Shohei Ohtani என்ற ஜப்பானிய baseball வீரர், வயது 29, அமெரிக்காவின் Dodgers அணியில் 10 ஆண்டுகளுக்கு விளையாட $700 மில்லியன் ஊதியம் பெறுகிறார். விளையாட்டு துறையில் இது மிகப்பெரிய ஊதியமாகும். தற்போது Los Angeles நகரத்தில் உள்ள Angeles அணி சார்பில் விளையாடும் இவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு Dodgers சார்பில் விளையாடுவர். இவர் பந்தை எறிதல் (pitch), பந்தை அடித்தல் (bat) இரண்டிலும் வல்லமை கொண்டவர். ஆனால் முழங்கையில் செய்த அறுவை சிகிச்சை காரணமாக […]
பிரித்தானியாவின் Jurassic Coast கடலோரம் சுமார் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான pliosaur என்ற வகை கடல் வாழ் விலங்கின் தலை எச்சம் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தலை 2 மீட்டர் நீளம் கொண்டது. அதனால் இந்த கடல் வாழ் உயிரினத்தின் மொத்த நீளம் 10 முதல் 12 மீட்டராக இருந்திருக்கும் என ஊகிக்கப்படுகிறது. இதன் மிகுதி உடல் அவ்விடத்தில் காணப்படவில்லை. இதற்கு 130 பற்கள் உண்டு. இதன் கடிக்கும் பலம் 33,000 N (newtons) என்றும் […]
புதன்கிழமை ஐ.நா. செயலாளர் Antonio Guterres தனக்கு வழங்கப்பட்ட Article 99 என்ற தனித்துவமான அதிகாரத்தை நடைமுறை செய்து ஐ.நா. பாதுகாப்பு சபையை கூடி காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை அறிவிக்க கேட்டிருந்தார். ஐ.நா. செயலாளர் அறிவிப்பை அடிப்படியாக கொண்டு மத்திய கிழக்கு நாடான UAE பாதுகாப்பு சபையின் வாக்கெடுப்பை நடைமுறை செய்துள்ளது. அதன்படி இன்று பாதுகாப்பு சபை வாக்கெடுப்பு செய்கிறது. அமெரிக்கா உட்பட பாதுகாப்பு சபையின் 5 நிரந்தர உறுப்பினர் நாடுகள் தமது veto வாக்கை பயன்படுத்தி […]
கனடாவின் Toronto மாநகர போலீசார் பெரும் வாகன திருட்டு கும்பல் ஒன்றை கைது செய்துள்ளது. Project Safai என்ற பெயர் கொண்ட இந்த விசாரணையை போலீசார் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பித்து இருந்தனர். இவர்களிடம் இருந்து C$1.5 மில்லியன் பெறுமதியான பணம், வாகனம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். ServiceOntario என்ற அரச ஊழியர் சிலரும் இந்த திருட்டில் பங்கெடுத்து உள்ளனர். இவர்கள் Ontario மாநில அரசின் போக்குவரத்து அமைச்சில் இருந்து குறி வைக்கப்படும் வாகனங்களின் உரிமையாளர், […]
காசாவில் இடம்பெறும் மானிட பேரழிவை (humanitarian catastrophe) நிறுத்தும்படி ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு (Security Council) எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐ.நா. செயலாளர் Antonio Guterres. மிக நீண்ட காலம் பயன்படுத்தாத ஐ.நாவின் Article 99 மூலமே செயலாளர் இந்த எச்சரிக்கையை பாதுகாப்பு சபைக்கு விடுத்துள்ளார். மிக குறைந்த அளவிலேயே உணவுகளையும், எரிபொருளை இஸ்ரேல் கசாவுள் அனுமதிக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார் ஐ.நா. செயலாளர். விரைவில் காசாவில் நோய்கள் பரவலாம் என்றும் அந்த நோய்கள் மேலும் பலரை பலியாக்கும் […]
