முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் அடுத்த ஆண்டு மீண்டும் சனாதிபதியாக தெரிவு செய்யப்படலாம் என்ற பயம் கொண்ட அமெரிக்க காங்கிரஸ் அவரிடம் இருந்து NATO அணியை பாதுகாக்க சட்டம் ஒன்றை நடைமுறை செய்கிறது. அண்மையில் அமெரிக்கா சட்டமாக்கிய $886 பில்லியன் பெறுமதியான National Defense Authorization Act அதனுள் ரம்பிடம் இருந்து, ஆனால் அவரின் பெயரை குறிப்பிடாது, NATO வை பாதுகாக்கும் சட்டத்தையும் கொண்டுள்ளது. இந்த சட்டப்படி காங்கிரசின் அனுமதி இன்றி அல்லது 2/3 Senate ஆதரவு […]
ஜூலை முதல் செப்டம்பர் வரையான கடந்த காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6% ஆல் வளர்ந்து உள்ளது என்று இலங்கையின் புள்ளிவிபர திணைக்களம் இன்று வெள்ளி கூறியுள்ளது. 2021ம் ஆண்டு இறுதிக்கு பின்னர் காலாண்டு ஒன்றில் பொருளாதாரம் வளர்ச்சி அடைவது இதுவே முதல் தடவை. இந்த காலாண்டில் விவசாய துறை 3% ஆலும், சேவை துறை 1.3% ஆலும், தொழிற்சாலை உற்பத்தி 0.3% ஆலும் வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனாலும் இந்த ஆண்டின் 12 மாதங்களில் பொருளாதாரம் 3.6% ஆல் […]
சுமார் $1.4 பில்லியன் வெகுமதியை கொண்ட Raymond Group என்ற நிறுவன குடும்பம் விவாகரத்தில் மாண்டுள்ளது. Gautam Singhania என்பவருக்கும் அவரின் மனைவி Nawaz Modi என்பவருக்கும் இடையேயான விவாகரத்து சண்டையே தற்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த Raymond Group நிறுவனத்தின் கடந்த தீபாவளி நிகழ்வுக்கு மனைவி Modi அனுமதிக்கப்படாதமை விவகாரத்து விசயம் உக்கிரம் அடைந்ததை காட்டியுள்ளது. மனைவியுடன் அவர்களின் இரண்டு பெண் சிறுமிகளும் குடும்ப சொத்தின் 75% பங்கை கேட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. […]
ஊழல் விசாரணை காரணமாக ஜப்பானில் 4 அமைச்சர்கள் பதவி விலகி உள்ளனர். அத்துடன் 6 உதவி அமைச்சர்களும் கூடவே பதவி விலகி உள்ளனர். இந்த விசாரணையில் சுமார் $3.4 மில்லியன் பணம் அடங்கி உள்ளது. Hirokazu Matsuno (Chief Cabinet Secretary), Yasutoshi Nishimura (Economy and Industry அமைச்சர்), Junji Suzuki (Internal Affairs அமைச்சர்), Ichiro Miyashita (Agriculture அமைச்சர்) ஆகியோரே பதவி விலகிய அமைச்சர்கள். இந்த விசாரணையால் பிரதமர் Fumio Kishida வின் […]
அக்டோபர் மாதம் 7ம் திகதி பலஸ்தீன ஆயுத குழுவான ஹமாஸ் செய்த மிகப்பெரிய தாக்குதலின் பின் இஸ்ரேல் ஹமாஸை முற்றாக அழிக்க சத்தியம் கொண்டது. இஸ்ரேல் முதலில் அமெரிக்கா வழங்கிய குண்டுகளை அமெரிக்கா வழங்கிய யுத்த விமானங்கள் மூலம் வீசி, தனது தரப்பில் பெரும் அழிவுகள் இன்றி, காசாவின் பல இடங்களை தரைமட்டம் ஆக்கியது. ஆனால் பின்னர் காசாவுள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் மெல்ல இழப்புகளை சந்திக்க ஆரம்பித்துள்ளது. நேற்று செவ்வாய் மட்டும் இஸ்ரேல் 10 படையினரை இழந்துள்ளது. […]
