உலக அளவில் Srilankan விமான சேவை 20ம் இடத்தில் 

உலக அளவில் Srilankan விமான சேவை 20ம் இடத்தில் 

2025ம் ஆண்டு உலக அளவில் இலங்கையின் Srilankan விமான சேவை 20ம் இடத்தில் உள்ளது என்கிறது அஸ்ரேலியாவை தளமாக கொண்ட Airlines Rating என்ற அமைப்பு. கடந்த ஆண்டு முதலாவதாக இருந்த Qatar Airways இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட தென் கொரியாவின் Korean Air இந்த ஆண்டு முதலாம் இடத்தை கைப்பற்றி உள்ளது. Korean Air முதலாம் இடத்தை அடைய அந்த விமானங்களில் சாதரண (economy) வகுப்பு ஆசங்களுக்கு இடையேயான இடைவெளி அதிகமாக உள்ளமை பயணிகளின் திருப்திக்கு […]

தென் ஆபிரிக்காவுக்கான உதவிகளை நிறுத்தும் ரம்ப் 

தென் ஆபிரிக்காவுக்கான உதவிகளை நிறுத்தும் ரம்ப் 

அமெரிக்கா தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கிவரும் உதவிகளை சனாதிபதி ரம்ப் வெள்ளிக்கிழமை executive order மூலம் நிறுத்தியுள்ளார். இவ்வாறு உதவிகளை நிறுத்தியமைக்கு ரம்ப் இரண்டு காரணங்கள் கூறியுள்ளார். ஒன்று தென் ஆப்பிரிக்காவில் உள்ள வெள்ளையர்களுக்கு தென் ஆபிரிக்க அரசு துரோகம் செய்கிறது என்பது. வெள்ளையரின் காணிகளை தென் ஆபிரிக்க அரசு பறிக்கிறது என்று கூறுகிறார் ரம்ப். இரண்டாவது இஸ்ரேலின் காசா யுத்தத்தை தென் ஆப்பிரிக்கா எதிர்க்கிறது என்றும் ரம்ப் சாடியுள்ளார் ரம்ப். 2023ம் ஆண்டு அமெரிக்கா தென் ஆப்பிரிக்காவுக்கு […]

27 ஆண்டுகளின் பின் டெல்லி அரசு பா.ஜ கட்சி கையில் 

27 ஆண்டுகளின் பின் டெல்லி அரசு பா.ஜ கட்சி கையில் 

இந்தியாவின் தலைநகர் உள்ள டெல்லி அரசு 27 ஆண்டுகளுக்கு பின் மோதி தலைமையிலான பா.ஜ கட்சி கையில் வீழ்ந்துள்ளது. மொத்தம் 70 ஆசனங்களில் பா.ஜ. 47 ஆசனங்களை கைப்பற்றுகிறது. பா.ஜ. கட்சி டெல்லி ஆட்சியை 1998ம் ஆண்டு இழந்திருந்தது. இதுவரை டெல்லியை ஆண்டுவந்த AAP கட்சி இம்முறை 23 ஆசனங்களை மட்டுமே பெறுகிறது. 2013ம் ஆண்டு முதல் இன்றுவரை AAP கட்சியே டெல்லியை ஆட்சி செய்து வந்திருந்தது. AAP கட்சி தலைவர் Arvind Kejriwal வெற்றி அடையவில்லை. […]

இஸ்ரேலுக்கு ரம்ப் $7 பில்லியன் ஆயுத விற்பனை 

இஸ்ரேலுக்கு ரம்ப் $7 பில்லியன் ஆயுத விற்பனை 

காசாவை தரை மட்டமாக்கிய இஸ்ரேலுக்கு அமெரிக்க சனாதிபதி ரம்ப் மேலும் $7 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்யவுள்ளார். இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள வேளையில், வெள்ளிக்கிழமை இந்த விற்பனைக்கான அறிவிப்பு ரம்ப்  அரசால் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்களில் small-diameter குண்டுகள், 500 இறாத்தல் குண்டுகள், Hellfire ஏவுகணைகள் ஆகியனவும் அடங்கும். ஏற்கனவே பைடென் தடுத்து வைத்திருந்த அமெரிக்காவின் 2,000 இறாத்தல் குண்டுகளும் இஸ்ரேலுக்கு மீண்டும் ரம்பால் விடுவிக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய மின் இணைப்பை துண்டிக்கும் Estonia, Latvia, Lithuania

ரஷ்ய மின் இணைப்பை துண்டிக்கும் Estonia, Latvia, Lithuania

ரஷ்யாவுடனான தமது மின் இணைப்புகளை (power grid) இன்று 7ம் திகதியுடன் எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய 3 Baltic நாடுகளும் துண்டிக்கின்றன. ஞாயிறு 9ம் திகதி முதல் இவை ஐரோப்பிய நாடுகளுடன் தமது மின்னை இணைத்துக்கொள்ளும். அதனால் இன்றுடன் BERELL (Belarus, Russia, Estonia, Latvia, Lithuania) இணக்கம் முறிகிறது. சோவியத் காலத்தில் ரஷ்ய தொழில்நுட்பங்களுடன் ஆரம்பித்த இந்த மின் இணைப்புக்களே இறுதியாக அழிந்துபோகும் ரஷ்யாவுடனான மேற்படி நாடுகளின் தொடர்புகள். BERELL இணக்கப்படி இன்று வரை […]

