உலகில் தற்போது 2,755 பேர் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்தை கொண்டுள்ளனர். இவர்களிடம் மொத்தம் $13.1 டிரில்லியன் ($13,100 பில்லியன்) சொத்துக்கள் உள்ளன. இந்த ஆண்டு புதிதாக 493 பேர் பில்லியன் சொத்துடையோர் பட்டியலில் இணைந்து உள்ளனர். அமெரிக்காவின் Forbes நிறுவனம் வெளியிட்டு உள்ள கணிப்பின்படி Amazon நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezos உலக அளவில் முதலாம் இடத்தில் உள்ளார். அமெரிக்கரான இவரிடம் சுமார் $177 billion ($177,000,000,000) சொத்துக்கள் உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. அதில் […]
Smartphone தொலைபேசி உலகில் தனக்கென இடம் ஒன்றை கொண்டிருந்த தென்கொரியாவின் LG நிறுவனம் தனது smartphone தயாரிப்பை நிறுத்தவுள்ளது. முற்கால உலக சந்தையில் LG smartphone 3ம் இடத்தை வகித்து இருந்தது. அனால் தற்காலத்தில் அது 11ம் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் LG கடந்த ஆண்டு 23 மில்லியன் தொலைபேசிகளை விற்று 13% சந்தையை கொண்டிருந்தாலும், உலக அளவில் அது 2% சந்தையையே கொண்டுள்ளது. அமெரிக்காவில் iPhone 39% சந்தையையும், Samsung 30% (256 மில்லியன் தொலைபேசிகள்) […]
இலங்கை நாணயத்தின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 200 இலங்கை ரூபா என்ற நாணய மாற்று விகிதத்தை அடைந்துள்ளது இலங்கை நாணயம். இந்நிலை சில மணி நேரம் நீடித்து பின் டாலருக்கு 198 ரூபாய் என்ற மாற்று விகிதத்தை அடைந்துள்ளது. இதுவரை காலமும் இலங்கை பொருளாதார வீழ்ச்சிக்கும், இலங்கை நாணய பெறுமதி இழப்புக்கும் யுத்தத்தை காரணம் கூறி இருந்தாலும், 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த காலத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு […]
2020ம் ஆண்டில் கரோனா உலக வர்த்தகத்தை பாதித்து இருந்தாலும், சீனாவில் Billionaires உருவாகுவது குறையவில்லை. 2020ம் ஆண்டில் அங்கு மொத்தம் 1,058 Billionaires இருந்துள்ளனர். ஆனால் அதே காலத்தில் அமெரிக்காவில் 696 Billionaires மட்டுமே இருந்துள்ளனர். உலகில் முதலாவதாக ஒரு நாடு ஆயிரத்துக்கும் அதிகமான Billionaires வகுப்பை கொண்டது சீனாவிலேயே. கடந்த ஆண்டில் மட்டும் உலகில் 610 புதிய Billionaires உருவாகினர். அதிலும் 318 பேர் சீனர், 95 பேர் அமெரிக்கர் என்று கூறுகிறது Hurun Report. […]
2020ம் ஆண்டில் முதல் தடவையாக ஐரோப்பாவின் முதலாவது பெரிய வர்த்தக கூட்டு நாடாகி உள்ளது சீனா. இதுவரை அந்த தரத்தில் இருந்த அமெரிக்கா இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக ரம்பின் ஆட்சி காலத்திலேயே அமெரிக்க-ஐரோப்பிய வர்த்தக மற்றும் அரசியல் உறவுகள் பாதிக்கப்பட்டு இருந்தன. 2020ம் ஆண்டில் ஐரோப்பாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் $709 பில்லியன் ஆக இருந்துள்ளது. அதேவேளை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் $671 பில்லியன் ஆக இருந்துள்ளது. 2020ம் ஆண்டில் […]
