Sinopec $4.5 பில்லியன் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு

Sinopec $4.5 பில்லியன் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு

சீனாவின் Sinopec நிறுவனம் இலங்கையில் $4.5 பில்லியன் செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை இலங்கையில் அமைக்க உள்ளது. இந்த செய்தியை Reuters செய்தி சேவைக்கு இலங்கையின் எரிபொருள் அமைச்சர் Kanchana Wijiesekera தெரிவித்துள்ளார். இந்த நிலையம் தொடர்ந்தும் அபிவிருத்தி செய்யப்பட்டால் சீனாவின் முதலீடு மேலும் அதிகரிக்கும். இந்த முதலீடு சீனாவின் Belt and Road திட்டத்தின் கீழ் அமைகிறது. Sinopec ஏற்கனவே இலங்கையில் 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க அனுமதி கொண்டுள்ளது. Sinopec சவுதியிலும் எண்ணெய் சுத்திகரிப்பு […]

பர்மா எல்லையில் சீன இராணுவம் பயிற்சி

பர்மா எல்லையில் சீன இராணுவம் பயிற்சி

பர்மா (மியன்மார்) எல்லையோரம் சீன இராணுவம் சனிக்கிழமை முதல் இராணுவ பயிற்சிகளை செய்து வருகிறது. வழமையாக பர்மாவின் இராணுவம் சீனாவுடன் நல்ல உறவை பேணினாலும், எல்லை பகுதியில் ஆட்சி செய்யும் warlords மீது தற்போது விசனம் கொண்டுள்ளது சீனா. வெள்ளிக்கிழமை பொருட்களை ஏற்றி சென்ற சீனாவின் பார வாகனம் ஒன்று Muse என்ற பர்மாவின் வடகிழக்கு நகரில் தீயிடப்பட்டது. சீனா மீது விசனம் கொண்ட warlords இதை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அண்மையில் Muse நகருக்கு அருகில் உள்ள Laukkaing […]

நெதர்லாந்தில் கடும்போக்கு கட்சி ஆட்சியில்

நெதர்லாந்தில் கடும்போக்கு கட்சி ஆட்சியில்

நெதர்லாந்தில் கடும்போக்கு கொள்கை கொண்ட Geert Wilders தலைமையிலான கட்சி ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இந்த கட்சி 37 ஆசனங்களை வெல்கிறது.  இரண்டாம் நிலையில் உள்ள கூட்டணி 25 ஆசனங்களையும், தற்போதைய பிரதமரின் கூட்டணி 20 ஆசனங்களையும் பெறுகின்றன. Geert Wilders ஒரு அகதிகள் எதிர்ப்பு, குடிவரவாளர் எதிர்ப்பு கொள்கைகளை கொண்டவர். இவர் “நெதர்லாந்து மீண்டும் Dutch மக்களிடம் கையளிக்கப்படும்” என்றும் “சுனாமி போல் வரும் அகதிகள்” தடுக்கப்படுவர் என்றும் கூறியிருந்தார். அத்துடன் இவர் நெதர்லாந்து யுக்கிரேனுக்கு வழங்கும் […]

மீண்டும் OpenAI நிறுவனத்தின் CEO ஆகிறார் Altman

மீண்டும் OpenAI நிறுவனத்தின் CEO ஆகிறார் Altman

Sam Altman மீண்டும் OpenAI நிறுவனத்தின் CEO பதவியை அடைய உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை OpenAI நிறுவனத்தின் board திடீரென காரணம் எதுவும் இன்றி OpenAI நிறுவனத்தை ஆரம்பித்த Sam Altman என்ற CEO வை பதவி நீக்கம் செய்தது. OpenAI இல் முதலீடு செய்திருந்த Microsoft திங்கள்கிழமை Altman க்கு பதவி வழங்கியது. பெருமளவு OpenAI ஊழியர்களும் தாமும் OpenAI ஐ விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்தனர். மிரண்டுபோன OpenAI புதிய board ஐ அமர்த்த, […]

அமெரிக்காவிலும் சீக்கியரை கொல்ல இந்தியா முனைந்தது?

அமெரிக்காவிலும் சீக்கியரை கொல்ல இந்தியா முனைந்தது?

