Indo-European மொழி பரம்பல்?
. இந்த மொழி பரம்பல் சரியானது என்றால், பெருமளவு இன்றைய இந்தியர்கள் வந்தேறு குடிகளாக இருக்குமோ? . அப்படியானால் Mohenjo Daro – Harappa வழி வந்தோர் யாரோ? .
. இந்த மொழி பரம்பல் சரியானது என்றால், பெருமளவு இன்றைய இந்தியர்கள் வந்தேறு குடிகளாக இருக்குமோ? . அப்படியானால் Mohenjo Daro – Harappa வழி வந்தோர் யாரோ? .
சீனாவின் பழம்பெரு நகரான நான்ஜிங் (NanJing) இலிருந்து Yangtze ஆறுவழியே சீனாவின் உட்பகுதில் உள்ள மற்றுமோர் பழம்பெரும் நகரான சொங்சிங் (ChongQing) நோக்கி உல்லாசப்பயணிகளை ஏற்றிவந்த உல்லாச கப்பல் ஒன்று 458 நபர்களுடன் மூழ்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு 9:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அரச தவுகளின்படி இதில் 405 உல்லாச பயணிகள், 5 உல்லாச பயண நடாத்துனர், மற்றும் 48 பணியார்ளர் இருந்துள்ளனர். கப்பல் ஹுபேய் (Hubei) மாகாண பகுதில் பயணிகையிலேயே இடம்பெற்றுள்ளது. […]
BDO என்ற ஜேர்மன் நாட்டு தரவு நிறுவனமும் Hamburg Institute of Economics நிறுவனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி உலகத்திலேயே மிக குறைந்த பிறப்பு வீதம் கொண்ட நாடாக தற்போது ஜேர்மன் உள்ளது. இதுவரை ஐரோப்பாவில் மட்டும் மிக குறைந்த பிறப்பு வீதத்தை கொண்டிருந்த ஜேர்மன் இப்போது உலக அளவில் மிக குறைந்த பிறப்பு வீதத்தை கொண்டுள்ளது. . ஜேர்மனில் பிறப்பு வீதம் 1000 க்கு 8.2 ஆக உள்ளது. அதேவேளை உலகில் அதி கூடிய பிறப்பு […]
சுமார் 2.5 மில்லியன் ஆஸ்திரேலியர் வறுமைகோட்டின் கீழே வாழ்வதாக பொதுநல சேவை இயக்கமான Salvation Army தெரிவித்துள்ளது. வறுமைப்பட்டோருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் உதவி வழங்குவது Salvation Armyயின் சேவைகளில் ஒன்றாகும். இந்த கணிப்பு 25 வயது முதல் 59 வயது வரையான 2400 ஆஸ்திரேலியர்களின் தரவுகளை அடிப்படையாக கொண்டதாகும். . ஆஸ்திரேலியாவின் மொத்த சனத்தொகை 23 மில்லியன் ஆகும். அதாவது 10% க்கும் அதிகமானோர் அங்கு வறுமைகோட்டின் கீழ் வாழ்கிறார்கள். . இவ்வாறு வறுமையில் வாழ்வோர் குடியிருப்பு தொகையை […]
இந்தியாவின் பல மாநிலங்களில் நிலவி வரும் கடும்வெப்பநிலை காரணமாக சுமார் 500 நபர்கள் மரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது. பெருமளவு மரணங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலேயே இடம்பெற்றுள்ளன. தலைநகர் டில்லியிலும் பெருமளவில் மரணமடைந்துள்ளனர். கட்டிட வேலை செய்வோர், முதியோர், வீதிகளில் உறங்குவோர் ஆகியோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். . இந்தியாவின் தலைநகர் டில்லியில் வெப்பநிலை 45.5 C ஐ அடைந்துள்ளது. மற்றைய சில இடங்களில் வெப்பநிலை சுமார் 47 C ஆகியிருக்கிறது. . அரசு மக்களை அதிகம் நீர் அருந்துமாறும், […]
