வடக்கு காசாவில் உள்ள காசாவின் மிக பெரிய al-Shifa வைத்தியசாலை ஒரு dead zone என்று The World Health Organization (WHO) இன்று கூறியுள்ளது. இஸ்ரேல் இந்த வைத்தியசாலைக்கு கீழ் ஹமாஸ் நிலக்கீழ் சுரங்கங்கள் பல கொண்ட தனது கட்டளை தலைமையகத்தை கொண்டுள்ளது முன்னர் திடமாக கூறி அந்த வைத்தியசாலையை ஆக்ரமித்து தேடுதல் செய்தது. ஆனால் தற்போது ஹாமாஸின் தலைமையகம் இருந்ததற்கான ஆதாரம் எதையும் முன்வைக்காத இஸ்ரேல் படைகள் அந்த வைத்தியசாலையை விட்டு அனைவரையும் வெளியேற கூறியுள்ளது. […]
உலகின் முதலாவது செல்வந்தரான Elon Musk தனது X என்று அழைக்கப்படும் முன்னாள் Twitter பதிவில் இஸ்ரேல் காசாவில் பலஸ்தீனர்களை பழிவாங்கும் நோக்கில் செய்யும் தாக்குதல்களை கண்டித்து பதிவு செய்த பின் பல அமெரிக்க நிறுவனங்கள் X இல் விளம்பரங்கள் செய்வதை இடை நிறுத்தி உள்ளன. IBM, Comcast, Paramount, Lionsgate, The European Commission ஆகியன ஏற்கனவே தமது விளம்பரங்களை X இல் பதிவு செய்வதை நிறுத்தி உள்ளன. Facebook, X போன்ற நிறுவனங்கள் விளம்பரங்கள் […]
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், இமாலய பகுதியில் கடந்த ஞாயிறு குகை பாதை ஒன்றில் அகப்பட்ட 40 பணியாளர்களை காப்பாற்றும் பணி மீண்டும் இடைநிறுத்தப்பட்டு உள்ளது. மலை மேலும் உடையும் சத்தம் கேட்டதாலேயே மீட்பு பணி நிறுத்தப்பட்டு உள்ளது. அகப்பட்டு உள்ளவர்களுக்கு நீர், உணவு, மறுத்து ஆகியன வேறு சிறு குழாய் மூலம் தொடர்ந்தும் அனுப்பப்படுகிறது. அகப்பட்டு உள்ளவர்களுடன் walkie-talkie மூலம் தொடர்புகளும் பேணப்படுகிறது. அகப்பட்டவர் வெளியேற மனிதர் நுழைந்து செல்லக்கூடிய குழாய் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை […]
ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய SAS பிரிவு விசேட படைகள் செய்த படுகொலைகளை மறைத்த பிரித்தானிய இராணுவ அதிகாரி ஜெனரல் Gwyn Jenkins என்று தற்போது அறியப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு ஆப்கானித்தானில் பிரித்தானிய SAS படைகள் கை விலங்குடன் இருந்த ஆப்கானிஸ்தான் ஆண்களையும் சுட்டு கொன்றுள்ளன. அத்துடன் போராடும் வயதுடைய ஆண்கள் அனைவரையும் சுடலாம் என்ற கொள்கையையும் SAS கொண்டிருந்தது. அந்த கொள்கையின்படி 15 வயதுக்கு மேலான ஆண்கள் அனைவ்ரும் போராடும் வயதுடையோர். பிரித்தானிய இராணுவ சட்டப்படி இராணுவம் செய்யும் […]
அமெரிக்க இராணுவத்துக்கும் சீன இராணுவத்துக்கும் இடையேயான நேரடி தொடர்பு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அமெரிக்க சனாதிபதி பைடெனும் சீன சனாதிபதி சீயும் இந்த இந்த தீர்மானத்தை நேற்று புதன் எடுத்துள்ளனர். கலிபோர்னியாவின் San Francisco நகரில் இடம்பெறும் APEC நிகழ்வில் கலந்து கொள்ளும் இவர்கள் தமது நேரடி சந்திப்பின் பின் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். 2022ம் ஆண்டு அமெரிக்காவின் House speaker நான்சி பெலோஷி தாய்வான் சென்றபின் அதற்கு தண்டனையாக சீனா இரண்டு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான நேரடி தொடர்பை துண்டித்து […]
