இந்தியாவின் பீஹார் மாநிலத்து முதலமைச்சர் Nitish Kumar தனது முதலமைச்சர் பதவியை கைவிட்டு பிரதமர் மோதியின் பா.ஜ கட்சிக்கு இன்று ஞாயிறு தாவியுள்ளார். இவர் தனது கட்சி தாவலுக்கு “not everything was alright with the alliance” என்று காரணம் கூறியுள்ளார். இது காங்கிரசை உள்ளடக்கிய INDIA என்ற 28 காட்சிகளை கொண்ட எதிர்க்கட்சிக்கு புதிய இடராகும். ஏற்கனவே மேற்கு வங்க முதலமைச்சர் Mamata Banerjee தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று கூறியுள்ளது. இந்திய […]
தனது பேரனை வலது கையால் பிடித்துக்கொண்டு காசா யுத்தத்தை நீங்கி தப்ப முனைந்த பாட்டியை இஸ்ரேல் இராணுவம் சுட்டு கொலை செய்துள்ளது. பேரனின் வலது கையில் வெள்ளை கொடி ஒன்று இருந்தும் இஸ்ரேல் பாட்டியை படுகொலை செய்துள்ளது. Hala Khreis என்ற பாட்டியும், வயது 57, பேரனும் உட்பட சிறு தொகை பாலஸ்தீனர் சண்டை இடம்பெறும் பகுதி ஒன்றை விட்டு நீங்க முயன்றுள்ளனர். பாட்டியும், பேரனும் முன் சென்றுள்ளனர். இவர்கள் al-Rimal என்ற இடத்தில் சந்தி ஒன்றை வடக்கில் இருந்து […]
மின்சக்தியில் இயங்கும் (EV அல்லது electric vehicle) கார்களை தயாரிக்கும் அமெரிக்காவின் Tesla என்ற நிறுவனம் வியாழக்கிழமை $80 பில்லியன் பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளது. Tesla வின் CEO Elon Musk இந்த நிறுவனத்தின் வருங்கால விற்பனை குறைவடையும் என்று கூறியதால் வியாழன் Tesla வின் பங்குச்சந்தை பங்கு ஒவ்வொன்றும் 13% பெறுமதியை இழந்துள்ளன. Elon Musk கின் பெறுமதியும் இந்த தினத்தில் $18 பில்லியனால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் இவரே தற்போதும் உலகின் முதலாவது செல்வந்தர். […]
ரஷ்ய படைகளின் Ilyushin Il-76 வகை விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி நேற்று விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 74 பேரும் பலியாகி உள்ளனர். தாம் கைப்பற்றிய 65 யூக்கிறேன் படையினரை கைதிகள் பரிமாற்றத்துக்கு எடுத்து வந்த விமானத்தை யூக்கிறேன் ஏவுகணை கொண்டு தாக்கி அழித்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. அந்த விமானம் S-300 ஏவுகணைகளை எடுத்து வந்ததாலேயே தாம் அதை தாக்கியதாக யூக்கிறேன் முதலில் கூறியிருந்தது. பின்னர் கைதிகளை ரஷ்யா அந்த விமானத்தில் எடுத்து […]
இலங்கையின் பேருவளை பகுதியில் உள்ள Cinnamon BEY என்ற உல்லாச பயணிகள் விடுதி ஒன்று orange juice க்கு மொத்தம் Rs. 6,075.00 அறவிட்டு உள்ளது. Orange juice Rs. 4,565.00 என்றும், சேவை கட்டணம் 456.50 என்றும், அரச வரி 1,055.80 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதன் விலை சுமார் $19.00 ஆகையால் இதுவே உலகின் அதி கூடிய விலை கொண்ட orange juice ஆக இருக்கும். இந்த கொள்வனவு விபரம் இணையம் எங்கும் பேசப்படுகிறது. […]
