சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே மீண்டும் விமான சேவை இன்று முதல் ஆரம்பிக்கிறது. இந்தியாவின் Alliance Air விமான சேவையின் flight 9I101 இன்று டிசம்பர் 12ம் திகதி இந்த சேவையை ஆரம்பித்துள்ளது. சென்னையில் இருந்து திங்கள் காலை 9:25 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்ட விமானம் காலை 10:20 மணியளவிலேயே பயணத்தை ஆரம்பித்தது. இந்த சேவையை ATR 72-600 வகை விமானம் செய்கிறது. இவ்வகை விமானத்தில் சுமார் 78 ஆசனங்கள் இருக்கும். இது சுமார் 510 km/h […]
கட்டாரில் இடம்பெறும் FIFA 2022 போட்டிகளில் ஆர்ஜென்டீனா, குரோஷியா, பிரான்ஸ், மொரோக்கோ ஆகியன 4 அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றை அடைந்து உள்ளன. இந்த நாலு அணிகளும் தம்முள் போட்டியிட அதில் மூன்று அணிகள் 1ம், 2ம், 3ம் இடங்களை வெற்றி அடையும். மேற்படி 4 அணிகளுக்கும் இடையிலான அரையிறுதி போட்டிகள் டிசம்பர் 13ம் மற்றும் 14ம் திகதிகளில் இடம்பெறும். அரையிறுதியில் தோல்வியுறும் 2 அணிகளுக்கிடையில் 3ம் அணிக்கான போட்டி 17ம் திகதி இடம்பெறும். அரையிறுதியில் வெல்லும் […]
2035ம் ஆண்டளவில் சீனாவின் GDP (Gross Domestic Product) அமெரிக்காவின் GDP யை பின் தள்ளி சீன பொருளாதாரம் உலகின் முதலாவது பொருளாதாரம் ஆகும் என்று கூறுகிறது Goldman Sachs என்ற அமெரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச முதலீட்டு வங்கி. Goldman Sachs நிறுவனத்தின் இன்றைய கணிப்பு அது 2011ம் ஆண்டு வெளியிட்ட சீனாவின் வளர்ச்சி கணிப்பை சுமார் 10 ஆண்டுகள் பின்தள்ளி உள்ளது என்றாலும் Covid தாக்கம், யூகிறேன் யுத்தம், சீனா மீதான அமெரிக்காவின் தடைகள் […]
தற்போது வெளிவரும் மாநில தேர்தல் முடிவுகளின்படி பிரதமர் மோதியின் மாநிலமான குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி அடைகிறது. அங்கு உள்ள மொத்தம் 182 ஆசனங்களில் சுமார் 160 ஆசனங்களை பா.ஜ. வெற்றி பெறும் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சி சுமார் 20 ஆசனங்களை மட்டுமே வெல்லும். குஜாரத்தில் இரண்டாம் நிலையில் இருக்கும் என்று நம்பப்பட்ட Aam AAdmi கட்சி (AAP) 5 ஆசனங்களை மட்டுமே வெல்லும். குஜராத்தில் பிரதமர் மோதியும், உள்துறை அமைச்சர் அமித் […]
சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த சேவையை இந்தியாவின் Alliance Air விமான சேவை டிசம்பர் 12ம் திகதி முதல் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சேவை ஒவ்வொரு கிழமையும் திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு இடம்பெறும் என்று கூறப்படுகிறது. யாழுக்கு சென்னைக்கும் இடையிலான பயணத்துக்கு சுமார் 1 மணித்தியாலம் 25 நிமிடங்கள் தேவை. இந்த சேவைக்கான கட்டணம் இந்திய ரூபாய்களில் மட்டுமே தற்போது செலுத்தலாம். […]
