வடகொரியாவை அமெரிக்கா போன்ற எதிரிகள் தாக்கினால் அதை வடகொரியா முழு அளவிலான (all-out confrontation) யுத்தமாக மாற்றும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் (Kim Jong Un). வெள்ளிக்கிழமை வடகொரியா தனது Hwasong-17 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM, Intercontinental Ballistic Missile) ஏவுகணை ஒன்றை ஏவியது. உயர் கோணத்தில் ஏவியதால் 69 நிமிடங்கள் பறந்த இந்த ஏவுகணை சுமார் 6,041 km உயரம் சென்று, 1,000 km […]
துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து அமெரிக்க பத்திரிகையாளரான கசோகி (Jamal Khashoggi) படுகொலை செய்யப்பட்ட விசயத்தில் அமெரிக்காவின் பைடென் அரசு சவுதி இளவரசருக்கு சட்ட பாதுகாப்பு (immunity) வழங்க நேற்று வியாழன் அறிவித்து உள்ளது. இதனால் குமுறுகிறார் கசோகியை திருமணம் செய்யவிருந்த Hatice Cengiz என்ற பெண். அமெரிக்கா இந்த கொலைக்கு ஒரு வெளிச்சத்தை தரும் என்று தான் கருத்தியதாகவும் ஆனால் தற்போது பணமே மேலே வந்துள்ளதாகவும் Hatice Cengiz கூறியுள்ளார். சனநாயகம், மனித உரிமைகள், […]
இந்தோனேசியாவில் இடம்பெற்ற G20 அமர்வுக்கு சென்று இருந்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ சீன சனாதிபதி சீயை இடைமறித்து பேச்சுவார்த்தைகளை தொடருமாறு கேட்டபோது சீ முன்னர் இடம்பெற்ற பேச்சுக்களின் கசிவுகளை சுட்டிக்காட்டி தனது வெறுப்பை தெரிவித்து உள்ளார். இந்த உரையாடல் hot mic எனப்படும் திட்டமிடப்படாத ஒலிவாங்கி ஒன்று மூலமே பதிவு செய்யப்பட்டு பகிரங்கத்துக்கு வந்துள்ளது. ரூடோவின் அழைப்புக்கு மொழிபெயர்ப்பாளர் மூலம் பதிலளித்த சீ நாங்கள் பேசியது எல்லாம் பத்திரிகைகளுக்கு கசிய விடப்பட்டுள்ளது, அது சரியான முறை […]
இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்துக்கான நுகர்வோர் விலைவாசி சுட்டி 2021ம் ஆண்டின் சுட்டியுடன் ஒப்பிடுகையில் 11.1% ஆல் அதிகரித்து உள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த 41 ஆண்டுகளின் அதிகரிப்புகளில் மிகவும் அதிகமானது. 1981ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சுட்டி 10.1% ஆல் அதிகரித்து இருந்தது. அண்மையில் பிரித்தானிய அரசு எரிசக்தி விலை ஆண்டுக்கு $2,960 க்கு மேல் செல்ல விடாது தடுத்தது. அவ்வாறு செய்திராவிட்டால் நுகர்வோர் சுட்டி 13.8% ஆக இருந்திருக்கும். சில நுகர்வோர் பொருட்களின் […]
2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப். இந்த அறிவிப்பை அவர் இன்று செவ்வாய் இரவு தனது மார்-எ-லாகோ (Mar-a-Lago) மாளிகையில் தெரிவித்து உள்ளார். “மீண்டும் அமெரிக்காவை great and glorious நாடாக மாற்ற நான் சனாதிபதி போட்டியாளராகிறேன் என்பதை இன்று இரவு அறிவிக்கிறேன்” என்றுள்ளார். இந்த அறிவிப்புக்கு சற்று முன் இவர் போட்டியிட தேவையான பாத்திரங்கள் Federal Election Commission என்ற தேர்தல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு […]
ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று போலாந்து (Poland) என்ற நேட்டோ (NATO) நாட்டுள் வீழ்ந்து வெடித்ததால் இருவர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் நேட்டோ நாடு ஒன்றின் மீது ரஷ்யா செய்த தாக்குதலாகவே கருதப்படுகிறது. போலந்து-யூகிறேன் எல்லையில் இருந்து சுமார் 24 km தூரம் போலந்தின் உள்ள உள்ள Przewodow என கிராமத்தில் மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இடம் ஒரு தானியம் பதனிடும் ஆலை என்று கூறப்படுகிறது. நேட்டோவின் Article 5 சட்டப்படி நேட்டோ […]
இன்று செவ்வாய்க்கிழமை உலக சனத்தொகை 8 பில்லியன் ஆக அதிகரித்து உள்ளது என்று ஐ.நா. கூறுகிறது. இது ஒரு அண்ணளவான கணிப்பீடே. தற்காலங்களில் சனத்தொகை பெருக்கம் அதிக அளவில் நைஜீரியா போன்ற ஆபிரிக்க நாடுகளில் இருந்தே பெறப்படுகிறது. நைஜீரியாவின் தற்போதைய 216 மில்லியன் சனத்தொகை அடுத்த 30 ஆண்டுகளில் 375 மில்லியன் ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்து நைஜீரியா நாலாவது பெரிய சனத்தொகை கொண்ட நாடாகும். […]
வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடுகள் முறுகி உள்ள நிலையிலும் தமக்கிடையே cold war நிலை இல்லை என்று அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று திங்கள் கூறியுள்ளார். இந்தோனேசியாவில் இடம்பெறும் G20 நாடுகளின் அமர்வுக்கு சென்ற பைடென் சீன சனாதிபதி சீயை சந்தித்த பின்னரே இவ்வாறு கூறியுள்ளார். சீனா தற்போதைக்கு தாய்வானை ஆக்கிரமிக்காது என்றும் பைடென் கூறியுள்ளார். பைடெனும், சீயும் பல விசயங்கள் தொடர்பாக உரையாடி உள்ளனர். அமெரிக்கா தரப்பில் யூகிறேன் யுத்தம், […]
அமெரிக்காவின் Drug Enforcement Administration (DEA) என்ற போதை கடத்தல் தடுப்பு அமைப்பின் உறுப்பினர் பெருமளவு இலஞ்சம் பெற்று தம்மை வளப்படுத்துகின்றனர் என்று Jose Irizarry என்ற 48 வயதுடைய முன்னாள் DEA உறுப்பினர் கூறியுள்ளார். இவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 12 ஆண்டுகள் சிறை செல்கிறார். தன மீதான வழங்கின்போதே இவர் இதை தெரிவித்தார். முன்னாள் DEA உறுப்பினரான Irizarry $20,000 இலஞ்சம் பெற்றதாக கூறியே கைது செய்யப்பட்டு இருந்தார். இவர் 2018ம் ஆண்டு DEA […]
FTX என்ற crypto பரிமாறல் (crypto exchange) நிறுவனம் வெள்ளிக்கிழமை முறிந்து உள்ளது. பஹாமாஸ் (Bahamas) நாட்டில் தலைமை செயலகத்தை கொண்ட இந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை Chapter 11 என்ற bankruptcy நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்த Samuel Bankman-Fried தற்போது தலைமறைவாகி உள்ளார். அமெரிக்கரான இவர் பஹாமாஸிலேயே வாழ்ந்தவர். இவர் 2019ம் ஆண்டு, தனது 27 வயதில், இந்த cryptocurrency நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தார். இந்த நிறுவனம் குளறுபடியில் உள்ளது என்பதை அறிந்த […]