Ukraine கலவரம், ரஷ்யா Crimea வை தனதாக்கல், மேற்கு நாடுகள் ரஷ்யாவுடன் முரண்படல் எல்லாம் உலகறிந்த அண்மைக்கால விடயங்கள். இந்த Ukraine விவகாரத்தில் அமெரிக்க மக்கள் மிகவும் ஆழமான கருத்துக்களை கொண்டுள்ளனர். ஆனால் அவர்களின் இவ்விடயம் சார்ந்த கருத்துக்கள் திடமான அறிவை அடிப்படையாக கொண்டதா? இல்லை, என்கிறது அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற கருத்து கணிப்பு ஒன்று. அமெரிக்காவின் Survey Sampling International நடாத்திய கருத்துக்கணிப்பின்படி ஆறில் ஒரு அமெரிக்கரே (1/6) Ukraine ஐ சரியாக உலக படத்தில் […]
Facebook மற்றும் Twitter போன்றதொரு social mediaவை கியூபாவில் ஆரம்பித்து அதன் மூலம் அத்தீவில் அரசியல் மாற்றங்களை கொண்டுவர அமெரிக்கா செய்த முயற்சி ஒன்றும் தோல்வியில் முடிந்துள்ளது. The Associate Press தெரிவித்த இந்த தகவலை அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ZunZuneo என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்த முயற்சி 2012 ஆம் ஆண்டில் முடிவடைந்த்துள்ளது. அமெரிக்காவின் Agency for International Development (USAID) என்ற நிறுவனத்தினால் $1.3 மில்லியன் செலவழித்து செய்யப்பட்ட இந்த […]
இஸ்ரவேலும் பாலஸ்தீனியர் விடயத்தில் இஸ்ரவேலின் கட்டுப்பாட்டில் அமெரிக்காவும் பாலஸ்தீனியரிடம் எதிர்பார்ப்பது ஒன்றை மட்டுமே: பாலஸ்தீனியர் பேச்சுவார்த்தை எத்தனை சந்ததிகளுக்கு இழுத்தடிக்கப்பட்டாலும், இஸ்ரவேலுடனும் அமெரிக்காவுடனும் மட்டுமே பாலஸ்தீனியர் தமது அரசியல் விடயங்கள் பற்றி பேசவேண்டும். குறிப்பாக பாலஸ்தீனியர் தமது விடயத்தை ஐ.நா. எடுத்து செல்வது இஸ்ரவேலையும் அமெரிக்காவையும் ஆத்திரம் அடைய செய்யும். ஆனால் இந்த மிரட்டலுக்கு பயப்பட்டது பாலஸ்தீனியரின் தலைமை அதையே இன்று செய்துள்ளது. ஐ.நா. வின் 15 சபைகளில் உறுப்பினராக இணைவதற்கு பாலஸ்தீனியர் கையொப்பம் இட்டுள்ளனர். இவ்வாறு […]
இலங்கையில் யுத்தம் முடிந்து 5 வருடங்களின் பின் ஐ.நா. அங்கு யுத்த குற்றங்கள் நடைபெற்றனவா என்று விசாரிக்க வியாழன் (2014-03-27) முடிவு செய்துள்ளது. ஐ.நாவின் பிரிவான The UN Human Rights Council இல் நடைபெற்ற அமர்வில் இந்த விசாரணைக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா உட்பட 23 நாடுகளும் எதிராக சீனா, பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளும் வாக்கு அளித்துள்ளன. இந்தியா உட்பட 12 நாடுகள் வாக்களிக்கவில்லை. முன்னர் தாம் இந்த விசாரணைக்கு ஆதரவாக வாக்களிக்க போவதாக […]
ரஷ்யாவின் சோச்சியில் (Sochi) ஒலிம்பிக் போட்டி நடைபெற்றுக்கொண்டு இருந்த பொழுது பூட்டின் (Putin) இராணுவத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் மிக குறைவு என்பதை நன்கு அறிந்த மேற்குலக அரசுகள், ஜனநாய முறைப்படி Ukraine இல் ஆட்சிபுரிந்த ரஷ்யா ஆதரவு அரசை ஜனநாய முறைக்கு அப்பாலான வன்முறைகள் மூலம் துரத்தின. பின் உடனடியாக தமக்கு ஆதரவான யுக்கிறேனியர் (Ukraine) கொண்ட அரசை அமைத்து விடயத்தை வென்று விட்டதாக நம்பியது மேற்குலக அரசியல். ஆனால் முன்னாள் KGB உறுப்பினரான ரஷ்யாவின் தலைவர் […]