அமெரிக்காவில் சில நிறுவனங்களின் பங்குச்சந்தை பங்குகளை அர்த்தமற்ற வகையில், சூதாட்டத்துக்கு நிகரான முறையில், பெருமளவு முதலீட்டாளர் கொள்வனவு செய்கின்றனர். இதனால் நட்டத்தில் இயங்கும் சில நிறுவங்களின் பங்கு விலைகள் ஒரு கிழமைக்குள் மட்டும் 300% மடங்கால் அதிகரித்து உள்ளன. GameStop என்ற வீடியோ game விற்பனை செய்யும் நிலையங்களை கொண்ட நிறுவனம் 2019ம் ஆண்டு $470 மில்லியன் நட்டத்தை அடைந்திருந்தது. இது அதற்கு முன் 2017ம் ஆண்டு தனது கடைகளில் 150 கடைகளை இலாபம் இன்மையால் மூடியும் […]
உலகத்திலேயே மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக உள்ள அமெரிக்க நுகர்வோர் சந்தையை (consumer goods market) சீனாவின் நுகர்வோர் சந்தை விரைவில் பின்தள்ளும் என்று 2019 ஆம் ஆண்டுக்கான தரவுகள் கூறுகின்றன. 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நுகர்வோர் சந்தை $6.2 டிரில்லியன் ($6,200 பில்லியன்) ஆக இருந்துள்ளது. அதே ஆண்டு சீனாவின் நுகர்வோர் சந்தை $6.0 டிரில்லியன் ஆக இருந்துள்ளது. வேகமாக வளரும் சீனாவின் நுகர்வோர் சந்தை தற்போது நிலவும் $200 பில்லியன் இடைவெளியை நிரப்பி, தொடர்ந்தும் […]
இலங்கை அரசின் அமெரிக்க டாலர் மூலமான bond அக்டோபர் மாதம் மேலும் 20% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே செப்டம்பர் மாதம் இது 15.5% ஆல் வீழ்ந்து இருந்தது. ஒரு காலத்தில் ஆசியாவின் தரமான bond ஆக இருந்த இலங்கை அரச bond தற்போது மிகவும் பலமற்ற ஒன்றாக மாறி உள்ளது என்கிறது Bloomberg Barclays சுட்டி. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian Development Bank) கணிப்புப்படி இலங்கையின் இந்த வருட GDP வீழ்ச்சி 5.5% ஆக […]
Google தேடுதல் (search engine), Android OS ஆகியன Google நிறுவனத்துக்கு சொந்தமானவை. கூகுளுக்கு போட்டியாக iPhone, iPad போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனம் Apple. ஆனால் அவை இரண்டும் இணைய தேடுதலில் நுகர்வோர் நலனனுக்கு எதிரான வகையில் இணைந்து செயற்படுவதாக அமெரிக்க அரசு கூகிள் மீது தாக்கல் செய்த antitrust வழக்கில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 2017 ஆம் ஆண்டு Google, Apple ஆகிய நிறுவனங்கள் இரண்டும் இரகசியமாக கூடி, iPhone போன்ற Apple தயாரிப்புகள் Google நிறுவனத்தின் […]
மலேசிய மக்களின் பொதுப்பணத்தில் ஆரம்பிப்பட்ட 1MDB முதலீட்டு திட்டத்தில் இருந்து மலேசிய அரசியல்வாதிகள் பெருமளவு பணம் கொள்ளையடிக்க உடந்தையாக இருந்த அமெரிக்காவின் முதலீட்டு வங்கியான Goldman Sachs தனது தவறுகளில் இருந்து விடுவிக்க சுமார் $3 பில்லியன் தண்டம் செலுத்த இன்று வியாழன் இணங்கி உள்ளது. அதனால் Goldman செலுத்தும் மொத்த தண்டம் சுமார் $7 பில்லியன் ஆக அதிகரித்து உள்ளது. கடந்த ஜூலை மாதம் மலேசியாவுக்கும் சுமார் $3.9 பில்லியன் தண்டம் செலுத்த Goldman இணங்கி இருந்தது. […]