இளவழகன் (2024-11-07) இலங்கை பொது தேர்தலுக்கு மேலும் ஒரு கிழமை மட்டுமே உள்ளது. இலங்கையின் பெரும்பான்மை சிங்களம் அண்மையில் இரண்டு தடவைகள் உலகம் நம்ப முடியாத காரியங்களை செய்து சாதனை படைத்துள்ளது. ஒன்று சனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை பின் கதவால் நாட்டை விட்டு ஓட விரட்டியது. மற்றையது இடதுசாரியான அநுர குமார திஸாநாயக்காவை (AKD) சனாதிபதி ஆக்கியது. அதே சிங்களம் நவம்பர் 14ம் திகதி அநுர தலைமையிலான NPP அணியின் கையில் பாராளுமன்றத்தை வழங்குவதன் மூலம் தனது மூன்றாம் சாதனையையும் செய்யலாம். கோத்தபாய ஒரு […]
2024ம் ஆண்டும் கனடிய தமிழ் அரசியல் புள்ளிகளும், புள்ளிகளாக மாற துடிப்பவர்களும் தமது கனடிய பெரும்பான்மை அரசியல்வாதிகளுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் genocide பெயரில், 15 ஆண்டுகளின் பின்னும், ஊளையிட்டு உள்ளனர். இந்த ஊளையிடல் இடம்பெறுவது கனடா வருடிக்கொடுக்கும் இஸ்ரேலின் அரச படையினரின் காசா மீதான genocide இடம்பெறும் வேளையிலேயே. நமது தமிழ் அரசியல் புள்ளிகள் எதோ தாம் கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக Facebook பேச்சு பேசினாலும், அவர்கள் உள்நோக்கம் சொந்த இலாபங்கள் மட்டுமே. இவர்களால் இலங்கை தமிழருக்கு எந்தவித பயனும் இல்லை. 1983ம் ஆண்டு கலவர […]
யாழ்ப்பாண கட்டிட பொருட்கள் கடைகளில் screw (புரி ஆணி) தாங்கோ என்று கேட்டால் தற்போது கிடைப்பது drywall screw களே. “என்ன அண்ணை இது, பழையன மாதிரி செப்பு, பித்தளை, அல்லது இரும்பு screw இல்லையே” என்று கேட்டால் “இப்ப சனம் இதைத்தான் கேட்டு வாங்குகினம்” என்ற பதில் வருகிறது. வளியில் ஈரப்பதன் (moisture) குறைந்த நாடுகளில் வீடுகள் drywall பயன்படுத்தி கட்டப்படும். குறிப்பாக சுவர்கள் drywall சுவர்களாக இருக்கும். Drywall பலகைகளில் நடுவில் gypsum இருக்கும், இருபுறமும் கடதாசி இருக்கும். […]
கடந்த ஜூன் 18ம் திகதி சீக்கிய பிரிவினை வாதியான Hardeep Singh Nijjar கனடாவில் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். கனடாவுக்கு Five Eyes நாடுகள் வழங்கிய உளவுகளின் அடிப்படையில் இந்த கொலையில் இந்தியாவின் கை இருப்பதாக கனடிய பிரதமர் ரூடோ இந்தியா மீது குற்றம் சுமத்தி இருந்தார். கனடா தம் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தியதால் வெகுண்டு எழுந்தது மோதி தலைமையிலான இந்திய அரசு. கூடவே இந்திய ஊடகங்களும் கனடா மீது வெகுண்டு எழுந்து உள்ளன. இந்த நிலையில் இலங்கையின் Ali Sabry என்ற வெளியுறவு அமைச்சரும் இந்தியாவின் உதவிக்கு […]
உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனா மாதிரி உலகை ஆண்ட பிரித்தானியா தற்போது தன்னையே ஆழ முடியாது தவிக்கிறது. அந்த நாடு மட்டுமல்ல அங்குள்ள ஒரு கட்சியே தன்னை ஆழ முடியாத நிலை உருவாக இறுதியில் இந்திய வம்சம் வந்த Rishi Sunak பிரதமர் ஆகியுள்ளார் – பொது தேர்தல் மூலம் அல்ல, பதிலாக மேசைக்கு கீழான உட்கட்சி நாடகம் மூலம். Sunak பிரித்தானியாவில் இரண்டாம் சந்ததி. இவரின் பெற்றோர் ஆபிரிக்க நாடுகளில் இருந்து சென்ற இந்திய வம்சத்தினர். […]
