அமெரிக்க வட்டி வீதம் 5.25%, 16 ஆண்டுகளில் அதிகம்

அமெரிக்க வட்டி வீதம் 5.25%, 16 ஆண்டுகளில் அதிகம்

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி வீதம் நேற்று 0.25% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் அது தற்போது 5.25% ஆக உள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் இது அதிகம். மிக நீண்ட காலமாக ஏறக்குறைய 0% ஆக இருந்த அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி வீதம் கடந்த 14 மாதங்களில்  10 தடவைகளில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் நிலவும் பணவீக்கமே அரசு வட்டியை அதிகரிக்க காரணமாகி இருந்தது. வட்டி அதிகரித்ததால் வீடு, கார் போன்ற கடன் கொள்வனவுகளின் வட்டி […]

மேலும் இரண்டு அமெரிக்க வங்கிகள் ஆபத்தில்

மேலும் இரண்டு அமெரிக்க வங்கிகள் ஆபத்தில்

Silicon Valley Bank, Signature Bank, First Republic Bank ஆகிய 3 அமெரிக்க வங்கிகளும் ஏற்கனவே முறிந்த நிலையில், இன்று செவ்வாய் மேலும் 2 வங்கிகள் ஆபத்தில் உள்ளதாக தெரிகிறது. Pacific Western Bank (PACW), Western Alliance Bank (WAL) ஆகிய இரண்டு வங்கிகளின் பங்குசந்தை பங்கின் பெறுமதிகள் இன்று செவ்வாய் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளன. முன்னையதின் பங்கு ஒன்றின் விலை சுமார் 42% ஆலும், பின்னையதின் விலை சுமார் 20% ஆல் […]

முறியும் அமெரிக்காவின் மூன்றாவது வங்கி First Republic

முறியும் அமெரிக்காவின் மூன்றாவது வங்கி First Republic

First Republic Bank என்ற மூன்றாவது அமெரிக்க வங்கியும் முறிந்துள்ளது. இதன் சொத்துக்களை JP-Morgan Chase என்ற அமெரிக்க வங்கி கொள்வனவு செய்துள்ளது. இந்த கொள்வனவு விபரம் இன்று திங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் First Republic வங்கி அமெரிக்காவின் 14வது பெரிய வங்கியாக இருந்தது. முடிந்த ஏப்ரல் மாதம் இதில் சுமார் $229 பில்லியன் பண வைப்புகள் இருந்தன. First Republic வங்கி ஆபத்தில் உள்ளது என்று அறிந்தவுடன் அதன் பங்கு சந்தை பங்கின் […]

UAE இல் சீன படைத்தளம்? அமெரிக்கா சந்தேகம்

UAE இல் சீன படைத்தளம்? அமெரிக்கா சந்தேகம்

மத்திய கிழக்கு நாடான UAE அதன் அபுதாபி துறைமுகத்திற்கு அருகில் சீனா தளம் ஒன்றை மிக அமைக்க அனுமதி வழங்கி உள்ளதா என்று சந்தேகம் கொண்டுள்ளது அமெரிக்கா. The Washington Post செய்தி நிறுவனம் அறிந்த அமெரிக்காவின் top-secret அறிக்கை ஒன்றிலேயே இந்த சந்தேகம் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அபுதாபியில் உள்ள Khalifa துறை அருகே சீனா வேகமாக கட்டுமானங்கள் செய்வதை அமெரிக்கா அறிந்துள்ளது. Khalifa Port சீனாவின் COSCO நிறுவனமும் UAE யின் […]

படிப்படியாக உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் பெறும் சீன நாணயம்

படிப்படியாக உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் பெறும் சீன நாணயம்

முன்னைய காலத்தில் தங்கம் போன்ற வெகுமதிகள் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக கொள்வனவுகளுக்கு பயன்பட்டன. ஆனால் விரைவில் அமெரிக்க டாலர் உலக வர்த்தக நாணயம் ஆனது. அமெரிக்க டாலர் அமெரிக்க அரசின் சொத்து என்பதால் அமெரிக்கா தான் வெறுக்கும் நாடுகளை தண்டிக்க தனது டாலரை பயன்படுத்த ஆரம்பித்தது. இதனால் பல எதிரி நாடுகள் இடருக்கு உள்ளாகின. அமெரிக்கா தன்னை அமெரிக்க டாலர் பாவனை மூலம் கட்டுப்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில் சீனா தனது நாணாயமான யுவானை (Yuan அல்லது Renminbi) […]

