பின்லாந்தில் ஆரம்பித்து பின்னர் பிரான்ஸ் உட்பட ஐரோப்பா எங்கும் பரவி வளர்ந்த Nokia என்ற தொழில்நுட்ப நிறுவனம் Alcatel-Lucent என்ற நிறுவனத்துக்கு U$16.6 பில்லியன் வழங்கி கொள்வனவு செய்ய இணங்கியுள்ளது. அவ்வாறு இணைந்த நிறுவனம் 114,000 ஊழியர்களை கொண்டிருக்கும். பணம் கொடுக்காது பங்குகள் கொடுப்பதன் மூலமே இந்த கொள்வனவு இடம்பெறவுள்ளது. . இந்த இணைந்த நிறுவனம் சுமார் 35% தொலைதொடர்பு தொழில்நுட்ப சந்தை பங்கை கொண்டு அத்துறையில் உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாக இருக்கும். இத்துறையில் Ericsson […]
அமெரிக்காவின் மிக பெரிய பொருளாதாரத்தை கொண்ட மாநிலம் கலிபோர்னியா. இந்த பொருளாதாரம் உலகின் ஏழாவது பெரிய பொருளாதாரம் என்றும் கூறப்படுகிறது. San Fransisco, Los Angeles, San Diego, Oakland போன்ற பல பெரிய நகரங்களை கொண்ட கலிபோர்னியா மாநிலத்துக்கு பாரிய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று அம்மாநில கவர்னர் குறைந்தது 25% தண்ணீர் பாவனை குறைப்பை செய்யுமாறு கட்டளை பிறப்பித்துள்ளார். மீறியோர் தண்டிக்கப்படுவர். . கலிபோர்னியாவுக்கு நீர் வழங்கும் சியாரா நெவாடா (Sierra Nevada) மலைப்பகுதியில் […]
ஜெமென் நாட்டின் வன்முறைகள் தற்போது மூன்று குழுக்களுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த மூன்று குழுக்களும் மூன்று வெளியார் குழுக்களின் கட்டுப்பாடில் உள்ளன. வெளியாரின் தலையீடு காரணமாக ஜெமென் நாடும் சிரியாவைப்போல் எரிய ஆரம்பித்துள்ளது. . ஒரு குழு அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் உதவியுடன் முன்னாள் ஜனாதிபதி Hadi இன் தலைமையில் இயங்கும் சுனி (sunni) இஸ்லாமியர். இவர்கள் பொதுவாக ஜெமென் நாட்டின் தென் பகுதியில் வாழ்பவர்கள். அவர்களை எதிர்த்து சண்டையிடும் அடுத்த குழு […]
அண்மைய Washington Post கட்டுரை ஒன்றின்படி அமெரிக்கா கடந்த நூற்றாண்டுகளுக்கு அதிகமாக காலத்தில் பாவனை செய்த சீமெந்து அளவைவிட அதிகம் சீமெந்தை சீனா 2011 முதல் 2013 வரையான 3 வருடங்களில் கொள்வனவு செய்துள்ளதாம். இந்த அதீத கொள்வனவு சீனாவின் அதீத வர்த்தக கட்டட மற்றும் குடியிருப்பு கட்டுமான வளர்ச்சியை காட்டுகிறது. . 1901 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டுவரை அமெரிக்கா 4.5 gigatons (4500 megatons) சீமெந்தை பாவனை செய்துள்ளது. ஆனால் சீனா 2011 […]
மாணவர் தாமாக பரீட்சைகளில் குளறுபடி செய்வது உண்டு. குதிரை ஓடுதல், copy அடித்தல் என பல நடைமுறைகள் அதில் அடங்கும். ஆனால் இந்தியாவில் இந்த கிழமை நடந்ததை அழகாக படம் பிடித்துள்ளார்கள். . இந்த படத்தில் நீங்கள் காண்பது தமது பிள்ளைகளுக்கு பரீட்சை நேரத்தில் உதவும் பெற்றாரையே.நான்கு மாடிகளுக்கும் மேலாக வெளிப்புறமாக ஏறி இவர்கள் தமது பிள்ளைகளுக்கு உதவுகிறார்கள். அவ்வாறு உதவுவதற்க்கு இவர்களிடம் போதிய அறிவு உள்ளதா அல்லது நிலத்தில் நிற்பவர்களிடம் வினாவை கூறி, பின் விடையை […]
