கேள்விக்குறியாகும் அங் சன் சு கியின் அரசியல் எதிர்காலம்

பர்மா என்று முற்காலங்களில் அழைக்கப்பட்ட மயன்மாரின் முக்கிய அரசில் பிரமுகரான அங் சன் சு கியின் (Aung San Suu Kyi) அரசியல் எதிர்காலம் தற்போது பெரும் கேள்விக்குறியில் உள்ளது. மேற்கு நாடுகளின் பலத்த ஆதரவுடன் பர்மாவின் அடுத்த தலைவராக இவர் தெரிவு செய்யப்படலாம் என்று அண்மைவரை கருதப்பட்டு வந்தது. அனால் இந்தக்கிழமை உறுதிப்படுத்தப்பட சட்டம் ஒன்று Suu Kyi அந்நாட்டின் தலைவர் ஆவதை தடுக்கின்றது. பர்மாவின் நீண்டகால சட்டப்படி ஒருவரின் கணவர்/மனைவி அல்லது பிள்ளைகள் வேறு […]

ரஷ்யாவுக்கான பிரான்ஸின் யுத்தக்கப்பல் விற்பனை, அமெரிக்கா அதிருப்தி

Ukraine முரண்பாடுகள் ஆரம்பமாகுமுன், 2011 ஆம் ஆண்டில், பிரான்ஸ் அரசு ரஷ்யாவுக்கு இரு பாரிய Mistral வகை யுத்த கப்பல்களை செய்து கொடுக்க ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த இரு கப்பல்களினதும் மொத்த பெறுமதி $1.66 பில்லியன். அத்துடன் மேலும் இரு கப்பல்களையும் ரஷ்யா கொள்வனவு செய்யவும் விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால் அமெரிக்கா இவ்வகை நவீன கப்பல்கள் ரஷ்யாவிடம் போவதை முதலில் இருந்தே விரும்பி இருந்திருக்கவில்லை. ரஷ்யா கிரைமியாவை தன்வசப்படுத்தியபின் அமெரிக்காவின் எதிர்ப்பு மேலும் பலப்பட்டுள்ளது. ஆனால் பிரான்ஸ் […]

கராச்சி விமானநிலையம் மீது தாக்குதல், 23 பலி

பாகிஸ்தானின் பிரதான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான கராச்சி விமான (Muhammad Ali Jinnah International Airport) நிலையம் மீது குறைந்தது 10 ஆயுததாரிகள் தாக்கியதில் மொத்தம் 23 நபர்கள் வரை பலியாகியுள்ளனர். மேலும் 23 நபர்கள் வரை காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி ஞாயிறு இரவு 11:00 மணியளவில் ஆரம்பித்திருந்துள்ளது. உடனடியாக விமான சேவைகள் திசை திருப்பப்பட்டன. சுமார் 5 மணித்தியாலங்களில் படையினர் 10 தாக்குதல்காரர்களை கொலை செய்து நிலைமையை கட்டுப்பாட்டுள் கொண்டுவந்துள்ளனர். ஞாயிரு […]

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் Hillary?

  Hillary Clinton, முன்னாள் ஜனாதிபதி Bill Clinton இனது மனைவி, தற்போது சுயசரிதை வகையிலான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை அமெரிக்காவின் செய்தி நிறுவனமான CBS இனது கிளை நிறுவனமான Simon & Schuster அடுத்த வியாழக்கிழமை வெளியிடுகிறது. Hard Choices என்று தலைப்பிட்டுள்ள இந்த புத்தகத்தில் Hillary பல விடயங்களை விபரித்துள்ளார். தான் Bush இன் ஈராக் மீதான தாக்குதலை ஆதரித்தது தவறு என்றுள்ளார். சிரியாவின் விவகாரம் “wicked problem” (இலாப-நட்டம் நிறைந்த, […]

BJP அறுதி பெரும்பான்மை, காங்கிரஸ் படுதோல்வி

இந்தியாவின் அரசியல் வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியான பாரதீய ஜனதா (BJP) முதல்தடவையாக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருகிறது. மொத்தம் 543 ஆசனங்களில் BJP தனியாக 282 ஆசனங்களை பெறுகிறது. அதேவேளை காங்கிரஸ் தனியாக 44 ஆசனங்களை மட்டுமே பெறுகிறது. . சில மாநில விபரங்கள்: தமிழ்நாடு (39): AADMK 37, BJP 1, காங்கிரஸ் 0 . உத்தரபிரதேசம் (80): BJP 71, காங்கிரஸ் 2 பீகார் (40): BJP 22, காங்கிரஸ் 2 […]