வடமேற்கு ஆளுநர் வசந்த கரன்னகொட மீது அமெரிக்கா தடை

வடமேற்கு ஆளுநர் வசந்த கரன்னகொட மீது அமெரிக்கா தடை

இலங்கையின் வடமேற்கு மாநில ஆளுநரும் முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கரன்னகொட (Wasantha Karannagoda) மீதும் அவரின் மனைவி (Srimathi Ashoka Karannagoda) மீதும் அமெரிக்கா நேற்று (ஏப்ரல் 26) தடை விதித்து உள்ளது. அமெரிக்க வெளியுறவு சட்ட பிரிவான 7031(c) க்கு அமையவே இந்த தடை நடைமுறை செய்யப்பட்டுள்ளது. வசந்த கடற்படை தளபதியாக இருந்த காலத்தில் செய்த மனித உரிமைகள் மீறல்களே தடைக்கு காரணமாகிறது. தடை காரணமாக வசந்தவும், மனைவியும் அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

சிங்கப்பூரில் போதை கடத்திய தங்கராஜூவுக்கு மரண தண்டனை

சிங்கப்பூரில் போதை கடத்திய தங்கராஜூவுக்கு மரண தண்டனை

சிங்கப்பூர் அரசு தங்கராஜு சுப்பையா என்ற 46 வயது நபருக்கு போதை கடத்தல் காரணமாக மரண தண்டனை நிறைவேற்றி உள்ளது. பிரித்தானியாவின் செல்வந்தர் Richard Branson உட்பட பல மனித உரிமைகள் குழுக்கள் தங்கராஜுவின் மரண தண்டனையை கைவிட கேட்டிருந்தும் சிங்கப்பூர் மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது. இவருக்கான மரண தண்டனை சிங்கப்பூரின் கிழக்கே உள்ள Changi சிறைச்சாலையில் நிறைவு செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு தங்கராஜு 1 kg (2.2 இறத்தல்) போதையை சிங்கப்பூருள் எடுத்து வந்தார் […]

சீன சீ, யூக்கிறேன் செலன்ஸ்கி தொலைபேசி உரையாடல்

சீன சீ, யூக்கிறேன் செலன்ஸ்கி தொலைபேசி உரையாடல்

சீன சனாதிபதி சீயும், யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கியும் இன்று புதன் தொலைபேசி மூலம் உரையாடினர். ரஷ்யா யூக்கிறேனை ஆக்கிரமித்த பின் சீயும், செலன்ஸ்கியும் உரையாடுவது இதுவே முதல் தடவை. இவர்களின் உரையாடல் யூக்கிறேனில் சமாதான நிலையை உருவாக்கும் நோக்கம் கொண்டது. இந்த உரையாடல் நீண்ட நேரம் இடம்பெற்றது என்றும், அர்த்தமுள்ளது என்றும் செலன்ஸ்கி உரையாடலை விபரித்துள்ளார். சீனா இதுவரை ரஷ்யாவின் யூக்கிறேன் மீதான ஆக்கிரமிப்பை நிராகரித்து பேசியது இல்லை. பதிலுக்கு NATO நாடுகளையே யுத்தத்துக்கு காரணம் என்று […]

சனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் பைடென்

சனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் பைடென்

2024ம் ஆண்டுக்கான அமெரிக்க சனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று செவ்வாய் அறிவித்துள்ளார். தற்போது 80 வயதான பைடேன் அமெரிக்காவின் வயதில் முதிர்ந்த சனாதிபதியாவார். பைடெனின் வயது அமெரிக்காவின் சனாதிபதி பதவிக்கு தகுமா என்று அவரின் கட்சியினர் பலரும் வியக்கின்றனர். அத்துடன் Republican கட்சி வயதில் இளையவர் ஒருவரை போட்டியிட வைத்தால், பைடென் வாக்குகளை இழக்க நேரிடுமா என்றும் கேட்கப்படுகிறது. 2024ம் ஆண்டில் பைடென் சனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்படடால், அவர் தனது இரண்டாவது […]

சூடானில் இருந்து பல தூதரக ஊழியர் வெளியேற்றம்

சூடானில் இருந்து பல தூதரக ஊழியர் வெளியேற்றம்

ஆபிரிக்க நாடான சூடானில் (Sudan) இடம்பெறும் மோதல்களில் இருந்து தம்மை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் தமது தூதரக ஊழியர்களை வெளியேற்றி உள்ளன. அமெரிக்கா தமது தூதரக ஊழியர்களை இன்று ஞாயிரு சூடான் தலைநகர் Khartoum இல் இருந்து Chinook ஹெலிகள் மூலம் வெளியேற்றி உள்ளது. பிரித்தானிய பிரதமரும் தமது தூதரக ஊழியர்களை இன்று ஞாயிறு படையினரின் உதவியுடன் வெளியேற்றி உள்ளதாக கூறியுள்ளார். பிரெஞ்சு ஊழியர்கள் தம் மீதான தாக்குதல் காரணமா மீண்டும் […]

1 65 66 67 68 69 331