இந்திய பிரதமர் மோதியும், யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கியும் ஜப்பானில் இடம்பெறும் G7 அமர்வின் போது நேரடியாக சந்தித்து உரையாடி உள்ளனர். ரஷ்யா யூக்கிறேனை ஆக்கிரமித்த பின் இந்திய, யூக்கிறேன் தலைவர்கள் நேரடியாக சந்திப்பது இதுவே முதல் தடவை. மேற்கு நாடுகள் ரஷ்யாவை கடுமையாக சாடி, தடைகளை விதித்தாலும் இந்தியா ரஷ்யாவை குற்றம் சாட்டியது இல்லை. அந்த நிலையை மாற்றி அமைக்க செலன்ஸ்கி மாற்றி அமைக்க முனைந்திருப்பார். ஆனால் அந்த முயற்சி பலன் அளித்திருந்ததாக இதுவரை அறியப்படவில்லை. G7 […]
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு முன் ஊழல், இலஞ்சம் மிகையான நாடு யூக்கிறேன். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு பின்னும் அங்கு இலஞ்ச, ஊழல் கொடுமை தொடர்கிறது. இன்று செவ்வாய் யூக்கிறேனின் பிரதம நீதிபதி Vsevolod Kniaziew இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பதிவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இவர் Finance and Credit என்ற நிறுவனத்திடம் இருந்து $2.7 மில்லியன் இலஞ்சம் பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை Specialized Anti-Corruption Prosecutor’s Office இன்று செய்துள்ளது. யூக்கிறேனில் மேற்படி இலஞ்சம் large-scale […]
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழைந்திருக்கும் கருவுற்றுள்ள தாய் பிறக்க உள்ள தனது குழந்தைக்கு பிரித்தானிய குடியுரிமை கிடைக்க 10,000 பவுண்ட் வரையில் பணம் செலுத்தி பொய் பிரித்தானிய தந்தை பெறுகின்றனர். இதை தடுக்க முடியாது அதிகாரிகள் திண்டாடுகின்றனர். பிரித்தானிய சட்டப்படி அங்கு சட்டவிரோதமாக உள்ள தாய்க்கு பிறக்கும் குழந்தையின் தந்தை ஒரு பிரித்தானிய குடியினர் என்றால் பிறக்கும் குழந்தையும் பிறப்பிலேயே பிரித்தானிய குடியுரிமை பெறுகிறது. அத்துடன் சட்டவிரோதமாக அங்குள்ள தாய்க்கும் வதிவிட உரிமை கிடைக்கிறது. அந்த தாய் பின்னர் […]
மேற்கு நாடுகள் உலக அளவில் கொண்டிருக்கும் கொள்கைகளை பிற நாடுகள் கேள்விக்கு உள்ளாக்கவில்லை, பதிலாக மேற்கு நாடுகள் நடுநிலைமையுடனா அந்த கொள்கைகளை நடைமுறை செய்கின்றன என்றே கேள்வி எழுப்புகின்றன என்று ஜெர்மனியின் அதிபர் Chancellor Olaf Scholz இன்று திங்கள் கூறியுள்ளார். குறிப்பாக இந்தியா, வியட்நாம், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் யூக்கிறேன் விசயத்தில் மேற்கு நாடுகள் கடைப்பிடிக்கும் கொள்கைகளை, எடுக்கும் நடவடிக்கைகளை ஏனைய நாடுகளில் செய்வது இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர் என்கிறார் ஜெர்மனியின் அதிபர். […]
இன்று ஞாயிறு தாய்லாந்தில் இன்னுமோர் தேர்தல் இடம்பெற்றுள்ளது. வழமைபோல் இம்முறையும் இராணுவ சார்பு கட்சி தோல்வியுற, சாதாரண கட்சி பெரும் வெற்றியை அடையும் என கனிக்காடுகிறது. ஆனால் தோல்வியுறும் இராணுவம் வழமைபோல் மீண்டும் தேர்தல் முடிவை புறக்கணித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா என்பதை வரும் நாட்கள் கூறும். முன்னைய தேர்தல்களில் இராணுவம் வெற்றி பெறும் கட்சியிடமிருந்து ஆட்சியை பறித்து, வெற்றிபெறும் கட்சியையும் தடையும் செய்திருந்தது. 2006ம் ஆண்டு இராணுவத்துக்கு எதிராக போட்டியிட்டு வென்று இருந்த Thaksin Shinawatra […]
