தாய்வானை சுற்றி சீனா பாரிய இராணுவ பயிற்சி

தாய்வானை சுற்றி சீனா பாரிய இராணுவ பயிற்சி

நேற்று அமெரிக்க House Speaker நான்சி பெலோஷி தாய்வான் சென்றதுக்கு பதிலடியாக சீனா என்றும் இல்லாத அளவில் பாரிய யுத்த பயிற்சிகளை தாய்வானை சுற்றி ஆரம்பித்து உள்ளது. இந்த பயிற்சி ஆகஸ்ட் 4ம் திகதி முதல் 7ம் திகதி வரை இடம்பெறும். இதற்கான அறிவிப்பை சீனா பெலோஷி  தாய்வானில் இறங்கியவுடன் அறிவித்து இருந்தது. ஒரு live-fire பயிற்சி என்றும் அதன்படி இதில் long-range live ammunition ஏவுதல் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. தாய்வானை சுற்றி குறைந்தது 6 […]

தாய்வானில் பெலோஷி, இதுவரை பாரிய சீன பதிலடி எதுவுமில்லை

தாய்வானில்  பெலோஷி, இதுவரை பாரிய சீன பதிலடி எதுவுமில்லை

சீனாவின் எதிர்ப்புக்கும் மத்தியில் அமெரிக்க House Speaker நான்சி பெலோஷி தாய்வான் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 10:20 மணியளவில் Taipei நகரில் உள்ள Songshan விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். இதற்கு முன் பெலோஷி சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் சென்று இருந்தார். தாய்வானின் பின் இவர் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் செல்வார். மலேசியாவில் இருந்து சென்ற இவரின் SPAR19 என்ற குறியீடு கொண்ட Boeing C-40C வகை விமானம் தென் சீன கடலின் […]

அல்கைடா தலைவரை அமெரிக்கா தாக்கி கொலை

அல்கைடா தலைவரை அமெரிக்கா தாக்கி கொலை

Ayman al-Zawahiri என்ற அல்கைடா இயக்கத்தின் தற்போதைய தலைவரை அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்கி கொலை செய்துள்ளது. ஒசாமா பின் லாடன் மறைவுக்கு பின் இவரே அந்த குழுவுக்கு தலைமை தாங்கி வந்துள்ளார். ஆப்கானித்தானில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சனி/ஞாயிறு தினங்களில் இடம்பெற்றது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. ஆனால் மேலதிக விபரங்களை பைடென் பின்னர் கூறுவார். தற்போது 71 வயதான இவர் மீதான தாக்குதலை அமெரிக்க சனாதிபதி பைடென் நியூ யார்க் நேரப்படி […]

Muffin வைத்திருந்த அஸ்ரேலிய பயணிக்கு $1,874 தண்டம்

Muffin வைத்திருந்த அஸ்ரேலிய பயணிக்கு $1,874 தண்டம்

இந்தோனேசியாவின் உல்லாச பயணிகள் அதிகம் விரும்பும் பாலி (Bali) நகரில் இருந்து அஸ்ரேலியாவின் டார்வின் (Darwin) விமான நிலையம் சென்ற நபருக்கு அவர் தன்னிடம் இருந்த Muffin உணவை தெரிவிக்காத காரணத்தால் A$ 2,664 (U$ 1,874) தண்டம் விதிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் Foot and Mouth நோய் பாலி நகரம் உட்பட இந்தோனேசியாவின் பல பாகங்களில் பரவுவதால் அஸ்ரேலியா தனது நாட்டுக்குள் வரும் உணவுகள் மீது கடும் எச்சரிக்கையாக உள்ளது. டார்வின் விமான நிலையத்தில் சேவையில் […]

MiG-21 வகை யுத்த விமானங்களை கைவிடுகிறது இந்தியா

MiG-21 வகை யுத்த விமானங்களை கைவிடுகிறது இந்தியா

இந்தியா தன் கைவசம் உள்ள MiG-21 (Mikoyan-Gurevich-21) வகை யுத்த விமானங்களை 2025ம் ஆண்டில் சேவையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. மிகையான அளவில் இந்திய MiG-21 விமானங்கள் விபத்துக்களில் சிக்குவதே இந்த தீர்மானத்துக்கு காரணம். ஜூலை 28ம் திகதி ஒரு MiG-21 ராஜஸ்தான் மாநிலத்தில் விழுந்து நொறுங்கியதில் 2 விமானப்படையினர் பலியாகி உள்ளனர். 2021ம் ஆண்டில் மட்டும் 6 இவ்வகை இந்தியப்படை விமானங்கள் வீழ்ந்து உள்ளன. இந்தியாவிடம் தற்போது இவ்வகை விமானங்கள் சுமார் 70 உள்ளதாக […]