ரஷ்யாவின் நான்கு Sukhoi-35s வகை யுத்த விமானங்கள் பாதுகாப்பு வழங்க Ilyushin-96 வகை விமானம் ஒன்றில் ரஷ்ய சனாதிபதி சவுதி சென்றுள்ளார். யூக்கிறேன் ஆக்கிரமிப்புக்கு பின் பூட்டின் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார். பூட்டின் சவுதி இளவரசர் Mohammed bin Salman உடன் பேச்சுவார்த்தைகள் செய்வார். குறிப்பாக எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துவதே இருவரின் பிரதான நோக்கமாகும். சவுதி செல்லும் வழியில் பூட்டின் முதலில் UAE சென்று இருந்தார். அங்கு பூட்டின் அபுதாபி சனாதிபதியுடன் உரையாடி இருந்தார். கடந்த […]
இதுவரை சுமார் 15,000 பலஸ்தீனர் பலியாகி உள்ளதாக காசா சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இத்தொகையில் இறந்த ஹமாஸ் குழுவினரும் அடங்குவாரா என்று பிரித்து கூறப்படவில்லை. இஸ்ரேல் பலஸ்தீனர் பக்கத்தில் எத்தனைபேர் பலியாகினர் என்று இதுவரை கூறாவிட்டாலும் மேற்படி தொகையில் 5,000 பேர் ஹமாஸ் உறுப்பினராக இருக்கும் என்றும் மரணித்த பலஸ்தீனர் பொதுமக்கள் தொகை 10,000 ஆக இருக்கும் என்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி உள்ளார் Jonathan Conricus என்ற இஸ்ரேலின் இராணுவ பேச்சாளர். இவ்வாறு 1 […]
யூக்கிரேனுக்கான அமெரிக்காவின் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் டிசம்பர் மாதத்திற்கு பின் அற்று போகும் அபாயம் உள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அமெரிக்க காங்கிரசுக்கு இன்று திங்கள் ஆனுப்பிய அறிக்கை ஒன்றிலேயே இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. யூக்கிரேன், இஸ்ரேல் உட்பட பல நாடுகளுக்கு உதவ சனாதிபதி பைடென் $106 பில்லியன் வழங்குமாறு அமெரிக்க காங்கிரசை கேட்டிருந்தார். ஆனால் அதற்கு காங்கிரசில் போதிய ஆதரவு இருக்கவில்லை. பதிலுக்கு காங்கிரசின் அங்கமான Senate இஸ்ரேலுக்கு மட்டும் உதவி வழங்க முன்வந்தது. அதை […]
மாலைதீவில் இருந்து தனது படைகளை பின்வாங்க இந்தியா இணங்கி உள்ளது என்று மாலைதீவின் சனாதிபதி Mohamed Muizzu இன்று ஞாயிறு கூறியுள்ளார். COP28 மாநாட்டின் அமர்வுக்கு சென்ற Muizzu அங்கு வந்திருந்த இந்திய பிரதமர் மோதியுடன் உரையாடிய பின்னரே மேற்படி தீர்மானத்தை பகிரங்கம் செய்துள்ளார். ஆனால் மோதி இது தொடர்பாக கருத்து எதையும் தெரிவித்து இருக்கவில்லை. மாலைதீவில் நிலை கொண்டுள்ளது சுமார் 77 இந்திய இராணுவம் மட்டுமே என்றாலும், அவை வெளியேற இருப்பது மாலைதீவில் இந்தியாவின் ஆளுமை நீங்கி மீண்டும் சீன […]
உலக அளவில் வாழ்க்கை செலவு மிக அதிகமான நகராக சிங்கப்பூராக மீண்டும் அறியப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் 9 தடவைகள் சிங்கப்பூர் வாழ்க்கை செலவில் முதலாம் இடத்தில் இருந்துள்ளது. மேற்படி ஆய்வை Economist Intelligence Unit (EIU) என்ற ஆய்வு அமைப்பு 173 நாடுகளில் உள்ள நகரங்களை உள்ளடக்கி செய்து உள்ளது. இந்த ஆண்டு சிங்கப்பூர் சுவிஸ் நாட்டின் சூரிச் நகருடன் முதலாம் இடத்தை அடைந்துள்ளது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரம் 3ம் இடத்தில் உள்ளது. ஹாங்காங் […]