இந்திய பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவில் இயங்கும் Disinfo Lab என்ற செய்திகளை ஆய்வு செய்யும் அமைப்பு உண்மையில் பா.ஜ. கட்சிக்கு அல்லது பிரதமர் மோதிக்கு பாதகமான செய்திகளை, கருத்துக்களை வெளியிடுவோரை பொய்யர்கள் என்று பரப்புரை செய்வதையே ஒரே நோக்கமாக கொண்டது என்று கூறுகிறது அமெரிக்காவின் The Washington Post செய்தி நிறுவனம். Disinfo Lab வெளியிடும் ஆதாரம் அற்ற கருத்துக்களை பல பா.ஜ. அரசியல்வாதிகள், ஆதரவாளர் மீண்டும், மீண்டும் Retweet செய்து அந்த ஆதாரம் அற்ற செய்திகளை வேகமாக […]
Shohei Ohtani என்ற ஜப்பானிய baseball வீரர், வயது 29, அமெரிக்காவின் Dodgers அணியில் 10 ஆண்டுகளுக்கு விளையாட $700 மில்லியன் ஊதியம் பெறுகிறார். விளையாட்டு துறையில் இது மிகப்பெரிய ஊதியமாகும். தற்போது Los Angeles நகரத்தில் உள்ள Angeles அணி சார்பில் விளையாடும் இவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு Dodgers சார்பில் விளையாடுவர். இவர் பந்தை எறிதல் (pitch), பந்தை அடித்தல் (bat) இரண்டிலும் வல்லமை கொண்டவர். ஆனால் முழங்கையில் செய்த அறுவை சிகிச்சை காரணமாக […]
பிரித்தானியாவின் Jurassic Coast கடலோரம் சுமார் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான pliosaur என்ற வகை கடல் வாழ் விலங்கின் தலை எச்சம் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தலை 2 மீட்டர் நீளம் கொண்டது. அதனால் இந்த கடல் வாழ் உயிரினத்தின் மொத்த நீளம் 10 முதல் 12 மீட்டராக இருந்திருக்கும் என ஊகிக்கப்படுகிறது. இதன் மிகுதி உடல் அவ்விடத்தில் காணப்படவில்லை. இதற்கு 130 பற்கள் உண்டு. இதன் கடிக்கும் பலம் 33,000 N (newtons) என்றும் […]
புதன்கிழமை ஐ.நா. செயலாளர் Antonio Guterres தனக்கு வழங்கப்பட்ட Article 99 என்ற தனித்துவமான அதிகாரத்தை நடைமுறை செய்து ஐ.நா. பாதுகாப்பு சபையை கூடி காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை அறிவிக்க கேட்டிருந்தார். ஐ.நா. செயலாளர் அறிவிப்பை அடிப்படியாக கொண்டு மத்திய கிழக்கு நாடான UAE பாதுகாப்பு சபையின் வாக்கெடுப்பை நடைமுறை செய்துள்ளது. அதன்படி இன்று பாதுகாப்பு சபை வாக்கெடுப்பு செய்கிறது. அமெரிக்கா உட்பட பாதுகாப்பு சபையின் 5 நிரந்தர உறுப்பினர் நாடுகள் தமது veto வாக்கை பயன்படுத்தி […]
கனடாவின் Toronto மாநகர போலீசார் பெரும் வாகன திருட்டு கும்பல் ஒன்றை கைது செய்துள்ளது. Project Safai என்ற பெயர் கொண்ட இந்த விசாரணையை போலீசார் இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பித்து இருந்தனர். இவர்களிடம் இருந்து C$1.5 மில்லியன் பெறுமதியான பணம், வாகனம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். ServiceOntario என்ற அரச ஊழியர் சிலரும் இந்த திருட்டில் பங்கெடுத்து உள்ளனர். இவர்கள் Ontario மாநில அரசின் போக்குவரத்து அமைச்சில் இருந்து குறி வைக்கப்படும் வாகனங்களின் உரிமையாளர், […]