செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரானை, வயது 70, உடனடியாக விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் இன்று வியாழன் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் National Accountability Bureau செய்த இந்த கைது சட்டத்திற்கு முரணானது என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அதேவேளை இம்ரானின் PTI (Pakistan Tehreek-e-Insaf) கட்சி தலைவர் தொடர்ந்தும் காவலில் வைக்கப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இம்ரான் தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்கும்படி கூறவும் உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. உயர் […]
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீரென கைது செய்யப்பட்ட பின் பாகிஸ்தானின் பல பாகங்களில் வன்முறைகள் தோன்றியுள்ளன. இம்ரான் ஆதரவாளர் வீதிகளை மறித்து, இராணுவ அதிகாரிகளின் வீடுகளை எரித்து போராடுகின்றனர். பாகிஸ்தானின் சுதந்திர வரலாற்றில் இதுவரை 7 பிரதமர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திரத்தின் பின் சுமார் அரைப்பங்கு காலம் பாகிஸ்தான் இராணுவ ஆட்சியில் இருந்தது. ஒருதொகை வழக்குகளுக்காக நீதிமன்றம் சென்ற இம்ரானை வேறு சில குற்றங்களை சாட்டி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இம்ரானை […]
Toronto நகரில் நிலைகொண்டிருந்த சீனா தூதரக அதிகாரி (diplomat) ஒருவரை கனடா வெளியேற்றியதன் பின் சீனா ஷாங்காய் (Shanghai) நகரில் நிலைகொண்டிருந்த கனடிய தூதரக அதிகாரி ஒருவரை இன்று வெளியேற அறிவித்து உள்ளது. Zhao Wei என்ற சீன அதிகாரியையே கனடா நேற்று திங்கள் வெளியேற்றி இருந்தது. இவர் கனடிய பாராளுமன்ற உறுப்பினரான Michael Chong என்பவரை மறைமுகமாக மிரட்டியதாக கனடா கூறுகிறது. Chong சீனாவின் Uighur முஸ்லீம் விசயத்தில் சீனாவை குற்றம் கூறுபவர். இன்று சீனா […]
தற்போது வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கமான சூறாவளி மோக்கா மேற்கே இலங்கை நோக்கி வராது வடகிழக்கே பங்களாதேசம், பர்மா நோக்கி செல்லலாம் என்று வானிலை அவதான நிலையங்கள் கணிக்கின்றன. நாளை 10ம் திகதி சூறாவளியாக உக்கிரம் அடையும் மோக்கா 12ம் திகதியளவில் பங்களாதேச, பர்மா கரையில் தரையை அடையும் என்று கூறுகிறது இந்திய வானிலை அவதான நிலையம். கப்பல் மற்றும் மீன்பிடி வள்ளங்களுக்கும் இப்பகுதியை தவிர்க்க கூறப்பட்டுள்ளது. தற்போது காற்று திசைமாறும் காலம் ஆதலால் மோக்கா […]
ஸ்பெயின் தனது Golden Visa திட்டத்தை விரைவில் கைவிடலாம் என்று கூறப்படுகிறது. 2013ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த இந்த திட்டத்தின்படி 500,000 யூரோ ($551,650) பெறுமதிக்கு ஸ்பெயினில் வீடு கொள்வனவு செய்பவருக்கும் அவரின் குடும்ப உறுப்பினருக்கும் 3 ஆண்டுகள் ஸ்பெயினில் வாழும் உரிமை கொண்ட (residency visa) விசா வழங்கப்பட்டது. இந்த Golden Visa திட்டம் வீடுகளின் விலையை உயர்த்த, உள்ளூர் மக்கள் வீடுகளை கொள்வனவு செய்ய முடியாது அவதிப்பட்டனர். அதனாலேயே இந்த திட்டம் கைவிடப்படுகிறது […]
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனரின் West Bank இல் உள்ள பாடசாலை ஒன்றை இஸ்ரேலின் இராணுவம் ஞாயிரு தகர்த்துள்ளது. இந்த பாடசாலை பெத்லகேம் (Bethlehem) நகரில் இருந்து சுமார் 2 km தொலைவில் இருந்தது. இந்த பாடசாலை சட்டவிரோதமானது என்று பலஸ்தீனர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் காரணம் கூறியுள்ளது. இச்செயலால் வழமைபோல் தாம் திகைப்பு (appalled) அடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் முதலை கண்ணீர் வடித்துள்ளது. பாடசாலை உடைப்பு சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. […]
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் சிரியாவின் (Syria) சனாதிபதி அசாத்தை (al-Assad) தலைமையிலான ஆட்சியை கலைத்து தமது பொம்மை அரசு ஒன்றை அமைக்க முனைந்தன. அக்காலத்தில் 22 அரபு நாடுகளை அங்கம் கொண்ட Arab League என்ற அமைப்பும் சிரியாவை Arab League அமைப்பில் இருந்து வெளியேற்றின. அசாத் அரசு முதலில் ஆட்டம் கொண்டிருந்தாலும் பின் ஈரானும், ரஷ்யாவும்- உதவிக்கு வர, மேற்கு வளர்த்த Free Syrian Army போன்ற இயக்கங்கள் […]
சீனாவின் வெளிநாட்டு இருப்பு (foreign reserves) ஏப்ரல் மாதம் $3.205 டிரில்லியன் ($3,205 பில்லியன்) ஆக அதிகரித்து உள்ளது. மார்ச் மாதம் இத்தொகை $3.184 டிரில்லியன் ஆக இருந்தது. ஒரு மாதத்தில் மட்டும் சீனாவின் வெளிநாட்டு இருப்பு $21 பில்லியனால் அதிகரித்து உள்ளது. அமெரிக்க டாலருடனான நாணய மாற்று விகிதம் ஏறி இறங்குவதும் கையிருப்பு தொகையை சிறிது மாற்றி அமைக்கும். அத்துடன் சீனாவின் தங்க கையிருப்பு 66.76 மில்லியன் troy அவுன்ஸ் (2.076 மில்லியன் kg) ஆக […]
பிரித்தானியாவில் அரசராக முடி சூடும் சார்ள்ஸ் அணியும் முடியில் இந்தியாவில் இருந்து எடுத்து செல்லப்பட்ட Koh-i-noor வைரம் இல்லை. சார்ள்ஸின் தாய் எலிசபெத் இராணி தனது முடியில் இந்த வைரத்தை கொண்டிருந்தாலும் சார்ள்ஸ் இதை கொண்டிராமைக்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று இந்த வைரம் இந்தியாவில் இருந்து பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களால் சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்டது என்பதால் அதை இந்தியா திருப்பி எடுக்க கேட்டுள்ளது என்பதாகும். அடுத்த காரணம் இந்த வைரத்தை சூடிய ஆண்கள் அனைவரும் கொடூர மரணத்தை […]
ரஷ்யாவின் தலைநகரில் உள்ள கிரெம்ளின் (Kremlin) மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என்று ரஷ்யா இன்று வியாழன் கூறியுள்ளது. அத்துடன் இந்த தாக்குதல் பூட்டினை படுகொலை செய்ய செய்யப்பட்டது என்றும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஆளில்லா விமானம் (drone) மூலம் செய்யப்பட்ட இந்த தாக்குதல் புதன் காலையில் இடம்பெற்றது. இந்த தாக்குதல் பாரிய சேதம் எதையும் விளைவிக்கவில்லை. இந்த drone Senate Palace என்ற பூட்டினின் வதிவிடத்தை நோக்கியே சென்றுள்ளது. யுக்கிறேன் யுத்தத்தில் அமெரிக்கா மீது ரஷ்யா […]