கடந்த சில தினங்களாக இலங்கை நாணயத்தின் பெறுமதி வேகமாக அதிகரித்து வந்துள்ளது. ஆனால் இந்த அதிகரிப்பு தற்காலிகமானது என்றும், ஆண்டின் இறுதியில் இலங்கை ரூபா மீண்டும் பெறுமதியை இழக்கும் என்றும் அமெரிக்காவை தளமாக கொண்ட Fitch நிதி சேவைகள் அமைப்பு கூறியுள்ளது. IMF இலங்கைக்கு $2.9 பில்லியன் கடன் வழங்கும் என்ற நம்பிக்கையிலேயே இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பதாகவும் காரணம் கூறப்பட்டுள்ளது. இன்று புதன் டாலர் ஒன்றுக்கு 317 ரூபாய் கிடைத்தாலும், Finch கூற்றுப்படி இந்த ஆண்டின் […]
சீனாவிடம் இருந்து இலங்கை பெற்ற கடன் தொடர்பாக சீனா திங்கள் வழங்கிய “புதிய” கடிதத்தை IMF ஏற்று $2.9 பில்லியன் கடனை வழங்கும் என்றும் இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்பதை இலங்கை பகிரங்கம் செய்யவில்லை. இலங்கை கருதுவது போல் IMF சீன உறுதிமொழியை IMF ஏற்றால், அது இந்த மாத முடிவுக்குள் கடனை பகுதி பகுதியாக வழங்க ஆரம்பிக்கலாம். அதன் பின் ஏனைய கடன் வழங்கும் அமைப்புகளும் கடன் வழங்க […]
அமெரிக்கா சீனாவை சுற்றி வளைத்து, கட்டுப்படுத்தி, அமுக்க முனைகிறது என்றும் அமெரிக்காவின் இந்த குணம் தொடர்ந்தால் மோதல் தவிர்க்க முடியாது என்றும் சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சர் சின் காங் (Qin Gang) செவ்வாய் கூறியுள்ளார். இதுவரை காலமும் அமெரிக்காவுக்கான சீன தூதுவராக இருந்த Qin Gang தற்போது சீனாவின் வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இவர் சீன சனாதிபதி சீக்கு நெருக்கமானவர். அத்துடன் யூக்கிறேன் யுத்தத்தை ஒரு மாய கை (invisible hand) நெருப்பூட்டி வளர்கிறது […]
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்யும் முயற்சியில் பாகிஸ்தான் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இஸ்லாமபாத் போலீசார் இம்ரானின் லாகூர் நகரத்துக்கு சென்றுள்ளனர். இம்ரான் பிரதமராக இருந்த காலத்தில் கிடைத்த பரிசுகளை விற்பனை செய்தார் என்பதே இம்ரான் மீதான குற்றச்சாட்டு. போலீசார் தாம் இம்ரானின் Zaman Park என்ற வீட்டுக்கு ஞாயிறு சென்றபோது அவர் அங்கு இருக்கவில்லை என்று கூறியுள்ளனர். கடந்த செவ்வாய் இஸ்லாமபாத் நீதிமன்றம் ஒன்று இம்ரானை கைது செய்ய உத்தரவிட்டு இருந்தது. இம்ரான் […]
மொத்தம் 44 emerging தொழில்நுட்ப ஆய்வுகளில் 37 இல் சீனா அமெரிக்காவை பின்தள்ளி உள்ளது என்கிறது Australian Strategic Policy Institute (ASPI) என்ற அஸ்ரேலிய ஆய்வு குழு. இதனால் மேற்கின் சனநாயங்கங்கள் தமது தொழிநுட்ப ஆளுமையை இழக்க நேரிடும் என்றும் மேற்படி அமைப்பு கூறியுள்ளது. அத்துடன் சில பிரதான ஆய்வுகளில் உலகின் முதல் 10 ஆய்வு நிலையங்கள் சீனாவில் உள்ளதாகவும் ASPI கூறியுள்ளது. அமெரிக்கா high-performance computing, quantum computing, சிறிய செய்மதி, நோய் தடுப்பு […]
