சீனாவின் ஒலியிலும் 33 மடங்கு வேக Wind Tunnel

சீனாவின் ஒலியிலும் 33 மடங்கு வேக Wind Tunnel

சீனா ஒலியிலும் 33 மடங்கு வேகத்தில் (Mach 33, மாக் 33) காற்றோட்டம் ஏற்படுத்தக்கூடிய wind tunnel என்று அழைக்கப்படும் காற்று குகையை தயாரித்து உள்ளது. இவ்வகை காற்று குகைகளிலேயே விமானங்களின் இறக்கைகள், ஹெலிகளின் காற்றாடிகள், ஏவுகணைகள், ஏவு கலங்கள் ஆகியயன தயாரிப்புக்கு முன் ஆய்வு செய்யப்படும். 2018ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட JF-22 என்ற இந்த wind tunnel ஊடே காற்று சுமார் 11,500 m/sec வேகத்தில் செல்லும். ஒலியின் வேகம் 343 m/sec ஆக […]

படைகளை மெல்ல பின்வாங்கும் சீனா, இந்தியா

படைகளை மெல்ல பின்வாங்கும் சீனா, இந்தியா

சீனாவும், இந்தியாவும் தமது படைகளை சில எல்லை பகுதிகளில் இருந்து பின் நகர்த்துகின்றன. இமய மலைக்கு மேற்கே Gorga Hot Spring பகுதியில் நிலைகொண்டிருந்த இரு தரப்பு படைகளுமே தற்போது எல்லையோரத்தில் இருந்து பின் நகர்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற ஆயுதம் அற்ற மோதலுக்கு 20 இந்திய படையினரும், 4 சீன படையினரும் பலியாகி இருந்தனர். அன்றில் இருந்து இரு தரப்புக்கும் இடையில் முறுகல் நிலை இருந்து வந்துள்ளது. ஆனாலும் இருதரப்பு படையினரும் தொடர்ந்தும் பேச்சுக்களை […]

பிரித்தானிய இராணி 96 வயதில் மரணம்

பிரித்தானிய இராணி 96 வயதில் மரணம்

பிரித்தானியாவின் இராணி Queen Elizabeth II இன்று தனது 96 ஆவது வயதில் மரணமானார் என்ற செய்தியை Buckingham Palace அறிவித்துள்ளது. இவர் மரணிக்கும் வேளையில் ஸ்காட்லாந்தில் உள்ள Balmoral அரண்மனையில் இருந்துள்ளார். அரச குடும்ப அறிவிப்பின்படி இராணி “episodic mobility problem” காரணமாக அண்மை காலங்களில் முடங்கி இருந்துள்ளார். அதனால் இந்த கிழமை பதவி ஏற்ற புதிய பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் இராணியின் மனைக்கு சென்றே பதவி ஏற்பை செய்து இருந்தார். Elizabeth II […]

தட்சர் காலத்து பெறுமதிக்கு வீழ்ந்த பிரித்தானிய பவுண்ட்

தட்சர் காலத்து பெறுமதிக்கு வீழ்ந்த பிரித்தானிய பவுண்ட்

பிரித்தானியாவின் நாணயமான பவுண்ட் ஒன்றின் பெறுமதி  அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் 37 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெறுமதிக்கு வீழ்ந்து உள்ளது. தற்போது பவுண்ட் ஒன்றுக்கு $1.14 மட்டுமே கிடைக்கிறது. அமெரிக்க டாலருக்கான இந்த அளவு குறைந்த நாணய மாற்று வீதத்தை பிரித்தானியா இதற்கு முன் மக்கிரட் தட்சர் காலத்தில் கொண்டிருந்தது. 1972ம் ஆண்டில் பவுண்ட் ஒன்றுக்கு $2.65 கிடைத்து இருந்தது. 1970ம் ஆண்டுக்கு முன் பவுண்ட்-டாலர் நாணய மாற்று பெறுமதி பிணைக்கப்பட்டு இருந்தது. பிரித்தானிய பவுண்ட் வீழ்ச்சி […]

யாருக்கு சொல்லியழ 19: முட்டுக்காய் தமிழர்

யாருக்கு சொல்லியழ 19: முட்டுக்காய் தமிழர்

வேற்று மொழி சொல் ஒன்றுக்கு தமிழில் ஏற்கனவே மாற்று சொல் ஒன்று இல்லை என்றால் அதற்கு புதியதொரு தமிழ் சொல்லை கொள்ள விரும்புவது நலம், அவசியம். ஆனால் அவ்வாறு தமிழில் ஒரு புதிய சொல்லை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சி தமிழை, தமிழின் மகிமையை அழிக்கும் என்றால் தமிழுக்கான மாற்று சொல்லை அமையாது நேரடியாக வேற்று மொழி சொல்லையே பயன்படுத்துவது தமிழுக்கு செய்யும் பெரும் தொண்டாகும். அவ்வாறு செய்வது இன்றைய முட்டுக்காய் தமிழன் அழகிய பண்டை தமிழை அழிப்பதை, […]

