நேற்று திங்கள் அமெரிக்காவின் பைடென் அரசு அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில்நுட்பங்களுக்கு மேலதிக தடை விதித்த பின் செவ்வாய்க்கிழமை சீனா தனது நாட்டில் இருந்து கல்லியம் (Ga), ஜேர்மானியம் (Ge), antimony (Sb) ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை தடை செய்துள்ளது. கல்லியம், ஜேர்மானியம் போன்ற கனியங்களின் பொதுமக்கள் பாவனை மிக குறைவு என்றாலும் தொழில்நுட்ப தயாரிப்பில், இராணுவ பயன்பாட்டில் இவற்றின் பயன்பாடு பிரதானம். EV எனப்படும் மின்னில் இயங்கும் கார் தயாரிப்புக்கு இவை […]
தென் கொரிய சனாதிபதி Yoon செவ்வாய்க்கிழமை இராணுவ சட்டத்தை நடைமுறை செய்வதாக அதிகாலை தொலைக்காட்சி செய்தி மூலம் அறிவித்துள்ளார். தென் கொரியாவை வட கொரிய கம்யூனிஸ்ட்களின் ஆபத்தில் இருந்து பாதுகாக்கவே இந்த இராணுவ சட்டத்தை தான் நடைமுறை செய்வதாக கூறினாலும், அவர் விளக்கம் எதையும் அறிவிக்கவில்லை. சனாதிபதியின் இந்த எதிர்பார்க்காத அறிவிப்பால் மக்களும், அதிகாரிகளும் வியப்பு அடைந்துள்ளனர். சனாதிபதி Yoon இராணுவ சட்டத்தை அறிவித்தாலும் அவரின் conservative கட்சி அதை தவறு என்று கூறியுள்ளது. People Power Party என்ற சனாதிபதியின் […]
Diego Garcia என்ற இந்து சமுத்திர தீவில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கை தமிழ் அகதிகள் செவ்வாய் பிரித்தானியாவுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் 6 மாதங்களுக்கு பிரித்தானியாவில் வசிக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சுமார் 60 இலங்கை தமிழ் அகதிகள் Diego Garcia தீவில் தஞ்சம்அடைந்திருந்தனர். இவர்களில் 16 பேர் சிறுவர்கள். பிரித்தானியா சென்ற இவர்களுக்கு வழங்கிய கடிதம் ஒன்றில் இவர்களின் பிரித்தானிய அனுமதி “outside of the Immigration Rules” என்று கூறப்பட்டு உள்ளதாம். […]
மேற்கு நாடுகள் மூன்றாம் உலக நாடுகளுள் மூக்கை நுழைக்கும் காலம் கடந்து தற்போது இந்தியா போன்ற நாடுகளின் அரசியல் கனடா போன்ற மேற்கு நாடுகளுள் வேர் விடும் காலம் தோன்றியுள்ளது. இதற்கு கனடா போன்ற நாடுகளின் தற்கால குள்ள நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளே காரணம். உதாரணமாக கனடாவின் Conservative கட்சியின் தலைவராக Patrick Brown என்பவர் 2022ம் ஆண்டு உள்கட்சி தேர்தலில் வெல்வதை இந்தியா தடுத்துள்ளது என்று செய்திகள் வெளிவருகின்றன. Patrick Brown தற்போது இந்தியாவில் பிரிவினை தேடும் கனடிய சீக்கியர்களின் பலத்த ஆதரவை […]
அமெரிக்க சனாதிபதி பைடென் தனது மகன் Hunter க்கு இன்று ஞாயிறு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். பைடென் வழங்கும் இந்த பொது மன்னிப்பை ஜனவரி முதல் சனாதிபதி ஆகவுள்ள ரம்ப் மாற்றி அமைக்க முடியாது. பைடென் தனது அறிக்கை ஒன்றில் “Today, I signed a pardon for my son Hunter” என்றும் இது ஒரு “full and unconditional pardon” என்றும் கூறியுள்ளார். கடந்த அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கு முன்னும், தேர்தலுக்கு பின் இன்று வரையும் பைடென் தான் மகனுக்கு பொது மன்னிப்பு வழங்ககேன் என்று பல […]
