இஸ்ரேல் பலஸ்தீனர்களை அடக்கி, ஒடுக்கி அவர்களின் நிலங்களை அபகரித்து வந்தாலும் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் தாம் இஸ்ரேல்-பலஸ்தான் என்ற two-state தீர்வில் நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறி வந்துள்ளன. ஆனால் இன்று இஸ்ரேல் பாராளுமன்றம் இஸ்ரேல் மீது two-state தீர்வை திணிப்பதை நிராகரிக்க சட்டம் இயற்றி உள்ளது. மொத்தம் 120 பாராளுமன்ற உறுப்பினர்களில் 99 பேர் நிராகரிப்புக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். தற்போதைய இஸ்ரேல் அமைச்சர்கள் சிலர் காசா பலஸ்தீனரை எகிப்து உள்ளே தள்ளி […]
காசாவில் உடனடியாக நிரந்தர யுத்த நிறுத்தத்தை நடைமுறை செய்ய கேட்டு அல்ஜீரியா இன்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் செய்த வாக்கெடுப்பை அமெரிக்கா veto வாக்கு மூலம் தடுத்து உள்ளது. தாம் காசாவில் ஒரு தற்காலிக 6-கிழமை யுத்த நிறுத்தம் ஒன்றை நடைமுறை செய்ய முயற்சிகள் செய்வதாகவும் அல்ஜீரியாவின் நிரந்தர யுத்த நிறுத்த அழைப்பு தமது முயற்சியை குழப்பிவிடும் என்றும் அமெரிக்கா காரணம் கூறியுள்ளது. மொத்தம் 15 உறுப்பினர்களில் 13 உறுப்பினர் நிரந்தர யுத்த நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்க […]
சீனா கடலை நிரப்பி கட்டிவரும் Colombo Port City யிலும் வரிகள் அற்ற கடைகள் அமைக்கப்படவுள்ளன. இந்த கடைகள் ஏப்ரல் மாதம் முதல் சேவை செய்யும் என்று Belt and Road Initiative Sri Lanka கூறியுள்ளது. நாட்டுக்கு திரும்பும் இலங்கையர் ஒவ்வொருவரும் $5,000 வரையான பெறுமதிக்கு பொருட்களை வரி இன்றி கொள்வனவு செய்ய முடியும். வெளிநாட்டவருக்கு பெறுமதி கட்டுப்பாடு இல்லை. இங்கு கணனிகள், புகைப்பட கருவிகள், ஆடைகள் போன்ற 200 முதல் 300 வரையான பொருட்கள் […]
இந்திய பிரதமர் மோதியின் பா.ஜ. கட்சியின் ஆதரவு கொண்ட இந்துவாதா குழுவான Vishwa Hindu Parishad (VHP) அக்பர் என்ற சிங்கத்தையும் சீதா என்ற சிங்கத்தையும் ஒரே கூட்டில் அடைப்பதை தடுக்க நீதிமன்றத்தை நாடியுள்ளது. அக்பர் (Akbar) என்ற சிங்கம் முன்னர் பா.ஜ. கட்சி ஆட்சியில் உள்ள திரிபுர மாநில மிருக காட்சி சாலை ஒன்றில் ராம் (Ram) என்ற பெயரையே கொண்டிருந்தது. ஆனால் அந்த சிங்கம் பின்னர் TCP ஆட்சியில் உள்ள மேற்கு வங்க மாநிலத்து […]
இந்த ஆண்டுக்கான Eurovision பாட்டு போட்டி சுவீடன் நாட்டின் Malmo என்ற நகரில் வரும் மே மாதம் நிகழவுள்ளது. அந்த போட்டியில் இஸ்ரேல் பங்கு கொள்ளலாம் என்று போட்டி அமைப்பாளர் தெரிவித்து உள்ளனர். இசை துறையின் முன்னணி பலர் ரஷ்யாவை Eurovision போட்டியில் இருந்து நீக்கியதுபோல் இஸ்ரேலையும் நீக்க வேண்டும் அறிக்கை மூலம் கேட்டிருந்தனர். அந்த அறிக்கையில் ரஷ்யா தான் ஆக்கிரமித்த யூக்கிறேன் மக்களை கொன்று குவித்ததுபோல் இஸ்ரேலும் தான் உள்ள பலஸ்தீனரை கொன்று குவிக்கிறது என்று […]
