அரபு-இஸ்லாமிய மாநாடு ஒன்றை சவுதி அரேபியா இன்று சனிக்கிழமை நிகழ்த்துகிறது. காசா யுத்தத்துக்கு தீர்வு ஒன்றை காண்பதே இந்த அவசர மாநாட்டின் நோக்கம். மத்திய கிழக்கில் தமது ஆளுமையை வெளிப்படுத்த இதுவே அவர்களுக்கு இறுதி சந்தர்ப்பமாக இருக்கும். அக்டோபர் 7ம் திகதி காமாஸ் செய்த தாக்குதல்களுக்கு சுமார் 1,400 இஸ்ரேலியர்களும், பின் இஸ்ரேல் செய்யும் தாக்குதல்களுக்கு 11,000 பலஸ்தீனர்களும் பலியாகி உள்ளனர். அமெரிக்காவும்,மேற்கும் இஸ்ரேலின் கண்மூடித்தனமான ஆதரிப்பதை இஸ்லாமிய, அரபு நாடுகள் கண்டித்து வருகின்றன. ஆனால் கண்டிப்புக்கு அப்பால் […]
இறுதி நேரத்தில் அமெரிக்க சனாதிபதி பைடெனும், சீன சனாதிபதி சீயும் San Francisco நகரில் வரும் புதன்கிழமை சந்திக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை முதல் San Francisco நகரில் இடம்பெறவுள்ள Asia-Pacific Economic Cooperation (APEC) மாநாட்டுக்கு வரும் சீயுடன் பைடென் உரையாடுவர். சீ செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை APEC அமர்வுகளில் பங்கு கொள்வார். பைடெனும் அங்கு செல்வார். ஆனால் இருவரும் சந்திக்கும் இடம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த சந்திப்பில் பாரிய தீர்மானங்கள் எதுவும் […]
அமெரிக்கா கொழும்பு மேற்கு துறைமுக (West Terminal) கட்டுமானத்துக்கு $553 மில்லியன் கடன் வழங்க முன்வந்துள்ளது. இந்த கடன் அமெரிக்காவின் Development Finance Corp. (DFC) மூலம் வழங்கப்படும். இந்த கடன் இலங்கை அரசுக்கு வழங்கப்படுவது அல்ல, பதிலுக்கு அதானி தலைமையிலான கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்படுவது. கொழும்பு துறைமுகத்தின் West Terminal உரிமை கோத்தபாய அரசால் கேள்விகள் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவின் அதானிக்கு வழங்கப்பட்டு இருந்தது. West Terminal திட்டத்தில் அதானிக்கு 51% உரிமையும், இலங்கையின் John […]
மேற்கு நாடுகள் ரஷ்யா மீது விதித்த தடைகள் காரணமாக ரஷ்யா மீண்டும் தனது சொந்த பயணிகள் விமானங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த முயற்சியின் முதல் படியாக IL-96-400M என்ற அகலமான பயணிகள் விமானத்தை பறந்து பரிசோதனை செய்துள்ளது. சுமார் 370 பயணிகளை காவக்கூடிய இந்த புதிய விமானம் 2,000 மீட்டர் உயரத்திலும், 390 km/h வேகத்திலும் 26 நிமிடங்கள் பறந்துள்ளது. யுக்கிறேன் ஆக்கிரமிப்பிற்கு முன் ரஷ்யா அமெரிக்க Boeing, ஐரோப்பிய Airbus தயாரித்த பயணிகள் விமானங்களையே பயன்படுத்தியது. ஆனால் […]
சில காலத்துக்கு முன் பங்கு சந்தையில் (stock market) $47 பில்லியன் பெறுமதி கொண்டிருந்த WeWork என்ற அமெரிக்க நிறுவனம் கடன் தொல்லையால் முறிந்துள்ளது. நேற்று திங்கள் இந்த நிறுவனம் அமெரிக்காவில் Chapter 11 bankruptcy க்கு பதிவு செய்துள்ளது. 2021ம் ஆண்டு பங்கு சந்தைக்கு வந்திருந்த இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ஆரம்பத்தில் $520.00 வரையில் இருந்தது. ஆனால் இன்று அந்த பங்கு ஒன்றின் விலை $0.80 சதமாக உள்ளது. அதனால் ஏறக்குறைய $47 […]
