வாக்னர் (Wagner) என்ற தனியார் இராணுவத்தின் தலைவர் Yevgeny Prigozhin இன்று இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுப்படி Embraer-135 வகை விமானம் ஒன்று 10 பேருடன் மொஸ்கோவில் இருந்து St. Petersburg பறக்கையில் Kuzhenkino என்ற கிராமத்தில் விழுந்துள்ளது. அதில் பயணித்த அனைவரும் பலியாகி உள்ளனர். எரிந்துகொண்டிருக்கும் விமானத்தில் 2795 என்ற எண் எழுதப்பட்டு உள்ளது. வாக்னர் தலைவரின் விமான பதிவு இலக்கம் RA-02795. விழுந்த விமானத்தின் […]
Chandrayaan-3 என்ற இந்திய கலம் சந்திரனின் தென் துருவ பகுதியில் இன்று புதன்கிழமை பத்திரமாக இறங்கி உள்ளது. இதனால் சந்திரனின் தென் துருவத்தில் இறங்கிய முதலாவது நாடாகிறது இந்தியா. Chandrayaan-2 தரையில் மோதி உடைந்திருந்தது. Vikram என்ற தரை இறங்கும் கலத்துள் (lander) உள்ள Pragyaan என்ற 6 சக்கரங்கள் கொண்ட ஆய்வு கலம் (rover) சந்திரனின் தரையில் வலம்வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். சந்திரனின் தென் துருவத்தில் உறைந்த நீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவ்வாறு நீர் […]
இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் புதிதாக கட்டப்படும் பாலம் ஒன்று உடைந்து விழுந்ததால் கட்டுமான பணியில் இருந்த 17 ஊழியர் பலியாகியும், மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். மிசோராம் மாநிலத்தில் உள்ள Sairang என்ற இடத்தில் பள்ளத்தாக்கு ஒன்றுக்கு குறுக்கே அமைக்கப்படும் பாலமே இன்று புதன் விழுந்து உள்ளது. மரணித்தோரின் குடும்பங்களுக்கு $2,500 நட்டஈடும், காயமடைந்தோருக்கு $600 நட்டஈடும் வழங்க பிரதமர் மோதி அறிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் பீஹார் மாநிலத்தில், கங்கைக்கு குறுக்கே அமைந்திருந்த பாலம் இரண்டாம் […]
BRICS (Brazil, Russia, India, China, South Africa) அணி இந்த கிழமை தென் ஆபிரிக்காவில் கூடுகிறது. இந்த அமர்வில் BRICS மேலும் நாடுகளை இணைப்பதா என்பதை ஆலோசிக்கும். சுமார் 22 நாடுகள் BRICS அணியில் இணைய விருப்பம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நாடுகளின் விருப்பங்களுக்கு காரணங்கள் பல என்றாலும், அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் பிடிகளில் இருந்து தம்மை பாதுகாப்பதே பிரதான காரணம். அர்ஜென்டீனா, மெக்ஸிகோ, ஈரான், சவுதி அரேபிய, UAE, எகிப்து, நைஜீரியா, பங்களாதேஷ் […]
மொத்தம் 7 குழந்தைகளை கொலை செய்த பிரித்தானிய தாதிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Countess of Chester என்ற வைத்தியசாலையில் பணியாற்றிய Lucy Letby என்ற 33 வயது தாதி 7 குழந்தைகளை கொலை செய்தது மட்டுமன்றி மேலும் 6 குழந்தைகளை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இவ்வகை ஆயுள் தண்டனை பெறும் 4வது பெண் ஆகிறார் Lucy. இவர்கள் என்றைக்குமே விடுதலை செய்யப்பட்டார். இந்த கொலைகள் 2015ம் ஆண்டு ஜூன் முதல் 2016ம் ஆண்டு ஜூன் […]
