100,000 ஆர்மீனியர் அஜர்பைஜானை விட்டு வெளியேறினர்

100,000 ஆர்மீனியர் அஜர்பைஜானை விட்டு வெளியேறினர்

சுமார் 100,000 ஆர்மீனியர் அஜர்பைஜானை விட்டு வெளியேறி அடுத்து உள்ள ஆர்மீனியாவை அடைந்துள்ளனர். இந்த நகர்வு சுமார் 30 ஆண்டுகளாக நிலவி வந்த Nagorno-Karabakh முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. Nagorno-Karabakh மலை பகுதி முழுமையாக அஜர்பைஜான் (Azerbaijan) உள்ளே உள்ளது. உலக சட்டப்படியும் இப்பகுதி இஸ்லாமிய அஜர்பைஜானுக்கு உரியது. ஆனால் இங்கு வாழ்ந்த சுமார் 120,000 கிறீஸ்தவ ஆர்மினியர் இதை தமது நிலம் என்றனர். சோவியத் உடைந்த பின் இப்பகுதியில் வாழ்ந்த ஆர்மீனிய கிறீஸ்தவர் தனிநாடு கேட்டு போராடினர். இப்பகுதியை ஒரு சிறு ஒடுங்கிய  நிலப்பரப்பு […]

அமெரிக்க அரசு சனிக்கிழமை இரவு முடங்கும்?

அமெரிக்க அரசு சனிக்கிழமை இரவு முடங்கும்?

அமெரிக்க மத்திய அரசு இன்று சனிக்கிழமை இரவு மீண்டும் முடங்கும் நிலையில் உள்ளது. மத்திய அரசுக்கான வரவு-செலவு திட்டம் எற்றுக்கொள்ளப்படாமையே முடங்கலுக்கு காரணம். நீண்ட காலமாக அமெரிக்க அரசின் மொத்த செலவுகள் அதன் மொத்த வரவுகளிலும் அதிகமாக உள்ளன. துண்டு விழும் தொகையை எவ்வாறு பெறுவது என்பதே இழுபறிக்கு காரணம். பொதுவாக Democratic கட்சி அரசு மேலதிக கடன் பெற்று தொடர்ந்தும் செலவுகளை செய்ய முனையும். ஆனால் Republican கட்சி செலவுகளை குறைத்து கடன் அதிகரிப்பை தடுக்க முனையும். அமெரிக்காவில் அரசு எவ்வளவு […]

பலஸ்தீனரை விடுத்தது, இஸ்ரேலுடன் உறவாட சவுதிக்கு பைடென் அழுத்தம்?

பலஸ்தீனரை விடுத்தது, இஸ்ரேலுடன் உறவாட சவுதிக்கு பைடென் அழுத்தம்?

சவுதி அமெரிக்காவுடன் நேட்டோ (NATO) வகையிலான பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை செய்ய விரும்புகிறது. அவ்வகை பாதுகாப்பு உடன்படிக்கை சாத்தியம் இல்லை என்றாலும் அமெரிக்காவுடன் இடைநிலை பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்வதாயினும், சவுதி பலஸ்தீனர் விசயத்தை கைவிட்டு இஸ்ரேலுடன் முழு உறவை நிலைநாட்ட சவுதியை அழுத்துகிறது பைடென் அரசு என்று கூறப்படுகிறது. 2022ம் ஆண்டு பைடென் சவுதி சென்ற வேளையில் சவுதி அரசர் சல்மான் பைடெனிடம் NATO வகையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை கேட்டிருந்தார். அதாவது நேட்டோவின் Article 5 இல் உள்ளது போல் சவுதி தாக்கப்படால் அது அமெரிக்கா […]

யாருக்கு சொல்லியழ 21: அந்த கதை ஏன் இப்ப?

யாருக்கு சொல்லியழ 21: அந்த கதை ஏன் இப்ப?

கடந்த ஜூன் 18ம் திகதி சீக்கிய பிரிவினை வாதியான Hardeep Singh Nijjar கனடாவில் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். கனடாவுக்கு Five Eyes நாடுகள் வழங்கிய உளவுகளின் அடிப்படையில் இந்த கொலையில் இந்தியாவின் கை இருப்பதாக கனடிய பிரதமர் ரூடோ இந்தியா மீது குற்றம் சுமத்தி இருந்தார். கனடா தம் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்தியதால் வெகுண்டு எழுந்தது மோதி தலைமையிலான இந்திய அரசு. கூடவே இந்திய ஊடகங்களும் கனடா மீது வெகுண்டு எழுந்து உள்ளன. இந்த நிலையில் இலங்கையின் Ali Sabry என்ற வெளியுறவு அமைச்சரும் இந்தியாவின் உதவிக்கு […]