மலேசிய நேரப்படி சனிக்கிழமை காலை 12:41 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட Malaysian Airlines விமானம் MH370 விமான போக்குவரத்து தொடர்புகளை இழந்துள்ளது. இதில் 227 பயணிகளும் 12 பணியாளரும் இருந்ததாக விமானசேவை நிறுவனம் கூறியுள்ளது. இது ஒரு Boeing 777-200 வகை விமானமாகும். இவ்வகை விமானம் 310 முதல் 450 பயணிகள் வரை கொள்ளக்கூடியது. நேர அட்டவணைப்படி இந்த விமானம் பெய்ஜிங் நேரப்படி காலை 6:30 மணிக்கு பெய்ஜிங்கை அடைந்திருக்கும். ஆனால் விமானம் […]
கருங்கடலின் (Black sea) வடக்கே அமைந்துள்ள Crimea (கிரைமிய) பல நூற்றாண்டு காலமாக இரத்தக்களங்கள் கண்ட குடா. மொங்கோலியன் (Mongolian) முதல் ஒற்றமன் (Ottoman) வரை, ரஷ்யன் முதல் ஜேர்மன் வரை எல்லோரும் அவ்வப்போது கைப்பற்றி ஆண்ட குடா இது. இரண்டாம் உலக யுத்தத்தின் முன் Crimea ரஷ்யாவின் கையில் இருந்தது. யுத்த முடிவில் Ukraine (யுக்கிரைன்) USSR இன் அங்கமாக்கப்பட்டபோது Crimea, அலுவலக முறையில் Ukraine இன் பாகமானது. 1991 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் […]
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் யுக்கிரெனை தன்வசமாக்கியது சோவியத் யூனியன் (USSR). 1991 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் உடைவின் பின், மீண்டும் யுக்கிரேன் தனி நாடானது. அப்படி அது தனி நாடானாலும் தொடர்ந்தும் மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான cold-war இல் சிக்கி எரிகிறது யுக்கிரேன். யுக்கிரேனில் இரண்டு பிரதான அணிகள்; ஒன்று ஐரோப்பிய அணியின் வளர்ப்பு, மற்றையது ரஷ்யாவின் வளர்ப்பு. யுக்கிரேனின் சனத்தொகையின் 17% ரஷ்யர், பெரும்பாலும் நாட்டின் கிழக்கே வாழ்பவர்கள். தற்போது அங்கே […]
இந்த வருடம் ஜப்பானில் வழமைக்கு மாறாக அதிக snow வீழ்ச்சி இடம்பெறுகிறது. குறிப்பாக ஜப்பானின் பசுபிக் கரையோரமே இவ்வாறு அதிக snow வை பெறுகிறது. ஜப்பானின் பெருநகர் ரோக்கியோவுக்கு (Tokyo) மேற்காகவுள்ள நகரான Kofu சனிக்கிழமை காலை 6 மணிவரை 1 மீட்டருக்கும் அதிகமான snow வை பெற்றுள்ளது. கடந்த 120 வருட காலத்தில் இதுவே அதிகம் ஆகும். இங்கு இவ்வாறான தரவுகள் பதியப்படுவது 120 வருடங்களின் முன்னரே ஆரம்பமாகியது. இங்கு 1998 இல் 49 cm […]
மாஒ தலைமையிலான சீன கம்யூனிஸ் கட்சியின் (Chinese Communist Party) பெரும் படையெடுப்புக்கு முகம் கொடுக்க முடியாத சீன தேசிய கட்சியினர் (Chinese National Party அல்லது KuoMinTang) அதன் தலைவர் ChiAng Kai-Sheck உடன் தாய்வான் என்ற தீவுக்கு தப்பினர். சுமார் 2 மில்லியன் KMT உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தப்பியதாக கூறப்படுகிறது.1949 முதல் 1987 வரை தாய்வானில் KMT தனிக்கட்சி ஆட்சி செய்து வந்திருந்தனர். பின்னர் அங்கு பல கட்சி அரசியல் உருவானது. தாய்வான் தன்னை […]