இந்திய-ரஷ்ய வர்த்தகத்தை தாக்கும் நாணய இடர்பாடு

இந்திய-ரஷ்ய வர்த்தகத்தை தாக்கும் நாணய இடர்பாடு

இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகத்துக்கு பயன்படக்கூடிய நாணயம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கலை இந்திய வெளியுறவு அமைச்சர் S. ஜெய்சங்கர் India-Russia Business Forum அமர்வில் ஏற்று கொண்டதுடன் அதற்கு ஒரு தீர்வு அவசியம் என்றும் கூறியுள்ளார். தற்போது ஆண்டு ஒன்றில் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகம் $66 பில்லியன் ஆக உள்ளது. இதில் பெருமளவு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கொள்வனவு செய்யும் எரிபொருளுக்கானது. ரஷ்யா இந்தியாவிடம் இருந்து பெருமளவில் கொள்வனவு செய்ய எதுவும் இல்லை. […]

சீனா அணு சக்தி விமானம் தாங்கி தயாரிக்கிறது

சீனா அணு சக்தி விமானம் தாங்கி தயாரிக்கிறது

சீனா அணு சக்தி மூலம் இயங்கும் (nuclear-powered) விமானம் தாங்கி கப்பல் ஒன்றை தயாரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது என்று அமெரிக்க ஆய்வாளர் அறிந்துள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள Middlebury Institute of International Studies என்ற அமைப்பு Planet Labs PBC செய்மதி மூலம் எடுத்த புகைப்படங்களை ஆராய்ந்து உண்மையை உறுதிப்படுத்தி உள்ளது. தற்போது அமெரிக்காவிடம் 11 விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன. அவை அனைத்தும் அணு சக்தி மூலம் இயங்குபவை. பிரான்சின் புதிய விமானம் தாங்கி […]

காசா சமாதான பேச்சில் இருந்து கட்டார் வெளியேற்றம் 

காசா சமாதான பேச்சில் இருந்து கட்டார் வெளியேற்றம் 

காசாவில் இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையில் யுத்த நிறுத்த பேச்சுக்களை முன் நின்று செய்து வந்த கட்டார் (Qatar) அந்த பணியில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளது. யுத்தம் செய்யும் இஸ்ரேலும், ஹமாசும் யுத்த நிறுத்தம் தொடர்பாக முழு மனதுடன் செயற்படவில்லை என்பதாலேயே தாம் யுத்த நிறுத்த பேச்சு பணிகளில் இருந்து விலகுவதாக கட்டார் கூறியுள்ளது. கடந்த நவம்பர் கட்டார் முன் நின்று செய்த பேச்சுக்கள் காரணமாக ஹமாஸ் 105 யூத கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் 240 பலஸ்தீன கைதிகளை […]

மேலும் 58 இணையவழி திருடர் கொழும்பில் கைது

மேலும் 58 இணையவழி திருடர் கொழும்பில் கைது

இணையவழி திருட்டுக்கள் செய்யும் இன்னோர் குழுவினர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னர் சீன, இந்திய இணையவழி திருட்டு குழுக்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு இருந்தாலும் இன்று கைது செய்யப்படடோர் அனைவரும் இலங்கையினரே. கைது செய்யப்பட்ட 58 பேரில் பிரதானிகளில் ஒருவர் 52 வயதுடைய கொழும்பு 7 வாசியான பெண் என்றும் இன்னொருவர் ராகமை பகுதில் வசிக்கும் 40 வயதுடைய ஆண் என்றும் கூறுகிறது CID. இந்த குழுவின் கைதுக்கு இவர்களிடம் பணத்தை இழந்த தென் கொரிய அப்பாவி […]

ஹாரிஸ் ஆதரவை இழந்ததாலேயே ரம்ப் வென்றார்

ஹாரிஸ் ஆதரவை இழந்ததாலேயே ரம்ப் வென்றார்

இம்முறை அமெரிக்க சனாதிபதி தேர்தலில் ரம்ப் பெரு வெற்றி அடைந்தாலும், 2020ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் ரம்ப்/Republican தனது ஆதரவை அதிகரித்து இருக்கவில்லை. பதிலுக்கு ஹாரிஸ்/Democratic பெருமளவு ஆதரவை இழந்துள்ளார்.  2020ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பைடேன்/Democratic பெற்ற மொத்த வாக்குகள் 81,283,501. ஆனால் ஹாரிஸ்/Democratic இதுவரை பெற்ற மொத்த வாக்குகள் 69,074,145 மட்டுமே. இந்த ஆண்டின் இறுதி முடிவுகள் இதுவரை அறியப்படாவிட்டாலும் ஹாரிஸ்/Democratic சுமார் 12 மில்லியன் வாக்குகளை இழந்துள்ளார். 2020ம் ஆண்டு தோல்வி […]

சிங்கள அரசியல் மாறிவிட்டது, தமிழ் அரசியல் மாறுமா?

