ரெங்கன் ராஜரட்ணம் மீது வலைவீசும் அமெரிக்கா

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட ராஜ் ராஜரட்ணம் (Raj Rajaratnam) என்பவர் அமெரிக்காவில் பங்கு சந்தை மோசடிகள் காரணமாக 11 வருட சிறையை அனுபவித்து வருகிறார். இவர் பெரிய நிறுவனக்களின் தரவுகளை களவாக பெற்று அதற்கு ஏற்ப அந்த நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு அல்லது விற்பனை செய்து அதன் மூலம் சட்டவிரோத இலாபம் பெற்றுவந்துள்ளார். அந்த குற்றம் நிறுபிக்கப்பட்டதாலேயே அவர் 11 வருட சிறை தண்டனை பெற்றார். இப்போது அவரின் தம்பியார் ரெங்கன் என்பவர் மீது வழக்கு தொடர்கிறது அமெரிக்க […]

இந்திய Cadbury’s $46 மில்லியன் வரி ஒழிப்பு

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய அரசின் விசாரணை, இந்தியாவில் இயங்கும் Cadbury’s என்ற chocolate தயாரிக்கும் நிறுவனம் இல்லாத ஒரு தொழிற்சாலையை பயன்படுத்தி $46 மில்லியன் வரி ஒழிப்பு செய்துள்ளது. Cadbury’s இனது ஆவணங்களின்படி இவர்களின் Himachal Pradesh தொழில்சாலை 2010 ஆம் ஆண்டு பங்குனி 31 முதல் chocolate உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. ஆனால் அந்த தொழில்சாலைக்கு முறைப்படி அரச உரிமை அப்போது கிடைத்திருக்கவில்லை. அவ்வகை அரச உரிமை 2011 ஆம் ஆண்டு தை மாதம் 14 ஆம் திகதியே அவர்களுக்கு கிடைத்துள்ளது. […]

$5 பில்லியன் குற்றப்பணம் செலுத்தும் S&P

அமெரிக்க அரசு S&P (Standard and Poor”s) என்ற credit rating நிறுவனத்தை $5 பில்லியன் குற்றப்பணம் செலுத்துமாறு பணித்துள்ளது. இந்த நிறுவனம் பல தரக்குறைவான சொத்து நிறுவனங்களுக்கு அதியுயர் மதிப்பீடான AAA ஐ வழங்கியதால், பல முதலீட்டாளர்கள் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்து பின் 2008-2009 களில் பாரிய நட்டத்தை அடைந்திருந்தனர். அமெரிக்க மத்திய அரசு மட்டுமன்றி, 13 மாநில அரசுகளும் S&P  இக்கு எதிராக மேலும்பல வழக்குகளை தொடர்ந்துள்ளன. உதாரணமாக கலிபோர்னிய மாநிலம் $4 பில்லியன் நட்டஈடு கேட்டுள்ளது. […]

Samsung இன் காலாண்டு இலாபம் U$6.58 பில்லியன்

தென் கொரியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் (Samsung Electronics Co) தனது 2012 இன் நாலாம் காலாண்டு இலாபம் U$6.58 பில்லியன் என இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இது முன்னைய வருட நாலாம் காலாண்டின் இலாபத்தைவிட 76% அதிகமாகும். இவர்களின் பெரும்பாலான வருமானம் சாம்சங்கின் Galaxy போன்ற smartphone பிரிவில் இருந்தே கிடைத்துள்ளது. ABI Research இன் கருத்துப்படி உலக smartphone சந்தையின் 30% பங்கை சாம்சங் கொண்டுள்ளது. சாம்சங்கின் இவ்வாறான வளர்ச்சி தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கடந்த காலாண்டில் சுமார் 63 மில்லியன் […]

4வது வருடமாக வாகன விற்பனையில் சீனா முதலிடம்

பல காலம் அமெரிக்காவிலேயே அதிகூடிய வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்திருந்தது. ஆனால் கடந்த 4 வருடங்களாக அதிகூடிய வாகனங்கள் சீனாவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2012 ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் 19.3 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. The China Association of Automobile இன் கணிப்பின்படி சீனாவின் 2012 ஆம் வருடத்தின் கார் விற்பனை 2011 வருட விற்பனையைவிட 4.3% அதிகம். அதேவேளை தற்போது உலக வாகன விற்பனையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டுக்கான வாகன விற்பனை […]

ஜப்பானில் U$230 பில்லியனுக்கு பொருளாதார ஊட்டம்

தற்போது மிகவும் மந்தமாக இருக்கும் ஜப்பானிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ஜப்பானிய அரசு இன்று வெள்ளிக்கிழமை (2013:01:11) புதிய பொருளாதார ஊக்க முன்னெடுப்பு ஒன்றை அறிவித்துள்ளது. பிரதமர் Shizo Abe இனது அரசின் இந்த ஊட்ட முதலீடு சுமார் U$230 பில்லியன் (20 trillion Yen) பெறுமதியானது. இந்த முதலீடு முதலில் மூன்று துறைகளில் நடைமுறைப்படுத்தப்படும். சுமார் $43 பில்லியன் அனர்த்த நிவாரணம், அனர்த்தம் கட்டுப்படுத்தல் போன்ற விடயங்களில் செலவிடப்படும். இதில் பெருந்தெருக்கள் திருத்தம், சுரங்கப்பாதைகள் திருத்தம் போன்றவையும் […]

வரிக்கொடுமையால் ரஷ்ய பிரசையாகும் பிரெஞ்சு நடிகர்

75% வரி திட்டத்தால் ஆத்திரமடைந்த Gerard Depardieu பிரான்ஸை விட்டு வெளியேறி பெல்ஜியத்தில் வீடு ஒன்றை வாங்கி குடியிருந்தார். அதேவேளை ரசியாவிலும் குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தார். ரஸ்சிய அதிபர் பூட்டன் தற்போது Gersrd க்கு ரஸ்சிய குடியுரிமையுடன் கடவுச்சீட்டும் வழங்கியுள்ளார்.

1 14 15 16