Suchana Seth என்ற அம்மா, வயது 39, தனது 4 வயது மகனை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் கர்நாடகா மாநிலத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் பெங்களூரை தளமாக கொண்ட The Mindful AI Lab என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் CEO ஆவார். இவர் அருகில் உள்ள கோவா மாநிலத்துக்கு சனிக்கிழமை தனது மகனுடன் சென்றுள்ளார். ஆனால் திங்கள் அவர் வீடு திரும்பும் வேளையில் அவரின் மகன் அவருடன் இருக்கவில்லை. விடுதி அறையில் இரத்தக்கறை இருந்ததை […]
இலங்கையின் தெற்கே உள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் (Hambantota International Port) கடந்த 2023ம் ஆண்டில் 26% வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த துறைமுகம் 99 ஆண்டுகள் குத்தகை மூலம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக கார், பஸ் போன்ற Ro/Ro (Roll-on/roll-off) வகை பொருட்களையே இந்த துறைமுகம் அதிகம் கையாளுகிறது. இந்த துறைமுகம் கடந்த ஆண்டில் 700,000 அலகுகளை கையாண்டு உள்ளது. தென் கொரியாவின் Ulsan துறைமுகத்துக்கு சென்ற வாகனங்களை காவும் MV Hae Shin என்ற கப்பல் 3,626 அலகுகளை […]
நேற்று ஞாயிரு பங்களாதேசத்தில் இடம்பெற்ற பொது தேர்தலில் ஆளும் கட்சியான Awami League மீண்டும் வெற்றி பெறுகிறது. சட்டப்படியான முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படாவிடினும் தேர்தல் இடம்பெற்ற 299 தொகுதிகளில் Awami இதுவரை 216 இடங்களை வென்றுள்ளது. அதனால் பிரதமர் Sheikh Hasina தொடர்ந்து 4 ஆவது தடவையாக பிரதமர் ஆகிறார். இவர் முன்னரும் ஒருமுறை பிரதமராக பதவி வகித்தவர். எதிர் கட்சியான Bangladesh National Party (BNP) பல்லாயிரம் தனது தலைவர்கள், ஆதரவாளர் சிறைப்பிடிக்கப்பட்டதால் தேர்தலை பகிஷ்காரம் செய்துள்ளது. அதனால் […]
தமிழ்நாடு அரசும் Pegatron, Tata Electronics, Hyundai Motors ஆகிய தொழிநுட்ப நிறுவனங்களும் தமிழ்நாட்டில் $4.4 பில்லியன் முதலிட இன்று ஞாயிறு இணங்கி உள்ளன. தாய்வானை தளமாக கொண்ட Pegatron அமெரிக்காவின் Apple நிறுவனத்துக்கு பாகங்களை வழங்கும் நிறுவனம். Tata Electronics Apple நிறுவனத்தின் iPhone சிலவற்றை பொருத்தும் (assemble) பணியை செய்கிறது. Tata Power நிறுவனமும் மேலும் 700 பில்லியன் இந்திய ரூபாய்களை முதலிடவும் திட்டங்களை கொண்டுள்ளது. அதேவேளை ஜனவரி 10ம் திகதி முதல் 12ம் […]
Alaska Airlines விமான சேவைக்கு சொந்தமான Boeing 737 Max 9 வகை விமானம் ஒன்று 16,000 அடி உயரத்தில் பறக்கையில் யன்னல் பகுதியில் பெரியதொரு பாகத்தை இழந்துள்ளது. அந்த விமானம் உடனே தரையிறங்கியதால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது. Alaska Airlines flight 1282 அமெரிக்காவின் Oregon மாநிலத்து Portland நகரில் இருந்து கலிபோர்னியா செல்ல இருந்தது. ஆனால் அந்த விமானம் 16,000 அடி உயரத்தை அடைந்த நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விமானத்தில் 177 பயணிகளும், பணியாளர்களும் […]
