R-S Paper உங்கள் கௌபீனம்

R-S Paper உங்கள் கௌபீனம்

Facebook மூலம் எவராவது உண்மை செய்திகளை பெறுவதாக கருதினால் அவர்களுக்கு குறைந்தது அரை மண்டை பழுது என்று அர்த்தம். பல Facebook பாவனையாளர் முன், பின் ஆராயாது R-S Papers என்ற மூடர்கள் பேச்சை மீண்டும் பரப்பி வருகிறார்கள். மழைக்கும் பாடசாலை செல்லாத இந்த மூடர்கள் தமது துணைக்கு Dark-net என்ற உச்சநிலை அறிவாளிகளையும் இழுத்து உள்ளனர். மிக பிரதானமாக இந்த மூடர்கள் மில்லியன், பில்லியன், டிரில்லியன் என்ற பதங்களில் குழம்பி உள்ளனர். இலங்கையின் மொத்த கடன் […]

யாருக்கு சொல்லியழ 16: இங்கே ஆக்கிரமிக்கலாம் அங்கே முடியாது

யாருக்கு சொல்லியழ 16: இங்கே ஆக்கிரமிக்கலாம் அங்கே முடியாது

கனடாவின் Liberal, Conservative, NDP கட்சி பதவிகளில் குந்தி இருப்போரும், குந்தி இருக்க கனவு கொள்வோரும் கனடா ஒரு நேர்மை மிக்க நாடு, ஆக்கிரமிக்கப்படும் இலங்கை தமிழர் போன்ற மக்களுக்காக குரல் கொடுக்கும் நாடு என்றெல்லாம் புகழ் பாடுகின்றனர். உண்மையில் இந்த தமிழருக்காக கனடிய கட்சிகள் ஊளையிடுவது தமிழரின் வாக்குகளை பெற மட்டுமே. தமிழரிலும் கேவலமாக ஆக்கிரமிக்கப்படும் பாலஸ்தீனர் சார்பில் கனடிய கட்சிகளோ, அந்த கட்சிகளில் தொங்கும், தொங்க முனையும் தமிழ் பாத்திரங்களே என்றைக்கும் பாலஸ்தீனர் சார்பில் […]

யாருக்கு சொல்லியழ 15: பருப்பு கசத்தது, டீசல் இனித்தது

யாருக்கு சொல்லியழ 15: பருப்பு கசத்தது, டீசல் இனித்தது

தற்போது பொருளாதார இடரில் உள்ள இலங்கைக்கு அண்டை நாடான இந்தியா 40,000 தொன் டீசலும், 36,000 தொன் பெட்ரோலும் ‘கடன்’ அடிப்படையில் வழங்கி இருந்தது – நன்கொடையாக அல்ல, கடன் அடிப்படையில். இந்தியாவின் இந்த கடன் வழங்களால் பூரித்துப்போன இலங்கையின் முன்னாள் Cricket விளையாட்டு வீரர் அர்ஜுணா ரணதுங்க இந்தியாவை இலங்கையின் மூத்த அண்ணன் என்று புகழ்பாடி உள்ளார். இதே மூத்த அண்ணன் 1987ம் ஆண்டும் இலங்கையின் வடபகுதிக்கு, குறிப்பாக வடமராச்சி பகுதிக்கு, பருப்பு, சமையல் எண்ணெய் […]

யாருக்கு சொல்லியழ 14: மரம் படுகிறது, கொப்புகள் வளர்கின்றனவாம்

யாருக்கு சொல்லியழ 14: மரம் படுகிறது, கொப்புகள் வளர்கின்றனவாம்

(இளவழகன், 2022-01-22) போன இடத்து அரசியல் இலாபங்களுக்காக தப்பி ஓடியவர்களும், இவர்களின் வாக்குகளை பெற இவர்கள் போடும் புண்ணாக்கையும் உன்ன தயாராக உள்ள போன இடத்து அரசியல் வாதிகளும் செய்யும் இன்னோர் கூத்துதான் “Thai Pongal & Tamil Heritage Month Celebrations”. முதலில் கனடா, பின் இலண்டன். (கவனிக்க: Thai என்ற பதம் ஆங்கிலத்தில் ஏற்கனவே தாய்லாந்தை – Thailand – குறிக்க பயன்படுகிறது. அதனால் Thai Pongal “தாய் பொங்கல்” என்றே பொருள்படும்). தப்பி […]

Bitcoin

Bitcoin

(இளவழகன், 2021-12-20) இன்று Bitcoin என்ற சொல்லை கேள்விப்படாதவர் எவரும் இல்லை. சிலர் இதை கொள்வனவு செய்தும் இருக்கலாம். Bitcoin மட்டுமல்லாது இன்று Ethereum, XRP, Tether, Cardano, Polkadot, Stellar, USD Coin என்று பல digital நாணயங்கள் உண்டு. இவற்றை cryptocurrency அல்லது crypto என்று அழைப்பர். Cryptocurrency என்றால் என்ன? Bitcoin ஐ ஒரு நாணயம் என்று பலரும் அழைத்தாலும் ஒரு சாதாரண நாணயத்திற்கு உள்ள பல பண்புகள் Bitcoin க்கு இல்லை. […]