இன்று புதன்கிழமை தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை தடுக்கும் நோக்கில் பெருவின் (Peru) சனாதிபதி Pedro Castillo, வயது 53, அந்த நாட்டு காங்கிரசை இன்று கலைத்து இருந்தார். ஆனாலும் அவருக்கு எதிரான போராட்டம் வலுமை பெற, சனாதிபதி கைது செய்யப்பட்டு உள்ளார். அத்துடன் முன்னாள் உதவி சனாதிபதி புதிய சனாதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். சனாதிபதியின் அறிவிப்பையும் மீறி இடப்பெற்ற நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு 101 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளது. தீர்மானத்துக்கு எதிராக […]
ஜெர்மனியில் ஆட்சி கவிழ்ப்பு ஒன்றை செய்ய திட்டமிட்டார்கள் என்று கூறி இன்று புதன்கிழமை 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் உள்நாட்டு பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்று அரசு கூறுகிறது. இந்த அறிவித்தலை ஜெர்மனியின் நீதி அமைச்சர் Marco Buschann தெரிவித்து உள்ளார். அத்துடன் 52 சந்தேக நபர்களுக்கு உரிய 130 சொத்துக்களும் மொத்தம் 11 மாநிலங்களில் முடக்கப்பட்டு உள்ளன. இவரகள் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட குழு ஒன்றின் அங்கத்தவர் என்று […]
புதன்கிழமை முதல் 3 தினங்களுக்கு சவுதியில் இடம்பெறவுள்ள சீன-சவுதி மாநாட்டில் பங்கு கொள்ள சீன சனாதிபதி சவுதி அரேபியா செல்கிறார். இந்த சந்திப்பில் சுமார் $30 பில்லியன் பெறுமதியான வர்த்தக உடன்படிக்கைகள் கையொப்பமிடப்படும். சவுதி அரசரின் அழைப்பை ஏற்றே சீ அங்கு செல்கிறார். சவுதியின் ரியாத் நகரில் இடம்பெறவுள்ள China-Arab நாடுகள் மாநாடு மற்றும் China-GCC (Gulf Cooperation Council) மாநாடு இரண்டிலும் சீ பங்கு கொள்கிறார். சீனாவும், சவுதியும் தமக்கிடையே உறவை மேலும் வளர்க்க முனைகின்றன. […]
இன்று முதல் ரஷ்ய எண்ணெய் பரல் ஒன்றுக்கு அதிகப்படியாக $60 மட்டுமே செலுத்தலாம் என்று G7 உட்பட மேற்கு நாடுகள் விதி வகுத்துள்ளன. ஆனால் இந்த விதியை ரஷ்யா நிராகரித்து உள்ளது. இந்த விதிப்படி மேற்கு நாடுகளில் வர்த்தகம் செய்யும் எண்ணெய் கப்பல் நிறுவனங்கள், கப்பல் பயணத்துக்கு காப்புறுதி வழங்கும் நிறுவனங்கள், கொள்வனவுக்கு உதவும் வங்கிகள் ஆகியன தாம் தலையிடும் ரஷ்ய எண்ணெய் கொள்வனவுகளின் பரல் ஒன்றின் விலை $60 அல்லது அதற்கும் குறைவாக இருப்பதை உறுதி […]
HSBC (Hong Kong and Shanghai Bank) தனது கனடிய வங்கி வர்த்தகத்தை கைவிட்டு வெளியேறுகிறது. HSBC வங்கி கைவிடும் கனடிய வர்த்தகத்தை Royal Bank of Canada என்ற கனடிய வங்கி $10 பில்லியனுக்கு (C$13.5 பில்லியன்) கொள்வனவு செய்கிறது. HSBC வங்கியின் கனடிய வர்த்தகம் மிகவும் இலாபகரமானதாக இருந்தும் அது கனடாவை கைவிடுவது ஆச்சரியமாக உள்ளது. 2021ம் ஆண்டில் மட்டும் இந்த வங்கி கனடாவில் $768 மில்லியன் இலாபத்தை உழைத்து இருந்தது. அந்த ஆண்டு […]