சிங்கள அரசியல் மாறிவிட்டது, தமிழ் அரசியல் மாறுமா?

இளவழகன் (2024-11-07) இலங்கை பொது தேர்தலுக்கு மேலும் ஒரு கிழமை மட்டுமே உள்ளது. இலங்கையின் பெரும்பான்மை சிங்களம் அண்மையில் இரண்டு தடவைகள் உலகம் நம்ப முடியாத காரியங்களை செய்து சாதனை படைத்துள்ளது. ஒன்று சனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை பின் கதவால் நாட்டை விட்டு ஓட விரட்டியது. மற்றையது இடதுசாரியான அநுர குமார திஸாநாயக்காவை (AKD) சனாதிபதி ஆக்கியது. அதே சிங்களம் நவம்பர் 14ம் திகதி அநுர தலைமையிலான NPP அணியின் கையில் பாராளுமன்றத்தை வழங்குவதன் மூலம் தனது மூன்றாம் சாதனையையும் செய்யலாம். கோத்தபாய ஒரு […]

அமெரிக்காவில் ரம்ப் மீண்டும் சனாதிபதி ஆகிறார்

அமெரிக்காவில் ரம்ப் மீண்டும் சனாதிபதி ஆகிறார்

நேற்று செவ்வாய் அமெரிக்காவில் இடம்பெற்ற 2024ம் ஆண்டுக்கான சனாதிபதி தேர்தலில் முன்னாள் சனாதிபதி ரம்ப் வெற்றி பெறுகிறார். வாக்கு எண்ணல் முற்று பெறாவிட்டாலும் இவருக்கு போதிய electoral வாக்குகள் கிடைக்கவுள்ளன. Michigan, Wisconsin, Arizona, Nevada ஆகிய swing மாநிலங்களின் முடிவுகள் தீர்மானம் இல்லை என்றாலும் இவற்றிலும் ரம்ப் முன்னணியில் உள்ளார். Georgia, Pennsylvania ஆகிய இரண்டு மாநிலங்களை இம்முறை ரம்ப் பறித்தால் ரம்ப் மேலும் 36 electoral வாக்குகளை பெறுகிறார். அதனால் அவரின் தொகை தற்போது […]

சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில்

சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில்

2024ம் ஆண்டுக்கான Henley கடவுச்சீட்டு சுட்டியில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டை கொண்டவர்கள் 195 நாடுகளுக்கு அல்லது இடங்களுக்கு விசா இன்றி பயணிக்கலாம். இந்திய  கடவுச்சீட்டு 83ம் இடத்தில் உள்ளது. இந்திய கடவுச்சீட்டை கொண்டவர்கள் 58 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி பயணிக்கலாம். இலங்கை கடவுச்சீட்டு 95ம் இடத்தில் உள்ளது. இலங்கை கடவுச்சீட்டை கொண்டவர்கள் 44 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி பயணிக்கலாம்.  2006ம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டு 74ம் இடத்தில் இருந்தது. […]

இலங்கை தூதரக அதிகாரிகள் 16 பேர் திருப்பி அழைப்பு 

இலங்கை தூதரக அதிகாரிகள் 16 பேர் திருப்பி அழைப்பு 

உலகம் எங்கும் இலங்கை தூதரகங்களில் பணியாற்றும் 16 அதிகாரிகள் உடனடியாக அனுர அரசால் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தாம் கொண்டிருந்த அரசியல் செல்வாக்குகள் காணமாகவே மேற்படி பதவிகளை அடைந்தனர் என்று கூறப்படுகிறது. திருப்பி அழைக்கப்படும் 16 அதிகாரிகள் வருமாறு:

செவ்வாய் அமெரிக்க சனாதிபதி தேர்தல், எவரும் வெல்லலாம் 

செவ்வாய் அமெரிக்க சனாதிபதி தேர்தல், எவரும் வெல்லலாம் 

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) அமெரிக்காவில் சனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கு மேலும் 2 தினங்கள் மட்டுமே இருக்கையில் போட்டியில் எவர் வெல்வார் என்று கூறமுடியாது உள்ளது. நாடளாவிய கருத்து கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு 48% ஆதரவும், ரம்புக்கு 47% ஆதரவும் உள்ளன. ஆனால் அமெரிக்காவில் நாடளாவிய மொத்த வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பதில்லை. பதிலுக்கு போட்டியாளர் ஒவ்வொரு மாநிலத்தையும் தனித்தனியே வென்று, அதன் மூலம் அந்த மாநிலங்களின் electoral வாக்குகளை பெறவேண்டும்.  மொத்தம் 538 electoral வாக்குகளில் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட குறைந்தது […]

1 5 6 7 8 9 327