சில மாதங்களில் சீனா செவ்வாய்க்கு ஆய்வு கலம் அனுப்பும்

வரும் சில மாதங்களில் செவ்வாய் கிரகத்துக்கு சீனா தனது ஆய்வு கலம் ஒன்றை அனுப்பவுள்ளது. செவ்வாய்க்கான சீனாவின் இந்த முதல் கலத்தின் பெயரை வெள்ளிக்கிழமை சீனாவின் CNSA (China National Space Administration) வெளியிட்டு உள்ளது. செவ்வாயின் தரையில் இறங்கி ஆய்வு செய்யவுள்ள 200 kg எடைகொண்ட சீன கலம் TianWen 1 என பெயரிடப்பட்டு உள்ளது. . TianWen என்பது “தேவலோகத்து கேள்விகள்” என்று கருத்தை கொண்டது. TianWen என்ற தலைப்பு 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட […]

விமானம் தாங்கி தயாரிப்புகளை சீனா நிறுத்தம்

தனது 5 ஆம் மற்றும் 6 ஆம் விமானம் தாங்கி கப்பல் தயாரிப்பு வேலைகளை சீனா இடைநிறுத்தி உள்ளது. புதிய தொழிநுட்பங்களை கொண்டதாக அந்த கப்பல்களை கட்டும் பணிகளில் ஏற்படுள்ள இடர்பாடுகள் தயாரிப்பு வேலைகளை இடைநிறுத்த காரணம் என்று கூறப்படுகிறது. . சீனா முதலில் சோவியத் கைவிட்ட விமானம் தாங்கி கப்பல் ஒன்றை கொள்வனவு செய்து, புதிதாய் மெருகூட்டி தனது முதலாவது (Type 001) விமானம்தாங்கியை தயாரித்தது. இது தற்போது சேவையில் உள்ளது. . முதலாம் விமானம் […]

இன்று சந்திரனின் தென் துருவம் போகிறது இந்தியா

இன்று திங்கள் அதிகாலை இந்தியா தனது Chandrayaan-2 என்ற சந்திரனுக்கான ஆளில்லா பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்த பயணத்தின்போது இந்தியாவின் விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கும். மனித கலம் ஒன்று சந்திரனின் தென் துருவம் போவது இதுவே முதல் தடவை. இங்கே நீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. . Geosynchronous Satellite Launch Vehicle Mark III என்ற இந்த ஏவுகலம் (Launch Vehicle) தன்னுள் 2,400 kg எடை கொண்ட orbiter, 1,500 kg எடை […]

சீனாவில் நரம்பு மூலம் ஆள் அடையாளம் காணல்

பாதுகாப்பான இடங்களுக்குள் அனுமதி வழங்கல், வங்கிகள் போன்ற இடங்களில் ஆளை அடையாளம் கண்டு சேவை வழங்கல் போன்ற சேவைகளுக்கு முன்னர் password கொண்ட அடையாள அட்டைகள் (ID Card) பயன்படுத்தப்பட்டன. போலி அடையாள அட்டைகள், திருடப்பட்ட அடையாள அட்டைகள் ஆகியவற்றின் பாவனை அடையாள அட்டைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்கியது. அத்துடன் திருட்டுகளை தவிர்க்க வேறு வழிமுறை காணப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டது. . அடையாள அட்டைகள் நம்பகத்தன்மையை இழந்த போது கை ரேகை (fingerprint reader), கண்விழி (iris […]

ஏப்ரல் 6 முதல் உங்கள் GPS பொய்கலாம்

உங்களிடம் உள்ள GPS (Global Positioning System) வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு பின்னர் குழப்பத்துக்கு உள்ளாகலாம். குறிப்பாக இதன் திகதிகள் குழம்பி போகலாம். GPS மட்டுமல்லாது GPS சேவையை பயன்படுத்தும் smartphone மற்றும் server களும் குழப்பத்துக்கு உள்ளாகலாம். . GPS தொழில்நுட்பம் week counter என்ற கிழமைகளை எண்ணும் முறைமையை பயன்படுத்துகிறது. தற்போது இந்த week counter ஒரு 10-digit counter ஆகும். அதனால் இந்த week counter 00 0000 0000 […]

