எக்குவடோரில் Fernando Villavicencio என்ற சனாதிபதி வேட்பாளர் கடந்த 10ம் திகதி தலையில் 3 முறை சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவர் அரச ஊழலுக்கு கடுமையான எதிர்ப்பை கொண்டவர். இவரை Fito என்று அழைக்கப்படும் Adilf Macias என்ற Los Choneros வன்முறை குழுவின் தலைவன் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட Villavicencio தன்னை Fito மிரட்டியதாக கொலைக்கு முன் கூறியிருந்தார். போதை கடத்தலுக்காக 34 ஆண்டு சிறை தண்டனை பெற்ற Fito Villavicencio […]
அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான நீஜரில் (Niger) இடம்பெற்ற இராணுவ கவிழ்ப்பு அந்த நாட்டை முன்னர் ஆக்கிரமித்து ஆண்ட பிரான்சுக்கே பெரும் நட்டமாகிறது. பிரான்சுக்கு யுரேனியம் வழங்கும் 3ஆவது பெரிய நாடு நிஜர். தனக்கு தேவையான மின்சாரத்தை பிரான்ஸ் பெருமளவில் அணுமின் உற்பத்தி மூலமே பெறுகிறது. அந்த அணுமின் உற்பத்திக்கு தேவையான யுரேனியத்தை (uranium) பிரான்ஸ் நிஜர் நாட்டில் இருந்தே பெறுகிறது. அன்மையில் இடம்பெற்ற இராணுவ கவிழ்ப்பு அந்த யுரேனிய வரவை குழப்பி உள்ளது. Orano என்ற […]
இன்று வெள்ளி, 47 ஆண்டுகளுக்கு பின், ரஷ்யா சந்திரனில் தரை இறங்க கலம் ஒன்றை அனுப்பியுள்ளது. சந்திரனின் தென் துருவத்தில் இறங்க உள்ள இந்த கலம் அங்கு நீர் உள்ளதா என அறியும். ஒரு கார் அளவிலான Luna-25 என்ற கலத்தை Soyuz 2.1v என்ற ஏவுகணை காவி செல்கிறது. இது ஆகஸ்ட் 21ம் திகதி சந்திரனில் இறங்கவுள்ளது. இது ஒரு ஆண்டு காலம் அங்கிருந்து ஆய்வுகளை செய்யும். 1976ம் ஆண்டுக்கு பின் இதுவே ரஷ்யாவின் முதல் […]
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் இடம் பெறும் காட்டு தீக்கு புதன்கிழமை வரை 36 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக அங்குள்ள இரண்டாவது பெரிய தீவான Maui தீவிலேயே அதிகம் மரணங்கள் இடம்பெற்றுள்ளன. Maui தீவு மக்கள் வேகமாக பரவி வந்த காட்டுத்தீயில் இருந்து தப்பும் நோக்கில் பசிபிக் கடலுள் சென்றுள்ளனர். ஹவாய், Maui ஆகியன அமெரிக்காவின் பிரதான உல்லாச பயண இடங்களாகும். இதுவரை சுமார் 11,000 உல்லாச பயணிகள் தமது இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கான மைல்கள் […]
சீனாவை தளமாக கொண்டு இயங்கும் நவீன தொழிநுட்ப நிறுவனங்களில் முதலிட அமெரிக்காவின் பைடென் அரசு தடை விதிக்க அறிவித்துள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டே நடைமுறைக்கு வரும் என்றாலும், அதுவரை மக்களின், நிறுவனங்களின் கருத்துக்களை பைடென் அரசு உள்வாங்கும். Semiconductors மற்றும் microelectronics, quantum தொழில்நுட்பம், artificial intelligence தொழில்நுட்பம் ஆகிய 3 துறைகளே இந்த தடைக்குள் அடங்கும். அத்துடன் புதிய முதலீடுகளுக்கு மட்டுமே இந்த தடை நடைமுறை செய்யப்படும், பழைய முதலீடுகள் கண்காணிக்கப்படும். இந்த அறிவிப்பால் […]
