மூன்றாம் பறக்கும் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது

மூன்றாம் பறக்கும் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது

இன்று சனிக்கிழமை கனடாவின் Yukon மாகாண வான் பரப்பில் பறந்த இன்னோர் பறக்கும் பொருளை NORAD (North American Aerospace Defense Command) படையில் உள்ள அமெரிக்காவின் F-22 வகை யுத்த விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இன்னோர் இவ்வகை பறக்கும் பொருள் அமெரிக்க யுத்த விமானதால் அலாஸ்கா மாநிலத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டு இருந்தது. இந்த இரண்டு பறக்கும் பொருள்கள் தொடர்பாக அமெரிக்கா விபரங்கள் எதையும் இதுவரை வெளியிடவில்லை. பதிலுக்கு இவற்றை unidentified object என்று […]

Toronto முதல்வர் பதவி விலகினார், தொடர்பு காரணம்

Toronto முதல்வர் பதவி விலகினார், தொடர்பு காரணம்

கனடாவின் Toronto மாநகர முதல்வர் (Mayor) John Tory வெள்ளிக்கிழமை இரவு பதவி விலகியுள்ளார். தனக்கு கீழ் பணியாற்றிய பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தமையே தனது பதவி விலகலுக்கு காரணம் என்று கூறியுள்ளார் John Tory. கனடாவின் மிகப்பெரிய நகரான Toronto வில் இவர் 3 தடவைகள் (2014, 1018, 2022) முதல்வராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனாலும் தொடர்பை கொண்டிருந்த காலத்தில் மேற்படி ஊழியர் வேறு திணைக்களத்தில் பணியாற்றியதாக 68 வயதான Tory கூறியுள்ளார். Toronto Star […]

அலாஸ்காவில் இன்னோர் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது

அலாஸ்காவில் இன்னோர் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் மேலே பறந்த இன்னோர் பறக்கும் பொருளை அமெரிக்க F-22 வகை யுத்த விமானம் இன்று சுட்டு வீழ்த்தியது என்று வெள்ளை மாளிகை இன்று வியாழன் கூறியுள்ளது. இந்த பறக்கும் பொருள் ஒரு சிறிய கார் அளவிலானது என்றும், சுட்டபின் இது அமெரிக்க கடல் எல்லையுள் வீழ்ந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது. இது வீழ்ந்த பகுதி கடல் தற்போது உறைந்து உள்ளது. இந்த பொருள் எந்த நாட்டுக்கு உரியது என்றும், இதன் பயன்பாடு என்ன […]

நிலநடுக்கத்துக்கு 22,000 பேர் பலி, தேடுதலும் நல்ல பயன்

துருக்கி-சிரியா எல்லையோரம் இடம்பெற்ற 7.8 அளவிலான நில நடுக்கத்துக்கு இதுவரை 22,000 பேர் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. அதேவேளை பயனுள்ள தேடுதல் பணிகள் பலரை உயிருடன் மீட்டு உள்ளன. நடுக்கம் இடம்பெற்று 100 மணித்தியாலங்களின் பின் 15 வயதுடைய Ayfer என்ற சிறுமியும், Fatma என்ற 13 வயதுடைய சகோதரியும் மீட்கப்பட்டு உள்ளனர். நடுக்கம் இடம்பெற்று சுமார் 76 மணித்தியாலங்களின் பின் Mithat Tabur என்பவரும் அவரின் 26, மற்றும் 30 வயதுடைய மகன்களும் மீட்கப்பட்டு […]

மகளை அடுத்த தலைவராக்க வடகொரிய கிம் முயற்சி?

மகளை அடுத்த தலைவராக்க வடகொரிய கிம் முயற்சி?

வடகொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) தனது மகளை அந்நாட்டின் அடுத்த தலைவராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாரா என்று வியக்கும் வகையில் பல பகிரங்க நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்கிறார். இந்த நிகழ்வுகள் இராணுவ நிகழ்வுகளாக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது சுமார் 9 அல்லது 10 வயதாக உள்ள மக்கள் Kim Ju Ae இன்று புதன் இரவு ஆரம்பிக்கப்பட்ட அந்நாட்டின் 75 ஆவது ஆண்டு விழாவுக்கும் அழைத்துவரப்பட்டு உள்ளார். அந்நாட்டு தொலைக்காட்சி […]