மோதலை நோக்கி சீனாவும் வியட்னாமும்

அண்மைக்காலமாக சீனா தனது ஆதிக்கத்தை தென்சீன கடலில் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த கடலடியில் இருக்கும் எரிபொருள் போன்ற இயற்கைவளங்களே. இந்த மாதம் முதலாம் திகதி China National Offshore Oil Corporation (CNOOC) சுமார் $1.0 பில்லியன் பெறுமதியான எண்ணை அகழ்வு தளம் ஒன்றை வியட்னாம் தனது கடல் என கருதும் கடலில் அமைத்தது. இவ்விடம் வியட்னாம் கரையில் இருந்து சுமார் 140 மைல் தூரத்தில் உள்ளது. இவ்விடயம் காரணமாக இரு நாடுகளுக்கும் […]

மசாலா தோசை, கொலை, சரவணாபவான்

இந்தியா, Hong Kong, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, டுபாய் போன்ற இடங்களில் எல்லாம் தனது கிளைகளை இயக்கிவரும் சரவணபவான் உணவகம் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட, 1947 இல் பிறந்த ராஜகோபால் என்பவரால் 1981 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன் இவர் ஓர் பலசரக்கு கடையை நடாத்தி வந்தார். 1972 இல் இவர் முதலாவது திருமணத்தை செய்திருந்தார். பினர் 1994 இல் தனது வேலையாள் ஒருவரின் மனைவியை தனது இரண்டாவது மனைவியாக திருமணம் செய்திருந்தார். […]

ஆப்கானிஸ்தான் மட்சரிவில் 2000 வரை பலி

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆப்கானிஸ்தானின் மட்சரிவுக்கு 2000 இக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாக அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில், சீன எல்லைக்கு அருகில் உள்ள Abi Barak என்ற கிராமத்தில் இது இடம்பெற்றுள்ளது. 300 குடும்பங்களை சார்ந்த 2100 இக்கும் அதிகமானோர் சரிவுக்குள் அகப்பட்டுள்ளதாக அப்பகுதி மாநில அரச பேச்சாளர் Naweed Frotan கூறியுள்ளார். சில இடங்களில் மட்சரிவு 90 அடி ஆழமாக உள்ளதாகவும், அதனடியில் அகப்பட்டவரை மீட்பது உள்ளூர் வசதிகளுக்கு இலகுவான விடயம் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய […]

கட்டாரில் புதிய $15 பில்லியன் விமான நிலையம்

டுபாய்க்கு போட்டியாக கட்டார் இன்று தனது $15 பில்லியன் பெறுமதியான புதிய விமான நிலையத்தை (Hamad International Airport) திறந்து வைத்துள்ளது. இந்த விமான நிலையம் 2009 ஆண்டில் சேவைக்கு வந்திருக்கவேண்டு. ஆனால் அது பல வருடங்களின் பின் இன்று சேவையை ஆரம்பிக்கின்றது. 2022 ஆம் ஆண்டில் கட்டாரில் நடைபெற இருக்கும் World Cub உதைபந்தாட்ட போட்டிக்கு இந்த புதிய விமான நிலையம் பெரிதும் பயன்படும். Qatar Airways, Emirates Airways, Etihad, Lufthansa, United போன்ற […]

இஸ்தான்புல்லில் Eurasia சுரங்கம்

Eurasia சுரங்க வேலைகள் இன்று துருக்கி பிரதமரால் ஆரம்பிக்கப்பட்டன. துருக்கியின் நகரமான இஸ்தான்புல்லூடாக சென்று கருங்கடலை அடையும் Bosphorus நீரிணைக்கு கீழாக இந்த வாகன போக்குவரத்துக்கான சுரங்கம் அமைகிறது. இந்த சுரங்கம் ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைப்பதால் Eurasia என பெயர் இடப்பட்டுள்ளது. 2016 இன் இறுதியில் இவ்வேலைகள் முற்றுபெறும் என கூறப்படுகிறது. கிழக்கு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு தட்டும், மேற்கு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு ஒரு தட்டுமாக மொத்தம் இரண்டு தட்டுக்களை இந்த சுரங்கம் கொண்டிருக்கும். […]