சந்திரனில் கருகிய பருத்தி தளிர்

அண்மையில் சீனாவின் Chang’e என்ற விண்கலம் சந்திரனின் மறுபக்கத்தில், பூமிக்கு தெரியா பக்கத்தில், தரையிறங்கி இருந்தது. இக்கலத்தில் ஆய்வு நோக்கில் சில பொருட்களும் எடுத்து செல்லப்பட்டது. அப்பொருட்களில் தளிர்க்கவிருந்த பருத்தி தாவரமும் ஒன்று. அந்த விண்கலத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஒன்றில் இருந்த இந்த பருத்தி எதிர்பார்த்தபடியே சந்திரனில் தரைதட்டிய பின் தளிர் விட்டு இருந்தது. ஆனால் அந்த தளிர் மின் துண்டிப்பு காரணமாக தற்போது கருகிவிட்டது. . இந்த பருத்தி தளிர் இரண்டு நாட்களுக்கு நலமாக […]

சந்திரனின் மறுபக்கம் செல்கிறது சீன கலம்

இன்று சீனா சந்திரனின் மறுபக்கத்துக்கு தரை இறங்கும் கலம் (lander) ஒன்றையும், தரையில் நகரும் கலம் (rover) ஒன்றையும் ஏவி உள்ளது. இந்த இரண்டையும் கொண்ட Chang’e 4 என்ற பெயர் கொண்ட பெரும்கலம் இன்று சீன நேரப்படி அதிகாலை 2:23 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. . சந்திரன் தன்னை தானே சுற்ற சுமார் 28 நாட்கள் தேவைப்படுவதாலும், சந்திரன் பூமியை சுற்றவும் சுமார் 28 நாட்கள் தேவைப்படுவதால், சந்திரனின் ஒருபக்கம் மட்டுமே பூமிக்கு எப்போதும் தெரியும். மறுபக்கம் […]

ரஷ்ய விண்கல ஏவுகணை வீழ்ந்தது, பயணித்தோர் தப்பினர்

சர்வதேச வின் நிலையத்துக்கு (IIS, International Space Station) இரண்டு விண்வெளி வீரர்களை ஏற்றி சென்ற ரஷ்யாவின் சோயூஸ் (Soyuz) ஏவுகணை இயந்திர கோளாறு காரணமாக பயணத்தை தொடராது வீழ்ந்துள்ளது. அதில் பயணித்த இரண்டு வீரர்களும் தப்பி உள்ளனர். . Alesey Ovchiin என்ற ரஷ்ய விண்வெளி வீரரும், Nick Haque என்ற அமெரிக்க வீரருமே இவ்வாறு விபத்தில் இருந்து தப்பியவர்கள். . Soyuz கலம் ஏவப்படத்தில் இருந்து முதல் 90 செக்கன்கள் வரை குளறுபடிகள் எதுவும் […]

சூரியனை நோக்கி நாசாவின் விண்கலம்

நேற்று சனிக்கிழமை அமெரிக்காவின் நாசா (NASA) சூரியனை நோக்கி விண்கலம் (probe) ஒன்றை ஏவி உள்ளது. Parker Solar Probe என்ற இந்த விண்கலம் புளோரிடா (Florida) மாநிலத்தின் Cape Canaveral தளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது. . இந்த விண்கலமே சூரியனுக்கு மிக அருகாக செல்லவுள்ள முதல் விண்கலமாகும். சூரியனுக்கு அருகில் வெப்பநிலை சுமார் 555,000 C என்று கூறப்படுகிறது. அதனால் இந்த விண்கலம் சூரியனில் இருந்து சுமார் 6 மில்லியன் km தொலைவிலேயே எரிந்து பயனற்று […]

சீனாவில் LingWu Dragon எலும்புகள் அகழ்வு

சீனாவின் வடமேற்கு பகுதியான LingWu என்ற இடத்தில் புதிய வகை dinosaur எலும்புகள் அகழ்வு செய்யப்பட்டுள்ளன. LingWuLong Shenqi (LingWu Amazing Dragon) என்று பெயரிடப்பட்ட இந்த தாவரம் உண்ணும் விலங்குகள் சுமார் 175 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் சென்று கூறப்படுகிறது. . சீனாவில் அகழ்வு செய்யப்பட்ட இந்த விலங்குகளின் தலையில் இருந்து வால் நுனி வரையான நீளம் சுமார் 57 அடி என்று அறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் பின், இதுவரை கணித்திருந்த காலத்துக்கும் 15 மில்லியன் […]