ரஷ்யா அண்மையில் சந்திரனுக்கு செலுத்திய Luna-25 என்ற விண்கலம் சந்திரனில் பத்திரமாக இறங்காது விழுந்து மோதியுள்ளது. சுமார் 47 ஆண்டுகளுக்கு பின் ரஷ்யா தனது கலத்தை சந்திரனில் இறக்க முயல்வது இதுவே முதல் தடவை. இந்த தரை இறங்கும் கலம் 800 kg எடை கொண்டது. இந்த கலம் சந்திரனின் தென் துருவத்தில் இறங்க முனைந்தது. தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் பாதுகாப்பாக இறங்கவில்லை. அமெரிக்காவும், சீனாவும் வேறு பகுதிகளில் பாதுகாப்பாக இறங்கி இருந்தன. இந்த […]
உலக சந்தைக்கு தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக உள்ள பங்களாதேசம் இலங்கையில் தயாரிக்கப்படும் ஆடைகளிலும் குறைந்த விலைக்கே ஆடைகளை விற்பனை செய்கிறது. சுமார் $182 பில்லியன் பெறுமதியான ஆடைகளை ஏற்றுமதி செய்யும் சீனா முதலாம் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் சுமார் $46 பில்லியன் பெறுமதியான ஆடைகளை ஏற்றுமதி செய்யும் பங்களாதேசம் உள்ளது. 2022ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற தைத்த ஆடைகளின் விலை கிலோ ஒன்றுக்கு $22.48 ஆக இருந்துள்ளது. பங்களாதேசம் […]
எக்குவடோரில் Fernando Villavicencio என்ற சனாதிபதி வேட்பாளர் கடந்த 10ம் திகதி தலையில் 3 முறை சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவர் அரச ஊழலுக்கு கடுமையான எதிர்ப்பை கொண்டவர். இவரை Fito என்று அழைக்கப்படும் Adilf Macias என்ற Los Choneros வன்முறை குழுவின் தலைவன் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட Villavicencio தன்னை Fito மிரட்டியதாக கொலைக்கு முன் கூறியிருந்தார். போதை கடத்தலுக்காக 34 ஆண்டு சிறை தண்டனை பெற்ற Fito Villavicencio […]
அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான நீஜரில் (Niger) இடம்பெற்ற இராணுவ கவிழ்ப்பு அந்த நாட்டை முன்னர் ஆக்கிரமித்து ஆண்ட பிரான்சுக்கே பெரும் நட்டமாகிறது. பிரான்சுக்கு யுரேனியம் வழங்கும் 3ஆவது பெரிய நாடு நிஜர். தனக்கு தேவையான மின்சாரத்தை பிரான்ஸ் பெருமளவில் அணுமின் உற்பத்தி மூலமே பெறுகிறது. அந்த அணுமின் உற்பத்திக்கு தேவையான யுரேனியத்தை (uranium) பிரான்ஸ் நிஜர் நாட்டில் இருந்தே பெறுகிறது. அன்மையில் இடம்பெற்ற இராணுவ கவிழ்ப்பு அந்த யுரேனிய வரவை குழப்பி உள்ளது. Orano என்ற […]
இன்று வெள்ளி, 47 ஆண்டுகளுக்கு பின், ரஷ்யா சந்திரனில் தரை இறங்க கலம் ஒன்றை அனுப்பியுள்ளது. சந்திரனின் தென் துருவத்தில் இறங்க உள்ள இந்த கலம் அங்கு நீர் உள்ளதா என அறியும். ஒரு கார் அளவிலான Luna-25 என்ற கலத்தை Soyuz 2.1v என்ற ஏவுகணை காவி செல்கிறது. இது ஆகஸ்ட் 21ம் திகதி சந்திரனில் இறங்கவுள்ளது. இது ஒரு ஆண்டு காலம் அங்கிருந்து ஆய்வுகளை செய்யும். 1976ம் ஆண்டுக்கு பின் இதுவே ரஷ்யாவின் முதல் […]