யாருக்கு சொல்லியழ 13: ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள்

யாருக்கு சொல்லியழ 13: ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள்

(இளவழகன், 2021-12-06) அண்மையில் இலங்கை சிங்களவர் ஒருவர் பாகிஸ்தானில் தாக்கி, எரியூட்டப்பட்டு இருந்ததை சில பாகிஸ்தான் இஸ்லாமியர் உட்பட பலரும் கண்டித்து இருந்தனர். பாகிஸ்தானின் தலைமை இராணுவ அதிகாரியும் இதை “cold-blooded murder”என்று அழைத்திருந்தார். இவ்வகை செயற்பாடுகள் பாகிஸ்தானில் மட்டும் நிகழ்பவை அல்ல. பாகிஸ்தான், இந்தியா, இலங்கை எங்கும் இவ்வகை செயற்பாடுகள் நிகழ்ந்துள்ளன. ஆபிரிக்க நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. 1983ம் ஆண்டு இனகலவர காலத்தில் புறக்கோட்டை பகுதியில் தமிழ் குடும்பம் ஒன்று அவர்களின் கார் ஒன்றுள் வைத்து […]

யாருக்கு சொல்லியழ 12: வடக்கே உதிக்கும் சூரியன்?

யாருக்கு சொல்லியழ 12: வடக்கே உதிக்கும் சூரியன்?

(இளவழகன், 2021-10-11) 2021ம் ஆண்டுக்கான நவராத்திரி தின கணிப்பு சில கனடிய இந்துக்களுக்கு/சைவர்களுக்கு சூரியன் வடக்கே உதிக்க ஆரம்பித்து உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது. இவர்களின் கணிப்பின்படி 2021ம் ஆண்டுக்கான நவராத்திரி பூசையின் முதலாம் தினம் கனடா நேரப்படி அக்டோபர் மாதம் 6ம் திகதி அமைத்துள்ளது. ஆனால் இலங்கையில் அது இலங்கையில் நேரப்படி அக்டோபர் மாதம் 7ம் திகதியாக கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது இலங்கையிலும், கனடாவிலும் ஏறக்குறைய ஒரே காலத்தில் முதலாம் நவராத்திரி தினம் ஆரம்பிக்கிறது. ஆனால் […]

யாருக்கு சொல்லியழ 11: போடு புள்ளடி நினைவு தினத்துக்கு

யாருக்கு சொல்லியழ 11: போடு புள்ளடி நினைவு தினத்துக்கு

இந்த ஆண்டுக்கான முள்ளிவாய்க்கால் நினைவு தினத்துக்கு கனடிய அரசியல்வாதிகள் பலரும் கட்சி பேதமின்றி முண்டியடித்து மூக்கால் அழுதுள்ளனர். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் எரிந்தபோது, புலித்தமிழர்கள் புலிக்கொடியோடு Gardiner Expressway என்ற Toronto நகரின் பெரும் தெருவை மறிந்தபோது, Ottawa பாராளுமன்றத்தை நிரப்பியபோது அழாதவர்களே, அப்போது உரியன செய்யாதவர்களே, முள்ளிவாய்க்காலுக்கு பின் பிறந்த பிள்ளை பள்ளிக்கூடம் போகும் இக்காலத்தில் மூக்கால் அழுகிறார்கள். அப்படியானால் அடுத்துவரும் ஆண்டுகளில் இவர்கள் குலுங்கி குலுக்கி அழுவார்களோ? அதற்கு பின்னான காலத்தில் ஒப்பாரி வைத்து […]

யாருக்கு சொல்லியழ 10: அது முந்தி, இது இப்ப

யாருக்கு சொல்லியழ 10: அது முந்தி, இது இப்ப

(இளவழகன், 2021-04-08) இன்று வியாழன் (2021-04-08) இலங்கையும், இந்தியாவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இணைந்து செயற்பட இணக்கம் ஒன்றை கொண்டுள்ளனர். இரு நாடுகளும் தாம் அறியும் ‘பயங்கரவாதிகள்’ தொடர்பான உண்மைகளை உடனுக்குடன் மறு தரப்புக்கு தெரியப்படுத்த இணக்கம் கொண்டுள்ளனர். இந்தியாவின் குழுவுக்கு Director of Intelligence Bureau பதவியில் உள்ள Arvind Kumar என்பவரும், இலங்கை குழுவுக்கு Inspector General of Police பதவியில் உள்ள C. D. Wickramaratne என்பவரும் அமர்வுக்கு தலைமை தாங்கி உள்ளனர். இந்த […]

தமிழருக்கு உரு ஏற்றுகிறதா தமிழ்Mirror?

தமிழருக்கு உரு ஏற்றுகிறதா தமிழ்Mirror?

தமிழ்Mirror என்ற இலங்கையை தளமாக கொண்ட தமிழ் பத்திரிகை “சூலத்தை பிடுங்கி புத்தரை நட்டு வேட்கை தணிக்கும் அகழ்வு” என்ற ஒரு ஆசிரியர் தலையங்கத்தை இன்று (2021/01/21) பதித்துள்ளது. இந்த ஆசிரியர் தலையங்கம் குருந்தூர் சம்பவத்தை அலசி ஆராய்ந்து குருந்தூரில் புத்தரை நிலைநாட்டியோரையும் துணிவுடன் கண்டிக்கிறது. ” தமிழர்களுக்கே சொந்தமான புராதன ஆதி சிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள முமுழமுனை, தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக் கல்லு பகுதிகளில் இரண்டு விகாரைகள் இருந்தமைக்கான சிதைவுகள் […]