விபத்துக்களின் போது சாரதிகளை பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே Air Bag. விபத்து இடம்பெறும்போது Air Bag தனது கொள்கலத்தில் இருந்து வெடித்து ஒரு வாயு நிரம்பிய Bag ஒன்றை உருவாக்கும். அது சாரதியின் தலை கடின பாகங்களில் அடிபடுவதை தவிர்க்கும். ஆனால் இந்த Air Bag சில சாரதிகள் மரணமாக காரணமாகி உள்ளது, . ஜப்பானின் Takata நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட Air Bagகுகளே இப்போது விசாரணைக்கு உள்ளாகியுள்ளன. அமெரிக்காவில் இது 6 மரணங்களுக்கும் சுமார் 100 படுகாயங்களுக்கும் காரணமாகி […]
இந்திய பிரதமர் மோடி இன்று சீனா சென்றுள்ளார். இவர் சீனாவில் 3 நாட்கள் தங்கியிருப்பார். இவர் முதலில் சீனாவின் பழம்பெரும் சியான் (Xian) நகரை அடைந்துள்ளார். இவரை வரவேற்றது சீன ஜனாதிபதி சி பிங் (Xi Ping). . வழமையாக சீன தலைநகர் பெய்ஜிங்கிலேயே வெளிநாட்டு தலைவர்கள் வரவேற்கப்படுவர். ஆனால் மோடி சீன ஜனாதிபதி சி பிங்கின் மரபு பிரதேசமான சியானில் வரவேற்க்கப்பட்டுள்ளார். சி பிங் இந்தியா கடந்த வருடம் வந்தபோது, அவர் மோடியின் மரபு பிரதேசமான […]
திங்கள் அன்று நியூ யோர்க் நகரில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் பாப்லோ பிக்காசோவின் (Pablo Picasso) ஓவியமான Women of Algiers US$ 179 மில்லியனுக்கு ($179,365,000.00) விலை போயுள்ளது. இதுவரை அதிகம் விலை கொடுக்கப்பட்ட ஓவியம் இதுவே. இந்த ஓவியம் 1954-55 காலப்பகுதில் வரையப்படதாகும். . இந்த ஓவியத்தை கொள்வனவு செய்த தரப்பு தம்மை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை என ஏலத்தை நடாத்திய Christie நிறுவனம் கூறியுள்ளது.. . 1881 ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டில் பிறந்த […]
நாளை வியாழன் பிரித்தானியாவில் பொது தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இரண்டு நாட்களிலும் குறைவான காலமே இருந்தும் தேர்தல் முடிவுகளை கணிப்பிட முடியாமல் உள்ளது. காரணம் எந்த ஒரு கட்சியும் மக்களை உறுதியாக ஆட்கொள்ளவில்லை. அனேகமாக சிறுபான்மை வெற்றிபெறும் கட்சி ஒன்றே இன்னுமோர் கட்சியுடன் இணைந்து கூட்டு அரசு அமைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. . தற்போதைய நிலவரப்படி மொத்தம் 650 ஆசனங்களில் எந்தவொரு கட்சியும் 326 ஆசனங்களை கைப்பற்ற போவது இல்லை என கருதப்படுகிறது. Yougov கருத்து […]
வரும் 9ஆம் திகதி ரஷ்யா தனது Victory Day ஐ கொண்டாடவுள்ளது. ஹிட்லரின் படைகளை வென்று 70 ஆண்டுகள் பூர்த்தி அடைந்ததை முன்னிட்டே இந்த Victory Day ஊர்வலம் இடம்பெறவுள்ளது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு போன்ற மேற்கு நாடுகள் உக்கிரேன் விவகாரம் காரணமாக இந்த கொண்டாட்டத்தை புறக்கணிக்கவுள்ளன. அதேவேளை இந்தியா, சீனா போன்ற நாடுகள் பங்கு கொள்ளவுள்ளன. . இந்த ஊர்வலத்தில் 16000 ரஷ்ய படையினரும், 1300 வெளிநாட்டு படையினரும், 200 கவச வாகனங்களும், 150 […]