இந்த ஆண்டின் முதல் 6 கிழமைகளில் குறைந்தது 7 இந்திய மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மரணித்து உள்ளனர். பொதுவாக இவர்கள் தற்கொலை, போதை (overdose) போன்ற காரணங்களுக்கே பலியாகி உள்ளனர். Indiana மாநிலத்தில் உள்ள Purdue University யில் 19 வயது Neel Acharya, 23 வயது Sameer ஆகிய இருவரும் மரணித்து உள்ளனர். Connecticut மாநிலத்து Sacred Hearts University யில் 22 வயது Dinesh Gattu, 21 வயது Sai Rakoti ஆகிய இருவரும் fentanyl overdose […]
இந்திய தலைநகர் டெல்லியை நோக்கி புஞ்சாப், பீஹார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்லாயிரம் உழவர்கள் படையெடுக்கின்றனர். அவர்கள் டெல்லியை அடைவதை தடுக்க முனைகிறது போலீஸ். புஞ்சாப் மாநில உழவர் ஹரியானா மாநிலம் ஊடாக சென்றே டெல்லியை அடையலாம். அவ்வாறு உழவர் செல்வதை ஹரியானா போலீஸ் கணீர் புகை குண்டுகள் வீசி தடுக்கிறது. ஆனாலும் உழவர் மெல்ல முன்னேறி வருகின்றனர். டெல்லி வரும் உழவர் விரைவில் இடம்பெறவுள்ள பொது தேர்தல் காலம் வரை […]
இந்த மாதம் 7ம் திகதி ரஷ்யா தனது Zircon என்ற hypersonic ஏவுகணையை யூக்கிறேன் மீது ஏவியதாக யூக்கிறேன் கூறியுள்ளது. அப்படியாயின் ரஷ்யா Zircon வகை hypersonic ஏவுகணையை யுத்த முனையில் பயன்படுத்தியது இதுவே முதல் தடவை. Zircon ஏவுகணை Mach 8 (மாக் 8) வேகத்தில் சென்று குறியை தாக்க வல்லது. அதாவது இது ஒலியின் வேகத்திலும் 8 மடங்கு வேகத்தில் (9,900 km/h) செல்வது. இவ்வளவு வேகத்தில் செல்லும் ஏவுகணையை தடுத்து அழிக்க தடுப்பு […]
2023ம் ஆண்டு சுமார் 870,000 வெளிநாட்டவர் அமெரிக்க குடியுரிமை (citizenship) பெற்றுள்ளனர். அங்கு பெண் ஒருவருக்கு சராசரியாக 1.64 குழந்தைகள் மட்டுமே கிடைப்பதால் குடிவரவும் சனத்தொகையை தக்கவைக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் 110,000 பேர் மெக்ஸிக்கோ நாட்டில் இருந்து சென்றவர்கள். இவர்கள் கடந்த ஆண்டு குடியுரிமை பெற்றோர் தொகையின் 12.7% ஆகின்றனர். இரண்டாம் இடத்தில் இந்தியர் உள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 59,100 இந்தியர் அமெரிக்க குடியுரிமை பெற்று உள்ளனர். இவர்கள் பங்கு 6.7% ஆக .உள்ளது. மூன்றாம் […]
இலங்கையின் நீர்கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையம், இரத்மலானை விமான நிலையம், மத்தல ராஜபக்ச விமான நிலையம் ஆகிய 3 விமான நிலையங்களையும் இயக்கம் உரிமை இந்தியாவின் அதானி (Adani) நிறுவனத்துக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இலங்கை மக்களுக்கு அதிக நன்மை தரக்கூடிய முறையில் பகிரங்க கேள்விகள் மூலம் முதல் தரமான நிறுவனத்தை தெரிவு செய்யாது பிரதமர் மோதியின் விருப்பத்துக்கு ஏற்பவே அதானி நிறுவனம் 3 விமான நிலையங்களையும் கைக்கொள்கிறது என்று நம்பப்படுகிறது. அதானி தற்போது இந்தியாவின் 8 விமான […]