நேபாளம் தனது நாட்டவர் ரஷ்யாவுக்கும், யூக்கிறேனுக்கும் செல்வதை மறு அறிவித்தல் வரை தடை செய்துள்ளது. நேபாளத்தினர் ரஷ்யா, யூக்கிறேன் ஆகிய நாடுகளால் தமது நாடுகளின் இராணுவங்களுடன் இணைந்து போராட அழைக்கப்படுகின்றனர் என்று நேபாள் அறிந்த பின்னரே இந்த தடை நடைமுறைக்கு வந்துள்ளது. குறைந்தது 10 நேபாளத்தினர் ரஷ்யா சார்பில் சண்டையிட்டு மடிந்து உள்ளதாகவும், சுமார் 200 நேபாளத்தினர் ரஷ்யா சார்பில் சண்டையிடுவதாகவும் கூறப்படுகிறது. யூக்கிறேன் இராணுவத்துடனும் நேபாளத்தினர் இணைந்து சண்டையிடுகின்றனர். கூர்க்கா என்று அழைக்கப்படும் நேபாளத்தினர் 1947ம் ஆண்டு […]
வட கொரியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட ballistic ஏவுகணைகளை ரஷ்யா யுக்கிறேன் மீது ஏவியுள்ளது என்று அமெரிக்கா கூறுகிறது. இவை வட கொரியா தயாரிக்கும் Hwasong-11 குடும்ப KN-23 மற்றும் KN-25 வகை ஏவுகணைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை சுமார் 900 km தூரம் சென்று தாக்க வல்லன. திண்ம நிலை எரிபொருளை (solid-state propellant) பயன்படுத்தும் இந்த வகை ஏவுகணைகளை வட கொரியா 2019 ஆண்டே பரிசோதனை செய்திருந்தது. திரவ நிலை எரிபொருளை பயன்படுத்தும் ஏவுகணைகளுடன் […]
அமெரிக்காவின் Tesla என்ற நிறுவனம் விற்பனை செய்த மின்னில் இயங்கும் கார்களின் (electric car) எண்ணிக்கையிலும் அதிக தொகையான மின்னில் இயங்கும் கார்களை சீனாவின் BYD என்ற நிறுவனம் கடந்த காலாண்டில் உலக அளவில் விற்பனை செய்துள்ளது. 2023ம் ஆண்டின் இறுதி காலாண்டில் BYD மொத்தம் 526,000 மின் கார்களை உலக அளவில் விற்பனை செய்துள்ளது. அதே காலத்தில் Tesla 484,500 மின் கார்களை மட்டுமே உலக அளவில் விற்பனை செய்துள்ளது. BYD கார்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுவது […]
Japan Airlines விமான சேவைக்கு சொந்தமான பெரியதோர் விமானம் Tokyo நகரத்து Haneda விமான நிலைய ஓடுபாதையில் பயணிக்கையில் ஜப்பானின் coast guard விமானத்துடன் மோதியதால் பயணிகள் விமானம் முற்றாக எரிந்துள்ளது. அதில் இருந்த 379 பேரும் தப்பி உள்ளனர். விபத்துக்கு உள்ளான பயணிகள் விமானம் flight JAL 516 ஒரு புதிய Airbus 350 வகை விமானம் என்று கூறப்படுகிறது. இது Shin Chitose விமான நிலையத்தில் இருந்து Tokyo வந்திருந்தது. Coast guard விமானத்தின் […]
ஜப்பானின் மத்திய பகுதியில் இன்று திங்கள் இடம்பெற்ற 7.6 அளவிலான நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் நடுக்கம் பிற்பகல் 4:10 மணிக்கு Anamisu பகுதியில் இருந்து சுமார் 42 km தூரத்தில், 10 km ஆழத்தில் இடம்பெற்றது என்கிறது அமெரிக்காவின் USGS. Ishikawa, Niigata, Toyama ஆகிய பகுதிகள் பாதிப்புக்கு உட்படலாம். Noto என்ற மேற்கு கரையோர பகுதி மக்களை உடனடியாக மேட்டு நிலங்களுக்கு செலவும் கூறப்பட்டுள்ளது. இந்த நடுக்கம் சுமார் 5 மீட்டர் […]