சிங்கப்பூரின் அடுத்த சனாதிபதியாக தர்மன் சண்முகரத்தினம் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஆளும் கட்சியான People’s Action Party (PAP) கட்சியின் அங்கத்தவராக பல பதவிகளை வகித்திருப்பினும், சனாதிபதி தேர்தல் காலத்தில் PAP அங்கத்துவதை கைவிட்டு கட்சி சார்பு அற்று இருந்தார். முன்னாளில் உதவி பிரதமராக இருந்த சண்முகரத்தினம், வயது 66, 70.4% வாக்குகளை பெற்றிருந்தார். இவர் London School of Business, University of Cambridge, Harvard University ஆகிய பல்கலைக்கழகங்களில் கற்றவர். சிங்கப்பூர் சனாதிபதி […]
சீன சனாதிபதி சீயும் செப்டம்பர் 9ம், 10ம் திகதிகளில் டெல்லியில் இடம்பெறவுள்ள G20 அமர்வுக்கு பயணிக்கார் என்று கூறப்படுகிறது. அதற்கான காரணம் கூறப்படவில்லை. சனாதிபதி சீக்கு பதிலாக சீன Premier Li Qiang பயணித்து பங்கெடுப்பார். அமெரிக்க சனாதிபதி பைடென் டெல்லி G20 அமர்வுக்கு பயணிப்பார். அங்கு பைடென் சீயை சந்திக்கக்கூடும் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் சீ டெல்லி செல்லாவிடில் பைடென்-சீ சந்திப்பு சாத்தியமில்லை. அண்மையில் 4 பைடென் அதிகாரிகள் சீனா சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். […]
ரஷ்யாவுக்கு வட கொரியா ஆயுதங்களை வழங்க உள்ளது என்று அறிந்த அமெரிக்கா வட கொரியா மீது விசனம் கொண்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பேச்சாளர் John Kirby “ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்கும் பேச்சுக்களை கைவிடுமாறு DPRK அரசை கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார். ஆனால் தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா பெரும் ஆயுத பயிற்சிகளில் ஈடுபடுவதால் வட கொரியா அமெரிக்காவை உதாசீனம் செய்கிறது. அமெரிக்காவின் உளவு ரஷ்ய-வட கொரிய ஆயுத பேச்சுக்களை அறிந்திருந்தாலும் அமெரிக்கா அந்த விவரங்களை வெளியிடவில்லை.
Gabon என்ற ஆபிரிக்க நாட்டில் இன்று புதன் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. கடந்த கிழமை இறுதியில் அங்கு இடம்பெற்ற தேர்தல் முறையற்றது என்று கூறியே இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் அனைத்து அரச நிலையங்களையும், எல்லைகளையும் மூடுவதாக அறிவித்து உள்ளது. தேர்தல் திணைக்களம் தற்போதைய சனாதிபதி Ali Bongo Ondimba மூன்றாம் முறையாக வென்றுள்ளார் என்று அறிவித்த பின்னரே இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. Bongo 64.27% வாக்குகளை பெற்றதாக தேர்தல் […]
அடுத்த மாதம் இந்தியாவில் இடம்பெறவுள்ள G20 அமர்வுக்கு தான் பயணிக்கேன் என்றும் தனக்கு பதிலாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரே பயணிப்பார் என்றும் ரஷ்ய சனாதிபதி பூட்டின் இந்திய பிரதமர் மோதிக்கு நேற்று திங்கள் தொலைபேசி மூலம் கூறியுள்ளார். யூக்கிறேன் மீதான பூட்டினின் தாக்குதலும் அதனால் அவர் மீது உள்ள International Criminal Court வழக்குகளுமே காரணம் என்று கருதப்படுகிறது. கடந்த கிழமை தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற BRICS அமர்வுக்கும் பூட்டின் நேரடியாக பயணிக்காது இணையம் மூலமே பங்களித்து […]