அண்மைக்காலங்களில் பலத்த தோல்விகளை அடைந்து வந்த காங்கிரஸ் கட்சி இந்தியாவின் கர்நாடகா மாநில தேர்தலில் இம்முறை பெரு வெற்றியை அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பா.ஜ. ஆளும் கர்நாடகாவில் புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில் காங்கிரஸ் சுமார் 136 ஆசனங்களையும், பா.ஜ. 64 ஆசனங்களையும் வெல்லக்கூடும் என்று கணிப்புகள் கூறுகின்றன. அங்கு மொத்தம் 224 ஆசனங்கள் உள்ளன. வாக்கு எண்ணல் சனிக்கிழமை இடம்பெறுகிறது. இங்கு தாம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக பிரதமர் மோதி 10 தினங்கள் வரை […]
YouTube, Facebook எங்கும் பெருகி வருவது பொய்யான வீடியோக்களும், தகவல்களும். பலர் திரைப்படம் தயாரிப்பது போல் வியக்க வைக்கும் வீடியோக்களை தயாரித்து அவற்றை இயற்கையில் இடம்பெற்ற சம்பவம் என்று பெரும் தொகை மக்களை பார்கவைத்து பெரும் பணமும், புகழும் அடைய முனைகின்றனர். அமெரிக்க விமானியாக 29 வயதுடைய Trevor Jacob என்பவர் தனது சிறிய விமானத்தை YouTube வீடியோ ஒன்றுக்காக திட்டமிட்டு நிலத்தில் மோதவிட்டு தற்போது அதிகாரிகளிடம் அகப்படுக்கொண்டார். இந்த மோதல் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் […]
செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரானை, வயது 70, உடனடியாக விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் இன்று வியாழன் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் National Accountability Bureau செய்த இந்த கைது சட்டத்திற்கு முரணானது என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அதேவேளை இம்ரானின் PTI (Pakistan Tehreek-e-Insaf) கட்சி தலைவர் தொடர்ந்தும் காவலில் வைக்கப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இம்ரான் தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்கும்படி கூறவும் உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. உயர் […]
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீரென கைது செய்யப்பட்ட பின் பாகிஸ்தானின் பல பாகங்களில் வன்முறைகள் தோன்றியுள்ளன. இம்ரான் ஆதரவாளர் வீதிகளை மறித்து, இராணுவ அதிகாரிகளின் வீடுகளை எரித்து போராடுகின்றனர். பாகிஸ்தானின் சுதந்திர வரலாற்றில் இதுவரை 7 பிரதமர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திரத்தின் பின் சுமார் அரைப்பங்கு காலம் பாகிஸ்தான் இராணுவ ஆட்சியில் இருந்தது. ஒருதொகை வழக்குகளுக்காக நீதிமன்றம் சென்ற இம்ரானை வேறு சில குற்றங்களை சாட்டி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இம்ரானை […]
Toronto நகரில் நிலைகொண்டிருந்த சீனா தூதரக அதிகாரி (diplomat) ஒருவரை கனடா வெளியேற்றியதன் பின் சீனா ஷாங்காய் (Shanghai) நகரில் நிலைகொண்டிருந்த கனடிய தூதரக அதிகாரி ஒருவரை இன்று வெளியேற அறிவித்து உள்ளது. Zhao Wei என்ற சீன அதிகாரியையே கனடா நேற்று திங்கள் வெளியேற்றி இருந்தது. இவர் கனடிய பாராளுமன்ற உறுப்பினரான Michael Chong என்பவரை மறைமுகமாக மிரட்டியதாக கனடா கூறுகிறது. Chong சீனாவின் Uighur முஸ்லீம் விசயத்தில் சீனாவை குற்றம் கூறுபவர். இன்று சீனா […]