காசாவின் Khan Younis என்ற தெற்கு பகுதியில் ஹமாஸ் இன்று திங்கள் செய்த தாக்குதல் ஒன்றுக்கு 21 இஸ்ரேல் படையினர் பலியாகி உள்ளனர். ஹமாஸ் ஆயுத குழுவினர் இஸ்ரேலின் கவச வாகனம் ஒன்று மீது ஏவிய RPG தாக்குதலுக்கே 21 படையினர் பலியாகினர். இஸ்ரேல் படையினர் பதித்த வெடி பொருட்களும் கூடவே வெடித்து தாக்குதலை உக்கிரம் அடைய செய்துள்ளது என்று இஸ்ரேல் கூறுகிறது. இன்று மேலும் 3 இஸ்ரேலின் படையினர் வேறு தாக்குதல்களுக்கு பலியாகி உள்ளனர். அதனால் இதுவரை […]
Florida மாநில ஆளுநர் Ron DeSantis தான் 2024ம் ஆண்டுக்கான அமெரிக்க சனாதிபதி போட்டியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். Republican கட்சியின் சார்பில் போட்டியிட தேவையான உட்கட்சி ஆதரவு இன்மையாலேயே அவர் விலகி உள்ளார். அத்துடன் DeSantis தனது ஆதரவை முன்னாள் சனாதிபதி ரம்புக்கு வழங்கி உள்ளார். அதனால் ரம்பின் கை மேலும் வலு அடைந்துள்ளது. உட்கட்சி தேர்தலில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ள Nikki Haley மிக குறைந்த அளவு ஆதரவையே கொண்டுள்ளார். ரம்ப் உட்கட்சி தேர்தலில் […]
கடந்த 100 தினங்களுக்கு மேலாக அமெரிக்கா வழங்கும் அதிநவீன ஆயுதங்களை காசாவில் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்தினாலும் இஸ்ரேல் எதிர்பார்த்த அளவுக்கு ஹமாசை அழிக்க முடியவில்லை. இதனால் இஸ்ரேல் அரசில் பிளவு ஏற்படுகிறது. காசா யுத்தத்துக்கு பொறுப்பான அமைச்சர்களில் ஒருவரான Gadi Eisenkot ஹமாசை முற்றாக அழிக்க முடியாது என்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு ஹமாசை முற்றாக அழிக்கும் வரை யுத்தம் தொடரும் என்று கூறியதன் பின்னரே Gadi Eisenkot தனது மறுப்பு கருத்தை தெரிவித்து பிளவை பகிரங்கம் செய்துள்ளார். […]
கனடாவின் எட்மன்டன் பகுதியில் வீடு கட்டும் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு இந்தியாவில் இருந்து பண மிரட்டல்கள் வருவதாகவும், அடிபணியாதோர் மீது தீ வைப்பு, துப்பாக்கி சூடு போன்ற வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் Dave Paton என்ற Edmonton Police அதிகாரி கூறியுள்ளார். இவ்வாறு மிரட்டல்களுக்கு உள்ளானோரை தம்முடன் தொடர்புகொண்டு விபரங்களை வழங்குமாறும் எட்மன்டன் போலீசார் கேட்டுள்ளனர். தற்போது 5 பண மிரட்டல், 15 தீவைப்பு, 7 துப்பாக்கி மூல வன்முறைகள் ஆகியன எட்மன்டன் போலீசால் விசாரணை செய்யப்படுகின்றன. அத்துடன் […]
சிங்கப்பூர் அமைச்சரான சுப்பிரமணியம் ஈஸ்வரன் இலஞ்ச குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீது 27 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர் மொத்தம் $160,000 பெறுமதியான விமான பயணம், விடுதி, Grand Prix formula 1 அனுமதி ஆகியவற்றை இலவசமாக Ong Beng Seng என்ற வர்த்தகரிடம் இருந்து பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். அதேவேளை தனது அமைச்சர் பதவியையும் விட்டு நேற்று வியாழன் விலகியுள்ளார். […]