நாசாவின் சந்திரனுக்கான ஏவல் இன்றும் இடைநிறுத்தம்

நாசாவின் சந்திரனுக்கான ஏவல் இன்றும் இடைநிறுத்தம்

அமெரிக்காவின் நாசா (NASA) மீண்டும் தனது விஞ்ஞானிகளை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபடுகிறது. அதற்கு முதல் படியாக ஆகஸ்ட் 29ம் திகதி Space Launch System (SLS) என்ற மிக பெரியதோர் ஏவுகணை மூலம் விண்வெளி வீரர்களை கொண்டிராத Artemis 1 என்ற கலத்தை சந்திரனை சுற்றி வலம் வர வைக்க ஏவ இருந்தது. ஆனால் இயந்திர கோளாறு காரணமாக அன்றைய முயற்சி இடைநிறுத்தப்பட்டு இருந்தது. இன்று இரண்டாம் தடவை இடம்பெறவிருந்த ஏவலும் கணையில் ஏற்பட்ட எரிபொருள் […]

நித்தியானந்தா இலங்கையில் அகதிக்கு விண்ணப்பம்?

நித்தியானந்தா இலங்கையில் அகதிக்கு விண்ணப்பம்?

தன்னை ஒரு சாமி என்று கூறி குற்ற செயல்களில் ஈடுபட்டவர் என்று கூறப்படும் நித்தியானந்தா இலங்கை அரசிடம் அகதி நிலைக்கு விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மீது பாலியல் குற்றங்களுக்காக வழக்கு ஒன்று கர்நாடகா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் திகதி கர்நாடகா மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு பிணையில் செல்ல முடியாத (non-bailable) கைதுக்கு உரிமை வழங்கியுள்ளது. அதனால் நித்தியானந்தா இந்தியா செல்வது சாத்தியம் அல்ல. இலங்கையில் அகதி நிலை […]

Google உள்ளே துரோகத்தனம், ஊழியர் பதவி விலகினார்

Google உள்ளே துரோகத்தனம், ஊழியர் பதவி விலகினார்

Ariel Koren என்ற Google ஊழியர் அவர் மீது Google செலுத்திய துரோகத்தனம் காரணமாக பதவி விலகி உள்ளார். அமெரிக்காவின் Google, Amazon ஆகிய இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களும் இஸ்ரேலின் இராணுவத்துடன் இணைந்து $1.2 பில்லியன் செலவில் Project Nimbus என்ற திட்டத்தில் இயங்கி வருகின்றன. Artificial intelligence நிறைந்த இந்த தொழில்நுட்ப வேலைப்பாடு பலஸ்தீனர்களுக்கு மிகவும் பாதகமானது. இவ்வாறு ஒரு இனத்துக்கு பாதகமான திட்டத்தில் Google இணைவது துரோகத்தனம் என்று கூறும் Google ஊழியரான Ariel […]

இந்தியா கட்டிய விமானம் தாங்கி வெள்ளி கையளிப்பு

இந்தியா கட்டிய விமானம் தாங்கி வெள்ளி கையளிப்பு

முதல் முறையாக இந்தியா உள்ளூரில் வடிவமைத்து கட்டிய விமானம் தாங்கி கப்பல் INS (Indian Naval Ship) Vikrant வெள்ளிக்கிழமை கையளிப்பு (commission) செய்யப்படுகிறது. சுமார் 262 மீட்டர் நீளம் கொண்ட இது 45,000 தொன் மொத்த எடையை கொண்டிருக்கும். இதில் 30 யுத்த விமானங்கள் அல்லது ஹெலிகள் நிலைகொள்ளும். இந்தியாவின் முதல் விமானம் தாங்கியும் Vikrant என்றே அழைக்கப்பட்டது. பிரித்தானியாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட அந்த விமானம் தாங்கி 1961 முதல் 1997 வரை சேவையில் […]

பிரித்தானிய பெண்ணை ISIS குழுவுக்கு வழங்கிய கனடிய உளவுப்படை

பிரித்தானிய பெண்ணை ISIS குழுவுக்கு வழங்கிய கனடிய உளவுப்படை

Shamima Begum என்ற பிரித்தானிய பெண்ணை, அவளின் 15 வயதில், CSIS (Canadian Security and Intelligence Service) என்ற கனடிய உளவுப்படை உறுப்பினன் ஒருவன் சிரியாவுக்கு அழைத்து சென்று ISIS குழுவுக்கு வழங்கி உள்ளான் என்கிறது நாளை வியாழன் வெளிவரவுள்ள புத்தகம் ஒன்று. இந்த செய்தியை மூடி மறைக்க முனைகிறார் கனடிய பிரதமர் Justin Trudeau. பிரித்தானிய எழுத்தாளரான Richard Kerbaj எழுதும் The Secret History of the Five Eyes என்ற புத்தகமே […]

1 86 87 88 89 90 329