மும்பாயில் உள்ள மிக பெரிய குப்பமாகிய (slums) தாராவியை (Dharavi) அபிவிருத்தி செய்யும் உரிமையை இந்திய பிரதமர் மோதியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு வழங்குவதை தாராவி மக்கள் எதிர்க்கின்றனர். கட்டுமான காலத்தில் தம்மை வெளியேற்றி பின் அங்கு வரவிடாமல் தடுக்கும் சாத்தியம் உண்டு என்கின்றனர் தாராவி மக்கள். 2018ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் முதல் தடவையாக தாராவி அபிவிருத்திக்கு விண்ணப்பங்களை கேட்டிருந்தது. அப்போது டுபாயை தளமாக கொண்ட SecLink நிறுவனம் அதிக பணம் வழங்க முன் வந்திருந்தது. […]
அமெரிக்காவின் வர்த்தக அமைச்சர் ஜீனா (Gina Raimondo) சீனாவுக்கு விரைந்துள்ளார். நேற்று ஞாயிறு மாலை சீனா சென்ற இவரின் நோக்கம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகத்தையும், உல்லாச பயணத்தையும் அதிகரிப்பதே. தனது பேச்சுக்களில் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு குந்தகமான எதையும் பேச்சில் எடுக்கப்போவது இல்லை என்றும், அதேவேளை சீனாவுடனான வர்த்தகத்தை நிறுத்தப்போவதும் இல்லை என்றும் கூறியுள்ளார் ஜீனா. தனது பயணத்துக்கு முன் ஜீனா சனாதிபதி பைடென் உடனும், 100கும் மேற்பட்ட அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுடனும் உரையாடியுள்ளார். கடந்த 7 […]
முதலில் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்பும் பின்னர் பைடெனும் சீனாவுக்கு எதிராக நடைமுறை செய்த பொருளாதார கொள்கைகள் சீனாவுக்கு பெரிதாக பாதிப்புகளை வழங்கவில்லை என்கிறது அமெரிக்க ஆய்வு அறிக்கை ஒன்று. 2016ம் ஆண்டில் சீனாவில் இருந்து 21.6% பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்திருந்தது. ஆனால் அத்தொகை ரம்ப், பைடென் நடைமுறை செய்த பொருளாதார கொள்கைகள் காரணமாக 2022ம் ஆண்டில் 16.5% ஆக குறைந்து இருந்தது. ஆனாலும் தற்போது அதிகரித்த அளவில் சீன பொருட்கள் வியட்நாம், மெக்சிகோ போன்ற […]
ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசிக்கு (parboiled rice) இந்தியா மேலதிகமாக 20% வரி அறவிட திடீரென அறிவித்துள்ளது. இந்த புதிய வரி உடனடியாக நடைமுறை செய்யப்படும். இந்தியாவில் அரிசியின் விலையை குறைப்பதே இந்திய அரசின் நோக்கம். இது அங்கு உணவு பொருட்களின் விலைவாசி அதிகரிப்பதை கட்டுப்படுத்த உதவும். கடந்த மாதம் இந்தியா பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தது. பின் உடைத்த அரிசி ஏற்றுமதியையும் தடை செய்திருந்தது. இதனால் உலக அளவில் அரிசி […]
தற்போது Brazil, Russia, India, China, South Africa ஆகிய 5 நாடுகளை மட்டும் அங்கத்துவ நாடுகளாக கொண்ட BRICS அமைப்பில் சவுதி அரேபியா, ஈரான், எதியோப்பியா, எகிப்து, அர்ஜென்டீனா, UAE ஆகிய நாடுகள் இணைகின்றன. இந்த புதிய அணியின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய 6 நாடுகளும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் அங்கத்துவத்தை கொண்டிருக்கும். தற்போது சீனாவின் ஆளுமையில் 5 நாடுகளை கொண்டிருந்த BRICS 11 நாடுகளை கொண்டிருக்கப்போவது அமெரிக்கா […]