சிங்கப்பூர் மூன்றாம் உலக நாட்டு நிலைமைக்கு தள்ளப்படாமல், முதலாம் உலக நாடுகளுக்கு நிகராக வளர முன்னணி காரணமாக இருந்த Lee Kuan Yew நிமோனியா காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். இவருக்கு வயது 91. . 1959 இல் நாடு சுதந்திரம் அடைந்த போது இவரே சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் ஆனார். இவர் கடுமையாக ஆட்சி செய்திருந்தாலும், மிகவும் நேமையானதும் சட்டத்துக்கு உட்பட்டதுமான ஆட்சியை செய்து வந்திருந்தார். சிங்கப்பூரை ஒரு பல்கலாச்சார நாடாக வளர்த்தார். 1956 ஆம் ஆண்டில் ஆரம்பித்த […]
2005 முதல் 2009 ஆண்டு வரையான காலத்துடன் ஒப்பிடும் போது 2010 முதல் 2014 ஆண்டு வரையான காலத்தில் உலக ஆயுத விற்பனை 16% ஆல் அதிகரித்துள்ளதாக SIPRI (Stockholm International Peace Research Institute) தெரிவித்துள்ளது. . உலகின் அதி கூடிய ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடான அமெரிக்காவின் ஆயுத விற்பனை (உலக ஆயுத விற்பனையின் 31%) இந்த காலப்பகுதியில் 23% ஆல் அதிகரித்துள்ளது. இரண்டாவது அதிக ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடான ரஷ்யாவின் விற்பனை […]
Solar Impulse 2 என்ற solar சக்தியில் இயங்கும் சிறிய விமானம் ஒன்று உலகை சுற்றி வலம்வரும் முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளது. இந்த விமானம் அபுதாபியில் இருந்து தனது பயணத்தை அபுதாபி நேரப்படி திங்கள் காலை 7:12 ஆரம்பித்துள்ளது. இது Borchberg மற்றும் Piccard ஆகிய இருவரினதும் 13 வருட முயற்சியின் பயனாகும். இந்த இருவருமே ஒவ்வொருவராக இதை இயக்குவர். . அபுதாபியில் இருந்து ஓமான், இந்தியா, பர்மா, சீனா, ஹவாய், நியூ யோர்க் ஊடாக 12 […]
இங்கிலாந்தில் 1981 ஆம் ஆண்டு பிறந்து ஆஸ்திரேலியா வாசியான மையூரன் சுகுமாரனுக்கும், Andrew Chan கும் விரைவில் இந்தோனேசிய அரசு மரணதண்டனை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் மொத்தம் 9 நபர்கள் இந்தோனேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதை (heroin) எடுத்து செல்ல முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2005 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு இருந்தனர். 2006 ஆம் ஆண்டில் இவர்களுக்கு மரணதண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்தோனோசியாவில் துப்பாகியால் சுட்டே மரணதண்டனை வழங்கப்படும். . ஆஸ்திரேலியா சுகுமாரனையும், […]
சுமார் 2.8 மில்லியன் வருட பழமைவாய்ந்த, 5 பற்களை கொண்ட தாடை எலும்பு ஒன்று எதியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்பை எதியோப்பிய நாட்டை சார்ந்தவரும், அமெரிக்க Arizona State University பட்டதாரி மாணவனுமான Chalachew Seyoum இரண்டு வருடங்களின்முன் கண்டு எடுத்திருந்ததார். . விஞ்ஞான ஆய்வின்படி இந்த எலும்புக்குரிய இனம் ஹோமோசேப்பியன் (Homo-sapiens) என்ற மனித இனத்துக்கு சிலபடிகள் முன்னைய இனமாக கருதப்படுகிறது. அதாவது இந்த எலும்பு மனித குரங்கு வகையில் இருந்து மனித […]