காவிரி நீரால் பெங்களூர் முறுகளில்

காவிரி நீரால் பெங்களூர் முறுகளில்

காவிரி நீர் பங்கீடு காரணமாக மீண்டும் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் மீண்டும் முறுகல் நிலை தோன்றியுள்ளது. இதனால் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியை செய்ய அழைத்துள்ளன. பெங்களூரில் இன்று செவ்வாய்க்கிழமை மக்கள் பொது இடங்களில் கூடுவது போலீசாரால் தடை செய்யப்பட்டுள்ளது. வன்முறைகளை தடுக்க எடுக்கும் முன்கூட்டிய நடவடிக்கையே இது என்கிறது போலீஸ். Google, Walmart போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது ஊழியர்களை வீடுகளில் இருந்து பணிய செய்ய கூறியுள்ளது. பெங்களூரில் […]

பசுபிக் எங்கும் அமெரிக்கா தூதரகங்கள்

பசுபிக் எங்கும் அமெரிக்கா தூதரகங்கள்

வளர்ந்து வரும் சீனாவுக்கு போட்டியாக அமெரிக்கா பசிபிக் தீவுகள் எங்கும் தூதரகங்களை நிறுவி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இந்த தீவுகளில் தனது ஆதிக்கத்தை வர்க்க முனைகிறது அமெரிக்கா. Niue என்ற நாடு 2,000 க்கும் குறைவான மக்களையே கொண்டது. அதற்கும் ஒரு தூதரகம் அமைக்கவுள்ளது அமெரிக்கா. சுமார் 20,000 மக்களை கொண்ட Cooks Islands என்ற நாடும் அமெரிக்க தூதரகத்தை பெறவுள்ளது. திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் அமெரிக்க சனாதிபதி பைடென் US-Pacific Islands Forum […]

அயோத்திக்கு அடுத்து வரணாசி?

அயோத்திக்கு அடுத்து வரணாசி?

1992ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியின் இந்துவாதிகளால் இராமர் பிறந்த இடம் என்று கருதப்படும் அயோத்தியில் இருந்த Babri மசூதி உடைக்கப்பட்டு தற்போது அங்கு இராமர் ஆலயம் ஒன்று அமைக்கப்படுகிறது. இந்நிலை விரைவில் வரணாசியிலும் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. 17ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த Aurangzeb என்ற மோகல் (Mughal) ஆட்சியாளர் வரணாசியில் (Varanasi) இருந்த இந்து ஆலயம் ஒன்றை உடைத்து Gyanvapi என்ற இஸ்லாமிய மசூதியை கட்டியிருந்தார். பின்னர் இந்து இராணி ஒருவர் அந்த மசூதிக்கு […]

மலேசியாவில் இலங்கையர் மூவர் கொலை

மலேசியாவில் இலங்கையர் மூவர் கொலை

இலங்கையர் மூவரின் உடல்கள் மலேசியாவில் பொலிஸாரால் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த உடல்கள் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், தலைகள் பிளாஸ்டிக் பைகளால் மூடப்பட்ட நிலையிலும் இருந்துள்ளன. கோலாலம்பூரை அண்டிய Sentul என்ற பகுதியிலேயே இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் மாடியில் உள்ள இந்த வீட்டில் இருந்து நேற்று இரவு சுமார் 11:00 மணியளவில் அவல சந்தங்கள் வெளியேற, அயலவர் அதை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அங்கு சென்ற போலீசார் மூன்று ஆண்களின் உடல்களை கண்டெடுத்துள்ளனர். அந்த […]

Nijjar விசாரணைக்கு இந்தியாவை உதவ அழைக்கிறது அமெரிக்கா

Nijjar விசாரணைக்கு இந்தியாவை உதவ அழைக்கிறது அமெரிக்கா

கனேடிய சீக்கிய பிரிவினைவாதியான Hardeep Singh Nijjar கனடாவில் படுகொலை செய்யப்பட்டதை விசாரணை செய்யும் கனடாவுக்கு இந்தியா உதவ வேண்டும் என்று அமெரிக்கா இன்று வெள்ளி கேட்டுள்ளது. அமெரிக்காவின் Secretary of State Anthony Blinken இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். Blinken தனது உரையில் “It would be important that India work with Canadians on this investigation” என்று கூறியுள்ளார். இக்கொலையில் இந்திய உளவாளிகளின் தொடர்பு இருக்கிறது என்று கூறுகிறது கனடா. அதற்கான […]

அமெரிக்க செனட்டர் விசாரணையில், இலஞ்சம் காரணம்

அமெரிக்க செனட்டர் விசாரணையில், இலஞ்சம் காரணம்

Robert Menendez என்ற அமெரிக்க செனட்டர் மீதும் அவரின் மனைவி மீதும் அமெரிக்க அதிகாரிகள் வழக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். New Jersey மாநிலத்தில் இருந்து Senator ஆக தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்த இவர் ஒரு Democratic கட்சி உறுப்பினராவார். இவர் பணம், தங்கம், ஆடம்பர கார் போன்ற வெகுமதிகளை இலஞ்சமாக பெற்றிருந்தார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இவரின் வீட்டை தேடுதல் செய்த அதிகாரிகள் உடுப்புகளுள் மறைத்து வைத்திருந்த $480,000 பணம், $100,000 பெறுமதியான தங்கம் (gold bars), […]

1 49 50 51 52 53 329