2024ம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்திய வம்சத்து விவேக் ராமசுவாமியும் (Vivek Ramaswamy) முன்வந்துள்ளார். இவர் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து அமெரிக்கா சென்ற பெற்றோருக்கு Ohio மாநிலத்து Cincinnati நகரில் பிறந்தவர். 1985ம் ஆண்டு பிறந்த இவர் ஒரு Republican கட்சி ஆதரவாளர் என்றாலும் இவரை எவரும் இதுவரை அறிந்திருக்கவில்லை. இவர் சில மருத்துவ வர்த்தகங்களை ஆரம்பித்து செல்வந்தராகினார். அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கு முன் Republican மற்றும் Democratic கட்சிகளுக்குள் போட்டி […]
Erythritol என்ற செயற்கை சீனி (sugar replacement) உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்றும், இந்த ஆபத்து இயற்கை சீனியிலும் பல மடங்கு அதிகம் என்றும் அமெரிக்காவின் Cleveland நகரத்து Lerner Research Institute திங்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கை கூறுகிறது. Erythritol போன்ற செயற்கை சுவையூட்டிகள் சாதாரண சீனி வழங்கும் calorie அளவை குறைத்தாலும், குருதி திரட்சி அடைவது (blood clotting), stroke, heart attack, மரணம் போன்ற விளைவுகளை பல மடங்கு அதிகரிப்பதாக மேற்படி ஆய்வு […]
கியூபாவில் உள்ள Guantanamo Bay என்ற அமெரிக்க இராணுவ தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளின் குதங்களில் குழாய் செலுத்தி துன்புறுத்திய உண்மை தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் பரிசோதனை செய்த Dr. Sondra Crosby என்ற வைத்தியரே இந்த உண்மையை நீதிமன்றில் கூறியுள்ளார். அமெரிக்காவில் இடம்பெற்ற 9/11 தாக்குதலின் பின் பெருமளவு இஸ்லாமியர் பல சட்டவிரோத வதை முகாம்களில் வைத்து அமெரிக்க CIA உளவு பிரிவால் வதை செய்யப்பட்டு இருந்தனர். அதில் Abd al-Rahim […]
The Associated Press (AP) இன்று பலஸ்தீனர் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை விபரித்து சிறு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1998ம் ஆண்டு Shivi Drori என்ற பெண் இஸ்ரேல் இராணுவத்தில் தனது கடமையை முடித்து வெளியேறிய உடனே 3 இழுத்து செல்லும் வாகன வீடுகளை (trailers) கொள்வனவு செய்து, இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள பலஸ்தீனரின் West Bank இடமொன்றில் raspberry என்ற பழம் பயிரிட ஆரம்பித்தார். இது சட்டவிரோத குடியிருப்பு என்றாலும் இஸ்ரேல் இராணுவம் இவருக்கு பாதுகாப்பை […]
2022ம் ஆண்டு தென் கொரியாவில் பிள்ளை பெறக்கூடிய தாய் ஒருவருக்கான சராசரி பிறப்பு விகிதம் 0.78 ஆக இருந்துள்ளது. 1970ம் ஆண்டின் பின் இதுவே அந்த நாட்டுக்கான மிக குறைந்த பிறப்பு விகிதமாகும். 2021ம் ஆண்டு இங்கு இது 0.81 ஆக இருந்தது. 2022ம் ஆண்டு இங்கே 249,000 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. Seoul என்ற தென் கொரியாவின் தலைநகரில் பிறப்பு விகிதம் 0.59 ஆக மட்டுமே இருந்துள்ளது. ஒரு நாடு தனது சனத்தொகையை அதிகரிக்காமலும், குறையாமலும் […]