இலங்கையின் பொருளாதார அழிவுக்கு இரண்டு முன்னாள் சனாதிபதிகளான கோத்தபாயா, மகிந்த உட்பட 13 தலைவர்களும், உயர் அதிகாரிகளும் காரணம் என்று இலங்கையின் உயர் நீதிமன்றம் செவ்வாய் தீர்ப்பு கூறியுள்ளது. Transparency International Sri Lanka இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த தீர்ப்பு மேற்படி 13 தலைவர்கள் மீது தண்டனை எதையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்த தண்டனையை பயன்படுத்தி வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம். வழக்கை தாக்கல் செய்த TISL அமைப்பின் செலவுகளை ஈடு செய்ய மட்டும் Rs […]
காசாவில் வாழும் அனைத்து பலஸ்தீனர்களையும் வேறு நாடுகளுக்கு கடத்த இஸ்ரேல் முனைகிறது. இஸ்ரேலின் ஐ.நா.வுக்கான முன்னாள் தூதுவரான Danny Danon என்பவரும், Ram Ben-Barak என்ற இஸ்ரேலின் மொசாட் உளவு படையின் முன்னாள் deputy director உம் இணைந்து அமெரிக்காவின் The Wall Street Journal பத்திரிகைக்கு திங்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்த திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தற்போது Bezalel Smotrich என்ற இஸ்ரேலின் நிதி அமைச்சரும் ஆதரித்து உள்ளார். நிதி அமைச்சர் இந்த திட்டத்தை “right humanitarian solution” […]
பிரித்தானிய உள்துறை செயலாளர் (Home Secretary) Suella Braverman இன்று திங்கள் காலை பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் லண்டன் போலீசார் பலஸ்தீனரின் ஆர்பாட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என்று கூறியமையே இவரின் பதவி பறிப்புக்கு காரணம். இவர் முன்னரும் சில கட்சிக்கு முரணான கருத்துக்களை வெளியிட்டு இருந்தவர். James Cleverly தற்போது Braverman பதவியை பெற்றுள்ளார். அத்துடன் முன்னாள் பிரதமர் David Cameron மீண்டும் ஆட்சிக்கு இழுக்கப்பட்டு உள்ளார். Cameron பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளர் ஆக பதவி ஏற்கிறார். ஆபிரிக்கா மூல பிரித்தானிய […]
சூழல் ஆர்வலர் கிரேரா (Greta Thunberg) காசாவில் துன்புறும் பலஸ்தீனருக்கு ஆதரவாக குரல் எழுப்ப அதை விருப்பத்தை ஒருவர் மேடைக்கு சென்று கிரேராவின் ஒலிவாங்கியை பறித்துள்ளார். நேற்று ஞாயிறு Amsterdam நகரில் இடம்பெற்ற தனது சூழல் வெப்பமாதல் தொடர்பான நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள கிரேரா இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் பலஸ்தீனர்களையும் அழைத்திருந்தார். அவர்கள் பலஸ்தீனர் ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் எழுப்பினர். இதை விரும்பாத ஒருவர் மேடைக்கு சென்று கிரேராவின் ஒலிவாங்கியை பறித்துள்ளார். இவரை விரைந்து கட்டுப்படுத்திய அதிகாரிகள் ஒலிவாங்கியை மீண்டும் […]
அமெரிக்கா தனது புதிய குண்டு வீச்சு விமானத்தை நேற்று வெள்ளிக்கிழமை பறந்து பரிசோதனை செய்துள்ளது. B-21 (அல்லது Raider) என்ற இந்த விமானம் ஒன்றின் விலை பகிரங்கம் செய்யப்படவில்லை. ஆனாலும் ஆய்வாளர் இந்த விமானம் ஒன்றின் விலை சுமார் $750 மில்லியன் ($0.75 பில்லியன்) ஆக இருக்கும் என்று கணித்துள்ளனர். அமெரிக்க விமானப்படை சுமார் 100 புதிய B-21 விமானங்களை அடுத்த 30 ஆண்டுகளில் கொள்வனவு செய்யும் என்று கூறப்படுகிறது. சாதாரண மற்றும் அணு குண்டுகளை வீச […]