இன்று ஞாயிறு இஸ்ரேல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய உரையில் 2013 முதல் 2016 வரையான காலத்தில் நெட்டன்யாஹு ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஜெனரல் Moshe Yaalon காசாவின் வட பகுதியில் இஸ்ரேல் படைகள் war crime செய்கின்றன என்று கூறியுள்ளார். இஸ்ரேல் காசாவின் வட பகுதியில் இருந்து பலஸ்தீனரை விரட்டி அங்கு யூதர்களை குடியமர்த்த முனைவதாக முன்னாள் ஜெனரல் Moshe இஸ்ரேலின் கடும்போக்கு அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது கூற்றில் “at the […]
அமெரிக்காவின் அடுத்த சனாதிபதி ரம்ப் இன்று சனிக்கிழமை மீண்டும் ஒரு குரைப்பை செய்துள்ளார். BRICS நாடுகள் அமெரிக்க டாலர் பாவனையை தவிர்த்து வேறு நாணயங்களை பயன்படுத்த முனைந்தால் அந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு தான் 100% இறக்குமதி விதிக்கவுள்ளதாக ரம்ப் குரைத்துள்ளார். தற்போது BRICS அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, UAE ஆகிய 9 நாடுகள் அங்கம் கொண்டுள்ளன. இலங்கை உட்பட மேலும் பல நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. அவர் தனது […]
நவம்பர் மாதம் இலங்கையின் பணச்சுருக்கம் (deflation) 2.1% ஆக உள்ளது என்று இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இந்த அளவு பணச்சுருக்கம் சுமார் 63 ஆண்டுகளின் பின் ஏற்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற 70% பணவீக்கத்துடன் (inflation) ஒப்பிடுகையில் 2.1% பணச்சுருக்கம் மிக பெரிதல்ல என்றாலும் பொருட்களின் விலை மெல்ல குறைய ஆரம்பித்து உள்ளது என்பதை இது காட்டுகிறது. செப்டம்பர் மாத பணச்சுருக்கம் 0.5% ஆகவும், அக்டோபர் மாத பணச்சுருக்கம் 0.8% ஆகவும் மட்டுமே இருந்தன. எரிபொருள் விலை […]
வருங்கால அமெரிக்க சனாதிபதி அண்மையில் மெக்சிகோ, கனடா ஆகிய இரு நாடுகளிலும் இருந்து அமெரிக்கா வரும் அனைத்து பொருட்களுக்கும் 25% இறக்குமதி வரி அறவிட உள்ளதாக மிரட்டி இருந்தார். இந்த கூற்று ஒரு உத்தியோக கூற்று அல்ல. ஆனால் இன்று வெள்ளி கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ ரம்பை சந்திக்க அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக்கு பறந்துள்ளார். வெள்ளி இரவு ரம்பும், ரூடோவும் ஒன்றாக இரவு போசனம் உண்பர். ரம்ப் கூறியபடி இலகுவில் அனைத்து பொருட்களுக்கும் அமெரிக்கா 25% இறக்குமதி அறவிட முடியாது. அவ்வாறு செய்வது […]
அஸ்ரேலியா இன்று வியாழன் முதல் 16 வயதுக்கு உட்பட்டோர் Facebook, TikTok, Instagram, X, Snapchat போன்ற social media களில் இணைவதை தடை செய்துள்ளது. 2025ம் ஆண்டு ஜனவரி முதல் இந்த தடை படிப்படியாக நடைமுறை செய்யப்படும். ஒரு ஆண்டின் பின் தடை முற்றாக சட்டமாகும். பாடசாலைகளில் பரவலாக பயன்படுத்தப்படுவதால் YouTube மேற்படி தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டின் பின் இந்த தடையை மீறும் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் A$ 49.5 மில்லியன் (U$ 32 million) […]