அமெரிக்காவிலும் சீக்கியர் ஒருவரை படுகொலை செய்ய இந்தியா முனைந்து இருந்தது என்றும் அதை அறிந்த அமெரிக்கா இந்தியாவை கண்டித்து இருந்தது என்றும் Financial Times செய்தி நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்கரான Gurpatwant Singh Pannun என்பவரே மேற்படி படுகொலை முயற்சியின் குறி என்றும் கூறப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோதி பைடெனின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்ற பின்னரே அமெரிக்காவின் எச்சரிக்கை பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் எச்சரிக்கையால் இந்தியா பின்வாங்கியதா அல்லது அமெரிக்காவின் FBI காவல் அதிகாரிகள் முயற்சியை முறியடித்தார்களா என்பது […]

பலஸ்தீன ஆதரவால் இன்னொரு நடிகையும் புறக்கணிப்பு

பலஸ்தீன ஆதரவால் இன்னொரு நடிகையும் புறக்கணிப்பு

காசா பலஸ்தீனருக்கு ஆதரவளித்த Melissa Barrera என்ற ஹாலிவுட் (Hollywood) நடிகை Scream என்ற திரைப்பட தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  இந்த நடிகை காசாவில் நிகழ்வது “genocide and ethnic cleansing” என்று கூறும் வேறு ஒருவரின் பதிவு ஒன்றை தனது பதிவில் மீண்டும் மறுபதிவு (resharing) செய்தே தண்டிப்புக்கு காரணமாகும். அமெரிக்காவில் ஹாலிவுட், வர்த்தகத்தின் மையமான Wall Street, அரசியல் கட்சிகள் ஆகியவை யூதர்களின் ஆளுமையில் உள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக குரல் எழுப்பும் எவரும் இங்கு வளர […]

காசா மீதான தாக்குதலை BRICS கண்டிக்கிறது

காசா மீதான தாக்குதலை BRICS கண்டிக்கிறது

Brazil, Russia, India, China, South Africa ஆகிய நாடுகளை உள்ளடக்கிய BRICS நாடுகள் காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நேற்று செவ்வாய் கண்டித்து உள்ளன. இதுவரை பொருளாதாரத்தில் மட்டும் கருத்தாக இருந்த BRICS முதல் தடவையாக ஒரு யுத்தம் தொடர்பாக ஆராய அமர்ந்துள்ளது. தற்போது உலகின் 40% மக்கள் BRICS நாடுகளில் உள்ளனர். 2024ம் ஆண்டில் மீண்டும் அதிகரிக்கும். பலஸ்தீனரை அவர்களின் சொந்த மண்ணில் இருந்து இஸ்ரேல் கட்டாயப்படுத்தி நகர்த்துவது war crime என்றும் […]

விரைவில் ஒரு இஸ்ரேல்-ஹமாஸ் யுத்த நிறுத்தம்?

விரைவில் ஒரு இஸ்ரேல்-ஹமாஸ் யுத்த நிறுத்தம்?

விரைவில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்று நடைமுறைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இந்த இணக்கத்தை கட்டார் அரசு முன் நின்று செய்கிறது. இந்த உடன்படிக்கையின்படி  ஹமாஸ் தான் அக்டோபர் 7ம் திகதி கைப்பற்றி உள்ள பணய கைதிகளில் சிறுவர்களும், பெண்களும் அடங்க 50 பேரை விடுதலை செய்யக்கூடும்.  பதிலுக்கு இஸ்ரேல் 3 முதல் 5 தினங்களுக்கு காசா மீதான தாக்குதல்களையும் இஸ்ரேல் நிறுத்தும். அத்துடன் விடுதலை செய்யப்படும் ஒவ்வொரு இஸ்ரேலியர்க்கும் 3 பலஸ்தீனரை விடுதலை செய்யும். […]

AI ஐ பெரும் குழப்பத்துள் அமுக்கிய HI

AI ஐ பெரும் குழப்பத்துள் அமுக்கிய HI

Artificial Intelligence (AI) விரைவில் மனிதனை வென்றுவிடும் என்று கதைகள், கட்டுரைகள் நம்ப வைக்கும் இந்த காலத்தில் ChatGPT என்ற முன்னனி AI நிறுவனத்துள் ஏற்பட்டுள்ள குழப்பம் Human Intelligence (HI) மிகவும் பொல்லாதது, ஆபத்தானது, வஞ்சகம் நிறைந்தது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. OpenAI யை உருவாக்கும் ChatGPT என்ற நிறுவனத்தின் CEO பதவியில் இருந்த Sam Altman என்பவரை ChatGPT நிறுவனத்தின் Board of Directors அண்மையில் பதவி நீக்கி இருந்தனர். அவர்களுக்கு சட்டப்படி அந்த […]

அரபு, இஸ்லாமிய தலைவர்கள் பெய்ஜிங்கில்

அரபு, இஸ்லாமிய தலைவர்கள் பெய்ஜிங்கில்

சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi இன்று திங்கள் காசா யுத்தம் தொடர்பாக உரையாட சவுதி, ஜோர்டான், எகிப்து, இந்தோனேசியா, PA, Organization of Islamic Cooperation தலைவர் ஆகியோரை பெய்ஜிங் அழைத்து  உறையாடி உள்ளார். உலக நாடுகள் விரைந்து காசா யுத்தத்துக்கு தீர்வு ஒன்றை கண்டு அழிவை நிறுத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். சீனா உடனடி யுத்த நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேல் பலஸ்தீனரை “collective punishment” மூலம் தண்டிப்பதையும் நிறுத்த வேண்டும் […]

1 42 43 44 45 46 329