ஆனால் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு […]

கனடிய நிதியமைச்சர் விலகினார், கட்சிக்குள் குழப்பம் 

கனடிய நிதியமைச்சர் விலகினார், கட்சிக்குள் குழப்பம் 

கனடாவின் நிதி அமைச்சர் Chrystia Freeland உள்ளூர் நேரப்படி இன்று திங்கள் காலை தான் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கனடிய பிரதமர் ரூடோவுக்கு Freeland அனுப்பிய கடிதத்தை அவர் X பதிவிலும் வெளியிட்டு உள்ளார். அந்த உத்தியோக பூர்வ கடிதத்தில் பிரதமர் ரூடோ கடந்த வெள்ளி தன்னை நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலக கேட்டதாகவும், பதிலுக்கு வேறு ஒரு அமைச்சர் பதவி தருவதாகவும் கூறியதாக Freeland கூறியுள்ளார். ஆனால் தனக்கு எந்த […]

சூறாவளி Chido வுக்கு Mayotte இல் 1,000 பேர் வரை பலி?

சூறாவளி Chido வுக்கு Mayotte இல் 1,000 பேர் வரை பலி?

ஆபிரிக்கா கண்டத்துக்கும், மடகாஸ்காருக்கும் (Madagascar) இடையில் உள்ள பிரெஞ்சு பகுதியான Mayotte தீவில் சனிக்கிழமை இரவு தாக்கிய Chido என்ற பெயர் கொண்ட சூறாவளிக்கு குறைந்தது பல நூறு மக்கள் பலியாக இருக்கலாம் என்றும், பலியானோர் தொகை 1,000 வரை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இதுவரை 11 உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன, உதவிகளும் செல்கின்றன. ஏற்கனவே தரமற்ற கட்டுமானங்களை கொண்ட இந்த இடம் தற்போது உதவிகள் செல்ல வசதி இன்றி உள்ளது. இங்கு குடிநீர் தட்டுப்பாடாகவும், […]

ரம்புக்கு பணம் வழக்குவோரும், அவர்கள் பெறும் பதவிகளும்

ரம்புக்கு பணம் வழக்குவோரும், அவர்கள் பெறும் பதவிகளும்

ரம்புக்கு, அவரின் தேர்தல் ஆதரவுக்கு, அல்லது அவர் சார்ந்த முயற்சிகளுக்கு பெருமளவு அமெரிக்க செல்வந்தர் தமது சொந்த பணத்தை வழங்கி உள்ளனர். அவ்வாறு பணம் வழங்கியோர் ரம்ப் ஆட்சியில் பெரும் பதவிகளை பெறவும் உள்ளனர். அவர்களில் சிலர் வருமாறு (பெயர், நன்கொடை, பதவி):1. Elon Musk, $262.9 மில்லியன், Department of Government Efficiency 2. Linda McMahon, $21.2 மில்லியன், Secretary of Education3. Howard Lutnick, $9.4 மில்லியன், Seceratory of Commerce4. Warren Stephens, $3.3 மில்லியன், பிரித்தானிய […]

தென் கொரிய சனாதிபதியின் பதவி இடைநிறுத்தம் 

தென் கொரிய சனாதிபதியின் பதவி இடைநிறுத்தம் 

டிசம்பர் மாதம் 3ம் திகதி தகுந்த காரணம் இன்றி தென் கொரியாவில் இராணுவ சட்டத்தை (martial law) நடைமுறை செய்த சனாதிபதி Yoon இன்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் impeachment மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 204 பாராளுமன்ற உறுப்பினர்கள் சனாதிபதியை விலக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதில் 12 ஆளும் கட்சி உறுப்பினர்களும் அடங்குவர். ஆனாலும் இந்த பதவி நீக்கம் ஒரு தற்காலிகமானதே. இந்த பதவி நீக்கத்தை நீதிமன்றம் அடுத்த 6 மாத காலத்துள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது சட்டமாகும்.அவ்வாறு […]

ரஷ்யா, இந்தியா இடையே மிகப்பெரிய எரிபொருள் இணக்கம்

ரஷ்யா, இந்தியா இடையே மிகப்பெரிய எரிபொருள் இணக்கம்

இந்தியா ரஷ்யாவில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய அளவு மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய இணங்கி உள்ளது. ரஷ்ய சனாதிபதி பூட்டின் ஜனவரி மாதம் இந்திய வர உள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பூட்டின் தற்போது தனக்கு பாதுகாப்பான நாடுகளுக்கு மட்டுமே செல்கிறார். இந்த இணக்கப்படி இந்திய வர்த்தகர் முகேஷ் அம்பானியின் Reliance எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனம் ரஷ்யாவின் Rosneft எரிபொருள் அகழ்வு நிறுவனத்திடம் இருந்து 500,000 bpd (barrels per day) மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்யும். இன்றைய மசகு […]

பதவி ஏற்புக்கு சீன சனாதிபதியை அழைக்கிறார் ரம்ப்?

பதவி ஏற்புக்கு சீன சனாதிபதியை அழைக்கிறார் ரம்ப்?

அமெரிக்காவின் அடுத்த சனாதிபதி ரம்ப் தனது பதவி ஏற்பு நிகழ்வுக்கு (inauguration) சீன சனாதிபதியை அழைத்துள்ளதாக CBS செய்திகள் கூறுகின்றன. ஜனவரி 20ம் திகதி இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுக்கு நவம்பர் மாத ஆரம்பித்திலேயே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ரம்ப் ஆட்சியில் இந்திய பிரதமர் மோதி (Howdy Modi) மீது நெருக்கம் கொண்டிருந்த ரம்ப் இம்முறை சீயை நாடியது ஆச்சரியமாக உள்ளது. இந்த அழைப்பு இதுவரை முறைப்படி பகிரங்கம் செய்யப்படவில்லை. கடந்த கிழமை அமெரிக்க செய்தி நிறுவனமான NBC செய்தி நிறுவனத்துக்கு செவ்வி ஒன்றை […]

1 13 14 15 16 17 340