தேர்தல் காலத்தில் முன்னாள் பாகிஸ்தான் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரின் PTI கட்சி மிரட்டப்பட்ட நிலையில் அவரின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிட்டோர் பலரும் வென்றுள்ளனர். இதுவரை வெளியிடப்பட்ட 250 முடிவுகளின்படி இம்ரானின் PTI கட்சி ஆதரவாளர் 99 பேர் வென்றுள்ளனர். PMLN கட்சி 71 ஆசனங்களை வென்றுள்ளது. முன்னாள் பிரதமர் பெனர்சிஸ் பூட்டோவின் மகனின் தலைமையை கொண்ட PPP கட்சி 53 ஆசனங்களை வென்றுள்ளது. ஏனைய கட்சிகள் 27 ஆசனங்களை வென்றுள்ளன. பாகிஸ்தான் […]
உலகம் எங்கும் பண வீக்கம் (inflation) அந்த நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கையில் சீனாவில் பண சுருக்கம் (deflation) சீனாவின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. மிகையான inflation, deflation இரண்டுமே விருப்பத்துக்கு உரியன அல்ல. சீனாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாத consumer prices index (CPI) கணியத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரியில் CPI 0.8% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. உணவு பொருட்களின் விலைகளை தவிர்த்து கணித்தால் CPI 0.4% ஆல் அதிகரித்து உள்ளது. அவ்வகை வாசிப்பு நலமானது. சீனாவின் […]
தென் கொரியாவின் Booyoung Group என்ற கட்டுமான நிறுவனம் தனது ஊழியர்கள் பெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் $75,000 சன்மானம் வழங்க முன்வந்துள்ளது. பணம் பெறும் ஊழியர் தாயாக அல்லது தந்தையாக இருக்கலாம். இந்த விபரம் திங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2021ம் ஆண்டு முதல் திங்கள் வரை அதன் ஊழியர்களுக்கு பிறந்த 70 குழந்தைகளுக்கும் கூடவே $75,000 வழங்கப்படவுள்ளது. இதற்கு மட்டும் மொத்தம் $5.25 மில்லியன் செலவாகும். 2022ம் ஆண்டில் தென் கொரியாவில் பிறப்பு விகிதம் பெண் ஒருவருக்கு 0.78 ஆக […]
சிரியாவின் கிழக்கே அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஞாயிறு இடம்பெற்ற drone தாக்குதலுக்கு அந்த தளத்தில் இருந்த அமெரிக்க ஆதரவு கொண்ட 6 Kurdish குழுவினர் பலியாகி உள்ளனர். அண்மையில் ஜோர்டானில் இருந்த அமெரிக்க தளம் ஒன்றின் மீது செய்யப்பட்ட தாக்குதலுக்கு 3 அமெரிக்க படையினர் பலியாகி இருந்தனர். இதனால் ஆவேசம் கொண்ட அமெரிக்கா பெருமளவு தாக்குதல்களை ஈரான் ஆதரவு கொண்ட குழுக்கள் மீது செய்தது. ஆனாலும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன. […]
சுமார் இரண்டு ஆண்டுகளாக யுத்தத்தில் மாண்டுள்ள யூக்கிறேனில் இருந்து 18 வயது முதல் 60 வயது வரையான ஆண்கள் பெருமளவில் மேற்கு நாடுகளை நோக்கி தப்பி ஓடுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா ஆக்கிரமித்த பின் யூக்கிறேன் 18 வயது முதல் 60 வயது வரையானோர் நாட்டை விட்டு வெளியேறுவது தடை செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் கட்டாய இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் இறுதி முடிவு எதுவென்று தெரியாத யுத்தத்தில் இணைய விரும்பாமலே மேற்படி ஆண்கள் தப்பி ஓடுகின்றனர். […]
அமெரிக்கா இந்தியாவுக்கு சுமார் $4 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த விருப்பம் 2023ம் ஆண்டு பிரதமர் மோதி அமெரிக்கா சென்றபோது முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்தியா அமெரிக்காவில் சீக்கியர் ஒருவரை கைக்கூலி கொலையாளி மூலம் கொலை செய்ய முனைந்தமை அறியப்பட்டவுடன் அமெரிக்க ஆயுத Senate committee விற்பனையை இடைநிறுத்தி இருந்தது. ஆனாலும் அமெரிக்காவின் சீனாவுடனான போட்டிக்கு இந்தியா அவசியம் என்பது விற்பனையை முன்னெடுக்க காரணமாகிறது. விற்பனை செய்யப்படும் பொருட்களில் பின்வருவனவும் அடங்கும்: 1) […]
அமெரிக்காவின் Forbes என்ற செய்தி நிறுவனம் தயாரித்த 2024ம் ஆண்டுக்கான மிக பலமான 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியன முறையே 1ம், 2ம், 3ம் இடங்களில் உள்ளன. இந்த கணிப்புக்கு பின்வரும் 5 பிரதான காரணிகள் கணக்கில் எடுக்கப்பட்டு உள்ளன: 1) தலைமைத்துவம், 2) பொருளாதார ஆளுமை, 3) அரசியல் ஆளுமை, 4) சர்வதேச அணி ஆளுமை, 5) இராணுவ ஆளுமை. பலம் கொண்ட முதல் 10 நாடுகள், அவற்றின் GDP வருமாறு: […]
IMF தான் வழங்கும் $3 பில்லியன் பிச்சை கடனுக்கு விதித்த நிபந்தனைகளில் ஒன்றாக Sri Lanka Telecom என்ற அரச கூட்டுத்தாபனத்தை தனியார் கைகளுக்கு விட கேட்டிருந்தது. இந்த முயற்சிக்கு இலங்கை அரசு முதல் விண்ணப்பங்களை ஜனவரி 12ம் திகதி வரை ஏற்றுக்கொண்டு இருந்தது. தற்போது இந்தியாவின் Jio என்ற நிறுவனமும், சீனாவின் Gortune International என்ற நிறுவனமும் தமது இறுதி Request for Proposal விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைக்கப்பட்டு உள்ளன. Jio இந்திய செல்வந்தரான முகேஷ் அம்பானிக்கு […]
காசாவில் வெள்ளை கொடியுடன் Khan Yunis இல் உள்ள தமது இருப்பிடம் நோக்கி சென்றுகொண்டிருந்த 51 வயதுடைய Ramzi abu Sahloul என்ற பலஸ்தீனர் இஸ்ரேல் படைகளால் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். முன்னைய சில வெள்ளை கொடி படுகொலைகள் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தமை போலவே Ramzi படுகொலையும் வீடியோ ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜனவரி 22ம் திகதி இடம்பெற்றதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் CNN இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தாலும், பிரித்தானியாவின் ITV இந்த சம்பவம் […]
சிரியா-ஜோர்டான் எல்லையோரம் நிலைகொண்டிருந்த Tower 22 என்ற அமெரிக்க முகாம் மீது ஆயுத குழு ஆளில்லா விமானம் (drone) மூலம் செய்த தாக்குதலுக்கு 3 அமெரிக்க படையினர் பலியாகியும், 34 பேர் காயமடைந்தும் உள்ளனர். தாக்கிய குழு எதுவென்று இதுவரை அறியப்படாவிட்டாலும் இந்த குழுவும் ஈரான் ஆதரவு கொண்ட குழுவென்று கருதப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உரிய தண்டனையை அமெரிக்கா உரிய நேரத்தில் வழங்கும் என்று அமெரிக்க சனாதிபதி பைடென் கூறியுள்ளார். அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் செய்த […]