தமது நாட்டை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய படைகளை விரட்டி அடிக்கும் யூக்கிரேனின் இராணுவ முயற்சி குறிப்பிடக்கூடிய முன்னகர்வு எதையும் அடையவில்லை என்று மேற்கு நாடுகள் அறிகின்றன. அமெரிக்கா உட்பட பல நேட்டோ நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களுடன் யூக்கிறேன் படைகள் கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் ரஷ்ய படைகளை விரட்ட முனைந்தாலும் ரஷ்ய படைகளின் இராணுவ அரண்களை யூக்கிறேன் ஊடறுக்க முடியாது தவிக்கின்றன என்று மேற்கு நாடுகள் அறிகின்றன. ரஷ்யா பல தரப்பு அரண்களை அமைத்துள்ளது. மிக அதிக […]
அமெரிக்காவின் உயர்நீதிமன்ற (Supreme Court) நீதிபதி Clarence Thomas இலஞ்சம் பெற்றாரா என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது. அமெரிக்க அரசில் வெள்ளைமாளிகை, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்கும் அடுத்து மூன்றாவதாக இயங்குவது உயர்நீதிமன்றம். இது தற்போது 9 நீதிபதிகளை கொண்டது. 1999ம் ஆண்டு Thomas பொதுவாக RV எனப்படும் உல்லாச பயண பஸ் (Recreational Vehicle) ஒன்றை $267,230 பெறுமதிக்கு கொள்வனவு செய்திருந்தார். Prevost Le Mirage XL Marathon என்ற 40 அடி நீள இந்த உல்லாச […]
ஊழல் குற்றச்சாட்டு வழக்கு வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிப்பின் பின் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வயது 70, இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பதவியில் இருந்தபோது கிடைத்த Rolex கடிகாரம் போன்ற அன்பளிப்புகளை விற்பனை செய்து பெற்ற பணத்தை வருமான வரியில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு காரணமாகவே இவர் சிறை செல்கிறார். இம்ரான் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகளை தற்போதைய அரசு தொடுத்துள்ளது. தண்டனை பெற்ற இம்ரான் தனது ஆதரவாளர்களை புரட்சி […]
ராகுல் காந்தி மீது விதிக்கப்பட்ட தண்டனையை இந்திய உயர் நீதிமன்றம் இன்று இடைநிறுத்தி உள்ளது. அதனால் ராகுல் காந்தி மீண்டும் பாராளுமன்றம் செல்வார். அத்துடன் அடுத்த ஆண்டு தேர்தலிலும் அவர் போட்டியிடக்கூடும். ராகுல் இந்திய பிரதமரை Modi என்ற பெயர் கொண்ட இன்னோர் திருடனுடன் ஒப்பிட்டு அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு குஜராத் கீழ் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பை நிராகரிக்க குஜராத்தின் மேல் நீதிமன்றமும் மறுத்தது. குஜாராத் பா.ஜ. ஆட்சியில் […]
கனடிய பிரதமர் Justin Trudeau வும் அவரின் மனைவி Sophie Gregoire யும் பிரிந்து செல்ல இணங்கி உள்ளதாக அறிவித்துள்ளனர். எதிர்பாராத இந்த அறிவிப்பால் கனடிய அரசியல் திகைத்துள்ளது. தாம் ஏன் தமது 18 ஆண்டு திருமண வாழ்வை முறித்து கொள்கின்றனர் என்று கூறவில்லை. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உண்டு. விவாக பிரிவு பெற்றாலும், ரூடோ தொடர்ந்தும் அரசியலில் பங்கு கொள்வார் என்று கூறப்படுகிறது. கனடாவின் மொன்றியல் நகரில் பிறந்த Sophie Gregoire BA பட்டம் பெற்றவர். […]