ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று போலாந்து (Poland) என்ற நேட்டோ (NATO) நாட்டுள் வீழ்ந்து வெடித்ததால் இருவர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் நேட்டோ நாடு ஒன்றின் மீது ரஷ்யா செய்த தாக்குதலாகவே கருதப்படுகிறது. போலந்து-யூகிறேன் எல்லையில் இருந்து சுமார் 24 km தூரம் போலந்தின் உள்ள உள்ள Przewodow என கிராமத்தில் மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இடம் ஒரு தானியம் பதனிடும் ஆலை என்று கூறப்படுகிறது. நேட்டோவின் Article 5 சட்டப்படி நேட்டோ […]
இன்று செவ்வாய்க்கிழமை உலக சனத்தொகை 8 பில்லியன் ஆக அதிகரித்து உள்ளது என்று ஐ.நா. கூறுகிறது. இது ஒரு அண்ணளவான கணிப்பீடே. தற்காலங்களில் சனத்தொகை பெருக்கம் அதிக அளவில் நைஜீரியா போன்ற ஆபிரிக்க நாடுகளில் இருந்தே பெறப்படுகிறது. நைஜீரியாவின் தற்போதைய 216 மில்லியன் சனத்தொகை அடுத்த 30 ஆண்டுகளில் 375 மில்லியன் ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்து நைஜீரியா நாலாவது பெரிய சனத்தொகை கொண்ட நாடாகும். […]
வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடுகள் முறுகி உள்ள நிலையிலும் தமக்கிடையே cold war நிலை இல்லை என்று அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று திங்கள் கூறியுள்ளார். இந்தோனேசியாவில் இடம்பெறும் G20 நாடுகளின் அமர்வுக்கு சென்ற பைடென் சீன சனாதிபதி சீயை சந்தித்த பின்னரே இவ்வாறு கூறியுள்ளார். சீனா தற்போதைக்கு தாய்வானை ஆக்கிரமிக்காது என்றும் பைடென் கூறியுள்ளார். பைடெனும், சீயும் பல விசயங்கள் தொடர்பாக உரையாடி உள்ளனர். அமெரிக்கா தரப்பில் யூகிறேன் யுத்தம், […]
அமெரிக்காவின் Drug Enforcement Administration (DEA) என்ற போதை கடத்தல் தடுப்பு அமைப்பின் உறுப்பினர் பெருமளவு இலஞ்சம் பெற்று தம்மை வளப்படுத்துகின்றனர் என்று Jose Irizarry என்ற 48 வயதுடைய முன்னாள் DEA உறுப்பினர் கூறியுள்ளார். இவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 12 ஆண்டுகள் சிறை செல்கிறார். தன மீதான வழங்கின்போதே இவர் இதை தெரிவித்தார். முன்னாள் DEA உறுப்பினரான Irizarry $20,000 இலஞ்சம் பெற்றதாக கூறியே கைது செய்யப்பட்டு இருந்தார். இவர் 2018ம் ஆண்டு DEA […]
FTX என்ற crypto பரிமாறல் (crypto exchange) நிறுவனம் வெள்ளிக்கிழமை முறிந்து உள்ளது. பஹாமாஸ் (Bahamas) நாட்டில் தலைமை செயலகத்தை கொண்ட இந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை Chapter 11 என்ற bankruptcy நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்த Samuel Bankman-Fried தற்போது தலைமறைவாகி உள்ளார். அமெரிக்கரான இவர் பஹாமாஸிலேயே வாழ்ந்தவர். இவர் 2019ம் ஆண்டு, தனது 27 வயதில், இந்த cryptocurrency நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தார். இந்த நிறுவனம் குளறுபடியில் உள்ளது என்பதை அறிந்த […]
சுமார் 4,600 பயணிகளுடன் செல்லும் The Majestic Princess என்ற உல்லாச பயணிகளை கடலில் காவும் (cruise) கப்பலில் 800 பேருக்கு Covid தொற்றி உள்ளமையால் அந்த கப்பல் சனிக்கிழமை அஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள Circular Quay துறைக்கு சென்றுள்ளது. ஏற்கனவே அஸ்ரேலியாவில் Covid மீண்டும் பரவும் வேளையில் இந்த கப்பல் நிலைமையை மேலும் உக்கிரமாக்கி உள்ளது. அஸ்ரேலியாவின் New South Wales பகுதியில் மட்டும் கடந்த ஒரு கிழமையில் 19,800 புதிய Covid தொற்றாளர் […]
அமெரிக்காவின் midterm என்ற இடைக்கால தேர்தல் இடம்பெற்றது செவ்வாய்க்கிழமை. அனால் இதுவரை வெளிவந்த முடிவுகள் தற்போதும் திக்கு தெரியாத நிலையில் அமெரிக்காவை வைத்துள்ளது. அத்துடன் இறுதியாக வெளிவரும் முடிவுகள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அமெரிக்காவை சிதைத்தெடுக்கும் நிலையிலும் உள்ளது. அமெரிக்க அரசு 3 பலமான கைகளில் உள்ளது. ஒன்று சனாதிபதியை கொண்ட வெள்ளை மாளிகை. ஆனால் சனாதிபதி தான் நினைத்தது எதையும் இலகுவில் செய்ய முடியாது. அமெரிக்க காங்கிரஸ், supreme court ஆகியன அரசின் ஏனைய இரண்டு […]
1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை தற்கொலை குண்டு மூலம் கொலை செய்த காரணத்தால் சிறை தண்டனை அனுபவித்துவரும் 6 பேர் இன்று வெள்ளி இந்திய நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். நளினி, PR ரவிச்சந்திரன், Robert Payas, சுதேந்திரராஜா, ஜெயக்குமார், ஸ்ரீஹரன் ஆகியோரே அந்த 6 பேரும். மேற்படி 6 பேரும் 30 ஆண்டு கால சிறை தண்டனையை திருப்திகரமான முறையில் செய்ததால் அவர்களை விடுதலை செய்வதாக […]
அமெரிக்க சனாதிபதி பைடெனும் சீன சனாதிபதி சீயும் இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள G20 அமர்வில் நேரடியாக உரையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான G20 அமர்வு பாலி நகரில் திங்கள் ஆரம்பமாகும். இரு தலைவர்களும் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான அரச தொடர்புகளை வலுப்படுத்துவர் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் காலத்திலும், பின்னர் பைடென் காலத்திலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அரச தொடர்புகள் அடிமடத்துக்கு சென்று இருந்தன. சீ மேலும் 5 ஆண்டுகள் […]
இன்றைய பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பு காரணமாக இந்தியாவில் தேடப்படும் முன்னாள் வைர வியாபாரியான நிராவ் மோதி (Nirav Modi) விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம். பிரித்தானியாவில் வாழும் நிராவ் மோதி தன்னை பிரித்தானிய அரசு இந்தியாவுக்கு நாடு கடத்துவதை தடுக்குமாறு கேட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கே இன்று புதன்கிழமை நிராவின் வேண்டுகோளை மறுத்து உள்ளது. நிராவ் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவர் தற்கொலை செய்யக்கூடும் என்று நீதிமன்றில் நிராவின் சட்டத்தரணியால் வாதாடப்பட்டது. ஆனால் […]