துருக்கி-சிரியா நிலநடுக்க மரண தொகை 7,800

திங்கள் காலை துருக்கி-சிரியா எல்லையோரத்தை தாக்கிய நிலநடுக்கத்திற்கு பலியானோர் தொகை தற்போது 7,800 ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்க அளவீட்டில் 7.8 அளவை கொண்ட இந்த நிலநடுக்கம் 1999ம் ஆண்டுக்கு பின் இங்கு இடம்பெற்ற மிகப்பெரிய நிலநடுக்கமாகும். Ganiantep என்ற பகுதியில் முதலில் 7.8 அளவை கொண்ட நடுக்கமும், 7.5 அளவிலான இரண்டாவது நடுக்கம் பின்னரும் இடம்பெற்றுள்ளன. துருக்கியில் மரணித்தோர் தொகை 5,894 ஆகவும், காயமடைந்தோர் தொகை 34,000 ஆகவும் உள்ளதாக துருக்கியின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். சிரியாவில் […]

அமெரிக்காவுக்கு மேலே சீன உளவு பலூன்?

அமெரிக்காவுக்கு மேலே சீன உளவு பலூன்?

அமெரிக்காவின் Montana மாநிலத்து வான் பரப்பில் சீனாவின் உளவு பலூன் ஒன்று பறப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த பலூனை நோட்டம்விட அமெரிக்காவின் F22 வகை யுத்த விமானங்கள் சென்றுள்ளன. இந்த பலூன் 24 km முதல் 37 km உயரத்தில் பார்ப்பதாக கூறப்படுகிறது. U2 தவிர்ந்த யுத்த விமானங்கள் சுமார் 20 km உயரத்திலேயே பறக்கும். பயணிகள் விமானங்கள் சுமார் 12 km உயரத்திலேயே பறக்கும். அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் மற்றைய நாடுகளுக்கு மேலால் […]

ஊழலில் இலங்கை 36/100 புள்ளிகள் பெற்று 101ம் இடத்தில்

ஊழலில் இலங்கை 36/100 புள்ளிகள் பெற்று 101ம் இடத்தில்

Transparency International தயாரித்த 2022ம் ஆண்டுக்கான Corruption Perception Index என்ற ஊழல் அறிக்கையில் இலங்கை 36/100 புள்ளிகளை மட்டும் பெற்று 101ம் இடத்தில் உள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்த கணிப்பில் உள்ளடக்கப்பட்டு இருந்தன. இந்த கணிப்பில் 0/100 புள்ளிகளை பெறும் நாடு முழு அளவில் ஊழல் நிறைந்த நாடாகவும், 100/100 புள்ளிகளை பெறும் நாடு ஊழல் அற்ற நாடாகவும் இருக்கும். டென்மார்க் 90/100 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தில் உள்ளது. நியூசிலாந்தும், பின்லாந்தும் 87/100 […]

​அதானி நிறுவனங்களின் இழப்பு $65 பில்லியன்​

​அதானி நிறுவனங்களின் இழப்பு $65 பில்லியன்​

சில தினங்களுக்கு முன் உலகின் 3வது பெரிய செல்வந்தராக இருந்த அதானியின் (Gautam Adani) நிறுவனங்கள் இன்று திங்கள் மேலும் பெருமளவு பங்கு சந்தை வெகுமதியை இழந்துள்ளன. அதானி நிறுவனங்கள் கடந்த 3 தினங்களில் சுமார் $65 பில்லியன் பங்கு சந்தை பெறுமதியை இழந்துள்ளன. அந்த பங்குகளை கொண்டிருந்த அதானியும் 3 தினங்களில் உலகின் 3வது செல்வந்தர் நிலையில் இருந்து தற்போது 8வது செல்வந்தர் ஆகியுள்ளார். அதானியின் இந்த நிலைக்கு அமெரிக்காவின் Hindenburg Research என்ற ஆய்வு […]

பல்கலைக்கழக சோதனைகளில் சித்தியடைந்த ChatGPT

பல்கலைக்கழக சோதனைகளில் சித்தியடைந்த ChatGPT

ChatGPT என்ற AI (Artificial Intelligence) software அமெரிக்காவின் University of Minnesota சட்ட பிரிவு மற்றும் University of Pennsylvania ஆகிய வர்த்தக பிரிவு சோதனைகளில் சித்தி அடைந்துள்ளது. மொத்தம் 4 சட்ட பாடங்களின் வழங்கப்பட்ட 95 MCQ (multiple choice questions) கேள்விகளுக்கும், 12 கட்டுரை கேள்விகளுக்கும் பதிலளித்த ChatGPT சராசரியாக C+ அளவிலான புள்ளிகளை (65% – 69%) பெற்று 4 பாடங்களிலும் சித்தி அடைந்துள்ளது. வர்க்க பாடங்களில் ChatGPT 70% முதல் […]

1 69 70 71 72 73 329