கடந்த ஒரு மாதமாக காசாவில் இஸ்ரேல் செய்யும் யுத்தம் காசாவை சிறுவர்களின் மயானம் (becoming a graveyard for children) ஆக்கியுள்ளது என்று ஐ. நாவின் செயலாளர் நாயகம் திங்கள் கூறியுள்ளார். காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்துக்கும் ஐ. நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ. நா. செயலாளர் நாயகத்தின் இந்த கூற்றால் விசனம் கொண்டுள்ளது இஸ்ரேல். இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் Eli Cohen ஐ. நா. செயலாளரை “same on you” என்று சாடியுள்ளார். ஒரு மாதத்துக்கு முன் […]
சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட அஸ்ரேலிய பிரதமர் Anthony Albanese சீன சனாதிபதி சீயை பெய்ஜிங்கில் சந்திக்கிறார். 2016ம் ஆண்டுக்கு பின் அஸ்ரேலியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் உறவு நெருக்கமாகி உள்ளது. அஸ்ரேலியாவின் பொருட்கள் மீது சீனா நடைமுறை செய்த மேலதிக இறக்குமதி வரிகளை நீக்குவதே அஸ்ரேலிய பிரதமரின் முதல் நோக்கம். பதிலுக்கு சீயும் சீன நிறுவனங்கள் அஸ்ரேலியாவில் தமது முதலீடுகளை அதிகரிக்க வழி செய்ய பிரதமரை கேட்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரம்ப் காலத்தில் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு ஏற்ப Scott Morrison […]
ஆப்கானிஸ்தானின் தலபான் அந்த நாட்டில் ஒபியம் (Opium) பயிர் செய்கைக்கு தடை செய்ததால் ஆப்கானிஸ்த்தான் ஏற்றுமதி செய்யும் ஒப்பியத்தின் அளவு 95% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று கூறுகிறது ஐ.நா. 2022ம் ஆண்டு அங்கு 233,000 hectare இல் ஒபியம் பயிரிடப்பட்டது என்றும் இந்த ஆண்டில் 10,800 hectare இல் மட்டுமே ஒபியம் பயிரிடப்பட்டது என்றும் ஐ.நா. கூறுகிறது. தலபானின் ஆன்மீக தலைவர் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒபியம் பயிரிடுகையை தடை செய்திருந்தார். அதனாலேயே அங்கு ஓபிய பயிரிடல் தடை […]
அமெரிக்கா, நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன அடங்கிய மேற்கு யுக்கிரேனை மெல்ல கைவிடுவதாக விசனம் கொண்டுள்ளார் யுகின்ரேன் சனாதிபதி சேலன்ஸ்கி. மேற்கின் தூண்டுதல் காரணமாக ரஷ்யாவுடன் மோதிய சேலன்ஸ்கி தற்போது உண்மையை உணர்ந்து கவலை கொள்வது வியப்புக்குரியது அல்ல. இதை எதிர்பாராது தனது நாட்டை பெரும் அழிவுக்குள் தள்ளியது அவரின் மடமை. TIME வெளியீட்டுக்கு வழங்கிய நேர்முகம் ஒன்றில் யுக்கிரேன் ரஷ்யாவுடனான யுத்தத்தில் வெற்றி அடையும் என்று மேற்கு நம்பவில்லை என்று சேலன்ஸ்கி கவலை கொண்டுள்ளார். தனது கூற்றில் […]
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் இடம்பெறும் காசா யுத்தம் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் பைடெனுக்கு பாதகமாக அமையலாம் என்று கருதப்படுகிறது. 2020ம் ஆண்டு இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் பைடேன் Michigan மாநிலத்தில் 2,804,040 (50.62%) வாக்குகள் பெற்று அந்த மாநிலத்தின் 16 electoral வாக்குகளையும் பெற்று இருந்தார். ரம்ப் 2,649,852 (47.84%) வாக்குகள் பெற்று அந்த மாநிலத்தில் 0 electoral வாக்குகளை பெற்று இருந்தார். 2016ம் ஆண்டு ரம்ப் இங்கு 10,000 மேலதிக வாக்குகளை மட்டும் பெற்று […]