காசா அமெரிக்கா வசமாகும் என்கிறார் ரம்ப் 

காசா அமெரிக்கா வசமாகும் என்கிறார் ரம்ப் 

காசாவை அமெரிக்கா கைக்கொள்ளும் என்றும் அங்குள்ள பலஸ்தீனர்களை வேறு ஒரு “good , fresh, beautiful  piece of land” நாட்டுக்கு செல்லவேண்டும் என்று கூறுகிறார் அமெரிக்க சனாதிபதி ரம்ப். காசா தற்போது கட்டிட இடிபாட்டு குவியல்களை கொண்ட வாழ முடியாத இடம் என்றும் ஏன் அங்கு பலஸ்தீனர் வாழ விரும்புவார்கள் என்றும் ரம்ப் கூறியபோது ஒரு நிருபர் “ஏனென்றால் அது அவர்களின் நாடு” என்று கூறியுள்ளார். இதற்கு முன்னரும் பலஸ்தீனரை எகிப்தும், ஜோர்டானும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று […]

ரம்பின் புதிய இறக்குமதி வரிக்கு சீனா பதிலடி வரி

ரம்பின் புதிய இறக்குமதி வரிக்கு சீனா பதிலடி வரி

அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீனா மீது நடைமுறை செய்த புதிய 10% இறக்குமதி வரிக்கு பதிலடி வரியாக சீனா தனது புதிய வரிகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிலவகை நிலக்கரி, LNG எரிவாயு மீது 15% புதிய வரியும், மசகு எண்ணெய், விவசாய உபகரணங்கள், பெரிய வகை கார்கள், pickup வாகனங்கள் ஆகியவற்றுக்கு 10% புதிய இறக்குமதி வரியும் சீனா அறிவித்துள்ளது. இந்த வரிகள் பெப்ருவரி 10ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். அத்துடன் […]

கனடா, மெக்ஸிக்கோ 25% வரிகளை இடைநிறுத்தினார் ரம்ப் 

கனடா, மெக்ஸிக்கோ 25% வரிகளை இடைநிறுத்தினார் ரம்ப் 

கனடா, மெக்ஸிக்கோ மீதான புதிய 25% இறக்குமதி வரியை ரம்ப் 30 தினங்களுக்கு இடைநிறுத்தி உள்ளார். Executive order மூலம் நடைமுறை செய்ய முனைந்த புதிய 25% இறக்குமதி வரிகளை அவை நடைமுறைக்கு வருமுன் இன்னோர் executive order மூலம் இடைநிறுத்தி சாதனை படைத்துள்ளார் ரம்ப். இதுவரை ரூடோவுடன் கதைக்க மறுத்த ரம்ப் திங்கள் குறைந்தது இரண்டு தடவைகள் உரையாடியுள்ளார். இரண்டாவது தடவை இருவரும் 45 நிமிடங்கள் உரையாடி உள்ளனர். மெக்ஸிக்கோ அதிபருடனும் ரம்ப் உரையாடியுள்ளார். கனடா […]

ஐரோப்பாவும் ரம்பின் வரிக்கு பதிலடி வழங்க தயார்

ஐரோப்பாவும் ரம்பின் வரிக்கு பதிலடி வழங்க தயார்

கனடா, மெக்ஸிக்கோ, சீனா ஆகிய நாடுகளுக்கு மேலதிக இறக்குமதி வரி விதித்த ரம்ப் விரைவில் (pretty soon) ஐரோப்பிய நாடுகளுக்கும் மேலதிக வரி விதிக்க உள்ளதாக மிரட்டி உள்ளார். அதற்கு தாமும் பதிலடி வழங்க தயார் என்கின்றனர் ஐரோப்பிய நாடுகள். மொத்தம் 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே ரம்பின் கனடா, மெக்ஸிக்கோ, சீனா மீதான தான்தோன்றித்தனமான மேலதிக வரிகளை கண்டித்து உள்ளனர். சுமார் 20 ஐரோப்பிய நாடுகள் தாம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி […]

சீனாவின் Shein இந்தியாவில் மீண்டும் இரகசியமாக சேவையில்

சீனாவின் Shein இந்தியாவில் மீண்டும் இரகசியமாக சேவையில்

2020ம் ஆண்டு மோதி அரசால் இந்தியாவில் TikTok போன்ற சீன நிறுவனங்கள் தடை செய்யப்பட்டபோது சீனாவின் Shein என்ற மலிவு விலை ஆடை உற்பத்தி நிறுவனமும் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் சனிக்கிழமை Shein மீண்டும் இந்தியாவில் சேவை செய்ய ஆரம்பித்துள்ளது. இம்முறை Shein செல்வந்தர் முகேஷ் அம்பானியின் Reliance Industries நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக இயங்குகிறது. Shein நிறுவனத்தின் இந்தியாவுள்ளான இரண்டாம் வருகை முடிந்த அளவு இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Shein சீனாவில் மிகப்பெரிய […]

1 3 4 5 6 7 336