கனடிய மத்திய அரசின் anti-money laundering திணைக்களம் தரமற்றது (ineffective) என்று British Columbia மாநிலத்தின் அறிக்கை ஒன்று இன்று புதன் கூறியுள்ளது. நீதிபதி Austin Cullen தயாரித்த இந்த அறிக்கை பதிலுக்கு British Columbia தனது சொந்த anti-money laundering அமைப்பை நடைமுறை செய்தல் அவசியம் என்றுள்ளது. Cullen இந்த விசாரணையை 2019ம் ஆண்டு ஆரம்பித்து இருந்தார். அந்த விசாரணையின் முடிவிலேயே இன்று அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. உதாரணமாக 2006ம் ஆண்டு கனடாவுக்கு குடிவந்த Chen […]
ஈரான் மீண்டும் செய்மதி ஒன்றை ஏவும் நோக்குடன் ஏவுகலம் (rocket) ஒன்றை ஏவு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளதாக அமெரிக்க செய்மதி படங்கள் கூறுகின்றன. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளது அமெரிக்கா. ஈரான் முன்னரும் பல தடவைகள் செய்மதி ஏவ முனைந்து தோல்வி அடைந்து இருந்தது. Maxar Technologies என்ற நிறுவனத்தின் செய்மதி ஒளிப்பட கருவிகளே Imam Khomeini Spaceport என்ற ஈரானின் ஏவு தளத்தில் ஏவுகலம் உள்ளதை இன்று செய்வாய் காண்பித்து உள்ளது. […]
இலங்கை மின்சார சபையின் (CEB) Chairman M. M. C. Ferdinando இன்று பதவி விலகி உள்ளார். இவரின் பதவி விலகலை Power and Energy அமைச்சர் Kanchana Wijesekara ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். பிரதமர் மோதியின் விருப்பத்துக்கு இணங்க சனாதிபதி கோத்தபாய கூறியதற்கு ஏற்பவே தான் மன்னார் மற்றும் பூநகரி 500 MW காற்று மின் திட்டத்தை இந்திய அடானிக்கு வழங்கியதாக Chairman M. M. C. Ferdinando பாராளுமன்ற குழுவான COPE க்கு கூறி இருந்தார். […]
இலங்கையில் அமைக்கப்படவுள்ள 500 MW மின் உற்பத்தி திட்டம் ஒன்றை இந்திய பிரதமர் மோதியின் வேண்டுகோளுக்கு இணங்க மோதியின் நண்பரான அடானிக்கு (Adani Group) போட்டி எதுவும் இன்றி வழங்குமாறு சனாதிபதி கோத்தபாய பணித்தாக இலங்கை மின்சார சபையின் (CEB) Chairman M. M. C. Ferdinando கூறியுள்ளார். Committee of Enterprises (COPE) என்ற இலங்கை பாராளுமன்ற கண்காணிப்பு அமைப்புக்கே Ferdinando மேற்கண்டவாறு கூறியிருந்தார். தன்னை 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி சனாதிபதி […]
அமெரிக்க நேரப்படி ஞாயிறு (ஜூன் 12) முதல் COVID தொற்று இன்மைக்கான சான்றிதழ் தேவையில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு வெளிநாட்டு பயணிகள் மீது விதிக்கப்பட்ட இந்த சட்டத்தை நிறுத்த அமெரிக்காவின் விமான சேவை நிறுவனங்கள் அழுத்தங்களை வழங்கி வந்தன. தற்போது 5 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களில் சுமார் 71% மக்கள் முற்றாக தடுப்பு ஊசி பெற்றுள்ளதால் தம்மால் கட்டுப்பாடுகளை விலக்க முடிகிறது என்று கூறுகிறது அமெரிக்காவின் CDC. இந்த விதி விலக்கல் சுமார் […]