வேற்று மொழி சொல் ஒன்றுக்கு தமிழில் ஏற்கனவே மாற்று சொல் ஒன்று இல்லை என்றால் அதற்கு புதியதொரு தமிழ் சொல்லை கொள்ள விரும்புவது நலம், அவசியம். ஆனால் அவ்வாறு தமிழில் ஒரு புதிய சொல்லை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சி தமிழை, தமிழின் மகிமையை அழிக்கும் என்றால் தமிழுக்கான மாற்று சொல்லை அமையாது நேரடியாக வேற்று மொழி சொல்லையே பயன்படுத்துவது தமிழுக்கு செய்யும் பெரும் தொண்டாகும். அவ்வாறு செய்வது இன்றைய முட்டுக்காய் தமிழன் அழகிய பண்டை தமிழை அழிப்பதை, […]
தமிழ், குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் தன்னை புத்திசாலி என்று நிறுவ சிங்களத்தை ‘மோட்டு சிங்களம்’ என்று கூறும். ஆனால் தற்கால நிகழ்வுகள் தமிழர் தான் மூடர் என எண்ண வைக்கிறது. வல்வெட்டித்துறையிலிருந்து ஹாட்லி கல்லூரிக்கு வந்த மாணவன் ஒருவன் தனது 6ம் ஆண்டில் ஒரு வகுப்பறை நாடகம் நிகழ்த்தினான். அந்த நாடகத்தின் பிரதான நோக்கம் சிங்களவன் ஒரு மூடன் என நிறுவதே. நாடகத்தின் பெயர் “சொன்னதை செய்யும் பாண்டா”. யாழ்ப்பாணத்தில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிங்கள ‘வேலைக்கார […]
யாழ்ப்பாணத்தில் உன்னதமானவர்களை வெள்ளையன் பிள்ளை மாதிரி என்று பெருமையிட்டு அழைப்பது உண்டு. அக்காலத்தில் வெள்ளையர்கள் உன்னதமான, நேர்மையான, பொய் புரளி இல்லாதவர்களாக இருந்தனர். ஆனால் தற்கால நிலைமை அவ்வாறு அல்ல. குறிப்பாக அரசியலில் வெள்ளையர்களும் பொய், புரளி, உருட்டு, பிரட்டு நிரம்பி உள்ளனர். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா எல்லாம் இதே நிலையே. ரஷ்யாவின் பூட்டின் யூகிரைன் தனது கோதுமை போன்ற தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாது துறைமுகங்களை தடுப்பது “real war crime” என்று ஐரோப்பிய வெளியுறவு […]
கனடிய தமிழ் வாக்குகளை சில்லறை விலையில் பெற்று கனடிய அரசியல் கட்சிகளுக்கு மொத்த விலையில் விற்கும் கனடிய தமிழ் அரசியல் வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கனடிய பிரதமர் மே மாதம் 18ம் திகதியை கனடாவில் “Tamil Genocide Remembrance Day” என்று அறிவித்து உள்ளார். இது கனடிய தமிழ் அரசியல் வர்த்தகர்களின் மற்றுமொரு சில்லறை சாதனை மட்டுமே. இவ்வகை கனடிய சில்லறை நாடகங்களால் முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கபோவது இல்லை. கனடா இப்போது கூறும் massacre […]
அரசியல் கட்சிகளுக்கு அப்பால், இன, மத பேதங்களுக்கு அப்பால் இலங்கையில் ஒரு புரட்சி இடம்பெற்றது. Gota Go Gama என்று ஆரம்பித்து, Mina Go Gama என்று வளர்ந்த இந்த புரட்சி இலங்கையின் உச்சத்தில் இருந்த ஆட்சி குடும்பத்தை விரட்ட முனைந்து. அந்த குடும்பத்தின் பிரதானியான பிரதமர் மகிந்தவை விரட்டியும் இருந்தது. இந்த புரட்சி இலங்கை பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்ததற்கு நிகரான ஒரு புரட்சியாக தொடர்கிறது. இந்த வன்முறை அற்ற, நியாயமான புரட்சியையே உலகம், குறிப்பாக […]