Forward அமெரிக்காவின் மூன்றாவது கட்சி

Forward அமெரிக்காவின் மூன்றாவது கட்சி

David Jolly, Christine Whitman ஆகிய Republican கட்சி உறுப்பினர்களும் Andrew Yang என்ற Democratic கட்சி உறுப்பினரும் இணைந்து Forward என்ற மூன்றாம் கட்சியை உருவாக்கி உள்ளனர். கடும் போக்கு வலதுசாரி கட்சியான Republican கட்சியும், கடும் போக்கு இடதுசாரி கட்சியான Democratic கட்சியும் அமெரிக்காவை துண்டாடுகின்றன என்பதே Forward கட்சியின் முறைப்பாடு. Forward கட்சி இடதோ அல்லது வலதோ இல்லாமல் மத்திய கொள்கைகளை கொண்டிருக்கும் என்று Forward கூறுகிறது. Andrew Yang கடந்த அமெரிக்க […]

பெலோஷியின் தாய்வான் பயணத்தால் மேலுமொரு யுத்தம்?

பெலோஷியின் தாய்வான் பயணத்தால் மேலுமொரு யுத்தம்?

அமெரிக்காவின் House Speaker நான்சி பெலோஷி (Nancy Pelosi) தாய்வான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் அங்கு பயணம் ஒன்றை மேற்கொள்ள முனைவது சீனாவுக்கும், தாய்வானுக்கும் இடையே நேரடி மோதலை தோற்றுவிக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவ்வாறு மோதல் ஆரம்பித்தால் அமெரிக்காவும் அதில் தலையிட நேரிடும். இந்த விசயம் உட்பட பல காரணங்களால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றி உள்ளது. இந்த முறுகல் நிலையை தணிக்க அமெரிக்க சனாதிபதி பைடென் நியூ யார்க் நேரப்படி இன்று […]

கோத்தபாயாவுக்கு சிங்கப்பூர் மேலும் 14 தின விசா

கோத்தபாயாவுக்கு சிங்கப்பூர் மேலும் 14 தின விசா

முன்னாள் இலங்கை சனாதிபதி கோத்தபாயாவுக்கு சிங்கப்பூர் மேலும் 14 தினங்கள் தங்கியிருக்க விசா வழங்குகிறது. அந்தப்படி கோத்தபாய ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி வரை சிங்கப்பூரில் தங்கி இருக்கலாம். GotaGoHome ஆர்ப்பாட்டத்தால் விரட்டப்பட்ட கோத்தபாயா மாலைதீவுக்கு இலங்கை விமானப்படை விமானத்தில் தப்பி ஓடி அங்கிருந்து சிங்கப்பூருக்கு சவுதி அரேபியாவின் பயணிகள் விமானம் ஒன்றில் ஜூலை 14ம் திகதி சென்று இருந்தார். அங்கு அவருக்கு முதல் 14 தின private visit விசா வழங்கப்பட்டது. அந்த விசாவே மேலும் […]

ISS விண் ஆய்வு கூடத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுகிறது

ISS விண் ஆய்வு கூடத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுகிறது

International Space Station (ISS) என்ற சர்வதேச விண் ஆய்வுகூடத்தில் இருந்து தாம் 2024ம் ஆண்டில் வெளியேற உள்ளதாக ரஷ்யா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்பாராத அமெரிக்கா மாற்று வழிகளை கையாள தள்ளப்பட்டு உள்ளது. Roscosmos என்ற ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் Yuri Borsov இந்த அறிவிப்பை செய்துள்ளார். அவர் முன்னர் இணங்கியதற்கு ஏற்ப தாம் 2024ம் ஆண்டு வரை ISS பணிகளில் பங்கு கொள்வர் என்றும் அதன் பின் ISS இல் இருந்து […]

மேற்கின் தடைகளை மீறி ரஷ்யா பொருளாதாரம் நலம்

மேற்கின் தடைகளை மீறி ரஷ்யா பொருளாதாரம் நலம்

ரஷ்யா யூக்கிறேனுள் நுழைந்த பின் மேற்கு நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து இருந்தன. அவ்வகை கடும் தடைகளுக்கு மத்தியிலும் ரஷ்ய பொருளாதாரம் கணிசமான அளவில் நலமாக உள்ளதாக International Monetary Fund இன்று செவ்வாய் கூறியுள்ளது. எரிபொருள் விலை அதிகமாக இருப்பது ரஷ்ய பொருளாதாரம் நலமாக இருப்பதற்கு ஒரு பிரதான காரணம் என்கிறது IMF. ஆனாலும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ரஷ்யா மீதான தடையும் ஒரு பிரதான காரணம். யுத்தத்துக்கு முன் $80 […]

1 90 91 92 93 94 329