யுக்ரேனை ரஷ்யா ஆக்கிரமிக்க ஆரம்பித்த காலம் முதல் கருங்கடலில் உள்ள யுக்ரேனின் துறைமுகங்கள் ரஷ்யாவின் தடையில் உள்ளன. அதனால் யுக்ரேன் தனது தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது உள்ளது. ஆனால் தற்போது ஐ.நா. வும், துருக்கியும் ஒரு இணைக்க நிலையை ஏற்படுத்தி யுக்ரேனின் தானியத்தை ஏற்றுமதி செய்ய முனைகின்றன. உலகம் எங்கும் தற்போது தானியங்களுக்கு தட்டுப்பாடு இருந்தாலும் யுக்ரேனில் தற்போது சுமார் 20 மில்லியன் தொன் தானியங்கள் தடையால் முடங்கி உள்ளது. துருக்கியின் முயற்சி கைகூடுமா […]
இந்த ஆண்டுக்கான அதிக விலைவாசி கொண்ட (expensive) நகரங்கள் பட்டியலில் ஆசிய நகரங்கள் வேகமாக மேலேறி உள்ளன. உலகின் மிக விலைவாசி உயர்ந்த முதல் 10 நகரங்களில் Hong Kong, Tokyo, Shanghai, Guangzhou, Seoul ஆகிய 5 நகரங்கள் இடம்பெற்று உள்ளன. Worldwide Cost of Living Index என்ற இந்த கணிப்பு லண்டன் நகரை தளமாக கொண்ட Economist Intelligence Unit என்ற அமைப்பால் தயாரிக்கப்பட்டது. இலங்கையின் கொழும்பு நகரின் 162ம் இடத்தில் இருந்து […]
தென் ஆபிரிக்காவில் ஊழல் தொடர்பாக தேடப்பட்ட Rajesh Gupta, Atul Gupta ஆகிய சகோதரர்கள் மத்திய கிழக்கு நாடான UAE யில் UAE போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் விரைவில் தென் ஆபிரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவர். இவர்கள் இருவரும் முன்னாள் தென் ஆபிரிக்காவின் சனாதிபதி சூமா (Jacob Zuma) காலத்தில் சூமாவுடன் இணைந்து ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 2016ம் ஆண்டு தென் ஆபிரிக்க அரசு தயாரித்த 355-பக்க அறிக்கை குப்தா சகோதரர்களின் […]
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் பலஸ்தீனர் நிலத்தை ஆக்கிரமித்து அங்கு தமக்கு சாதகமான இரட்டை சட்டம் ஒன்றை நடைமுறை செய்து இருந்தது. அந்த சட்டப்படி ஆக்கிரமித்த இடங்களில் உள்ள சட்டவிரோத குடியிருப்பு யூதர்கள் இஸ்ரேலின் சட்டங்களுக்கு அமைய ஆளப்படுவர். இஸ்ரேலின் civil, criminal சட்டங்களுக்கு உட்படும் இவர்கள் இஸ்ரேல் வாக்குகளையும் கொண்டுள்ளனர். அனால் இதே இடத்தில் சந்ததி சந்ததியாக குடியிருக்கும் பலஸ்தீனர் இஸ்ரேலின் இராணுவ ஆட்சிக்கு உட்படுவர். மேற்படி இரட்டை சட்டம் இந்த மாதம் முடிவடையும் […]
இலங்கையில் புத்த மத வாதம் வாக்குகளை பெற பயன்படுத்துவது போல் இந்தியாவில் பா. ஜ. கட்சி இந்து மத வாதத்தை பயன்படுத்தி வருகிறது. மதவாதம் இலகுவில் வாக்குகளை வழங்குவதால் பா. ஜ கட்சி உறுப்பினர் பயமின்றி இஸ்லாம் விரோத கூற்றுகளை வெளியிட்டு வந்துள்ளனர். ஆனால் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பா. ஜ. உறுப்பினரின் கூற்றுகள் பா. ஜ. வை தற்போது இடரில் வைத்துள்ளன. பா. ஜ. பேச்சாளரான Nupur Sharma என்பவர் கூறிய முஹமத்தை இழிவு செய்யும் […]